#பகவான்கிருஷ்ணன்_வணங்கும்_ஆறுபேர்
ஒரு நாள் கிருஷ்ணன் வழிபாடு செய்வதைப் பார்த்துவிட்டு, “அன்பரே! நீர் யாரையோ வணங்குவது போலத் தெரிகிறது. அவர்கள் யார்?” என்று கேட்டாள் ருக்மிணி. கிருஷ்ணர் கொஞ்சமும் தயங்காமல் பதில் சொன்னார்,
“நித்யான்ன தாதா, தருணாக்னிஹோத்ரி, வேதாந்தவித், சந்திர
பொருள்: இந்த மனிதர்கள் வாழும் பூமியில் நான் ஆறு வகையான மக்களை வணங்குகிறேன்.
தினமும் அன்னதானம் செய்வோர்,
தினமும் அக்னிஹோத்ரம் செய்வோர்,
வேதாந்தம் அறிந்தவர்கள்,
சஹஸ்ர சந்திர தரிசனம் செய்து சதாபிஷேகம் செய்துகொண்டோர்
மாதா மாதம் உபவாசம் இருப்போர்,
பதிவ்ரதையான பெண்கள்.
அவர் சுருக்கமாகச் சொல்லி முடித்தாலும், பெரியோர்கள் இதற்குச் சொல்லும் விளக்கத்தை அறிந்தால் தான் அந்த ஆறு வகையான மக்களின் முழுப் பெருமையையும் நாம் அறிய முடியும்.
1. நித்ய அன்ன தாதா - அந்தக் காலத்தில் ஒருவருக்குக் கிடைக்கும்
வருமானத்தில் அல்லது நிலத்தில் அறுவடையாகும் விளைச்சலில் ஆறில் ஒரு பகுதியை மன்னருக்குக் கொடுத்து விட வேண்டும். மீதி ஐந்து பகுதிகளை அவர் ஐந்து பேரைப் பாதுகாக்கப் (பஞ்ச யக்ஞத்துக்கு) பயன்படுத்தவேண்டும். திருவள்ளுவரும் கூட,
தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான் என்று ஆங்கு
ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை
(இல்வாழ்க்கை குறள் 43)
பொருள்: இறந்து போய் தென் திசையில் வாழ்ந்து கொண்டிருக்கும் நம் முன்னோர்கள், கடவுள், வீட்டிற்கு வரும் விருந்தாளிகள், சுற்றத்தார் (இதில் நாம் வளர்க்கும் பசு முதலிய பிராணிகளும், வீட்டில் ஊர்ந்து செல்லும் எறும்புகளும் அடங்கும்), தனது
குடும்பம் என்ற ஐந்து பேரையும் போற்றுவது இல்வாழ்வானின் தலையாய கடமை.
விருந்தாளிகளுக்குச் சாப்பாடு போட்டவுடன் தான் வீட்டிலுள்ளோர் சாப்பிட வேண்டும். ‘அதிதி தேவோ பவ:’ (விருந்தாளி என்பவன் இறைவனுக்குச் சமம்) – என்று வேதம் கூறுகிறது. அந்தக் காலத்தில் தான் உண்பஅற்கு முன்னால் வாசல்
திண்ணையில் சிறிது நேரம் உட்கார்ந்து யாரேனும் விருந்தாளிகள் அல்லது வழிப்போக்கன் வருகிறார்களா என்று பார்த்துவிட்டே உணவருந்த செல்வார்கள். தர்மர் நடத்திய ராஜ சூய யாகத்தில் புகுந்து பரபரப்பை உண்டாக்கிய கீரி சொன்ன கதை எல்லோருக்கும் தெரியும். இப்படி தினமும் அன்னதானம் செய்வோர், இது தவிர
அன்னக்கொடி ஏற்றி ஆயிரக் கணக்கானோருக்கு அன்னம் இடுவோர் ஆகியோரை க்ருஷ்ணன் வணங்குகிறார். இவர்கள் பிரதிபலன் எதிர்பார்க்காமல் அன்னம் இடுகிறார்கள்!!
