#சத்யவான்_சாவித்திரி_விரதம்
நாளை 15.03.2023 புதன் கிழமை
#காரடையான்_நோன்பு
சரடு கட்டிக் கொள்ள வேண்டிய நேரம் விடியற்காலை 5 லிருந்து 6 மணிக்குள்

மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவது காரடையான் நோன்பு. மாசி மாத கடைசி நாள் இரவு ஆரம்பித்து பங்குனி முதல் நாள் காலையில்
முடிப்பர். இந்த நோன்பை காமாட்சி நோன்பு, கவுரி நோன்பு, சாவித்திரி விரதம் என்றும் சொல்வார்கள். சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் விருத்திக்காக காரடையான் நோன்பு அனுஷ்டிக்க வேண்டும். கார்காலத்தில் விளையும் நெல்லைக் குத்தி, பச்சரிசி மாவுடன் இனிப்பு கலந்து தயாரிப்பதே காரடை ஆகும்.
மந்திர தேசத்து மன்னன் அஸ்வபதியின் மகள் சாவித்திரி, வீரத்தில் சிறந்தவள். இவள் ஒருநாள் வேட்டைக்குச் செல்லும்போது, தியானத்தில் இருந்த சாளுவதேசத்து இளவரசன் சத்தியவானைப் பார்த்தாள். அவனது தந்தை ஒரு போரில் நாட்டை இழந்து விட்டார். அதனால், காட்டில் மகனுடன் வசித்தார். பார்வையற்ற பெற்றோரை
சத்தியவான், அன்புடன் கவனித்துக் கொண்டான். அவனையே திருமணம் செய்வதென்று முடிவு செய்தாள் சாவித்திரி. மந்திர தேசத்திற்கு வந்த நாரதர், சாவித்திரியின் தந்தையிடம் இன்னும் ஓராண்டு காலத்தில் சத்தியவான் இறந்து விடுவான் என்றும், அதனால் சாவித்திரியை அவனுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டாம்
என்றும் எச்சரித்தார். ஆனால், சாவித்திரி விடாப்பிடியாக சத்தியவானையே திருமணம் செய்து கொண்டாள். கணவனையும், பார்வையற்ற மாமனார், மாமியாரையும் அவள் அன்புடன் கவனித்துக் கொண்டாள். அரண்மனைவாசியான அவள் காட்டில் பல சிரமங்களை அனுபவித்தாலும், பொறுமையுடன் ஏற்றுக் கொண்டாள். சத்தியவானின் ஆயுள்
முடியும் நாள் வந்தது. அன்று அவள் கணவனைப் பிரியவே இல்லை. அவர்கள் காட்டில் பழம் பறித்துக் கொண்டிருந்தனர். திடீரென சத்தியவான், மயங்கி விழுந்து இறந்தான். அவனது உயிரை எமதர்மராஜா, எடுத்துச் சென்றார். சாவித்திரி எமனைப் பின்தொடர்ந்தாள். தலை சிறந்த கற்புக்கரசி என்பதாலும், கணவன் இறப்பான்
என்று தெரிந்தும், தைரியத்துடன் அவனை திருமணம் செய்து கொண்டதாலும், பார்வையற்ற முதியவர்களுக்கு தளராத சேவை செய்தவள் என்பதாலும் அவளுக்குக் காட்சி தந்த எமதர்மர், அவளை திரும்பிப் போகச் சொன்னார். அவரிடம், நான் என் கணவருடன் வாழ விரும்பு கிறேன். நான் பதிவிரதை என்பது உண்மையானால், அவரது
உயிரைத் திருப்பித்தர வேண்டும், எனக் கேட்டாள். இறப்புக்குப் பிறகு யாருக்கும் வாழ்வு கிடையாது என மறுத்த எமதர்மர், அதற்குப் பதிலாக வேறு எந்த வரம் கேட்டாலும் தருவதாகக் கூறினார். சாவித்திரி சமயோசிதமாக, என் மாமனார், மாமியாருக்கு மீண்டும் பார்வை வேண்டும். ஆண் வாரிசு இல்லாத என் தந்தைக்க
