இந்த நேரத்தில் இது தேவையான பதிவு என்றே கருதுகிறேன்... #Sting_Operation

மதன் பின்னணியில் பாஜக உள்ளதா? திமுக உள்ளதா? CTR உள்ளாரா? தமிழ்நாடு அரசு & காவல்துறை க்கு வேலை செய்கிறாரா? என பல கேள்விகள்...

பதில்: நாக்பூர் தலைமை (காமாலயம் அல்ல நாக்பூர்)

ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்??
காமாலயம் ஒன்னும் அவ்வளவு அறிவார்ந்தவர்களைக் கொண்ட இடம் இல்ல! கோமாளிகள் நிறைந்த, சர்கஸ் கூடாரம்... அவ்ளோதான்!

அதும் இல்லாம இப்போ, தமிழ்நாட்டின் தலைசிறந்த க்ளவுனோட கையில இருக்குறத யாரும் மறுப்பதற்கு இல்லை.

ஆனா நாக்பூர் அப்டி இல்ல! வர்ணாசிரமத்துக்காக எந்த எல்லைக்கும் செல்லும்..
சர்கஸ் கூடாரத்தின் பெயர்தானே டேமேஜ் ஆகுது? இதனால் நஷ்டம் நாக்பூருக்குதானே?? அப்போ மதன் வீடியோவின் நோக்கம் என்ன???

ரொம்ப எளிமைய சொல்லனும்னா, வட இந்திய சமூக ஊடக மீடியாக்களும், சாட்டிலைட் மீடியாக்களும் 90% நாக்பூர் கைவசம் உள்ளது..

ஆனால் தமிழ்நாட்டு இணைய மீடியா அப்படி அல்ல!
அத்தனை பேரையும் மிரட்டியோ விலை கொடுத்தோ வாங்குவது அரிதிலும் அரிது. ஆனால் எளிதாக, சிறிய செலவில் அவர்களால் ஒன்றை செய்ய முடியும்..

"மீடியா மீது மக்களுக்கு உள்ள நம்பகத் தன்மையை சீர்குலைப்பது"

தமிழ்நாட்டு மக்கள், உண்மை நிலவரத்தை அறிந்து கொள்ளும் சோசியல் மீடியாவை முடக்கும் முயற்சி!
மதன் வீடியோவுக்குப் பின் YouTube போன்ற தளங்களில் எந்தக் கட்சியும் சாராத ஒரு நபர், அறச்சீற்றத்துடன் பேசினால் மக்கள் ரியாக்சன், "ஓஹோ நீ அந்த கட்சி கிட்ட காசு வாங்கிருப்ப" என்பதாகத்தான் இருக்கும்!

ஆனால் தமிழ்நாட்டு மக்கள் எப்பயுமே விவரம்! அவ்ளோ சீக்கிரம் யாரையும் நம்ப மாட்டாங்க..
அவ்ளோ விவரமா இருந்ததாலதான், இந்த உண்மைகள்லாம் வெளிய வர்றதுக்கு முன்னாடியே சவுக்க ஆதரிச்ச அவங்களே சங்கி சவுக்கு-னு சொன்னாங்க, மாதேஷ் திமுக வேஷம் போட்டு நடிக்கிறான்-னு கண்டுபிடிச்சாங்க.

அய்யப்பன கொண்டாடுன அதே மக்கள் அடிக்கவும் தயங்கல, முக்தார் வீடியோ எப்ப வரும்?-னு கேக்குறாங்க...
ஒரு விஷயத்த ஒருத்தர்ட்ட கேக்காம, வெவ்வேறு கட்சியினரின் கருத்த கேட்டு எல்லாத்தையும் வெச்சு தமிழ்நாட்டு மக்கள் சொந்தமா ஒரு முடிவுதான் எடுப்பாங்க! நம்ம மக்களோட சிறப்பே இதுதான்..❣️

அண்ணாமலை, H.ராஜா போன்றோரின் உளறல்களையும் காது குடுத்து கேட்க நம் மக்கள் ஒரு போதும் தயங்கியதில்லை.
இது ஒரு வகைல நமக்கு ஆறுதல்தான்..❣️

ஆனாலும்.. நஷ்டம் யாருக்குன்னா, ஆட்சியில் இருக்கும் திமுக அரசுக்குதான்!