2. தருண அக்னிஹோத்ரி - அந்தக் காலத்தில் ஏழு வயதில் பூணூல் போட்டவுடன் பிராமணச் சிறுவர்கள் சமிதாதானம் என்று தினமும் அக்னி வளர்த்து
சமித்துக்களை நெய்யுடன்
அக்னியில் ஆகுதி கொடுப்பார்கள். குருகுலம் முடித்து வீட்டுக்கு வந்தவுடன் இளைய பருவத்திலேயே திருமணமும் நடந்துவிடும். பின்னர் அவர்கள் தினமும் ஔபாசனம் என்ற அக்னி காரியத்தைச் செய்து வருவர். இதை தவிர அக்னிஹோத்ரம் என்ற அக்னி காரியம் சூரியனை உத்தேசித்து சரியாக
சூரியன் உதிக்கும் காலத்திலும் அஸ்தமனம் ஆகும் காலத்திலும் நடத்த வேண்டும். இதை எல்லோரும் செய்து விட முடியாது. தனது தந்தை ஒரு அக்னிஹோத்ரியாக இருந்தால் மட்டுமே தானும் அக்னிஹோத்ரம் செய்யமுடியும். இவர்கள் காணக்கிடைப்பது அபூர்வம். இப்படித் தவறாமல் செய்து வருவோரை கிருஷ்ணனே வணங்குகிறார்
நாம் வணங்கத் தயக்கம் உண்டோ!
3. வேதாந்த வித் - வேதங்கள் நான்கு. அதன் முடிவில் இருப்பது உபநிஷத் (வேத+ அந்தம்/முடிவு). அதை உணர்ந்தவர்கள் வேதாந்திகள். அஹம் பிரம்மாஸ்மி, தத்வம் அஸி போன்ற ஞான உணர்வு படைத்தவர்கள். வேதாந்தத்தில் நாட்டம் ஏற்பட வேண்டும் என்றால் பலகோடி ஜென்மங்களில்
புண்ணியம் செய்து இருக்க வேண்டும். உலக விஷயங்களை துறந்து வேதாந்த விஷயங்களுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்து வேதாந்த சிந்தனையிலேயே வாழ்வை கழிப்பவன்
வேதாந்த வித். அந்த வேதாந்திகளையும் கிருஷ்ணன் வணங்குகிறார்! இவர்களும் காணக்கிடைப்பது அபூர்வம்.
4. ஆயிரம் பிறை கண்ட அபூர்வ சிகாமணி -
சிவனுடைய தலையில் இருப்பது மூன்றாம் பிறைச் சந்திரன். அதை மாதம் தோறும் அமாவாசைக்குப் பின்னர் மூன்றாம் நாளில் காணலாம். அடுத்த முறை காண 29 நாட்கள் காத்திருக்க வேண்டும் இப்படி ஆயிரம் முறை காண 81 ஆண்டுகள் பிடிக்கும். அப்பொழுது அவர்கள் சதாபிஷேகம் செய்து கொள்வார்கள். அவர்களையும்
கண்ணபிரான் வணங்குவார். ஒருவர் ஆயிரம் முறை சந்திரனைக் காண வேண்டுமானால் ஆயிரம் தடவை சிவனை நினைத்திருக்க வேண்டும். அடடா! மேகம் மறைக்கிறதே. இன்னும் சந்திரனைக் காணவில்லையே என்று ஏங்கி சிவனை நினைத்து நிற்பர். இன்னும் பலர் அவர்களது இஷ்ட தெய்வத்தையும் குல தெய்வத்தையும் வேண்டிக்
காத்திருப்பர். ஆகையால் கிருஷ்ணன் அவ்வளவு மதிப்பு தருகிறான்.
5. மாத உபவாசி - மாதம் தோறும் இரண்டு ஏகாதசிகளிலும் உபவாசம் – உண்ணா நோன்பு கடைபிடிக்க வேண்டும். அதையும் ஒழுங்காகக் கடைபிடிக்க வேண்டும். சுத்த உபவாசம் என்பது நிர்ஜலமாக (தண்ணீர் கூட பருகாமல்) அல்லது தண்ணீர் மட்டுமே பருகி
உபவாசம் இருப்பது. இப்படி இருப்போர் கண்ணனால் வணங்கப் படுவர். இது எளிதல்ல. இப்படி இருப்போர் மிகமிகக் குறைவு. அவர்களை நாமும் வணங்குவோம்.
6. இறுதியாக கண்ணன் கை எடுத்துக் கும்பிடுவது யாரை என்றால் பதிவ்ரதா விரதம் அனுசரிக்கும் கற்புக்கரசிகளை. உலகில் வேறு எங்கும் இல்லாத ஒரு அணுகு முறை
இந்து மதத்தில் மட்டும் உண்டு.
சாத்திரத்தில் சொல்லபட்ட எல்லா விஷயங்களையும் மூன்று வகையில் அனுஷ்டிக்க வேண்டும். தமிழ் மொழியில் இதற்கு முன்று அற்புதமான சொற்களை படைத்து வைத்துள்ளனர். உண்மை, வாய்மை, மெய்மை (மனோ, வாக், காயம்). இந்த மூன்று உறுப்புகளாலும் வேறு ஓர் ஆடவனையும் நினையாது
கனவனை மட்டுமே தெய்வம் போலக் கருதுபவர் “பெய் எனப் பெய்யும் மழை” — என்கிறார் பொய்யா மொழிப் புலவர் வள்ளுவர் (குறள் 55). இதன் தாத்பர்யம் என்னவென்றால் அவர்களிடம் அவ்வளவு மகத்தான சக்தி இருக்கிறது. ஆனால் அவர்கள் எளிதில் அதைப் பிரயோகிக்க மாட்டார்கள்.
