#சிவாலய_ஓட்டம் மகாசிவ ராத்திரி அன்று பன்னிரண்டு சிவாலயங்களை ஓட்டமாக ஓடிச் சென்றே தரிசிப்பதுதான் இந்த வழிபாட்டின் தனிச் சிறப்பு. இது தொடங்கிய காரணம் இரண்டு வகையாக கூறப்படுகிறது. புருஷாமிருகம் பாதி மனித உருவம், மீதி புலி உருவமாக அமைந்த ஒரு பிறவி. ஆழ்ந்த சிவபக்தர். சிவனைத் தவிர,
வேறு இறைவனை ஏற்கமாட்டார். விஷ்ணு நாமம், இவருக்குக் கேட்க சகிக்காது! ஆனால் தானும் ஹரனும் ஒன்றே என்ற தத்துவத்தை அவருக்கு உணர்த்த விரும்பினார் பகவான் கிருஷ்ணன். அவர் பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான பீமனை அழைத்தார். நடைபெறவிருக்கும் குருக்ஷேத்திர யுத்தத்தில் பாண்டவர்கள் வெற்றி பெற
வேண்டுமானால், அந்த புருஷாமிருகத்தின் உதவியும் தேவைப் படுகிறது. போர் வெற்றிக்காக நடத்த இருக்கும் யாகத்திற்கு அந்த மிருகத்தின் பாலானது தேவைப் படுகிறது. ஆகவே, அதனை சந்தித்து அதன் உதவியைக் கோரி வருமாறு அவர் பீமனை அனுப்பி வைத்தார். கூடவே, அவனிடம் 12 ருத்ராட்சங்களைத் தந்து, கோவிந்தா,
கோபாலா என்ற பெயர்களை உச்சரித்தவாறே புருஷா (புருடா) மிருகத்தை நெருங்குமாறும் சொன்னார். ‘‘என் பெயரைக் கேட்க விரும்பாத புருடா மிருகம், உன் மீது பாயும். நீ உடனே ஒரு ருத்ராட்சத்தை அந்த இடத்தில் போட்டுவிடு. அது ஒரு சிவலிங்கமாக மாறிவிடும். அதனைக் காணும் புருடா மிருகம், அந்த
லிங்கத்துக்குரிய வழிபாட்டினை செய்த பிறகு தான் மறுவேலை பார்க்கும். அங்கிருந்து நீ ஓடிவிடு. பிறகு அது உன்னைத் துரத்தி வரும். அடுத்த இடத்தில் இன்னொரு ருத்திராட்சத்தைப் போடு. இதுவும் லிங்கமாக மாறும். புருடா மிருகமும் பூஜை செய்யத் தொடங்கி விடும். இப்படி 12 இடங்களுக்கு ஓடி, ஓடி அதனை
அலைக்கழித்தால் பன்னிரண்டாவது ருத்திராட்சம் விழும் இடத்தில் நான், பரமேஸ்வரனுடன் உங்கள் இருவருக்கும் காட்சி தருவேன்’’ என்று விளக்கி, பீமன் நடந்துகொள்ள வேண்டிய முறையைச் சொன்னார். பீமனும் அவ்வாறே செய்தான். அப்படி முதல் ருத்திராட்சம் விழுந்த இடம்தான் திருமலை. பன்னிரண்டாவது விழுந்த
இடம் நட்டாலம். நட்டாலத்தில் ஹரியும் ஹரனும் இணைந்த சங்கர நாராயணராக மகாவிஷ்ணு காட்சி தந்து, சிவனும் விஷ்ணுவும் ஒன்று என்று புருடா மிருகத்துக்கு மட்டுமல்ல, உலகுக்கே உணர்த்தினார். நடக்கயிருக்கும் யாகத்திற்கு தேவையான பால் தனது மடியில் இருந்து எடுத்துக்கொள்ள அனுமதி அளித்தது. புருஷா
மிருகத்தின் உதவியும் குருக்ஷேத்திர யுத்தத்திற்குக் கிடைத்தது. மிருகத்தின் உதவியும் குருக்ஷேத்திர யுத்தத்திற்குக் கிடைத்தது.
