1972ல் வெளியான குறத்தி மகன் திரைப்படம் பெறும் வெற்றி பெற்றது.

அது சமயம் அந்த படத்தின் இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஸ்ணனை கற்பகம் ஸ்டூடியோவில் நரிக்குறவர் இன மக்கள் கூட்டமாக வந்து சந்தித்தனர்..

அப்போது "சாமீய்... உங்க படத்துல படிச்சா தான் முன்னுக்கு வரமுடியும்னு சொன்னீங்க. ஒங்க Image
படத்தை பார்த்த பிறகுதான் படிப்போட அருமை பெருமை எங்களுக்கு புரிஞ்சது. எங்க புள்ளைங்களாம் படிக்க நீங்களே ஒரு பள்ளிக்கூடம் கட்டி குடுங்க சாமீய்"னு

அவங்க பேசி முடிக்க இயக்குனரான அவர், "பள்ளிக்கூடம்லாம் தனி மனிதரால சாத்தியப்படாது. ஒருவேளை தொடங்கினாலும் தொடர்ந்து நடத்த முடியாது. Image
நிறைய சட்ட திட்டங்கள் இருக்கு'ன்னு

அவர் எவ்வளவோ எடுத்து சொல்லியும் அந்த மக்களும் விடுவதாக தெரியல..

"என்ன சாமி நீங்க நாங்களாம் படிச்சி வாழ்க்கைல முன்னேறனும்னு படம் எடுத்து விட்டுட்டு இப்ப எங்களை படிக்க வைக்க முடியாதுன்னு சொன்னா எப்படி"ன்னு அவர்களும் அழ..

நிலைமை ரசாபாசமானது. Image
உடனே சுதாரித்துக்கொண்ட இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஸ்ணன் (காங்கிரஸ்காரர்) நீங்களாம் நேரா கிளம்பி கோபாலபுரம் போங்க. அங்கதான் முதலமைச்சர் வீடு இருக்கு.

'நாங்களாம் குறத்தி மகன் படம் பார்த்தோம். அதுல வர்றா மாதிரி எங்க புள்ளைங்களை படிக்க வைக்க ஆசைப்படுறோம்'னு முதலமைச்சர் கிட்ட Image
சொல்லுங்க . நான் தான் உங்களை அவர்கிட்ட அனுப்பி வெச்சேன்னு சொல்லிறாதீங்க.'

என்று சொல்லி அனுப்பி வெச்சார்.

விருகம்பாக்கத்திலிருந்து கற்பகம் ஸ்டூடியோவிலிருந்து கோபாலபுரம் முதல்வர் வீடு வரை அவர்களும் கூட்டமாக நடந்தே சென்று முதல்வர் வீடு முன்பு அமர்ந்து விட்டனர்.

உதவியாளர்கள் மூலம் Image
தகவலை அறிந்த முதல்வர் #கலைஞர் வெளியே வந்து அவர்களை நேரில் சந்தித்து பேசி அவர்களின் கோரிக்கையை தெரிந்து கொண்டார்.

"இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட சாதிக்காக ஒரு பள்ளி திறந்தால் அதில் நிறைய சட்டபிரச்சனைகள் வரும் அரசாங்கமே மக்களை பாகுபடுத்தி பார்க்கறதா ஒரு கருத்து உருவாகிடும் . Image
எனவே நீங்க ஏற்கனவே ஆங்காங்கு இருக்கற பள்ளிகள்லயே உங்க குழந்தைகளை சேர்க்கறது தான் சரி எந்த பிரச்சனையும் வராம நாங்க பார்த்துக்கறோம்"னு அவர் சொல்ல

ஆனா அந்த மக்களோ "சாமீய் எங்க புள்ளைங்க பள்ளிக்கூடம் பக்கமே போனதில்லை அங்க போய் மற்ற பிள்ளைகள் ஏதாவது கிண்டல் கேலி பேசினா அதைக்கேட்டு Image
தாழ்வுமனப்பான்மையால் பள்ளிக்கூடம் போகமாட்டோம்னு சொல்லி எங்க புள்ளைங்க நின்னுருவாங்க.

