2,500 ஆண்டுகள் பழமையான #சுக்ரீஸ்வரர்_கோவில்
திருப்பூரிலிருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் 8 கிமீ தொலைவில் சர்க்கார் பெரியபாளையத்தில் சுக்ரீஸ்வரர் கோவில் உள்ளது. ராமாயண காலத்தில் ஸ்ரீராமருக்கு உதவியாக இருந்த சுக்ரீவன், இங்கு ஈஸ்வரனை பிரதிஷ்டை செய்து வழிபட்டதால் மூலவருக்கு
சுக்ரீஸ்வரர் என்று பெயர் வந்ததாக தல புராணம் கூறுகிறது. இதற்கு சான்றாக ஆலயத்தில் அர்த்த மண்டப சுவரில், சுக்ரீவன் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யும் புடைப்புச் சிற்பம் உள்ளது. இத்தல இறைவன் குரக்குத்தளி ஆடுடைய நாயனார் என்றும் அழைக்கப்படுகிறார். தற்போது இந்திய தொல்லியல் துறையின்
கட்டுப்பாட்டில் இருக்கும் இக்கோவில் சமயக் குரவர்களுள் ஒருவரான சுந்தரர் பாடல் பெற்ற தலமாகும். ஆகையால் இது 8–ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோவிலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் பொ.யு. 1220–ம் ஆண்டை சேர்ந்த ஒரு கல்வெட்டு தான் இங்கு காணப்படுகிறது. பிரமிக்க வைக்கும் வகையில்
கட்டப்பட்டுள்ள இக்கோவிலில், மூலவர் சுக்ரீஸ்வரர், லிங்கம் வடிவில் எழுந்தருளியுள்ளார். வலதுபுறம் ஆவுடை நாயகியாக அம்மன் கோவில் கொண்டுள்ளார். சுற்றுப் பிரகாரங்களில், கன்னி மூல விநாயகர், தட்சிணா மூர்த்தி, சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர், பைரவர் கோவில்களும், எந்த சிவன் கோவில்களிலும் இல்லாத
சிறப்பாக, கருவறைக்கு நேர் எதிரே, பத்ரகாளியம்மனும் உள்ளார். நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில், பஞ்சலிங்கங்கள் இக்கோவிலில் அமைந்துள்ளன. மூலவராக, அக்னி லிங்கம், மீதம் மூன்று லிங்கங்கள் கோவிலை சுற்றிலும் அமைந்துள்ளன.
சிவனுக்கு பிடித்த வில்வ
மரத்தின் கீழ், ஐந்தாவதாக, ஆகாச லிங்கம், அமைந்துள்ளதாக கோவில் வரலாறு சுட்டிக்காட்டுகிறது. இக்கோவில் 2,500 ஆண்டுகளுக்கு முந்தையது என தொல்லியல் துறை கூறினாலும், 17.28 லட்சம் ஆண்டுகளை கொண்ட கிரதயுகத்தில், காவல் தெய்வமாகவும், 12.96 லட்சம் ஆண்டுகளை கொண்ட திரேதா யுகத்தில் சுக்ரீவனாலும்,
8.64 லட்சம் ஆண்டுகளை கொண்ட துவாபரயுகத்தில், இந்திரனின் வாகனமாக ஐராவதத்தாலும், வணங்கப்பட்டது எனவும், 4.32 லட்சம் ஆண்டுகளை கொண்ட, கலியுகத்தில், தேவர்களாலும், அரசர்களாலும் வணங்கப்பட்டு, நான்கு யுகங்களை கண்ட கோவில் என்ற வரலாறும், அதற்கான சான்றுகளும் கோவிலில் உள்ளன. வழக்கமாக, சிவன்
