ஒரு முறை இந்த அரசனின் அவைக்கு வருகை தந்த சீன தேசத்து சேர்ந்த அறிஞர் ஒருவர் தாயை இழந்த இரண்டு பஞ்சவர்ண கிளிக்குஞ்சுகளை பரிசளித்துவிட்டு சென்றார்.
பஞ்சவர்ண கிளியை அதிர்ஷ்டத்தின் சின்னமாக கருதுவர் என்பதால் அரசன் மிகவும் அக மகிழ்ந்து தனது நாட்டின் பறவைகள் பயிற்சியாளரை அழைத்து
“இவற்றை நல்ல முறையில் பராமரித்து, பழக்கப்படுத்தி பறப்பதற்கு பயிற்சியளியுங்கள்!” என்று கட்டளையிட்டான்.
மாதங்கள் உருண்டோடின.
பறவைகள் எப்படி வளர்கின்றன....???
நன்றாக பறக்கின்றனவா....??? என்று தெரிந்துகொள்ள பயிற்சியாளரை அழைத்தான் மன்னன்.
“அரசே… இரண்டு பறவைகளில் ஒன்று நன்றாக பறக்க கற்றுக்கொண்டுவிட்டது.
மற்றொன்று எவ்வளவோ முயற்சித்தும் அது அமர்ந்திருக்கும் கிளையை விட்டு நகர மறுக்கிறது” என்றான்.
உடனே மன்னன், தனது நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கால்நடை மருத்துவர்களையும் பறவையியல் நிபுணர்களையும் அழைத்து பறவைக்கு என்ன ஆயிற்று....???
அது ஏன் பறக்க மறுக்கிறது....??? என்று ஆராயுமாறு கட்டளியிட்டான்.
அவர்களும் அதை முற்றிலும் பரிசோதித்துவிட்டு, “இந்த பறவையிடம் எந்த குறையுமில்லை.
உடலில் ஊனமுமில்லை.
ஆனால் அது ஏன் பறக்க மறுக்கிறது என்று புரியவில்லை அரசே” என்றனர்.
உடனே தனது அமைச்சரை அழைத்து “என்ன செய்வீர்களோ ஏது செய்வீர்களோ தெரியாது.
இந்த கிளி இன்னும் இரண்டு நாளில் பறக்கவேண்டும்” என்றான் கண்டிப்புடன்.
சில நாட்கள் கழித்து ஒரு நாள் தனது மாளிகையின் உப்பரிகையிலிருந்து வெளியே பார்க்கிறான்.
கிளி அதே இடத்தில் தான் உட்கார்ந்திருந்தது. நகரவேயில்லை. மன்னனுக்கு என்னவோ போலிருந்தது.
“இதற்கு என்ன ஆயிற்று ஏன் பறக்க மறுக்கிறது என்று தெரியவில்லையே....???
நாட்டுப்புறத்தில் உள்ள வயலில் வேலை செய்யும் விவசாயிகள் அல்லது மூத்த குடிமக்கள் எவரையேனும் அணுகி இது பற்றி கேட்கவேண்டும்.
அவர்களுக்கு ஒருவேளை இது பறக்க மறுப்பதன் காரணம் தெரிந்திருக்க்கலாம்” என்று கருதி உடனே காவலர்களை அழைத்து,
“நாட்டுப்புறத்திற்கு போய் யாரேனும் ஒரு மூத்த விவசாயி ஒருவரை அழைத்து வா” என்று கட்டளையிட்டான்.
அடுத்தநாள் காலை கண்விழிக்கும்போது, அந்த பஞ்சவர்ணக் கிளி மரத்தை சுற்றி அங்கும் இங்கும் பறந்துகொண்டிருப்பதை பார்த்தான்.
அவனுக்கு ஒரே சந்தோஷம்.
“இந்த அற்புதத்தை செய்தவரை உடனே அழைத்து வாருங்கள்....!!!” என்றான்.
அந்த விவசாயி மன்னன் முன்பு வந்து பணிந்து நின்றார்.
“எல்லாரும் முயற்சி செய்து தோற்றுவிட்ட நிலையில் நீ மட்டும் கிளியையை எப்படி பறக்கச் செய்தாய்....???”
