#கைலாசநாதர்_திருக்கோவில் ஸ்ரீவைகுண்டம், திருநெல்வேலி மாவட்டம்.
திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் ரோட்டில் ஸ்ரீவைகுண்டம் அமைந்துள்ளது.
சுவாமி: கைலாசநாதர்.
அம்மை: சிவகாமி அம்மை.
திருக்கோவில் விருட்சம்: இலுப்பை மரம்.
தீர்த்தம்: தாமிரபரணி.
உரோமச மகரிஷி அகத்திய முனிவரின்
ஆணைப்படி ஒன்பது மலர்களை தாமிரபரணியில் மிதக்க விட்டார். அப்படி மலர்கள் கரை சேர்ந்த ஒவ்வொரு இடத்திலும் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவையே நவ கைலாயங்கள் என்று வழங்கப் பெறுகிறது. அதில் ஆறாவது மலர் கரை ஒதுங்கிய இடம் தான் ஶ்ரீவைகுண்டம் ஆகும். இங்கு அவர் பிரதிஷ்டை செய்து
வணங்கிய லிங்கமே கைலாசநாதர் ஆகும். நவதிருப்பதிகளில் ஒன்றான ஸ்ரீ வைகுண்டநாத பெருமாள் திருக்கோவில் இதே ஊரில் உள்ளது. வைகுண்டத்தில் உறையும் மகாவிஷ்ணுவே இங்கு வைகுண்டநாத பெருமாளாகக் காட்சிதருவதால் இந்தத் தலம் பூலோக வைகுண்டம் என்ற சிறப்பைப் பெறுகிறது. அதனால் திருவைகுண்டம் என்ற பெயரை
இந்தத் தலம் பெற்றது. இங்கு நவதிருப்பதிகளுள் ஒன்றான வைகுண்டநாதர் திருக்கோவிலும், நவகைலாயங்களுள் ஒன்றான கைலாசநாதர் திருக்கோவிலும் ஒரே ஊரில் இருப்பது தனிச் சிறப்பு. கிழக்கு நோக்கிய தனி கருவறையில் உரோமச மகரிஷி பிரதிஷ்டை செய்த சுவாமி கைலாசநாதர், லிங்கத் திருமேனியராகக் காட்சித்
தருகிறார். இவர் நவகைலாய தலங்களிலேயே சற்றே பெரிய திருமேனி என்று கூறப்படுகிறது. அவரின் கருவறைக்குள் சரவிளக்கு தீபங்கள் சுடர்விட்டு கொண்டிருக்கும். இவருக்கு விஷேச காலங்களில் கவசம் மற்றும் நாகாபரணம் சாத்தப்பட்டு அலங்காரம் செய்யப்படுகிறது. தெற்கு நோக்கிய தனி கருவறையில் நின்ற கோலத்தில்
#சிவகாமி_அம்மை ஒரு கரத்தில் மலர் ஏந்தியபடியும், மற்றொரு கரத்தைக் கீழே தொங்கவிட்டபடியும் காட்சித் தருகிறாள். திருமுகத்தில் கோடி சூரிய பிரகாசமும், புன்னகையில் மூன்றாம் பிறை நிலவும் ஒளிர்வதை காணலாம். இந்தக் கோவிலில் உள்ள பூத வாகனம் பரிவார தெய்வமாகவே வணங்கப் படுகிறது. #பூதநாதருக்கு
வடைமாலை சாற்றி விசேஷ வழிபாடுகள் நடைபெறும். சித்திரை மாதம் கோவிலின் திருவிழாவில் பூதநாதருக்கே முதல் மரியாதை செய்யப்படும். இந்த விழாவின் 3ஆம் நாளன்று சுவாமி கைலாசநாதர், பூதநாதர் வாகனத்தில் எழுந்தருளிச் சேவை சாதிப்பார். இந்தப் பூத வாகனம் திருநெல்வேலி அருகே உள்ள செப்பறை நெல்லையப்பர்
கோவிலுக்குச் சொந்தமானது என்றும், முன்னர் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட கடும் வெள்ள பெருக்கினால், செப்பறை பழைய கோவில் சிதிலமடைந்து அங்கிருந்த பொருட்கள் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், அப்படி அங்கிருந்து ஆற்றில் அடித்துக் கொண்டு வரப்பட்ட பூத வாகனமே இங்குள்ள பூதநாதர்
என்று செப்பறை மஹாத்மியம் என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. பூத நாதர் திருநெல்வேலி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சங்கிலிபூதத்தாரின் அம்சமாக இங்கு வணங்கப்படுகிறார்.
