#யாதகிரி_பஞ்ச_நரசிம்மர்_கோவில் #தெலுங்கானா
ரிஷியஸ்ருங்கர்- சாந்தா தேவியின் புதல்வராகப் பிறந்தவர் யாத ரிஷி. திரேதாயுகத்தில் வாழ்ந்த இவர், அனுமனின் அருளைப் பெற்றவர். நரசிம்மர் மீது தீராத பக்தி கொண்டவர். அவரைக் காணும் ஆவலில் கடுமையாகத் தவம் இயற்றி வந்தார். அவரது தவத்தால் மகிழ்ந்த
நரசிம்மர், அனுமன் மூலமாக தன்னுடைய இருப்பிடத்தைக் காட்டி, அங்கே ஐந்து வடிவங்களில் யாத ரிஷிக்கு காட்சி தந்து அருளினார். முதலில் ஜ்வாலா நரசிம்மர், யோகானந்த நரசிம்மர், உக்கிர நரசிம்மர், கண்ட பேருண்ட நரசிம்மர் என நான்கு வடிவங்களைக் காட்டினார். ஆனால் யாத ரிஷியோ, தாயார் லட்சுமியோடு
காட்சியருள வேண்டும் என வேண்டி நின்றார். உடனடியாக லட்சுமி நரசிம்மராகத் தோன்றி அருளினார். எனவே இத்தலம் பஞ்ச நரசிம்மர் தலமாகப் போற்றப் படுகிறது. நரசிம்மர் காட்சி தந்த ஆதிக் கோவில் தற்போதைய யாதகிரி மலை அடிவாரத்தில் இருந்து 5 கிமீ தொலைவில் உள்ளது. யாத ரிஷி முக்தியடைந்த பின்பு இப்பகுதி
வாழ் மக்கள், அந்த ஆலயத்தில் முறையாக வழிபாடு செய்யவில்லை. இதனால் அங்கிருந்து அகன்று, தற்போதைய மலை மீதுள்ள குகைக்குள் இறைவன் குடிபுகுந்தார். இந்த நிலையில் இறைவனை வழிபட விரும்பும் பக்தர்கள், நரசிம்மரைக் காணாமல் தவித்தனர். அப்போது ஒரு பெண்ணின் கனவில் தோன்றிய நரசிம்மர், தன்
இருப்பிடத்தைக் கூறினார். மகிழ்ச்சியடைந்த மக்கள் மலை மீது ஏறி, குகைக்குள் இருந்த நரசிம்மரைக் கண்டு மகிழ்ந்து வழிபடத் தொடங்கினர் என தலவரலாறு கூறுகிறது. 1148-ல் நாராயண சுவாமி கோவில் கல்வெட்டு ஒன்றில், திரிபுவன மல்லுடு மன்னர் யாதகிரி வந்து நரசிம்மரைப் பலமுறை வழிபட்டுத் தரிசித்துச்
சென்றதாக வரலாற்றில் பதிவாகியுள்ளது. விஜயநகர மன்னன் கிருஷ்ண தேவாராயர், யாதகிரி லட்சுமி நரசிம்மரை வழிபட்டு, மகப்பேறு கிடைத்ததாகக் கூறப்படுகிறது. இக்கோவிலின் தனி விசேஷம் எங்கும் காணக் கிடைக்காத நரசிம்மரின் நின்ற திருக்கோல தரிசனம். தாயாரும் அருகில் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார்.
யாதகிரி நகரின் எல்லையில் எழிலான சிறிய குன்றில் உள்ளது நரசிம்மர் ஆலயம். தீராத நோயால் அவதிப்படுபவர்கள் இங்கு நம்பிக்கையோடு 40அல்லது48 நாட்கள் தினமும் ஆலயத்தை வலம் வந்து வணங்க, அவர்களின் நோய் பூரண குணம் பெறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இதனால் இவரை #வைத்தியநரசிம்மர்
என்றும் அன்போடு அழைக்கின்றனர். தீயசக்திகள், கிரக தோஷங்கள் உள்ளவர்களுக்கும் கண்கண்ட தெய்வமாக இத்தல லட்சுமி நரசிம்மர் விளங்குகிறார். அது மட்டுமின்றி வாகனம் வாங்குவோர், புது வீடு வாங்கியவர்கள், முதல் குழந்தை பெற்றவர்கள் வந்து செல்லும் திருக்கோவிலாகவும் இது விளங்குகிறது. நித்திய
கல்யாண நரசிம்மர் என்பதும் இவரின் கூடுதல் சிறப்பு. குடவரைக் கோவிலான யாதகிரி லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில், கருவறை உச்சியில் உள்ள விமானத்தில், தங்கத்தால் ஆன சுதர்சன சக்கரம் அமைக்கப்பட்டுள்ளது. 3 அடி உயரம், 3 அடி நீளம் கொண்ட இந்த சக்கரம் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. இந்த ஆலயத்தில
நாள்தோறும் திருமண வைபவமும் நடைபெறுகிறது. இந்த கோயிலில் உள்ள மூலவர் 12 அடி உயரமும், 30 அடி நீளமும் கொண்ட குகையில் வீற்றிருப்பார். இது தற்போது ரூ.1,800 கோடி செலவில் லட்சுமி நரசிம்மர் கோயில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. புதிய வடிவமைப்பில், கோயிலின் பின்புறம் குகை அமைந்துள்ளது
