On the part played by Tamilagam in India’s freedom struggle, today marks an important day. In March 1908, thousands of protesters gathered at Tuticorin to protest against the arrest of Bipin Chandra Pal. Both V.O.Chidambaram Pillai & Subramanya Siva spoke against the atrocities
of British government. It must be noted that British Govt. banned all public meetings during this time. These protests continued even in Tirunelveli despite the ban and another meeting was conducted in "Thai Poosa Mandapam". Infuriated with this, Collector Wynch ordered both
VOC and Siva to meet him on March 12th 1908. During the meeting he asked both of them to apologise for disobeying the govt. order, stop these protest meetings & stop asking everyone to say "Vande Mataram". Both of them refused to do so. Immediately both Siva & VOC were arrested
Angered by their arrests, protesters gathered in large numbers on March 13, 1908 in Tirunelveli and Tuticorin. They set fire to Tirunelveli Municipal Corporation office. As things went out of hand, sub collector Ashe directly got into action. A boy was killed by him
as he shot him with a revolver. Three others were also killed in the police shootout. Many were arrested. This is known as the Tirunelveli uprising in the annals of history. A fallout of this is that both V.O.C and Siva were convicted for abetting the uprising.
Two life sentences (40 years) were imposed on V.O.C. Siva was sentenced to 10 years of rigorous imprisonment. The Swadeshi Steam Navigation Company started by V.O.C was wrecked by his imprisonment & eventually closed down. Siva got leprosy during the imprisonment & has to suffer
due to that for rest of his life. It’s time to remember these great patriots on this important day in our freedom movement.
An interesting crime story documented in inscriptions at Thirukoshtiyur temple. During the reign of Jatavarman Sundara Pandiyan, one Vamanabhattan was returning from the temple at night. One Sathiyanavan & his accomplice killed him and ran away to the woods in Pandrithitri
The village Sabha confiscated all his property including house,land & Gardens and attached them to the temple. After some time, Vavananbhattan, son of Vamanabhattan decided to take revenge. He went to Pandrithitri & killed Sathiyanavan. Now, the Sabha ordered him to provide land
and certain services to temple. Thereafter, Cheramalai Perumal, son of Sathiyanavan appealed to village Sabha that he didn’t know about his father committing a crime & he being killed in return. He requested them to return his property. The Sabha asked him to pay 800 Panam to
வரலாறு பெரிய இடங்களால் மட்டும் படைக்கப்படுவதல்ல, சாதாரணர்களாலும் உருவாக்கப்படுவது. அதற்கு ஒரு உதாரணம் அரியநாதன். காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஊரில் ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவன் அரியநாதன். வீரமும் அறிவும் அபூர்வமாக அவனிடம் சேர்ந்திருந்தது. ஆனாலும் என்ன பயன்.
வேலை எதுவும் கிடைக்கவில்லை.அப்போது விஜயநகரப்பேரரசின் காலம். தலைநகருக்குச் சென்றால் ஏதாவது வேலை கிடைக்கும் என்று அவனிடம் யாரோ சொல்ல, அதைக்கேட்டு விஜயநகரம் சென்றான் அரியநாதன். அப்போது நவராத்திரி சமயம். விஜயநகரத்தின் பெருவிழா அது. தேவிக்கு தினமும் பல எருமைகள் பலி கொடுக்கப்படும்.
எருமைகள் என்றால் ஏப்பசாப்பையானவை அல்ல. மிகவும் வலுவான பெரிய எருமைகள் அவை. ஆனால் அவற்றை ஒரே வெட்டாக வெட்டி பலி கொடுக்க வேண்டும். அப்படி ஒவ்வொரு எருமையாக அன்று பலி கொடுக்கப்பட்டுக்கொண்டிருந்த ஒரு இடத்திற்குப் போய்ச்சேர்ந்தான் அரியநாதன்.