கோவில்கள் கிழக்கு பார்த்து அமைந்திருக்கும். இக்கோவிலில், தெற்கு, வடக்கு பகுதியில் மட்டும் வாசல் அமைந்துள்ளது. மற்ற கோவில்களை போல், மூலவரை, நேரடியாக, எதிரே வந்து தரிசிக்க முடியாது. தெற்கு வாசல் வழியாக மட்டுமே வர முடியும். அதேபோல், மூலவர் சன்னதிக்கு எதிரே வழியே இல்லை. தொல்லியில்
துறை 1952ம் ஆண்டு, தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ஆய்வு செய்தது. மீண்டும் புனரமைக்கும் வகையில், அஸ்திவாரத்தை பலப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுத்தது. கோவில் கற்களை பிரித்து, பார்த்த போது, அதிர்ச்சி அடைந்தனர். தற்போதுள்ள கோவிலை போலவே, பூமிக்கடியிலும், இதே கட்டுமானத்தில் ஒரு
கற்கோவில் அமைந்துள்ளது. இதனால்தான், பல ஆயிரம் ஆண்டுகளானாலும், கோவில் பூமியில் இறங்காமல், கட்டியபடியேயும், வயது முதிர்ச்சி கூட தெரியாத அளவுக்கு கல் கோவில் கட்டுமானங்கள் அப்படியே உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். சிதம்பரம், பேரூர் கோவிலுக்கு அடுத்து, சிறப்பான வேலைப் பாடுகளுடன், சக்தி
வாய்ந்ததாக, சுக்ரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு என 450 ஏக்கர் நஞ்சராயன்குளம், கோவிலை சுற்றிலும் தண்ணீர் தேங்கும் அகழி, தெப்பக்குளம், இப்பகுதியில் அமைந்திருந்த முகுந்த பட்டணத்தில் இருந்து, மூலவருக்கு அருகே வெளியே வரும் வகையில் அமைந்துள்ள குகை, சிறப்பான வேலைப்பாடுகளுடன்
கூடிய கருவறை கோபுரம் என தெரியாத விஷயங்கள் பல உள்ளன. #கல்வெட்டு
இக்கோயிலில் சுமார் 11 கல்வெட்டுகள் உள்ளன, அவற்றில் ஒன்று கொங்கு சோழருக்கும், 9 கொங்கு பாண்டியர்களுக்கும், ஒன்று மைசூர் உமாத்தூர் மன்னர் வீரநஞ்சராயருக்கும் சொந்தமானது.
கல்வெட்டுகளின்படி இத்தலம் வீரசோழவளநாட்டைச் சேர்ந்த
முகுந்தனூர் என்றும், சிவபெருமான் குறக்குதலி ஆளுடைய நாயனார் என்றும் அழைக்கப்படுகிறார்.
வீரராஜேந்திரன் காலத்து (பொ.யு 1220) கல்வெட்டு, விழா, பூஜை, அபிஷேகம் போன்றவற்றில் பங்கேற்க, கடனை எதிர்பார்க்காமல் 30 கழஞ்சு பொன் சிவபிராமணன் தானமாக வழங்கியதைக் குறிப்பிடுகிறது.
சுந்தர பாண்டியர்
காலத்தில் (பொ.யு1289) சித்தாக்குறிச்சி கிராமத்தில் தானமாக /தேவதானா நிலத்தில் விவசாயம் செய்து தண்ணீர் தேவைக்காக கிணறுகள், குளம் / ஏரி, வாய்க்கால்களை தோண்டி 50% மகசூல் தர ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக கல்வெட்டு குறிப்பிடுகிறது.
15 ஆம் நூற்றாண்டின் மைசூர் உடையார் மன்னர் நஞ்சராய
உடையார் (பொ.யு1499) 4 தங்கத்திற்கு வாங்கிய நிலத்தில் 200 தென்னைப் பண்ணையை உருவாக்கினார். தென்னை மரங்கள் மூலம் கிடைக்கும் வருமானம் இந்த கோவிலின் பூஜைக்கு பயன்படுத்தப் பட்டது.