இந்த குகைக்கு செல்ல வேண்டுமாயின், பக்தர்கள் படிக்கட்டுகள் மூலம் இறங்கி சுவாமியை தரிசிக்க வேண்டி வரும். மேலும், இக்கோயிலில் நாக வடிவில் உள்ள ஜுவாலா நரசிம்மர், யோக முத்திரையில் யோக நரசிம்மர், வெள்ளியில் லட்சுமி நரசிம்மர் ஆகியோர் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். கோயிலின் வலது
புறம் ஹனுமன் கோயில் உள்ளது. இக்கோவில் பிரம்மோற்சவம் தெலுங்கு பல்குண மாதத்தில் (பிப்ரவரி- மார்ச்) 11 நாட்கள் விமரிசையாக நடக்கிறது. அதே போல நரசிம்மர் ஜெயந்தியும் சிறப்பான முறையில் கொண்டாடப்படுகிறது. இது தவிர ராமானுஜர், நம்மாழ்வார், மணவாள மாமுனிகள், திருமங்கையாழ்வார், திருப்பாண்
ஆழ்வார், ஆண்டாள் திருநட்சத்திர விழாக்கள், மார்கழி, ராமநவமி, மகா சிவராத்திரி, தேவி நவராத்திரி, அனுமன் ஜெயந்தி விழாக்களும் நல்ல முறையில் நடைபெற்று வருகின்றன. தினந்தோறும் திருக்கல்யாணம் நடைபெற்று, நித்திய கல்யாண நரசிம்மராக விளங்கும் இந்த ஆலயம், காலை 4 மணி முதல் மதியம் 3 மணி வரையும்,
மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்ய திறந்து வைக்கப் பட்டுள்ளது. இவ்வாலயம் தெலுங்கானா மாநில அரசால் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது. ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி வாரி தேவஸ்தானம் இந்த ஆலயத்தை நேரடியாகக் கவனித்து வருகிறது. ஆகம சாஸ்திரப்படி பெரும் செலவில் கட்டப்
பட்டு வரும் இக்கோயில் சிமெண்ட், மணல், இரும்பு போன்றவைகளால் கட்டப்படாமல், வெறும் கற்களால் மட்டுமே கட்டப்பட்டு வருகிறது. சுவாமியின் சிலைகள் அனைத்தும் ‘கிருஷ்ண சிலா’ அல்லது புருஷ சிலா என்றழைக்கப்படும் கற்களால் செய்யப்பட்டு வருகிறது. ஸ்திரீ சிலா எனும் கற்கள் மூலம் பெண் விக்ரகங்கள்
அமைக்கப்பட்டு வருகிறது. மற்றும் நபுசகா சிலா என்றழைக்கப்படும் கற்கள் மூலம் கோயிலில் தரை மற்றும் சுவர்கள் கட்டப்பட்டு வருகிறது. மேலும், கருப்பு நிற கிரானைட் கற்களும் இக்கோயிலில் உபயோகப் படுத்தப்பட்டுள்ளன. இவை தெலங்கானா மாநில காக்கதீயர்களின் காலத்தில் வடிவமைக்கப்பட்ட கட்டிட கலையை
மாதிரியாக கொண்டு கருப்பு கிரானைட் கற்கள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. அமைவிடம்: தெலுங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டத்தில், ஐதராபாத் – வாரங்கல் வழித் தடத்தில் யாதகிரி திருத்தலம் இருக்கிறது. ஐதராபாத்தில் இருந்து 60 கி.மீ, வாரங்கல்லில் இருந்து 90 கி.மீ. போன்கிர் ரயில் நிலையத்தில்
இருந்து 13 கி.மீ தொலைவு. ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து தரிசித்து செல்கின்றனர்.
ஓம் நரசிம்ம சுவாமியே நமஹா
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Mar 12
#தமிழில்_குடமுழுக்கு என்ற பெயரில் தற்போது ஆகம விதிகளை பின்பற்றாமல் குடமுழுக்கு செய்ய #திமுக அரசு திட்டமிட்டுள்ளது. அவர்கள் நம் இந்து மதத்தை அழிக்க கையில் எடுத்திருக்கும் இன்னொரு ஆயுதம் இது. பிராமண எதிர்ப்பும் அவர்களால் காலம் காலமாக நடைமுறை படுத்தப்பட்டதும் இதற்காகவே. மூத்த ImageImageImageImage
இந்து பத்திரிக்கையாளரின் கடிதம் கீழே!

