இந்த #dada படத்துல அந்தப்பொண்ணு சுயமரியாதை வேண்டி, அவன் பிரண்டு வீட்ல தங்கமாட்டேன்னு சொல்லி வெளிய வீடு பாக்கச் சொல்லி வெளிய வருது. கொஞ்ச வாடகைக்கு கிடைச்ச ஹவுசிங்க் போர்ட்ல, அங்கிருக்க மக்கள் கூட ஈஸியா அடாப்ஃட் ஆகி சந்தோசமா வாழுது. Pregnancy time ல குடிக்காதன்னு சொல்லி கேக்குது.
அவ கேட்டது, செஞ்சது எல்லாமே நியாயமான காரணங்கள். ஆனா, அந்த நாயி, ஹவுசிங் போர்ட் வீட்ட ரொம்பவுமே uneasy ஆ feel பண்ணறான். சத்தியத்த மீறி குடிக்கறான். அவன் ப்ரண்டு வீட்ல அட்ஜஸ்ட் பண்ணலன்னுதான் இவ்ளோ பிரச்சினன்னு சொல்லி அவள சத்தம் போட்டு, அபார்ஷன் லெவலுக்கு தள்ளறான்.
குழந்தைய கூட அனாத ஆசிரமத்துக்கு கொண்டு போறான். இவ்வளவு தூரம் தன்ன நம்பி வந்த பொண்ணுக்கும், குழந்தைக்கும் அக்கிரமம் பண்ணிட்டு திடீர்னு அப்பா பாசத்தால திருந்திடறான். அப்பவும், ஈகோ மயிர் வந்து, அவனால கஷ்டப்பட்ட பொண்ண தேடிக்கூட போயி பாக்கல.
அந்தக்குழந்தை செத்துப்போச்சுன்னு பொய் சொல்லி, அவள அந்தக்குடும்பத்துல இருந்து பிரிச்சிட்டாங்க. தீவிரமா பாத்தா இதுல முழுக்க முழுக்க அந்த பொண்ணு மேல எந்த தப்பும் இல்லை. ஆனா, ஒரு அஞ்சு வருசம் தனியா (அவன் பிரண்டு ஹெல்ப்பால) குழந்தைய வளத்த உத்தமன்னு கவின் கேரக்டர நிப்பாட்டி
அவன் கிட்ட அந்த பொண்ணு வந்து மன்னிப்பு கேக்கிறாப்ல படத்தைக் கொண்டுபோயி அத்தனை masculinity மைண்ட் செட்களும் புளங்காகிதங்கள் அடைஞ்சுகிச்சு. Ott ல வந்தபிறகு இதெல்லாம் அலசப்படும்னு நினைச்சேன். ஆனா பெருசா யாரும் பேசினாப்ல தெரில.. 🤐
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
வர்க ரீதியாக பெரும்பான்மை தமிழ்சினிமா பார்வையாளர்கள் நடுத்தர,ஏழை குடும்பத்தை சார்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். இவர்களை திரையில் நிகழும் ஒரு நகர்புற எலைட் குடும்ப கதைக்குள் அந்தப் கனெக்ட் செய்ய வைக்க தமிழ்சினிமாவுக்கு என ஒரு பார்முலா இருந்தது.
அது ஏழையாகவோ/ நடுத்தர வர்கமாகவோ இருக்கும் நாயகனோ அல்லது வேறு முக்கிய கதாபாத்திரங்களோ வெளியில் இருந்து அந்த வீட்டில் நுழைவதாகவே இருக்கும். எம்.ஜி.ஆரின் எங்கள் வீட்டு பிள்ளை, ரஜினியின் பணக்காரன், மாப்பிள்ளை வரை பலத் திரைப்படங்கள் இந்த பார்முலாவை அடியொற்றியே வந்திருக்கும்.
இந்த வகைமையில், மணிரத்தினம் மற்றும் கெளதம் மேனன் முன் வைக்கும் எலைட் குடும்ப கதைகளுக்கு விதிவிலக்கு உண்டு. பெரும்பாலும் அவர்கள் எலைட் குடும்ப பின்னணியை மட்டும் வைத்துக்கொண்டு, அதில் வேறு கதைகளை சொல்வதால் அந்த விதிவிலக்கு நிகழ்ந்திருக்கிறது.
கோடிக்கணக்கான செலவில் உருவாக்கப்படும் பிரம்மாண்டமான சினிமாக்களுக்கு மத்தியில் "C/O கஞ்சர்பாலம், பலசா 1978, கலர்போட்டோ" மாதிரியான சின்னச்சின்ன எளிய படங்கள் நிகழ்த்தும் மாயாஜாலங்கள் அற்புதமானது. #Cinembandi யும் அவ்வகையைச் சார்ந்தது.
எதேச்சையாக கிடைத்த பொருள் ஒரு கைவிடப்பட்ட கிராமத்தின் கனவாக எப்படி மாறுகிறது எனும் எளிய கதை. கன்னடம்-தெலுகு பேசும் எல்லைப்புற கிராமமான கோலப்பள்ளி எனும் ஊரில் வருங்காலம், கிராமம் பற்றி நம்பிக்கை கொண்டிருக்கும் ஒரு ஷேர்- ஆட்டோ ஓட்டுனர் கையில் ஒரு உயர்தரமான கேமிரா சிக்குகிறது.