ஆண் குழந்தை பிறக்க வேண்டும். எனக்கு நூறு குழந்தைகள் வேண்டும், என்றாள். சற்றும் யோசிக்காத எமதர்மன் அந்த வரங்களைக் கொடுத்து விட்டார். எனக்கு நூறு குழந்தைகள் பிறக்க வேண்டுமென்றால், என் கணவன் உயிருடன் இருந்தாக வேண்டுமே! அவரது உயிரை திரும்பக் கொடுங்கள், என யாசித்தாள் சாவித்திரி.
எமதர்மராஜா அவளது அறிவின் திறனை வியந்து, சத்தியவானை அங்கேயே விட்டு விட்டு அவனுக்கு உயிரும் கொடுத்து விட்டுச் சென்றார்.
மாசியும், பங்குனியும் இணையும் சமயத்தில் காரடையான் நோன்பு நோற்பது வழக்கம்.
மாங்கல்ய பாக்கியத்திற்காக பெண்கள் அனுஷ்டிக்கும் விரதம் காரடையான் நோன்பாகும். மாசி மாதம்
முடிந்து, பங்குனி மாதம் துவங்கும் வேளையில் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படும்.
#விரதமுறை: விரதம் இருக்கும் நாளில் பெண்கள் அதிகாலையில் நீராடி, தரையில் சிறிய கோலமிட வேண்டும். அதன் மீது நுனி வாழை இலை போட்டு, இரண்டு அடையும், உருக்காத வெண்ணையும் வைக்க வேண்டும். இலையின் ஓரத்தில் வெற்றிலை,
பாக்கு, இரண்டு வாழைப்பழம் வைக்க வேண்டும். அதன் மீதே நோன்புக் கயிற்றையும், புது தாலிச் சரடையும் வைக்க வேண்டும். அதன் முன் அமர்ந்து, இலையைச் சுற்றி நீர் தெளித்து நிவேதனம் செய்ய வேண்டும். பின்னர் நோன்பு சரடை பெண்கள் தாங்களாகவே தங்கள் கழுத்தில் கட்டிக்கொள்ள வேண்டும். இறைவியர்
படங்களுக்குச் சாற்ற வேண்டும். பிரசாதத்தை அனைவரும் உண்ணலாம். காரடையான் நோன்பன்று பெண்கள் மோர் சாப்பிடக் கூடாது. மஞ்சள் கடிற்றைக் கட்டிக் கொள்ளும் போது, உருக்காத வேன்நீயும் ஓரடையும் நான் நூத்தேன், ஒருக் காலும் என் கணவன் என்னை விட்டு பிரியாதிருக்க வேண்டும் என்று சொல்லி வேண்டிக்
கொள்ளவேண்டும்.
#அடை_செய்யும்_முறை
பெண்கள் காரடையான் நோன்புக்கு படைக்கவும், விரதம் முடிந்த பின்பு சாப்பிடவும் இந்த அடை செய்வார்கள்.
தேவையான பொருட்கள்
வறுத்த பச்சரிசி மாவு 1 கப்
காராமணி 1/4 கப்
தேங்காய் சிறிய பற்களாக கீரியது - அரை கப்
வெல்லம் (பொடித்தது) 1 கப்
ஏலக்காய் தூள் 1 டீ
ஸ்பூன்
தண்ணீர் 2 கப்
#அடை_செய்முறை:
காராமணியை வேகவிட்டு வடித்து வைத்துக் கொள்ளவும். ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு இரண்டு கப் தண்ணீர் விட்டு வெல்லத்தைப்போட்டு கொதிக்கவிடவும். வெல்லம் நன்றாக கரைந்து தண்ணீர் "தள தள' என்று கொதிக்கும்போது காராமணி,தேங்காய் துண்டுகள்,ஏலப்பொடி
சேர்க்கவும். வறுத்துவைத்துள்ள மாவை ஒரு கையால் கொட்டிக்கொண்டே மறுகையால் கிளறவும். மாவு நன்றாக வெந்ததும் கையில் லேசாக எண்ணைய் தடவி அதில் இந்த மாவை உருட்டி வைத்து அடைபோல் தட்டி வாழை இலையில் வைக்கவும். இதனை இட்லி பாத்திரத்தில் வைத்து பத்து நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Mar 16
#இந்தியாவில்_உள்ள_பழமையான_நவக்கிரக_கோவில்கள்