சுந்தர பாண்டியரின் (பொ.யு1289) காலக் கல்வெட்டு ஒன்று, நொய்யல் ஆற்றின் நீரை முறைப்படுத்தி, சூரலூர் கிராம
சாகுபடிக்காக நொய்யல் அணை ஆகியவற்றின் மூலம், பேரூர் நாட்டு வெற்றலூர் செம்படவன் பிள்ளையானை அங்கீகரித்து இக்கோயிலுக்கு நன்கொடையாக வழங்கியதாகக் குறிப்பிடுகிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த சுக்ரீஸ்வரர் கோவிலின் வைகாசி (தமிழ் மாதம்) திருவிழா செலவுகளைச் சமாளிக்க, 64 வணிகர் சங்கங்கள்
(மற்றும் சில பழமையான தமிழ் எழுத்துகளில் ஒன்றான வத்தெழுத்தில் கையெழுத்திட்டனர்) பொருட்களுக்கு வரி செலுத்த ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. தாதுப்பொருட்கள், பருத்தி ஆடைகள், மரம் (செருப்பு), யானை, ஆடு, குதிரை போன்றவை இந்த கிராமத்தின் மூலம் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இந்த
கொங்கு சோழ சுந்தர பாண்டியரின் (பொ.யு1289) கல்வெட்டு 24 வரிகள் மற்றும் ஒவ்வொரு வரியும் 130 முதல் 140 எழுத்துக்கள் கொண்ட மிகப் பெரிய மற்றும் முக்கியமான ஒன்றாகும். வணிகர் சங்கங்கள் பண்டைய தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவை. இதிலிருந்து சர்க்கார் பெரியபாளையம்
கொங்கு நாடு வழியாகச் செல்லும் 20
வர்த்தக வழித்தடங்களில் ஒன்றாக இருந்ததாக நாம் முடிவு செய்யலாம்.
#இரண்டு_நந்தி
இக்கோவிலில் இரண்டு நந்திகள் உள்ளன. முதலில் உள்ள நந்திக்கு கொம்பு, காது இருக்காது. கோவில் நந்தி, அருகிலுள்ள விவசாய நிலத்துக்கு சென்று மேய்ந்துள்ளது. ஆத்திரமடைந்த விவசாயி
இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து, மாட்டின் காதையும், கொம்பையும் அறுத்துள்ளார். மறுநாள் கோவிலுக்கு வந்து பார்த்த போது, கற்சிலையான நந்தியின் காதிலிருந்து ரத்தம் வழிந்துள்ளது. அதிர்ச்சியடைந்த விவசாயி, தனது தோட்டத்துக்கு வந்தது நந்தி என உணர்ந்து, தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு,
வணங்கியுள்ளார். பின், தவறுக்கு பிராயசித்தமாக, மற்றொரு நந்தி சிலை செய்து, புதிய நந்தியை பிரதிஷ்டை செய்துள்ளார். பழைய நந்தியை அகற்ற முயற்சித்து முடியாமல் விட்டுள்ளார். மறுநாள் வந்து பார்த்த போது, பழைய நந்தி முன்பும், புதிய நந்தி பின்னாலும் மாறி இருந்துள்ளது. சிவன் கனவில் வந்து,
உறுப்புகள் இல்லை என்றாலும், அதுவும் உயிர்தான் எனவும், பழைய நந்தி முன்னால் இருக்க வேண்டும், மற்றது பின்னால்தான் என கூறியுள்ளார். அதன் அடிப்படையில், இன்றும் இரண்டு நந்திகள் அமைந்துள்ளன. பிரதோஷ காலங்களில், இரண்டு நந்திகளுக்கும் பூஜை நடத்தப்படுகிறது.
கோவில் நேரங்கள்:
07.00-11.00 மணி
5.00 - 8.00 மணி வரை
சுழற்சி முறையில் பூஜை செய்து வரும் குருக்கள் நாகராஜ ஐயர் 9442373455 மற்றும் மூர்த்தி ஐயர் 9489551237
ஊத்துக்குளி வழியாக ஈரோடு திருப்பூர் செல்லும் வழியில் உள்ளது சர்க்கார் பெரியபாளையம். திருப்பூருக்கு முன் சுமார் 6 கி.மீ.