திருவைகுண்டம் நகரின் வடகிழக்கு திசையில் உள்ளது கைலாசநாதர் திருக்கோவில். இங்கு வானளாவிய கோபுரத்திற்கு பதிலாக மொட்டைக்
கோபுரம் தான் உள்ளது. அதனைத் தாண்டி உள்ளே சென்றால் நந்தி, கொடிமரம், பலிபீடம் ஆகியவை. வெளிப்பிரகாரம் முழுவதும் வில்வம், வேம்பு, தென்னை, வன்னி போன்ற மரங்களும், அரளி, நந்தியாவட்டை, திருநீற்று பச்சிலை போன்ற செடிகளும் வளர்ந்து நந்தவனமாகக் காட்சி அளிக்கிறது. உள்பிரகாரத்தில் பரிவார
சபாபதி ஆகியோர் காட்சி தருகிறார்கள். சந்தன சபாபதி மண்டபத்தில் கருணை பொழியும் வகையில் கண்ணைக் கவரும் பல சிற்பங்கள் உள்ளன. கோவிலின் உட்பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தின் மேல் கூரையில் நவகைலாயங்களைப் பற்றிய செய்திகள், மூலிகைகளைக் கொண்டு படமாக வரைந்து வைக்கப்பட்டுள்ளது.
இங்கு யானை மற்றும் யாளியின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. யாளியின் வாய்க்குள் உருளும் வகையில் உருளை வடிவிலான கல் பந்து ஒன்று உள்ளது. இந்தப் பந்தை நம் கைகளால் உருட்ட முடியும், ஆனால் அதன் வாயில் இருந்து வெளியே எடுக்க முடியாது. இது பண்டைய காலத்து சிற்பக்க கலைஞர்களின் புத்திக்
கூர்மைக்கு சிறந்த எடுத்துக் காட்டாக விளங்குகிறது. நந்தவனத்திற்கு செல்லும் முன் மண்டபத்தில் ஒரு தூணில் உரோமச முனிவரின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது.
சித்திரை மாதம் 10 நாட்கள் திருவிழா, ஐப்பசி திருக்கல்யாண திருவிழா, மார்கழி திருவாதிரை திருவிழா, மாசி மாதம் சிவராத்திரி போன்ற வருடாந்திர
விழாக்களும், பிரதோஷம், பௌர்ணமி பூஜை போன்ற மாதாந்திர பூஜைகளும் சிறப்பாக நடைபெறுகின்றன.
அமைவிடம்:
திருநெல்வேலியில் இருந்து 23 கி. மீ தொலைவில் திருநெல்வேலி - திருச்செந்தூர் செல்லும் சாலையில் உள்ளது திருவைகுண்டம். இங்குச் செல்லத் திருநெல்வேலி சந்திப்புப் பேருந்து நிலையத்திலிருந்து
நகரப்பேருந்துகள் மற்றும் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து திருச்செந்தூர் மார்க்கமாகச் செல்லும் புறநகர் பேருந்துகள் ஆகியவை அடிக்கடி உள்ளன.
ஓம் நமசிவாய
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#108திவ்தேசங்கள் ஒரு முறை பிரம்மா வைகுண்டத்தில் இருக்கும் பெருமாளிடம், வைகுண்டம் தவிர வேறு எங்கெல்லாம் நீர் இருக்கிறீர்? என்று கேட்க, ஸதம்வோ அம்ப தாமானி ஸப்தச்ச என்று வேதவாக்கியத்தின் மூலம் உணர்த்தினார். ஸதம் என்றால் நூறு. ஸப்த என்றால் ஏழு. ஆக பெருமாள் இருக்கும் இடங்கள் 107.
பெருமாள் நித்யவாசம் செய்யும் வைகுண்டத்தை சேர்த்தால் 108. ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ளனர். #ஸ்ரீபிள்ளைப்பெருமாள் அய்யங்கார் 108 திவ்யதேசக் கணக்கை நான்கு வரிகளில் கீழ்காணும் பாடல் மூலம் தருகிறார்;
“ஈரிருபதாஞ்சோழம் ஈரொன்பதாம் பாண்டி
ஓர் பதின்மூன்றாம் மலைநாடு; ஓரிரண்டாம் -
சீர்நாடு
ஆரோடீரெட்டுத் தொண்டை; அவ்வட நாடாறிரண்டு
கூறு திருநாடொன்றாக் கொள்”
சோழ நாட்டில் 40, பாண்டிய நாட்டில் 18, மலை நாட்டில் 13, நடுநாட்டில் 2, தொண்டை நாட்டில் 22, வடநாட்டில் 12, திருநாடு (ஸ்ரீவைகுந்தம்) 1 ஆக மொத்தம் 108 திவ்யதேசங்கள் எனக் குறிப்பிடுகிறார்.
இதில் கிடந்த
மகா பெரியவரிடம் சந்தேகம் கேட்கும் எண்ணத்துடன் வணங்கினாள் ஒரு பெண்
“என்ன விஷயம்?'' என விசாரித்தார் சுவாமிகள்.
''குடும்பத்தில் பிரச்னை சுவாமி. அதெல்லாம் தீரணும்னு நிறைய ஸ்லோகம் சொல்றேன். எல்லாம் சொல்லி முடிச்சு, சாப்பிட மதியம் ஒரு மணி
ஆகிவிடும். இவ்வளவு ஸ்லோகம் சொல்லியும் என் பிரச்னை தீரவில்லை. சுவாமிகள் தான் வழி காட்டணும்” என்றாள்.