செங்கோட்டை ஸ்ரீராம்
மூத்த பத்திரிகையாளர்

பெறுநர்
ஆணையர் மற்றும் உறுப்பினர்கள் கூட்டுக் குழு
இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை, நுங்கம்பாக்கம், சென்னை (கூட்டம் – திருநெல்வேலி)

பொருள்: தமிழில் குடமுழுக்கு நடத்துவது தொடர்பான கருத்துக் கேட்புக் Image
கூட்டத்தில் பதில் அளித்தல்
விவரம்: கூட்டுக் குழு கருத்துக் கேட்பு கூட்டம் 07/03/2023 பாளையங்கோட்டை, திருநெல்வேலி

வணக்கம்,
தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளரான நான், தமிழகத்தில் இருந்து வெளியாகும் ஆன்மிகப் பத்திரிகைகளான சக்தி விகடன், தினமணி - வெள்ளிமணி, கல்கியின் தீபம் இதழ்களில்
Read 15 tweets
Mar 12
#MahaPeriyava

Narrated by SriMatham Balu Mama
Source: Maha Periyaval Darisana Anubhavangal
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/fb

Sri Maha Periyava was camping at Kalavai. One morning an advocate from Thanjavur came for darshan by car. There was a lot Image
of fanfare. His wife wore the saree in the traditional manner, the sons, dhoti and upper cloth, the gentleman himself a dhoti in a traditional manner, upper cloth and a gem studded gold chain around his neck. He held a large plate on which were fruits, flowers, sugar candy,
grapes, cashew nuts, honey and with all these, money, packed inside a cover. They placed the plate in front of Sri Maha Periyava and prostrated to Him. Periyava gently probed the plate with His eyes.

“What cover is that?”

“Just a little... money...”