அருகிலுள்ள ரயில் நிலையம் திருப்பூர்
1. தமிழ்நாடு
கும்பகோணத்திற்கு அருகில் உள்ளன மிகப் பழமையான நவக்கிரக கோவில்கள். இவை சோழ வம்சத்தைச் சேர்ந்த நவக்கிரக கோயில்களின் தொகுப்பாகும். இவை 7 முதல் 9 ஆம் நூற்றாண்டு காலத்தில் கட்டப்பட்டவை.
சூரிய நவகிரஹஸ்தலம் - சூரியனார் கோவில்
சந்திர நவகிரஹஸ்தலம் - கைலாசநாதர் கோவில், திங்களூர்
அங்காரகன் நவகிரஹஸ்தலம் - வைத்தீஸ்வரன் கோவில்
புத்த நவகிரஹஸ்தலம் - திருவெண்காடு
குரு நவகிரஹஸ்தலம் - ஆலங்குடி
சுக்ர நவகிரஹஸ்தலம் - அக்னீஸ்வரர் கோவில், கஞ்சனூர்
சனி நவகிரஹஸ்தலம் - திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில்
ராகு நவகிரஹஸ்தலம் -
ஸ்ரீ நாகநாதசுவாமி கோவில், திருநாகேஸ்வரம்
கேது நவகிரஹஸ்தலம் - கீழ்பெரும்பள்ளம் கோவில்
2. கேரளா
கிளிமரத்துகாவு குளத்துபுளா அருகே திருவனந்தபுரம் அருகே உள்ள அந்த ஊரில் நவக்கிரகக் கோயில் விண்மீன் மண்டலத்தைப் போலவே நீள்வட்ட அமைப்பில் உள்ளது.
#MahaPeriyava
Experiences with Kanchi Maha Periyava by great Carnatic Singer Sangeeta Kalanidhi Smt D.K. Pattammal
When Smt D.K.Pattammal, the eminent Carnatic music singer was seven years old, she had the rarest opportunity of taking the blessings of Sri Maha Periyava of
Kanchi Matam His Holiness Sri Sri Chandrasekarendra Saraswathi Swamigal. She was a regular visitor to there and her father would always insist on her to chant slokas in the Matam regularly after having darshan at Kanchipuram Kamakshi Amman Temple. Having noticed the little girl’s
potential, Sri Maha Periyava personally requested DKP’s father to bring DKP to Esanur (when she was only 7 or 8 years of age) where He was stationed for observing the Chaturmasya Vratha. He wanted Krishnaswami Deekshithar to participate during the Navarathri Pooja and wanted
#குருவாயூரப்பன்_பற்றிய_சில_விசேஷ_தகவல்கள்
குருவாயூரில் உள்ள உன்னி கிருஷ்ணன் எனும் மூலவர் கல்லிலோ வேறு உலோகம் கொண்டோ செய்யப்படவில்லை. பாதாள அஞ்சனம் எனும் கலவையால் ஆனது.
இந்த திருக்கோவிலில் ஸ்வாமி சன்னதி காலை 3 மணிக்கு திறக்கப்படும். முதல் நாள் அணிந்த மாலைகளுடன் மற்றும்
அலங்காரத்துடன் பூஜை நடத்தப்படும். இதனை #நிர்மால்ய_பூஜை என்பார்கள். பின்னர் திருமஞ்சனம் கண்டு மகிழ்வார் கண்ணன்.
இந்த திருக்கோவிலில் கண்ணன் குழந்தை வடிவில் காட்சி தருகிறார். உருவத்தில் தான் குழந்தை ஆனால் உலகத்தையே தன் வாயில் அடக்கியவன். சித்திரை விஷு, ஓணம் பண்டிகை மற்றும் ஏகாதசி
இங்கு முக்கியமான பண்டிகைகள்.