இதிலெல்லாம் போய் பேசி சமாளிக்கற அளவுக்கு எங்களுக்கு அனுபவமும் அறிவும் இல்லை. எங்க மக்களின் கல்வி கனவு, கனவாகவே போய்விடும். ஆகவே எங்க புள்ளைங்க மட்டுமே படிக்க தனி பள்ளி தான் வேண்டும். அதுதான் Image
சரியான நிவாரணம் சமீய்" னு அவர்களும் வாதம் செய்ய

#கலைஞரும் அவங்க பேச்சில் இருக்கும் நியாயத்தை புரிந்து கொண்டு, சட்ட திட்ட பிரச்சனைகளை பிறகு பார்த்துக்கலாம்னு உதவியாளர்களிடம் சொல்லி அந்த இடத்திலேயே ஒரு உத்தரவு டைப் செய்து அதில் கையெழுத்து போட்டார்.

அந்த உத்தரவு தான் தமிழகத்தின்
முதல் நரிக்குறவர், குறும்பர், இருளர், லம்பாடிகள், பைராகிகள், குடுகுடுப்பைகாரர்கள் என இடம் பெயர்ந்து வாழும் இன மக்களின் குழந்தைகளுக்காக துவங்கப்பட்ட சைதாப்பேட்டை திருவள்ளுவர் குருகுலம் எனும் (1972ல்) ட்ரஸ்ட் உறைவிட பள்ளி.

அதன் அங்கீகாரத்திற்கு பணம் எதுவும் அரசுக்கு செலுத்த
தேவையில்லை என்ற சிறப்பு சட்ட உத்தரவையும் அவரே போட்டார்

#கலைஞர் உத்தரவால் துவங்கப்பட்ட சைதாப்பேட்டை திருவள்ளுவர் குருகுல ட்ரஸ்ட் பள்ளிக்கு தன் பொன்விழாவை முன்னிட்டு கட்டிடடம் கட்ட நிதியளித்தவரும் கலைஞரே

அந்த குருகுல பள்ளியை முன்னோடியாக வைத்து 2001க்கு பிறகு செயலலிதா ஆட்சி Image
காலத்தில் தஞ்சையில் இடம்பெயர்ந்து வாழும் இன மக்களுக்காக மேலும் ஒரு உறைவிட பள்ளி தொடங்கப்பட்டது
நரிக்குறவர்,காணிக்காரர்,குறும்பர் இன மக்களை மலைவாழ் பழங்குடியினர் இனத்தில் சேர்க்க பலமுறை வலியுறுத்தியவர் கலைஞர் அவர்கள் தான்
அதை மத்திய அரசும் சமீபத்தில் சட்டமாக நிறைவேற்றியுள்ளது. Image
இந்த அரசாணை மூலம் அவர்கள் மத்திய அரசு 19% எஸ்சி /எஸ்டி ஒதுக்கிடில் மத்திய அரசு பணிகளில் சேர முடியும்.
ஒரு சமூகம் மத்திய அரசு வேலைக்கு செல்ல சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆயிற்று
இன்னும் எத்தனை சமூகங்கள் பள்ளிக்கூடம் வாசலையே மிதிக்காமல் இருக்கிறதோ?
வெறும் அரசு ஆணைகளால் மட்டும் Image
அவர்களின் அவலம் தீர்த்து விடாது.
அவர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
சமூக நீதிகளம் தமிழ்நாட்டிலேயே அடக்குமுறைகள் இன்னும் நீடித்திருக்க காரணம் புழுத்துப் போன ஜாதிப் பெருமையை கிளறி விட்டுக் கொண்டே இருக்கும் சனாதனிகள் தான் Image
மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் ஜாதி வேறுபாடு இன்னும் மூர்க்கமாக திணிக்கப்படுகிறது..
ஜாதி அடிப்படையில் மட்டுமின்றி மத அடிப்படையிலும் சிறுபான்மையினர் ஒடுக்கப்படும் அந்த இடங்களிலும் அவர்கள் தலை நிமிர்ந்து வாழ செய்ய வேண்டியது சமூக நீதி அரசின் கடமை Image
பிற்சேர்க்கை 1:
இயக்குனர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் மறைவின் போது கலைஞர் வெளியிட்ட இரங்கல் செய்தி..