ஒவ்வொரு நலத்திட்டங்களையும் அறிவித்து அதன் வாயிலாக கொள்கை அரசியலை முன்னெடுத்து மக்களை Educate செய்துகொண்டு இருக்கும் நேரத்தில்..
மக்களை வீடியோ ஆடியோ அரசியலின் பக்கம் இழுத்துச் செல்லும் முட்டாள் தனமான செயலை ஆட்சியில் இருக்கும் யாரும் செய்யத் துணிய மாட்டார்கள்!

அப்படியே செய்வதென்றால் கூட, அடுத்த சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் நடுநிலை வேடமிட்டுள்ள விஷங்களின் பேச்சை முடக்க இதை கையில் எடுத்தால்தான் லாபம்.
காவல்துறை செய்வதென்றால்கூட, அவங்க வீடியோ ரிலீஸ் பண்ணிட்டு இருக்க மாட்டாங்க. சாட்சிகள் கலைந்து குற்றவாளிகள் தப்பிக்க வாய்ப்பு உள்ளதால் அவர்களின் அப்ரோச் இது இல்லவே இல்லை.

மதன்தான் பழிவாங்குறான்! அதெல்லாம் அவனோட சொந்தக்காசுங்க-னு யோசிக்கிறீங்களா?

அதுக்கு வாய்ப்பே இல்லை! ஏன்னா...
இவ்ளோ நாள் மதன் & அவன் அப்பா சேர்த்து வெச்சது எல்லாம் சேர்த்தால் கூட 2 கோடி வராது!

அவன் காட்டுற Excel Sheet கணக்கே 2 கோடின்னா, கண்டிப்பா இன்னும் அதிகமாதான் செலவாகிருக்கும்.

மாமனார் வீட்ல குடுத்த கொஞ்ச நகை, வென்பா வீட்ல குடுத்த கொஞ்ச பணமும் சேர்த்தா 2 கோடி வந்துருமா என்ன?
அப்போ CTR & அதிமுக டீம் ஏன் பண்ணிருக்கக் கூடாது??

இந்த விஷயத்தால CTR க்கு அம்மஞ்சல்லிக்கு புரோஜனம் இல்ல! அதே நேரம், அதிமுகவுக்கு கடும் பின்னடைவு..

சீமானோட ஓட்டு பிரிக்குற அரசியல வெளிப்படையா போட்டு உடைக்குற அளவுக்கு அவங்க முட்டாள்கள் கிடையாது.

**ஆதாயம் நாக்பூருக்கு மட்டுமே..
நாக்பூருக்கு ஆதாயம்ன்னா அது காமாலயத்துக்கும்தானே??

ஆமா காமாலயத்துக்கு ஆதாயம் இருக்கு! ஆனா மறைமுகமான ஆதாயம்தான்.

நேரடியா நாக்பூருக்கு என்ன ஆதாயம்ன்னா..

பார்ப்பன & நாக்பூர் ஆதிக்கத்த ஒன்னும் இல்லாம பண்ணாதான் நாம சஸ்டைன் ஆவ முடியும்னு ஆடு தெளிவா கண்டுக்கிட்டதுதான் அவனுக காண்டு..
அவன பதவியில இருந்து அவ்ளோ லேசுல இறக்க முடியாது! ஏன்னா கட்சியில Ex IPS ரசிகர் பட்டாளம்தான் இன்னைக்கு தேதிக்கு அதிகம். ஆட்ட தூக்கிட்டா, விசிலடிச்சான் கூட்டமும் வெளிய போயிரும்.

அந்த கூட்டத்த காட்டி பயமுறுத்ததான் இப்போ பேட்டி குடுத்துட்டு இருக்கான் (இது வேற டாப்பிக்! தனியா பேசுவோம்)
ஆட்டுக்கு பிரஸ்ஸர் குடுக்க, நாக்பூர் தலைமையால் செய்யப்பட்ட பக்கா ஸ்கெட்ச்தான் இந்த ஸ்டிங் ட்ராமா..

மதன் வீடியோல, "நாக்பூர் ஆட்களை எனக்கு அறிமுகம் செஞ்சு வெச்சது ஆட்டுக்குட்டிதான்" னு சொன்னான். அங்கயே டவுட்டு வந்துருச்சு..

சரிப்பா.. ஆனா நாக்பூர் ஆளு ரவீந்திரன ஏன் அடிக்கிறானுக??
ரவீந்திரன்லாம் ஜஸ்ட் ஜோக்கர்தான்!