குழந்தைக்குப் முதல் முதலாக சோறு ஊட்டும் வைபவம் இங்கு மிகவும் சிறப்பு. இந்த திருக்கோவிலில் இதை செய்தால் அந்த குழந்தை வாழ்நாள் முழுவதும் கண்ணன் திருவருளால் உடல் ஆரோக்கியம் கொண்டு வளரும் என்பது நம்பிக்கை.
#மகாபெரியவா
மகா பெரியவா அனுபவங்கள் தொகுப்பில் இருந்து:
பரமாச்சாரியாரை தரிசிக்க வந்த ஒரு வைணவர், கோரிக்கை ஒன்றை வைத்தார்.
"சுவாமி தினமும் ஆழ்வார்களின் ‘திவ்ய பிரபந்த’ பாடல்களை பாராயணம் செய்ய விரும்புகிறேன். ஆனால், நேரமின்மையால் தவிக்கிறேன். 4,000 பாசுரங்களை பிழிந்தெடுத்த மாதிரி
ஏதாவது ஒரு பாடல் இருக்கிறதா? அதை சொன்னால் நன்றாக இருக்குமே." என்றார்.
புன்னகை புரிந்த சுவாமிகள், "பார்வதிதேவி ஒரு முறை சிவனிடம், எந்த ஒரு நாமத்தை சொன்னால் விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களையும் சொன்ன பலன் கிடைக்கும் எனக் கேட்டாள். 'ராம' நாமத்தை சொன்னாலே போதும் என சிவனும் பதிலளித்தார்.
'ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே சகஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வரானனே' என்ற சகஸ்ரநாம ஸ்தோத்திரம் தான் சிவன் சொன்ன பதில். நீ கேட்ட கேள்வியும் அது மாதிரி இருக்கு" என்றார். சுவாமிகள் அடுத்து என்ன சொல்ல போகிறார் என அனைவரும் காத்திருந்தனர்.
Narrated by SriMatham Balu Mama
Source: Maha Periyaval Darisana Anubhavangal
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/fb
A gentleman came from Pattukottai for Sri Maha Periyava’s darshan.
“I bought a new car. From the time I got it, there
have been many accidents. I sought the advice of astrologers and performed a number of expiatory rites. Nothing has helped.”
Periyava was silent for a while. Then he asked the gentleman a question,
“Is there a village called Kanyakurichi near your town?”
The gentleman was
taken aback.
“There is a Mahamaya temple there, very powerful deity. Send fifty rupees for abhishekha to be performed to the Ambal (Goddess) there. Have the words, ‘In the Protection of Kanyakurichi Amman,’ painted on the front side of your car.”
மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவது காரடையான் நோன்பு. மாசி மாத கடைசி நாள் இரவு ஆரம்பித்து பங்குனி முதல் நாள் காலையில்
முடிப்பர். இந்த நோன்பை காமாட்சி நோன்பு, கவுரி நோன்பு, சாவித்திரி விரதம் என்றும் சொல்வார்கள். சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் விருத்திக்காக காரடையான் நோன்பு அனுஷ்டிக்க வேண்டும். கார்காலத்தில் விளையும் நெல்லைக் குத்தி, பச்சரிசி மாவுடன் இனிப்பு கலந்து தயாரிப்பதே காரடை ஆகும்.
மந்திர தேசத்து மன்னன் அஸ்வபதியின் மகள் சாவித்திரி, வீரத்தில் சிறந்தவள். இவள் ஒருநாள் வேட்டைக்குச் செல்லும்போது, தியானத்தில் இருந்த சாளுவதேசத்து இளவரசன் சத்தியவானைப் பார்த்தாள். அவனது தந்தை ஒரு போரில் நாட்டை இழந்து விட்டார். அதனால், காட்டில் மகனுடன் வசித்தார். பார்வையற்ற பெற்றோரை