அசோகவனத்தில் சீதையைக் கண்ட அனுமன்
கெஞ்சுகிறான். தாயே உங்களைக் காணாமல் ராமன் தவிக்கிறான். என் முதுகில்/ தோளில் ஏறி அமருங்கள். அடுத்த நிமிடம் இராமனிடம் சேர்ப்பிக்கிறேன் என்று. சீதை சிரிக்கிறாள். என் கற்பின் ஆற்றலால் ஈரேழு புவனங்களையும் எரிக்கும் ஆற்றல் எனக்கு உண்டு. ஆயினும் கணவனின் வில் ஆற்றலுக்கு இழுக்கு
உண்டாக்கும் எதையும் செய்ய மாட்டேன் என்கிறாள். நமக்கும் தெரியும் ராவணன் வதம் என்பதே இராமாவதாரத்தின் நோக்கம் என்று.
கண்ணன் வணங்கும் ஆறுவகை மக்களை நாம் காணும்போது நிலத்தில் விழுந்து நாமும் வணங்குவோம்.
சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#தமிழில்_குடமுழுக்கு என்ற பெயரில் தற்போது ஆகம விதிகளை பின்பற்றாமல் குடமுழுக்கு செய்ய #திமுக அரசு திட்டமிட்டுள்ளது. அவர்கள் நம் இந்து மதத்தை அழிக்க கையில் எடுத்திருக்கும் இன்னொரு ஆயுதம் இது. பிராமண எதிர்ப்பும் அவர்களால் காலம் காலமாக நடைமுறை படுத்தப்பட்டதும் இதற்காகவே. மூத்த
இந்து பத்திரிக்கையாளரின் கடிதம் கீழே!
செங்கோட்டை ஸ்ரீராம்
மூத்த பத்திரிகையாளர்
பெறுநர்
ஆணையர் மற்றும் உறுப்பினர்கள் கூட்டுக் குழு
இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை, நுங்கம்பாக்கம், சென்னை (கூட்டம் – திருநெல்வேலி)
பொருள்: தமிழில் குடமுழுக்கு நடத்துவது தொடர்பான கருத்துக் கேட்புக்
கூட்டத்தில் பதில் அளித்தல்
விவரம்: கூட்டுக் குழு கருத்துக் கேட்பு கூட்டம் 07/03/2023 பாளையங்கோட்டை, திருநெல்வேலி
வணக்கம்,
தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளரான நான், தமிழகத்தில் இருந்து வெளியாகும் ஆன்மிகப் பத்திரிகைகளான சக்தி விகடன், தினமணி - வெள்ளிமணி, கல்கியின் தீபம் இதழ்களில்
Narrated by SriMatham Balu Mama
Source: Maha Periyaval Darisana Anubhavangal
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/fb
Sri Maha Periyava was camping at Kalavai. One morning an advocate from Thanjavur came for darshan by car. There was a lot
of fanfare. His wife wore the saree in the traditional manner, the sons, dhoti and upper cloth, the gentleman himself a dhoti in a traditional manner, upper cloth and a gem studded gold chain around his neck. He held a large plate on which were fruits, flowers, sugar candy,
grapes, cashew nuts, honey and with all these, money, packed inside a cover. They placed the plate in front of Sri Maha Periyava and prostrated to Him. Periyava gently probed the plate with His eyes.
தசாவதாரங்களில் மிக உயர்ந்தது #ஶ்ரீநரசிம்மர் அவதாரம். பகவான் எதற்காக நரசிம்ம அவதாரம் எடுத்தார் என்றால், சர்வ வஸ்துக்களின் உள்ளேயும் அவன் வியாபித்து இருப்பதை நாம் உணர்வதற்காகவே. விஷ்ணு புராணத்தில் ஒரு சுலோகத்தில் ஹே விஷ்ணு நாராயணா நீ எப்போதும் எங்கும் பரவியிருக்கிறாய். அது தர்ம
சூக்ஷ்மமான விஷயம். ஆனால் அப்படி நீ பரவியிருப்பதை எல்லோரும் உணர வேண்டும் என்பதால் அல்லவா நரசிம்ம அவதாரம் பண்ணினாய் என்று வருகிறது. நரசிம்மன் என்றால் ஒளிப்பிழம்பு என்று பொருள். காயத்ரியின் மத்தியிலே ஒளிப்பிழம்பாய் இருப்பவன் பகவான் மகா விஷ்ணு. விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் விஸ்வம், விஷ்ணுர்
என்று சொல்லிக் கொண்டே வந்தோமானால் நரசிம்மனிடத்திலே தான் போய் முடியும். சகஸ்ரநாமத்தில் முதன் முதலில் சொல்லப்பட்ட அவதாரம் நரசிம்ம அவதாரம் தான்.