1.திருமலை சூலப்பாணிதேவர்
2.திக்குறிச்சி மஹாதேவர்
3.திற்பரப்பு வீரபத்திரேஷ்வரர்
4.திருநந்திக்கரை நந்தீஷ்வரர்
5.பொன்மனை தீம்பிலான்குடிஷ்வரர்
6.பந்நிப்பாகம் கிராதமூர்த்திஷ்வரர்
7. கல்குளம் நீலகண்டர்
8. மேலாங்கோடு காலகாலர்
9. திருவிடைக்கோடு சடையப்பர்
10.திருவிதாங்கோடு பரசுபாணிஷ்வரர்
11.திற்பன்றிகோடு பக்தவசலேஷ்வரர்
12.திருநட்டாலம் சங்கரநாராயணர்
பண்ணீரு சிவாலய தரிசனத்தின் பின்னர் திருவாட்டர் தேவசத்திற்கு சென்று
மூலவர் ஆதிகேசவ பெருமாளையும் தங்கத்திலான சிவலிங்கப் பெருமானையும் தரிசித்து அல்லது சுசீந்திரம் தேவசம் சென்று மூலவர்கள் ஸ்தாணு-மாலையரையம் தரிசித்து ஈசனும் பெருமாளும் லயம் கொண்டிருக்கும் தரிசன அருள் பெற்று தங்களது ஆன்மீக தரிசன பயணத்தை முடித்து கொள்வார்கள்.
இப்படி கர்ண பரம்பரையாகச்
சொல்லப்படும் கதையை ஒவ்வொரு மகாசிவராத்திரி அன்றும் ஒரு குழுவினர் பீமனுடைய பிரதிநிதியாக ஓடி, ஓடிச் சென்று அந்த சிவாலயங்களைத் தொழுகிறார்கள். இந்த சிவாலய ஓட்டத்தில் பங்கு பெறுபவர்கள் மாசி மாதம் ஏகாதசி அன்று மாலை அணிந்து விரதம் மேற்கொள்வர். சிவராத்திரிக்கு முதல் நாள் மாலை 4 மணி அளவில்
காவி வேட்டியும் காவித்துண்டும் அணிந்து சிறிய பையில் விபூதி எடுத்துக் கொண்டு வழியில் ஏற்படக்கூடிய செலவுகளுக்காக கொஞ்சம் பணமும் எடுத்துக்கொள்வர். முதற்கோயிலான முஞ்சிறை என்ற திருமலையில், ஆற்றில் நீராடி, ஈசனை வணங்கிவிட்டு ஓட ஆரம்பிப்பர். இப்போதிலிருந்து பன்னிரண்டாவது கோயிலில் தரிசனம்
முடிக்கும்வரை ‘‘கோவிந்தா, கோபாலா’’ என்ற கோஷத்தை ஒலித்தபடியே இருப்பார்கள். நிறைவாக மும்மூர்த்திகளும் அருளும் சுசீந்திரம் கோயிலுக்குச் சென்று வழிபட்டு ஓட்டத்தை முடிக்கிறார்கள். இது ஒரு பக்தி செலுத்தும் முறை. ஏதாவது ஒரு முறையில் இறைவழி பாட்டை மேற்கொள்ளும் பக்தி உணர்வுதான் அவர்களிடம்
நிறைந்திருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களை, மகா சிவராத்திரி அன்று ஓடிச் சென்றே வழிபடும் ‘சிவாலய ஓட்டம்’ புகழ் பெற்றது. சுமார் 118 கிலோமீட்டர் தூரம் கொண்டது இந்த சிவாலய ஓட்டம்.