1. தமிழ்நாடு
கும்பகோணத்திற்கு அருகில் உள்ளன மிகப் பழமையான நவக்கிரக கோவில்கள். இவை சோழ வம்சத்தைச் சேர்ந்த நவக்கிரக கோயில்களின் தொகுப்பாகும். இவை 7 முதல் 9 ஆம் நூற்றாண்டு காலத்தில் கட்டப்பட்டவை.
சூரிய நவகிரஹஸ்தலம் - சூரியனார் கோவில் ImageImage
சந்திர நவகிரஹஸ்தலம் - கைலாசநாதர் கோவில், திங்களூர்
அங்காரகன் நவகிரஹஸ்தலம் -  வைத்தீஸ்வரன் கோவில்
புத்த நவகிரஹஸ்தலம் -  திருவெண்காடு
குரு நவகிரஹஸ்தலம் -  ஆலங்குடி
சுக்ர நவகிரஹஸ்தலம் - அக்னீஸ்வரர் கோவில், கஞ்சனூர்
சனி நவகிரஹஸ்தலம் -  திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில்
ராகு நவகிரஹஸ்தலம் - Image
ஸ்ரீ நாகநாதசுவாமி கோவில், திருநாகேஸ்வரம்
கேது நவகிரஹஸ்தலம் - கீழ்பெரும்பள்ளம் கோவில்

2. கேரளா
கிளிமரத்துகாவு குளத்துபுளா அருகே திருவனந்தபுரம் அருகே உள்ள அந்த ஊரில் நவக்கிரகக் கோயில் விண்மீன் மண்டலத்தைப் போலவே நீள்வட்ட அமைப்பில் உள்ளது.

3.அஸ்ஸாம்
கௌஹாத்தி நகரில் உள்ள சித்ரசல் Image
Read 9 tweets
Mar 16
#MahaPeriyava
Experiences with Kanchi Maha Periyava by great Carnatic Singer Sangeeta Kalanidhi Smt D.K. Pattammal

When Smt D.K.Pattammal, the eminent Carnatic music singer was seven years old, she had the rarest opportunity of taking the blessings of Sri Maha Periyava of Image
Kanchi Matam His Holiness Sri Sri Chandrasekarendra Saraswathi Swamigal. She was a regular visitor to there and her father would always insist on her to chant slokas in the Matam regularly after having darshan at Kanchipuram Kamakshi Amman Temple. Having noticed the little girl’s
potential, Sri Maha Periyava personally requested DKP’s father to bring DKP to Esanur (when she was only 7 or 8 years of age) where He was stationed for observing the Chaturmasya Vratha. He wanted Krishnaswami Deekshithar to participate during the Navarathri Pooja and wanted
Read 7 tweets
Mar 16
#குருவாயூரப்பன்_பற்றிய_சில_விசேஷ_தகவல்கள்
குருவாயூரில் உள்ள உன்னி கிருஷ்ணன் எனும் மூலவர் கல்லிலோ வேறு உலோகம் கொண்டோ செய்யப்படவில்லை. பாதாள அஞ்சனம் எனும் கலவையால் ஆனது.

இந்த திருக்கோவிலில் ஸ்வாமி சன்னதி காலை 3 மணிக்கு திறக்கப்படும். முதல் நாள் அணிந்த மாலைகளுடன் மற்றும் Image
அலங்காரத்துடன் பூஜை நடத்தப்படும். இதனை #நிர்மால்ய_பூஜை என்பார்கள். பின்னர் திருமஞ்சனம் கண்டு மகிழ்வார் கண்ணன்.

இந்த திருக்கோவிலில் கண்ணன் குழந்தை வடிவில் காட்சி தருகிறார். உருவத்தில் தான் குழந்தை ஆனால் உலகத்தையே தன் வாயில் அடக்கியவன். சித்திரை விஷு, ஓணம் பண்டிகை மற்றும் ஏகாதசி
இங்கு முக்கியமான பண்டிகைகள்.

குழந்தைக்குப் முதல் முதலாக சோறு ஊட்டும் வைபவம் இங்கு மிகவும் சிறப்பு. இந்த திருக்கோவிலில் இதை செய்தால் அந்த குழந்தை வாழ்நாள் முழுவதும் கண்ணன் திருவருளால் உடல் ஆரோக்கியம் கொண்டு வளரும் என்பது நம்பிக்கை.