“By little do you mean ten
Read 8 tweets
Mar 11
தசாவதாரங்களில் மிக உயர்ந்தது #ஶ்ரீநரசிம்மர் அவதாரம். பகவான் எதற்காக நரசிம்ம அவதாரம் எடுத்தார் என்றால், சர்வ வஸ்துக்களின் உள்ளேயும் அவன் வியாபித்து இருப்பதை நாம் உணர்வதற்காகவே. விஷ்ணு புராணத்தில் ஒரு சுலோகத்தில் ஹே விஷ்ணு நாராயணா நீ எப்போதும் எங்கும் பரவியிருக்கிறாய். அது தர்ம Image
சூக்ஷ்மமான விஷயம். ஆனால் அப்படி நீ பரவியிருப்பதை எல்லோரும் உணர வேண்டும் என்பதால் அல்லவா நரசிம்ம அவதாரம் பண்ணினாய் என்று வருகிறது. நரசிம்மன் என்றால் ஒளிப்பிழம்பு என்று பொருள். காயத்ரியின் மத்தியிலே ஒளிப்பிழம்பாய் இருப்பவன் பகவான் மகா விஷ்ணு. விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் விஸ்வம், விஷ்ணுர் Image
என்று சொல்லிக் கொண்டே வந்தோமானால் நரசிம்மனிடத்திலே தான் போய் முடியும். சகஸ்ரநாமத்தில் முதன் முதலில் சொல்லப்பட்ட அவதாரம் நரசிம்ம அவதாரம் தான்.
சகஸ்ரநாமத்தின் நடுவிலும் நரசிம்மனே பேசப்படுகிறான். நரசிம்மன் இருக்கிற இடத்தில் எல்லாம் ஆஞ்சநேயரும் நின்று கொண்டு இருக்கின்றான். நரசிம்மனை Image
Read 5 tweets
Mar 11
#சிவாலய_ஓட்டம் மகாசிவ ராத்திரி அன்று பன்னிரண்டு சிவாலயங்களை ஓட்டமாக ஓடிச் சென்றே தரிசிப்பதுதான் இந்த வழிபாட்டின் தனிச் சிறப்பு. இது தொடங்கிய காரணம் இரண்டு வகையாக கூறப்படுகிறது. புருஷாமிருகம் பாதி மனித உருவம், மீதி புலி உருவமாக அமைந்த ஒரு பிறவி. ஆழ்ந்த சிவபக்தர். சிவனைத் தவிர,
வேறு இறைவனை ஏற்கமாட்டார். விஷ்ணு நாமம், இவருக்குக் கேட்க சகிக்காது! ஆனால் தானும் ஹரனும் ஒன்றே என்ற தத்துவத்தை அவருக்கு உணர்த்த விரும்பினார் பகவான் கிருஷ்ணன். அவர் பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான பீமனை அழைத்தார். நடைபெறவிருக்கும் குருக்ஷேத்திர யுத்தத்தில் பாண்டவர்கள் வெற்றி பெற
வேண்டுமானால், அந்த புருஷாமிருகத்தின் உதவியும் தேவைப் படுகிறது. போர் வெற்றிக்காக நடத்த இருக்கும் யாகத்திற்கு அந்த மிருகத்தின் பாலானது தேவைப் படுகிறது. ஆகவே, அதனை சந்தித்து அதன் உதவியைக் கோரி வருமாறு அவர் பீமனை அனுப்பி வைத்தார். கூடவே, அவனிடம் 12 ருத்ராட்சங்களைத் தந்து, கோவிந்தா,
Read 29 tweets
Mar 10
#பகவான்கிருஷ்ணன்_வணங்கும்_ஆறுபேர்
ஒரு நாள் கிருஷ்ணன் வழிபாடு செய்வதைப் பார்த்துவிட்டு, “அன்பரே! நீர் யாரையோ வணங்குவது போலத் தெரிகிறது. அவர்கள் யார்?” என்று கேட்டாள் ருக்மிணி. கிருஷ்ணர் கொஞ்சமும் தயங்காமல் பதில் சொன்னார்,

“நித்யான்ன தாதா, தருணாக்னிஹோத்ரி, வேதாந்தவித், சந்திர
சஹஸ்ர தர்சீ,
மாஸோபாவாசீச, பதிவ்ரதா ச ஷட் வந்தனீயா மம ஜீவ லோகே”

பொருள்: இந்த மனிதர்கள் வாழும் பூமியில் நான் ஆறு வகையான மக்களை வணங்குகிறேன்.
தினமும் அன்னதானம் செய்வோர்,
தினமும் அக்னிஹோத்ரம் செய்வோர்,
வேதாந்தம் அறிந்தவர்கள்,
சஹஸ்ர சந்திர தரிசனம் செய்து சதாபிஷேகம் செய்துகொண்டோர்
மாதா மாதம் உபவாசம் இருப்போர்,
பதிவ்ரதையான பெண்கள்.

அவர் சுருக்கமாகச் சொல்லி முடித்தாலும், பெரியோர்கள் இதற்குச் சொல்லும் விளக்கத்தை அறிந்தால் தான் அந்த ஆறு வகையான மக்களின் முழுப் பெருமையையும் நாம் அறிய முடியும்.

1. நித்ய அன்ன தாதா - அந்தக் காலத்தில் ஒருவருக்குக் கிடைக்கும்
Read 20 tweets
Mar 9
#MahaPeriyava
An elderly gentleman came for Sri Maha Periyava’s darshan. He looked very worried. His son had a good job. The salary was rather high, but not so much as a paisa reached his family. It vanished on his way home, like a bird in flight. It was all lost at the Guindy
Race Course.
“Sometimes he meddles with the money in the office. I repay it to protect his dignity. His family is in doldrums. The race horse has possessed him like a ghost.”
Periyava asked the gentleman about his son in detail. Then he consoled the young man’s father and sent
him back. Periyava instructed an attendant of the SriMatham to fetch a certain colleague of the young man from the same office, a man known for his piety. The gentleman came. He stood before Sri Maha Periyava with his hands folded in devotion.
“Go to the Police Station near the
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(