சகஸ்ரநாமத்தின் நடுவிலும் நரசிம்மனே பேசப்படுகிறான். நரசிம்மன் இருக்கிற இடத்தில் எல்லாம் ஆஞ்சநேயரும் நின்று கொண்டு இருக்கின்றான். நரசிம்மனை
#சிவாலய_ஓட்டம் மகாசிவ ராத்திரி அன்று பன்னிரண்டு சிவாலயங்களை ஓட்டமாக ஓடிச் சென்றே தரிசிப்பதுதான் இந்த வழிபாட்டின் தனிச் சிறப்பு. இது தொடங்கிய காரணம் இரண்டு வகையாக கூறப்படுகிறது. புருஷாமிருகம் பாதி மனித உருவம், மீதி புலி உருவமாக அமைந்த ஒரு பிறவி. ஆழ்ந்த சிவபக்தர். சிவனைத் தவிர,
வேறு இறைவனை ஏற்கமாட்டார். விஷ்ணு நாமம், இவருக்குக் கேட்க சகிக்காது! ஆனால் தானும் ஹரனும் ஒன்றே என்ற தத்துவத்தை அவருக்கு உணர்த்த விரும்பினார் பகவான் கிருஷ்ணன். அவர் பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான பீமனை அழைத்தார். நடைபெறவிருக்கும் குருக்ஷேத்திர யுத்தத்தில் பாண்டவர்கள் வெற்றி பெற
வேண்டுமானால், அந்த புருஷாமிருகத்தின் உதவியும் தேவைப் படுகிறது. போர் வெற்றிக்காக நடத்த இருக்கும் யாகத்திற்கு அந்த மிருகத்தின் பாலானது தேவைப் படுகிறது. ஆகவே, அதனை சந்தித்து அதன் உதவியைக் கோரி வருமாறு அவர் பீமனை அனுப்பி வைத்தார். கூடவே, அவனிடம் 12 ருத்ராட்சங்களைத் தந்து, கோவிந்தா,
#யாதகிரி_பஞ்ச_நரசிம்மர்_கோவில்#தெலுங்கானா
ரிஷியஸ்ருங்கர்- சாந்தா தேவியின் புதல்வராகப் பிறந்தவர் யாத ரிஷி. திரேதாயுகத்தில் வாழ்ந்த இவர், அனுமனின் அருளைப் பெற்றவர். நரசிம்மர் மீது தீராத பக்தி கொண்டவர். அவரைக் காணும் ஆவலில் கடுமையாகத் தவம் இயற்றி வந்தார். அவரது தவத்தால் மகிழ்ந்த
நரசிம்மர், அனுமன் மூலமாக தன்னுடைய இருப்பிடத்தைக் காட்டி, அங்கே ஐந்து வடிவங்களில் யாத ரிஷிக்கு காட்சி தந்து அருளினார். முதலில் ஜ்வாலா நரசிம்மர், யோகானந்த நரசிம்மர், உக்கிர நரசிம்மர், கண்ட பேருண்ட நரசிம்மர் என நான்கு வடிவங்களைக் காட்டினார். ஆனால் யாத ரிஷியோ, தாயார் லட்சுமியோடு
காட்சியருள வேண்டும் என வேண்டி நின்றார். உடனடியாக லட்சுமி நரசிம்மராகத் தோன்றி அருளினார். எனவே இத்தலம் பஞ்ச நரசிம்மர் தலமாகப் போற்றப் படுகிறது. நரசிம்மர் காட்சி தந்த ஆதிக் கோவில் தற்போதைய யாதகிரி மலை அடிவாரத்தில் இருந்து 5 கிமீ தொலைவில் உள்ளது. யாத ரிஷி முக்தியடைந்த பின்பு இப்பகுதி
#MahaPeriyava
An elderly gentleman came for Sri Maha Periyava’s darshan. He looked very worried. His son had a good job. The salary was rather high, but not so much as a paisa reached his family. It vanished on his way home, like a bird in flight. It was all lost at the Guindy
Race Course.
“Sometimes he meddles with the money in the office. I repay it to protect his dignity. His family is in doldrums. The race horse has possessed him like a ghost.”
Periyava asked the gentleman about his son in detail. Then he consoled the young man’s father and sent
him back. Periyava instructed an attendant of the SriMatham to fetch a certain colleague of the young man from the same office, a man known for his piety. The gentleman came. He stood before Sri Maha Periyava with his hands folded in devotion.
“Go to the Police Station near the