அவளை கனிவுடன் பார்த்தார் சுவாமிகள்.
''சுலோகங்களை எப்போ எப்பிடி சொல்றேள்?”
''என் வேலைகளை செஞ்சிண்டே தான் சொல்றேன்! நிக்கறப்போ, நடக்கறப்போ, காய்கறி நறுக்கறப்போ சொல்லிண்டேயிருக்கேன்”
''கட்டாயம் அதற்கு பலனுண்டு. சஷ்டிக்கவசம், திருப்பாவை, விஷ்ணு சகஸ்ர நாமம், தேவாரம், திவ்யபிரபந்தம் என எத்தனையோ ஸ்லோகங்கள் தமிழ்லயும் இருக்கு. சமஸ்கிருதத்திலயும் இருக்கு. எல்லாம் விசேஷ பலன் தரக் கூடியவை. ஸ்லோகம் சொல்லிண்டே வேலை செய்யறதும் நல்ல பழக்கம் தான்'' என்று சற்று நிறுத்திய
ஒரு வயதான பால்காரம்மா. காஞ்சிபுர நகர்வாசி. அவருக்கு எல்லாமே காஞ்சி மகான்தான். ஒரு தடவை பால் வியாபாரத்திற்காக அவள் ஒரு புது பசுவை வாங்கினாள். அதிகமாகப் பால் தரும் பசு அது. வாங்கின தினம். மாட்டிற்குச் செய்ய வேண்டிய
பூஜைகளை எல்லாம் ஒழுங்காகச் செய்த பின்னர் முதன் முதலாக அந்த மூதாட்டி பாலைக் கறந்தாள் பால் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்தது. புதிய பாத்திரத்தில் பாலை நன்றாகக் காய்ச்சி, இன்னொரு புதிய பாத்திரத்தில் ஊற்றி எடுத்துக் கொண்டு நேராக மடத்திற்கு வந்தாள். மகானுக்குக் கொடுக்க வரிசையில்
நின்ற அவளைக் கவனித்த சிப்பந்திகள் அவளை எச்சரித்தார்கள்.
மகான் இதையெல்லாம் சாப்பிட மாட்டார் என்று அவளிடம் சொன்னார்கள். அதையெல்லாம் அவள் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. தான் வணங்கும் தெய்வத்திற்கு பாலை எப்படியாவது கொடுத்துவிட வேண்டும் என்பது அவளது பிடிவாதம். மகானின் அருகில் இருந்த
#SymbolsOn_SriKrishnas_feet
On Krishna’s feet there are 19 symbols of Sriman Narayana.
On His right foot are a Lotus, flag, chakra, umbrella, 4 swastikas, uddhava rekha (upcurving line), barley corn, elephant goad, ashtakon (octagon) four blackberry fruits, and vajra. On His
left foot are 4 water pots, a conch, an unstrung bow, cow’s hoof, fish, crescent moon, akash (sky), and a triangle. #RightFoot - 11 Signs 1. Barley corn - This mark signifies that His devotees receive all enjoyable prosperity by serving His lotus feet. It also means that once
one finds shelter at His lotus feet, then the devotee’s former journey through many births and deaths is actually very tiny, just like a single grain of barley. Just as the barley grains are sustenance of life for living beings, similarly His glorious feet are the nourishment
#MahaPeriyava
Maha Periyava graciously accepted the request from the residents of Thiruvaiyaru and celebrated the Vyasa Pooja in the year 1924 at the Pushya mandapam in the North corner of the Cauveri river. Multitudes of devotees from Tanjore and surrounding villages thronged
to have darshan of Maha Swamigal. During the lunar month of Adi, Cauveri overflowed with floods and in some places broke the banks. As the hall (mandapam) where Pooja was taking place was close to the Cauveri, the flood water entered into many adjoining areas including the Pooja
hall. The people of Thiruvaiyaru, requested Maha Swamigal to change the venue of the Pooja to another place. Maha Swamigal said that the Pooja could not be moved during Chaturmasya due to any calamity or any other reason. The people were concerned about the situation. To make
#MahaPeriyava
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb
Once a Sri Vaishnavite family had come for the darshan of Sri Maha Periyava. Even though they followed the Sri Vaishnava tradition, they had deep devotion (bhakti) towards Sri Maha Periyava and
believed that He was Sakshat Sriman Narayana Swaroopam. They had come to have darshan of Periyava since the head of their family who was old was suddenly suffering from paralysis and chitta bramhai (paranoia). They had come there with the whole family. Sri Maha Periyava asked
them to be seated. He then asked for a small pot of water to be brought. Once it was brought, He put some tulsi leaves in the pot of water from the mala (garland) He was wearing. As they belonged to the Sri Vaishanavite tradition, He then advised all the family members to recite