தலைவரின் முகநூல் பக்கத்தில் இருந்து... Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with புதுகை விஸ்வா

புதுகை விஸ்வா Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @VIS1976AL

Mar 17
நாம் எல்லோரும் அடுத்து என்ன விடியோ வரப் போகுது
என சமூக ஊடகங்களில் தேடிக் கொண்டிருந்த போது

முதலில் @TimesNow என்ற டிவியில் தான் அந்த செய்தி வந்தது :

மோடி அமைதிக்கான நோபல் பரிசு பெற தகுதியானவர்
~ நோபல் பரிசு குழு தலைவர்

அந்த ஊடக ஆசிரியர் அதனை டுவீட் ஆகவும் பதிவிட்டார்
இது போதாதா.. பிஜேபி வார் ரூம் மோடிக்கு நோபல் பரிசு என ஃபயர் விட..

வட இந்திய ஊடகங்கள், இதனை தீயாய் பரப்பின

விசயம் நோபல் பரிசு துணை தலைவர் Asle Toje வரை சென்று விட்டது..

உடனடியாக அவர் நான் அப்படி சொல்ல வில்லை என மறுக்க

இந்திய ஊடகங்களின் propaganda வெறியை உலகம் காரி துப்பியது
Fact செக் செய்யப் பட்டவுடன், பிஜேபி தலைவர்கள் டிவீட்டை அழிக்க

தவறான தகவல் அளித்த Times Now தன் தலைப்பு செய்தியை மாற்றியது..

இருந்தாலும் மீசையில் மண் ஒட்டாதவாறு

@RShivshankar ஒப்புக்கு சப்பாணியாய் ஒரு மறுப்பு டுவீட் விட்டார்..

கண்டனத்துக்கு பிறகே முந்தைய டுவீட் அளித்தார்
Read 4 tweets
Mar 16
#மதன்_வெண்பா_லீக்ஸ்
இதில் பதிவான எல்லாம் உண்மை என்றும் சொல்லிவிட முடியாது, எல்லாம் பொய் என்றும் கடந்து செல்லவும் முடியாது. பார்ப்போம் அவர்கள் தரப்பு விளக்கம் வரும்போது உண்மையா பொய்யா என்று எளிதில் தெரிந்து விடும்.
இங்க டிவிட்டர்,முகநூலில் ஒவ்வொரு நாளும், மணிக்கணக்கா உட்கார்ந்து, Image
ஆயிரத்து எட்டு செய்திகளை சேகரித்து, அது சரிதானான்னு fact செக் பண்ணி, தனக்கும் தன்னுடைய ஐடியாலஜிக்கும் நேர்மையாய் பதிவிடுகிற நூற்றுக்கணக்கானவங்களை எனக்கு தெரியும்.

இவ்வளவும் அவங்க செய்யுற வேலைக்கு அஞ்சு பைசா பிரயோஜனம் இல்லை. இதை படிக்கிற நண்பர்கள் சில நேரம் அதை அப்படியே எடுத்து Image
அவர்கள் TL லில் போட்டுக்கொள்ளும் போதும் அவர்கள் எந்த கவலையுமில்லாமல் கடந்து செல்லவார்கள், அவர்கள் எண்ணமே நம் கருத்துக்கள் பல பேரை சென்றடைய வேண்டும் என்ற நல்லெண்ணம்தான். Here the message is more important than the messenger.
ஆனால் இந்த Youtube சேனல் நடுத்துபவர்கள் அப்படி அல்ல Image
Read 10 tweets
Mar 8
#NewProfilePic
சமூக ஊடகங்களில் செயல்படும் மகளிர் அனைவருக்கும் #மகளிர்_தின_நல்வாழ்த்துக்கள்
தமிழ்நாட்டில் #மகளிர்தினம் வந்தாலே அம்மையார் நினைவு கூறல் ஒரு சடங்கு ஆகிவிட்டது @tamilselvam2k3 பதிவு கண்டபின் ஒன்று புரிந்தது..
அது..
கலைஞரின் பங்களிப்பை முழு வீச்சில் பரப்ப வேண்டும்
மகளிர் வாழ்க்கை வளம்பெற கலைஞர் செய்த 25 திட்டங்கள் இங்கே பட்டியலாக உள்ளது.