இன்னொரு விதமான காரணமும் சொல்லப்படுகிறது. சிவனிடம் இருந்து பாசுபத அஸ்திரம்
அர்ஜூனன் பெற்று வந்தாலும் அவன் அதை பயன்படுத்தாமலே மகாபாரத யுத்தம் முடிந்தது. கண்ணன் அவர்களின் கண்கண்ட தெய்வமானான், சிவன் மேல் பெரும் அபிமானமெல்லாம் அவர்களுக்கு இல்லை, அது போக யுத்தம் முடிந்த வெற்றியில் இருந்தார்கள். இதெல்லாம் இறைவனின் நாடகம் என அவர்கள் நினைக்கவில்லை, சிவனை
மறந்திருந்தார்கள். யுத்தத்தில் துரியனை அடித்து கொன்று அதை முடித்துவைத்தவன் என பீமனும் ஒரு கர்வத்தோடு அலைந்தான், காட்சிகளை கவனித்து கொண்டிருந்த கண்ணன் அவர்களின் மாயை அறுக்க ஒரு நாடகம் நடத்தினான். யுத்தம் என்பது பாவங்களின் முடிவு, அதற்கு யாரும் தப்ப முடியாது, செய்த பாவங்களுக்கு
பரிகாரமாக ஒரு யாகம் நடத்த நினைக்கும் தர்மனிடமும் அகங்காரம் மிகுந்தது, இதுவரை யாரும் கொடுக்காத பொருளை கொண்டு யாகம் நடத்த விரும்பினான். அங்கே தன் விளையாட்டை ஆரம்பித்தான் கண்ணன். விளையாட்டு அந்தணர்கள் உருவில் வந்தது. தர்மனிடம் யாகம் செய்ய வந்த அந்தணர்கள் யாரும் இதுவரை பயன்படுத்தாத
யாக பொருள் புருஷ மிருகத்தின் பால் என்றார்கள். புருஷா மிருகத்தின் பால் அபூர்வமானது என சொல்ல அதை கொண்டுவர விரும்பினான், ஆனால் அந்த கொடிய மிருகம் பற்றி தகவலேதும் அவனிடம் இல்லை. கண்ணன் உதவிக்கு வந்தார்.
அந்த புருஷா மிருகம் பற்றி தனக்கு தெரியும் என்றும் ஆனால் அது பொல்லாதது என்றும்
கோபாலன் பெயரை சொன்னால் ஓடும் ஆனால் சிவன் பெயரை சொன்னால் அப்படியே உருகி நிற்கும், அந்நேரம் பாலை கறக்கலாம் ஆனால் சிறிது நேரத்தில் விரட்டும் என்றும் அதன் இயல்பை சொன்ன கண்ணன் ஒரு உத்தியும் சொன்னான். 12 ருத்திராட்சங்களை பீமனிடம் கொடுப்போம், அவன் நாழிகைக்கு ஒன்றாக இரவு முழுக்க அதை
கொண்டு அந்த மிருகத்தை ஓடவைத்து நிறுத்தி பால் கறக்கட்டும் என 12 ருத்திராட்சங்களை கொடுத்தது அகபாவத்தில் இருந்த பீமனின் கர்வம் ஒழிக்க அவனையே கிளம்ப சொன்னான் கண்ணன். மேலே சொன்னபடியே பின் அனைத்தும் நடந்தது. 12 ருத்திராட்சங்களும் லிங்கமாகி பீமன் தப்பிய பின்னும் மிருகம் அவனை விரட்டியது
அடுத்து ருத்திராட்சம் இல்லா பீமன் யாகசாலையினை நெருங்கி இருந்தான். யாக சாலைக்குள் ஒரு காலை அவன் வைத்த நிலையில் இன்னொரு காலை மிருகம் பற்றியது. இப்பொழுது யாகசாலைக்குள் இருக்கும் கால் அவனுக்கு, வெளியில் தான் பிடித்த கால் தனக்கு என அது வாதிட்டது, அங்கு வந்தான் தர்மன். ஏ மிருகமே 12