மன்னன் முன் தலையை வணங்கியபடி விவசாயி சொன்னார்…
“அது ரொம்ப சுலபமான காரியம் அரசே.
மரத்தில் ஏறி அந்த பறவை உட்கார்ந்திருந்த கிளையை நான் வெட்டிவிட்டேன்.
வேறொன்றுமில்லை....!!!” என்றார்.
இறைவனும் சில சமயம் அந்த விவசாயி போல,
நம்மை நமது சக்தியை உணரச் செய்யவேண்டி,நாம் அமர்ந்திருக்கும் கிளையை வெட்டிவிடுவான்.
அது நமது நன்மைக்கே.
நம் சக்தியை ஆற்றலை நாம் உணரவேண்டியே என்று கருதி நம்மை உயர்த்திக்கொள்ள முயற்சிக்கவேண்டும்.
நாம் அனைவரும் உயர உயர பறப்பதற்கு படைக்கப்பட்டவர்கள்.
ஆனால் பல சமயங்களில் நாம் நமது சக்தியை உணராமல் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு பழக்கப்பட்ட வேலைகளை மட்டுமே அது தான் நம்மால் முடியும் என்று கருதி செய்து வருகிறோம்.
நாம் சாதிக்க கூடியவை எண்ணற்றவை. முடிவற்றவை.
ஆனால் நம்மில் பலருக்கு அது கண்டுபிடிக்கப்படாமலே போய்விடுகிறது.
செக்கு மாடு போல, ஒரே இடத்தில், மிக சுலபமான, ஒரே வேலையை செய்வதிலே தான் நாம் ஆர்வம் செலுத்துகிறோம்.
ஆகையால் தான் பலருக்கு வாழ்க்கை ஒரு உற்சாகமான, த்ரிலிங்கான, மன நிறைவான ஒன்றாக இல்லாமல் மிகச் சாதாரணமாக கழிந்துவிடுகிறது.
நாம் அமர்ந்திருக்கும் (ஒட்டிக்கொண்டிருக்கும்) பயமென்னும் கிளையை வெட்டி எறிந்து,
உயரப் பறக்கும் பெருமிதத்திற்காக சுதந்திரப் பறவைகளாய் நம்மை விடுவித்துக்கொள்வோம்.
பெருமாள் கோயில் என்றால், துளசியும் தீர்த்தமும்தானே பிரசாதமாகப் பெறுவோம். கூடவே, விபூதியும் தருகிறார்கள் என்றால்... பெறுகின்ற நமக்கு வியப்பாகத்தானே இருக்கும். அது எந்தக் கோயில்? விபூதி தருவதற்கு என்ன காரணம்?
1
அதற்கு நாம் சிந்துப்பட்டி செல்ல வேண்டும். மதுரை மாவட்டம்- திருமங்கலம்- உசிலம்பட்டி சாலையில், சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ளது சிந்துப்பட்டி. இங்குள்ள பழைமையான வேங்கடேச பெருமாள் கோயிலில்தான் இந்த விசித்திரம். கோயிலின் வரலாற்றைத் தெரிந்துகொண்டால், இதற்கான விளக்கம் கிடைக்கும்.
2
கி.பி. 12, 13-ஆம் நூற்றாண்டுகளில், தக்காண பீடபூமி மற்றும் தென்பகுதியில் சுல்தான்களின் ஆதிக்கம் இருந்தது. அவர்கள் ஆளுகைக்கு எதிராகத்தான், விஜயநகர சாம்ராஜ்ஜியம் தோன்றியது. நலிவுற்றிருந்த ஆலயங்கள் பல அதன் பிறகு புத்துயிர் பெற்றன.
மனிதனின் பருவக்கால மாற்றத்தை விழாக்கள் எடுத்து கொண்டாடுவது இயல்பு. ஆனால், இயற்கையோட பருவக்கால மாற்றத்தை வரவேற்கும் விதமான ஒரு கொண்டாட்டம்தான் ஹோலி பண்டிகை என்கிற அரங்கபஞ்சமி.