ஜல்லிக்கட்டு சீசன் ஆரம்பித்துவிட்டது. பொங்கலைப் போலவே ஜல்லிக்கட்டும் ஹிந்து சமயத்தைச் சேர்ந்த வீர விழாவாகும். சங்க இலக்கியமான கலித்தொகை, ஜல்லிக்கட்டுக் காளைகளோடு நமது கடவுள்களை ஒப்பிட்டு ஒரு பாடல் மூலம் அழகாக வர்ணிக்கிறது. அதைப் பார்ப்போம் (பாடல் 104)
ஜல்லிக்கட்டு அரங்கத்தில் ஒவ்வொரு காளையாக வருகிறது. முதலில் வெள்ளை நிறக் காளை.
வான் உற ஓங்கிய வயங்கு ஒளிர் பனைக்கொடிப்
பால் நிற வண்ணன் போல் பழி தீர்ந்த வெள்ளையும்,
வானைத் தொட்டுவிடுவதுபோல் உயர்ந்த பனைக் கொடியை உடைய பலராமன் போல வெள்ளை நிறத்தோடு இருக்கிறதாம் அந்தக் காளை
அடுத்து வருவது
பொரு முரண் மேம்பட்ட பொலம் புனை புகழ் நேமித்
திரு மறு மார்பன் போல் திறல் சான்ற காரியும்
போரில் வெற்றி தரக்கூடிய சக்கரப்படையைத் தாங்கியவனும் திருமகளை மார்பில் கொண்டவனுமான திருமாலின் நிறத்தை உடைய கருமை நிறக் காளை
ஆதிரைத் திருநாள் வருவதை முன்னிட்டு ஆடல்கள் பற்றிய ஒரு இழை.
தமிழ் இலக்கியங்கள் நாட்டியத்தை பதினோரு வகையாகப் பிரித்திருக்கின்றன. ஒவ்வொரு ஆட்டமும் ஒரு தெய்வத்துக்கு உரியதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்
முதலாவது கொடுகொட்டி. சிவபெருமான் திரிபுர சம்ஹாரத்திற்குப் பிறகு ஆடிய வெற்றிக்கூத்து இது.
அடுத்தது பாண்டரங்கம். இதுவும் சிவபெருமானுக்கு உரியது. திரிபுர சம்ஹாரத்தின் போது அந்த இடமெல்லாம் பஸ்பமாக, அந்த வெண்ணிற சாம்பலைப் பூசி ஆடிய ஆட்டம் பாண்டரங்கம். இது ஒரு அகோர தாண்டவம்
“மண்டு அமர் பல கடந்து மதுகையால் நீறு அணிந்து
பாண்டரங்கம் ஆடுங்கால்” - கலித்தொகை
திருமாலிருஞ்சோலை. காடுகளால் சூழப்பட்டு இருந்த கோவில். அங்கே தள்ளாத வயதிலும் அழகனுக்கு ஆராதனம் பண்ணிவந்தார் திருமலையாண்டான். அர்த்தஜாம பூஜை முடிந்த பிறகே வீடு திரும்புவது அவர் வழக்கம். கண் பார்வை மங்கி வந்ததால், இரவு பந்தம் பிடிக்க திருவடிப்பிச்சை என்ற சுந்தரராஜனை வைத்திருந்தார்
அவனும் திருமலையாண்டானை இரவு பூஜை முடிந்ததும் வீடு வரை வந்து விட்டுவிட்டுப்போவான்.
ஒரு நாள் கைங்கர்யம் முடிந்ததும் திருவடிப்பிச்சையைத் தேடினார். ஆளைக் காணோம். “சுந்தரராஜா, சுந்தரராஜா” என்று இருமுறை கூப்பிட்டார். “அடியேன்” என்று சொல்லிக்கொண்டே ஓடிவந்தான் அவன். பந்தத்தை ஏற்றினான்.
வீடுவரை வழிகாட்டி வந்துவிட்டு “சுவாமி உத்தரவு வாங்கிக்கொள்கிறேன்” என்று சொல்லி விடைபெற்றுப் போனான்.
மறுநாள் காலை எழுந்தார் திருமலையாண்டான்.
“சுவாமி, ஆச்சார்ய அபசாரம் செய்து விட்டேன், மன்னிக்கவேண்டும்” என்று அவர் காலில் ஓடோடி வந்து விழுந்தான் திருவடிப்பிச்சை. “அடடா, எழுந்திரு..