இந்த திருக்கோவிலில் பக்தர்களால் வழங்கப்பட்ட
Read 8 tweets
Mar 16
#மகாபெரியவா
மகா பெரியவா அனுபவங்கள் தொகுப்பில் இருந்து:
பரமாச்சாரியாரை தரிசிக்க வந்த ஒரு வைணவர், கோரிக்கை ஒன்றை வைத்தார்.

"சுவாமி தினமும் ஆழ்வார்களின் ‘திவ்ய பிரபந்த’ பாடல்களை பாராயணம் செய்ய விரும்புகிறேன். ஆனால், நேரமின்மையால் தவிக்கிறேன். 4,000 பாசுரங்களை பிழிந்தெடுத்த மாதிரி Image
ஏதாவது ஒரு பாடல் இருக்கிறதா? அதை சொன்னால் நன்றாக இருக்குமே." என்றார்.

புன்னகை புரிந்த சுவாமிகள், "பார்வதிதேவி ஒரு முறை சிவனிடம், எந்த ஒரு நாமத்தை சொன்னால் விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களையும் சொன்ன பலன் கிடைக்கும் எனக் கேட்டாள். 'ராம' நாமத்தை சொன்னாலே போதும் என சிவனும் பதிலளித்தார்.
'ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே சகஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வரானனே' என்ற சகஸ்ரநாம ஸ்தோத்திரம் தான் சிவன் சொன்ன பதில். நீ கேட்ட கேள்வியும் அது மாதிரி இருக்கு" என்றார். சுவாமிகள் அடுத்து என்ன சொல்ல போகிறார் என அனைவரும் காத்திருந்தனர்.

"ஆழ்வார்களில் நிறைய பாடல்கள் பாடியவர்
Read 7 tweets
Mar 16
#MahaPeriyava

Narrated by SriMatham Balu Mama
Source: Maha Periyaval Darisana Anubhavangal
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/fb

A gentleman came from Pattukottai for Sri Maha Periyava’s darshan.

“I bought a new car. From the time I got it, there Image
have been many accidents. I sought the advice of astrologers and performed a number of expiatory rites. Nothing has helped.”

Periyava was silent for a while. Then he asked the gentleman a question,

“Is there a village called Kanyakurichi near your town?”

The gentleman was
taken aback.

“There is a Mahamaya temple there, very powerful deity. Send fifty rupees for abhishekha to be performed to the Ambal (Goddess) there. Have the words, ‘In the Protection of Kanyakurichi Amman,’ painted on the front side of your car.”

The gentleman was dumbfounded.
Read 5 tweets
Mar 15
2,500 ஆண்டுகள் பழமையான #சுக்ரீஸ்வரர்_கோவில்
திருப்பூரிலிருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் 8 கிமீ தொலைவில் சர்க்கார் பெரியபாளையத்தில் சுக்ரீஸ்வரர் கோவில் உள்ளது. ராமாயண காலத்தில் ஸ்ரீராமருக்கு உதவியாக இருந்த சுக்ரீவன், இங்கு ஈஸ்வரனை பிரதிஷ்டை செய்து வழிபட்டதால் மூலவருக்கு ImageImage
சுக்ரீஸ்வரர் என்று பெயர் வந்ததாக தல புராணம் கூறுகிறது. இதற்கு சான்றாக ஆலயத்தில் அர்த்த மண்டப சுவரில், சுக்ரீவன் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யும் புடைப்புச் சிற்பம் உள்ளது. இத்தல இறைவன் குரக்குத்தளி ஆடுடைய நாயனார் என்றும் அழைக்கப்படுகிறார். தற்போது இந்திய தொல்லியல் துறையின் Image
கட்டுப்பாட்டில் இருக்கும் இக்கோவில் சமயக் குரவர்களுள் ஒருவரான சுந்தரர் பாடல் பெற்ற தலமாகும். ஆகையால் இது 8–ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோவிலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் பொ.யு. 1220–ம் ஆண்டை சேர்ந்த ஒரு கல்வெட்டு தான் இங்கு காணப்படுகிறது. பிரமிக்க வைக்கும் வகையில் Image
Read 24 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(