சிவலிங்கத்தை உனக்கு காட்ட ஓடிய புண்ணிய பாதத்தையா கடித்து விழுங்கபார்க்கின்றாய் என உருக்கமாக அவன் கேட்கவும் மிருகத்துக்கு தன் தவறு விளங்கிற்று. லிங்க தரிசனம் காட்டிய புண்ணிய காலையா கடித்தேன் என அவனை விடுவித்த மிருகம் பின் ஏன் அவன் கோபாலா கோபாலா என கத்தினான் என்பதை யோசித்து,
கோபாலா கோபாலா என இவன் அழைத்து ஓடினாலும் அவன் ருத்திராட்சம் வைத்தவுடன் சிவலிங்கம் வந்ததென்றால் "ஹரியும் சிவனும் ஒன்றல்லவா” இதை புரிந்து கொண்டேன் என்றது. அந்த வார்த்தை தர்மனுக்கும் பீமனுக்கும் சுட்டது, அதுவரை குழம்பியிருந்த அவர்கள் இரண்டும் ஒரே சக்தி என்பதை உணர்ந்து அகந்தை ஒழிந்து
நின்றனர். இரவெல்லாம் ஓடி அரியும் சிவனும் ஒன்று என பீமன் ஞானம் பெற்ற கதை இப்படி உண்டு, அதை நினைவு கூறும் விதமாக முன்பு சிவராத்திரியில் 12 சிவாலங்களுக்கு ஓடும் நிகழ்ச்சியும் இருந்தது. 12 லிங்கம் என்படு 12 ராசிகளை குறிப்பது என்றும், எல்லா ராசிகளின் அருளும் அந்நாளில் கிடைக்க 12
லிங்கங்களை வணங்க வேண்டும் என்பதும் ஏற்பாடு என்பார்கள். முக்கியமாக சிவராத்திரி இரவில் தூங்காமல் லிங்க தரிசனம் செய்ய இந்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதனை பாரதத்தின் பல பாகத்தில் வாழ்ந்த இந்துக்கள் ஒரு காலத்தில் செய்தனர், சிவராத்திரி அன்று "கோபாலா கோபாலா" என கத்திய படியே 12
லிங்கங்கள் இருக்கும் ஆலயத்துக்கு ஓடுவார்கள். பின்னாளில் கைவிடப் பட்டது, அதற்கு புத்தமத எழுச்சி பின் சமண மதம் அதை தாண்டிய ஆப்கானியர் ஐரோப்பியர் குழப்பம் என பல காரணம் உண்டென்றாலும் அந்நியர் ஆட்சியில் அதிகம் சிக்காத கன்னியாகுமரி பக்கம் இந்த ஓட்டம் உண்டு. சாலிய மகரிஷி வழி வந்தவர்களான
நெசவாளர் இனம் அதனை தொடர்ந்தது. சிவராத்திரி அன்று இப்படி ஆதிகேசவ பெருமாள் கோவிலை சுற்றிய 12 சிவாலயங்களை இப்படி சிவராத்திரியன்று கோபாலா கோபாலா என சொல்லியபடியே ஓடி சுற்றுவார்கள். இப்பொழுது சாலியர் தாண்டி எல்லா இந்துக்களும் பங்கெடுக்கும் நிகழ்வாக அது அமைந்திருக்கின்றது, இந்தியா
முழுக்க சிவராத்திரி கொண்டாடபடும் நேரம் கன்னியாகுமரி பக்கம் மட்டும் "கோபாலா கோபாலா" என கண்ணனை நினைத்தபடியே சிவராத்திரி அனுசரிக்கபடுவது அங்குதான் தூங்காமல் விழித்திருந்து சிவனை தரிசிக்கவும் அதில் ஹரியும் சிவனும் ஒன்று என்ற தத்துவத்தை புகுத்தவும் எவ்வளவு நுட்பமான வழிகளை எல்லாம்
போதித்து இருக்கின்றார்கள் அந்த முன்னோர்கள்.

சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Mar 13
#MahaPeriyava The mukham (camp) of SriMatham was in Anakunti, on the banks of the Tungabhadra river. One can see the ruined Chinna (cut images) of the Krishnadevaraya Samrajyam (empire) here. They say that this was the place where Sri Rama, standing behind a tree, killed Vaali Image
with his arrow. Similarly it was the place of Nava Brindavanam, considered sacred by the Madhwas. The Nine Brindavanas located on a rocky island in the midst of the Tungabhadra is adored as the Kashi of the Madhwas. So, Madhwas used to visit the place in large numbers, and do
pooja with bhakti (devotion). The Annapoorani temple, which is under the administration of the Chintamani Matham, is located in the city of Hospet. Goddess Annapoorani was given a decoration with laddus, in accordance with Sri Maha Periyava's Agya (orders)! Around two o' clock in
Read 14 tweets
Mar 13
#மகாபெரியவா
நன்றி- குமுதம்.லைஃப்
தொகுப்பு-ரா.வேங்கடசாமி
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
கணேசன் கனபாடிகள் என்பவர்,வேத பாட சாலையில் படித்துக்கொண்டு இருந்தபோது நடந்த சம்பவம் இது. அந்தக் காலத்து மாணவர்கள் விடுமுறையில் தங்கள் ஊருக்குச் சென்று திரும்பும்போதெல்லாம், தங்கள் குருவிற்கு Image
காணிக்கையாக அன்போடு ஏதாவது பொருளை வாங்கி வருவது உண்டு. அப்படி ஒரு சமயம் மாணவனாக இருந்த கணேசன், தன் குருவுக்குத் தருவதற்காக காய்கறிகள் கொஞ்சம் வாங்கிக் கொண்டான். அதோடு தங்கள் ஊரில் மட்டும் கிடைக்கும், ஒரு விசேஷரக வாழைப் பழத்தையும் கொஞ்சம் வாங்கிக் கொண்டு வந்தான். மாணவர்கள்
ஒவ்வொருவரும் தாங்கள் வாங்கி வந்ததை வாத்தியாரிடம் சமர்ப்பிக்க, கணேசனும் தான் கொண்டு வந்தவற்றை தனது வாத்தியாரிடம் சமர்ப்பித்துப் பணிந்து நின்றான். அனைத்தையும் பார்த்து மகிழ்ந்த குரு, "நீ எனக்காக ஒரு உபகாரம் பண்ணு.எல்லா காய்கறி, பழங்களையும் அப்படியே எடுத்துண்டு போய், காஞ்சி மகா
Read 16 tweets
Mar 12
#தமிழில்_குடமுழுக்கு என்ற பெயரில் தற்போது ஆகம விதிகளை பின்பற்றாமல் குடமுழுக்கு செய்ய #திமுக அரசு திட்டமிட்டுள்ளது. அவர்கள் நம் இந்து மதத்தை அழிக்க கையில் எடுத்திருக்கும் இன்னொரு ஆயுதம் இது. பிராமண எதிர்ப்பும் அவர்களால் காலம் காலமாக நடைமுறை படுத்தப்பட்டதும் இதற்காகவே. மூத்த ImageImageImageImage
இந்து பத்திரிக்கையாளரின் கடிதம் கீழே!

செங்கோட்டை ஸ்ரீராம்
மூத்த பத்திரிகையாளர்

பெறுநர்
ஆணையர் மற்றும் உறுப்பினர்கள் கூட்டுக் குழு
இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை, நுங்கம்பாக்கம், சென்னை (கூட்டம் – திருநெல்வேலி)

பொருள்: தமிழில் குடமுழுக்கு நடத்துவது தொடர்பான கருத்துக் கேட்புக் Image
கூட்டத்தில் பதில் அளித்தல்
விவரம்: கூட்டுக் குழு கருத்துக் கேட்பு கூட்டம் 07/03/2023 பாளையங்கோட்டை, திருநெல்வேலி

வணக்கம்,
தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளரான நான், தமிழகத்தில் இருந்து வெளியாகும் ஆன்மிகப் பத்திரிகைகளான சக்தி விகடன், தினமணி - வெள்ளிமணி, கல்கியின் தீபம் இதழ்களில்
Read 15 tweets
Mar 12
#MahaPeriyava

Narrated by SriMatham Balu Mama
Source: Maha Periyaval Darisana Anubhavangal
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/fb

Sri Maha Periyava was camping at Kalavai. One morning an advocate from Thanjavur came for darshan by car. There was a lot Image
of fanfare. His wife wore the saree in the traditional manner, the sons, dhoti and upper cloth, the gentleman himself a dhoti in a traditional manner, upper cloth and a gem studded gold chain around his neck. He held a large plate on which were fruits, flowers, sugar candy,
grapes, cashew nuts, honey and with all these, money, packed inside a cover. They placed the plate in front of Sri Maha Periyava and prostrated to Him. Periyava gently probed the plate with His eyes.