டிவியில் தெலுங்குத் திரையுலகில் வசூலை குவிக்கும் சிறிய பட்ஜெட் படங்களைப் பற்றிய செய்தி துணுக்கு கேமிரா வைத்திருக்கும் ஓட்டுனருக்கு ஒரு சினிமா படம் எடுக்கும் நம்பிக்கையை உண்டாக்க, தன் கிராமத்தில் கல்யாணங்களுக்கு போட்டோ எடுக்கும் சகாவுடன் தன் சினிமா திட்டங்களைத் துவக்குகிறார்.
தலித்தின ஆண்களின் சுயமரியாதையை மீட்டெடுப்பதில் தலித் பெண்களுக்கு வரலாறுதொட்டே எப்பொழுதும் பெரும்பங்கு இருந்திருக்கிறது. சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து, பவ்யமாக கைகட்டி, கணவன் பின்னால் நிற்கும் பெண்களல்ல அவர்கள்.
எசிலிக்கு எசிலியாக, ராட்சசர்களுக்கு ராட்சசிகளாக, அன்புக்கு அன்பாக, முகத்துக்கு நேராக ஊடகை, காதலை, கூடலைக் கொட்டித்தரும் அசுரச்சிகள்.
கருத்த, கம்பீரமான தன் ஆண் இதர சமூக ஆண்களின் முன்பு அடிமையாய் தலைகுனிவதை அவர்கள் எப்பொழுதும் விரும்பியதில்லை.
பெரும்பான்மை கிராமிய சாதிக்கொடுமைகளிலிருந்து ஆண்களை நகரங்களுக்கு நகர்த்தி கல்வியில்,வேலையில், சமூகத்தில் ஆண்களை ஆளாக்குகிறவர்களாக அவர்களே இருக்கிறார்கள்.
சென்னையின் மேயராக தலைவர் @mkstalin இருந்த காலத்தில்தான் நகரத்தின் முக்கியமான 9 மேம்பாலங்கள் கட்டிமுடிக்கப்பட்டன; மேம்பாலங்களுக்கு ஒதுக்கிய 95கோடியில் 30 சதவீதத்தை மிச்சம் செய்து கட்டி முடித்ததுதான் தலைவரின் நிர்வாகத் திறனுக்கு சான்று.
தலைவர் @mkstalin செய்து தந்த சென்னையின் அசாத்திய வளர்ச்சித்திட்டங்களைப் பார்த்து வியந்த வியந்த ஹட்கோ நிறுவனம் சென்னைக்கு 'தூய்மையான நகரம்' என்ற விருது வழங்கி சிறப்பித்தது வரலாறு.
ஒடுக்கப்பட்ட மக்களின் ஒப்பற்ற தலைவர் தாத்தா H.M .ஜெகநாதன் அவர்களின நிளைவு தினம்- ஜீலை 25.
தாத்தா HM.ஜெகநாதன், சென்னையில் 1894 ல் அக்டோபர் 25ம் நாள் முனுசாமி என்பவரவது மகனாக பிறந்தார்.
தந்தையார் பிரிட்டிஸ் இந்திய அரசின் ராணுவத்திற்கான கருவிகளைச் செய்யும் தோல் ஒப்பந்ததாராக இருந்தார். செல்வச் செழிப்பில் பிறந்ததால் ஜெகநாதன் கல்வி கற்று பட்டம் பெற்றார். ஆங்கில மொழிப்புலமை மிக்கவவராகவும், சிறந்த ஆளுமைப்பண்புள்ளவராகவும் வளர்ந்தார்.
.
கல்லூரி முடித்தவுடன், 1914ல் துவங்கப்பட்ட நீதிக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.
ஒடுக்கப்பட்டமக்களின் விடுதலையின் பால் ஆர்வம் காரணமாக ராவ் சாகிப் எல்சி குருசாமி அவர்களுடன் இணைந்து சென்னை மாகாண அருந்ததியர் சங்கத்தை நிறுவி, அதன் பொதுச் செயலாளராக பொறுப்பேற்று களப்பணியாற்றினார்.
யார் பெரியார்? #Thread
--
சமீபத்திய பொள்ளாச்சி விவகாரத்தில் கூட பெண்களின் ஒழுக்கம் பற்றி கேள்வியெழுப்பிய சனாதன மதவாத ஆண்களை செருப்பால் அடித்தவர்தான் பெரியார்.
நவீனத்தின் வளர்ச்சியடைந்திருந்தாலும் சுயசாதி உணர்வு பேசி வலம் வரும் ஆப்பாயில் இளைஞர்களை செருப்பால் அடித்து சமத்துவம் போதிக்கும் கருத்தியலின் தந்தைதான் பெரியார்.
தமிழ், தமிழன் என்று பேசும் மேடைப் பொய்யர்களின் தம்பிகளுக்கும் சேர்த்து தமிழை எளிமையாக்கி மூலை முடுக்கெல்லாம் பரவச் செய்தவர் பெரியார்.