இந்தப் பண்டிகை இந்தியா, நேபாளம், வங்கதேசம், போன்ற நாடுகளில் குறிப்பிட்ட இனத்தவரால் இப்பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுது.குஜராத் போன்ற சில மாநிலங்களில் இப்பண்டிகையை 5 நாட்கள் கொண்டாடுகின்றனர்.
மக்களிடம் புன்னகையையும் சகோதரத்துவத்தையும் நிலைநாட்டுவதே ஹோலி பண்டிகையின் முக்கிய குறிக்கோளாகும்.
அகிலத்தையே சுருட்டி ஆதி சக்திக்குள் லயமடையச் செய்யும் மகாப் பிரளயம் பெருக்கெடுத்து வரும் காலம் அருகே வந்தது. ஆழிப் பேரலைகள் அண்ட சராசரத்தையும் முறுக்கி அணைத்து ஆரத் தழுவி தமக்குள் கரைத்துக் கொள்ளும் ஊழிக்காலம் உந்தி வருவதை அறிந்தார், பிரம்மா.
1
மும்மூர்த்திகளுமே யோக நித்திரையில் ஆழ மகாகாளி மட்டும் தாண்டவமாடிக் களிக்கும் பிரளயம் நெருங்கியது பார்த்து அதிர்ந்தார் நான்முகனான பிரம்மா. பீஜங்கள் எனப்படும் பிரபஞ்ச படைப்பாற்றலின் விதைகளாக திகழும் பிரபஞ்ச மூல அணுக்கள் அழிந்துவிடுமோ என அஞ்சினார்.
2
படைப்பின் ஆதாரமாக விளங்கும் வேதங்கள் கூட பிரளயப் பேரழிவில் ஆதி சக்தியில் சென்று ஒடுங்கி விடுமோ என கவலை அவரை வாட்டியது. அகிலத்தை படைத்து எண் திக்கும் பரவச் செய்து சகல ஜீவராசிகளையும் செழிக்க வைக்க வேண்டுமென்ற பேரவா அவரை நிலைகொள்ளாமல் தவிக்கச் செய்தது.
மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவரும் தெரிந்தும் தெரியாமலும் பாவம் செய்வது இயல்பு. பாவம் செய்துவிட்டு பாவத்துக்குப் பரிகாரமாக புண்ணியம் தேடி ஒவ்வொருவரும் பல்வேறு ஆலயங்களுக்குச் செல்கிறோம்.
இதனால் ஏற்படும் தோஷத்தை போக்கிக்கொள்வதற்காக ஜபம் – தபம் போன்ற பல்வேறு பரிகாரங்களைச் செய்கிறோம். மாதங்களில் மகத்தான மாதம் என்று அழைக்கப்படுவது மாசி.
தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதத்தில் சிறப்பு வாய்ந்தது. அதிலும் மிகவும் விசேஷமானதாக பார்க்கப்படுவது மாசி மாதம்.
இந்த மாதம் முழுவதும் கடலாடும் மாதம்’ என்றும், தீர்த்தமாடும் மாதம்’ என்றும் சொல்வார்கள்.
திருவண்ணாமலையில் இருந்து கலசப்பாக்கம் வழியாக சென்றால் 34 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.
வில்வாரணி என்னும் ஊரில் நட்சத்திரகிரி நட்சத்திரக் குன்று என்று அழைக்கப்படும் ஊரில் மலை மேல் சமேத சிவசுப்ரமணிய சுவாமி கோயில் உள்ளது.
1
சிவன் தான் லிங்க வடிவில் காட்சியளிப்பார். ஆனால் இங்கு லிங்க வடிவ சுப்பிரமணியராக அருள்பாலிக்கிறார். இங்கு முருகர் வள்ளி தெய்வானையுடன் வீற்றிருக்கிறார். இத்திருத்தல கருவறையில் நாகாபரணத்துடன் முருகரும் சுயம்பு வடிவான சிவபெருமானும் ஒன்றாக காட்சி தருகிறார்கள்.
2
இக்கோயில் சுமார் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. காஞ்சி புராணம் மற்றும் அருணாச்சல புராணத்தில் இக்கோவிலைப் பற்றிய புராண வரலாறு உள்ளது. 27 நட்சத்திரங்களும் சிவ சர்பமும் முருகப் பெருமானை வழிபடுகிறார்கள்.