“What cover is that?”

“Just a little... money...”

“By little do you mean ten
Read 8 tweets
Mar 11
தசாவதாரங்களில் மிக உயர்ந்தது #ஶ்ரீநரசிம்மர் அவதாரம். பகவான் எதற்காக நரசிம்ம அவதாரம் எடுத்தார் என்றால், சர்வ வஸ்துக்களின் உள்ளேயும் அவன் வியாபித்து இருப்பதை நாம் உணர்வதற்காகவே. விஷ்ணு புராணத்தில் ஒரு சுலோகத்தில் ஹே விஷ்ணு நாராயணா நீ எப்போதும் எங்கும் பரவியிருக்கிறாய். அது தர்ம
சூக்ஷ்மமான விஷயம். ஆனால் அப்படி நீ பரவியிருப்பதை எல்லோரும் உணர வேண்டும் என்பதால் அல்லவா நரசிம்ம அவதாரம் பண்ணினாய் என்று வருகிறது. நரசிம்மன் என்றால் ஒளிப்பிழம்பு என்று பொருள். காயத்ரியின் மத்தியிலே ஒளிப்பிழம்பாய் இருப்பவன் பகவான் மகா விஷ்ணு. விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் விஸ்வம், விஷ்ணுர்
என்று சொல்லிக் கொண்டே வந்தோமானால் நரசிம்மனிடத்திலே தான் போய் முடியும். சகஸ்ரநாமத்தில் முதன் முதலில் சொல்லப்பட்ட அவதாரம் நரசிம்ம அவதாரம் தான்.
சகஸ்ரநாமத்தின் நடுவிலும் நரசிம்மனே பேசப்படுகிறான். நரசிம்மன் இருக்கிற இடத்தில் எல்லாம் ஆஞ்சநேயரும் நின்று கொண்டு இருக்கின்றான். நரசிம்மனை
Read 5 tweets
Mar 10
#யாதகிரி_பஞ்ச_நரசிம்மர்_கோவில் #தெலுங்கானா
ரிஷியஸ்ருங்கர்- சாந்தா தேவியின் புதல்வராகப் பிறந்தவர் யாத ரிஷி. திரேதாயுகத்தில் வாழ்ந்த இவர், அனுமனின் அருளைப் பெற்றவர். நரசிம்மர் மீது தீராத பக்தி கொண்டவர். அவரைக் காணும் ஆவலில் கடுமையாகத் தவம் இயற்றி வந்தார். அவரது தவத்தால் மகிழ்ந்த
நரசிம்மர், அனுமன் மூலமாக தன்னுடைய இருப்பிடத்தைக் காட்டி, அங்கே ஐந்து வடிவங்களில் யாத ரிஷிக்கு காட்சி தந்து அருளினார். முதலில் ஜ்வாலா நரசிம்மர், யோகானந்த நரசிம்மர், உக்கிர நரசிம்மர், கண்ட பேருண்ட நரசிம்மர் என நான்கு வடிவங்களைக் காட்டினார். ஆனால் யாத ரிஷியோ, தாயார் லட்சுமியோடு
காட்சியருள வேண்டும் என வேண்டி நின்றார். உடனடியாக லட்சுமி நரசிம்மராகத் தோன்றி அருளினார். எனவே இத்தலம் பஞ்ச நரசிம்மர் தலமாகப் போற்றப் படுகிறது. நரசிம்மர் காட்சி தந்த ஆதிக் கோவில் தற்போதைய யாதகிரி மலை அடிவாரத்தில் இருந்து 5 கிமீ தொலைவில் உள்ளது. யாத ரிஷி முக்தியடைந்த பின்பு இப்பகுதி
Read 18 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(