இதுபோல ஜெயலலிதா செய்த சாதனைகளை பட்டியலிட முடியுமா பெண்களே?

திமுக ஆட்சியால்தான் பெண்கள் முன்னேற்றம் கண்டனர்.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற காலங்களில் பெண்களின் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகள்.
1) 8ஆம் வகுப்பு வரை படித்த ஏழைப் பெண்களின் திருமணங்களுக்கு 5000 ரூபாய் நிதி உதவி வழங்கும் மூவலூர் மூதாட்டியார் திருமண நிதியுதவித் திட்டத்தை 1989இல் தொடங்கியது கழக ஆட்சி.

2) பெண்கள் 10ஆம் வகுப்பேனும் படிப்பதை ஊக்கப்படுத்திட வேண்டும் எனும் உணர்வோடு 10ஆம் வகுப்பு வரை படித்த ஏழைப்
Read 16 tweets
Mar 6
இப்படித்தான் சீமானும், காளியம்மாக்களும், நாம் தமிழர் மேடைகளும் பல்லாண்டுகளக அறுவறுப்பை அரங்கேற்றிய போது புன்னகையுடன் நகர்ந்தனர் இந்த நடுநிலைக்
திமுககாரன் அவர்கள் மொழியில் திருப்பி தாக்கினால் கம்பை எடுத்துக் கொண்டு ஓடி வருகின்றனர்.
விஷயம் என்னன்னா அந்த நடிகை சொன்னது மீடியாவில் Image
பரப்பரப்பாக்காப்படுகிறது. ஏதோ சாமானியன் சொல்வதைப்போல் இதை கடந்துபோய்விட முடியாது.
கடந்து போனால் தொடரும்.
எதிர்வினை இப்படி இருந்தால்தான் இதெல்லாம் அடங்கும். இல்லையேல் நீண்டுகொண்டே போகும். @pudugaiabdulla திமுக தொண்டர்தான். பிறகுதான் எம்பி என்ற அளவில் இறங்கி அடித்திருக்கிறார். Image
அவதூறு செய்பவர்கள் வீட்டு பெண்களை சொல்றது
கேவலம்ன்னா அவதூறு செய்தவரை விட்டுட்டு எதுவும்
கேக்காம எதிர்வினை
சொல்வது அதை விட கேவலம். இப்பவும் அப்படி அவதூறு
ஆற்றியவனை வந்து நொட்டை செய்தவங்களை நீங்க கண்டித்ததாக தெரியல, எது தடுக்குது ஏதாச்சும் நூலா.? Image
Read 6 tweets
Sep 11, 2022
நீட் தேர்வு மொத்தம் 720
மதிப்பெண்களுக்கு நடைபெறுகின்றது. அதாவது

வேதியியல் 180
இயற்பியல் 180
உயிரியல் 360

இதில் குறைந்தபட்சமாக அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்க 450க்கும் அதிகமான மதிப்பெண்கள் தேவை, ஆனால் இந்த பெண் மருத்துவக் கல்லூரியில் படிக்க 104 மதிப்பெண் போதுமானது
என்கிறார். அதாவது நீங்கள் FC/OBC/SC/ST எந்த சமூகத்தை சேர்ந்தவராக இருந்தாலும் நீட் தேர்வில் 104 மதிப்பெண்கள் எடுத்தாலே போதுமானது, எதாவது ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் பணமிருந்தால் சேர்ந்து கொள்ளலாம். இந்த மதிப்பெண் வருடத்திற்கு வருடம் மாறுபடலாம்.

முன்பெல்லாம் தமிழகத்தின்
மாநிலப் பாடதிட்டத்தில் 1200 மதிப்பெண்களுக்கு 600 மதிப்பெண்கள் அதாவது 50% மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே MBBS/BDS படிப்பிற்கு விண்ணப்பிக்கவே முடியும். ஆனால் நீட் தேர்வில் அவ்வாறு இல்லாமல் 50th Percentile இருந்தால் போதும் நீங்கள் வெற்றி பெற்றதாக அர்த்தம். பெர்சண்டைல் என்பது
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(