உருட்டுக்கு மறு உருவமே நீ தான்-னு அவர காட்டி தைரியமா சொல்லலாம்.

தன்னோட ஆள், வெறும் ஒரு கிராம் மோதிரத்துக்கு பல்ல காட்டுற அளவு மோசமான நிலையில நாக்பூர் வெச்சுக்காது. (தனிப்பட்ட அனுபவம் உண்டு)

என் பேருலயா வேஷம் போட்டு சுத்துற?-னு முடிச்சுட்டானுக.
ஆனா இது தமிழ்நாட்டு காமாலயத்துக்கு நஷ்டம்தானே? எலக்சன் நேரத்துல எப்டி இத பண்ணுவாங்க??

ஒரு நஷ்டமும் இல்ல! ஆடு வெளியபோனாலும் திமுகவோ, அதன் கூட்டணிகளோ இப்போதைக்கு ஆட்ட சேர்த்துக்க போறதில்ல! அதே நேரம் அதிமுக கூட்டணியும் முறியாது.

சோ, அந்த ரசிகர் கூட்டத்தின் ஓட்டு ஜி-க்கு தான்...
இதெல்லாம் யோசிச்சு பாருங்க! எவ்ளோ தெளிவான மூவ்-னு உங்களுக்கே புரியும்.

யார வெச்சு KTR வீடியோ விட்டு பார்ப்பன ஆதிக்கத்த ஒழிச்சியோ, அவன வெச்சே உன்னையும் ஒழிச்சு, கூடவே அதுல ஆதாயமும் அடையுற பழைய டெக்னிக்.

இட ஒதுக்கீட்டுக்கு எதிரா ள், ஒடுக்கப்பட்ட மக்களயே பேச வெக்குற அதே டெக்னிக்.
சிம்பிளா சொல்லனும்னா, ஆட்ட முடிச்சு விடனும், மீடியாவ தன் இஷ்டத்துக்கு ஆட்டி வெக்கனும் அதான் இந்த ஸ்டிங் அரசியலின் பின்னணி.

மக்களுக்கு சொல்ல விரும்புறது ஒன்னுதான்..

"யாரு சொன்னாலும், எங்க படிச்சாலும், நானே சொன்னாலும் உங்க அறிவுக்கு எது சரி-னு படுதோ அத சிந்திச்சு செயல்படுங்க..❣️"
பிகு: கொஞ்சம் பெரிய த்ரெட்தான், அங்கங்க எழுத்துப் பிழைகள் கூட இருக்கலாம்..

கருத்த மட்டும் உள்வாங்கி, சனாதன அரசியலுக்கு பலி ஆகிறாம கவனமா இருங்க! அவ்ளோதான்...😇 (n/n)

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Er.NithanKrish B.E.,

Er.NithanKrish B.E., Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @iam_nithankrish

Feb 1
"ஆண்டு வருமானம் 7 லட்சம் வரை உள்ளவர்களுக்கு வருமானவரி இல்லை" #பட்ஜெட்2023

கேக்குறதுக்கு இனிப்பா இருக்குல்ல?

இதுக்கு பின்னால ஏகப்பட்ட LIC ஏஜென்ட்களின் வாழ்க்கை கேள்விக்குறி ஆகிருக்கு. அதேநேரம் Upper Middle Class மக்கள், Lower Middle Class க்கு வர்ற நிலையும் உருவாகிருக்கு (1/n) Image
என்னடா எதயோ எங்கயோ போயி முடிச்சு போடுற?-னு கேக்குறீங்களா??

இங்க பலர் LIC ல பணம் போடக் காரணமே, LIC ல முதலீடு பண்ற பணத்துக்கு வரி கிடையாது, LIC கட்டுனது போக மீத பணத்துக்கு மட்டும்தான் வரி. அந்த மீத பணமும், குறைந்தபட்ச வருமானத்துக்கு கீழ வந்துச்சுன்னா No Tax என்கிற காரணம்தான் (2/n) அரசாங்கத்திற்கு காது குத்து...
**LIC க்கு மட்டும் இல்ல, இன்னும் ஒரு சில விஷயங்களுக்கும் வரிச்சலுகை இருக்கு! நான் LIC-ய மட்டும் எடுத்துக்குறேன்.

வரிச்சலுகை உள்ள காரணத்தால் விரும்பியோ / நிர்பந்தத்தின் அடிப்படையிலோ பாலிசி போட்டவங்கலாம் இனி பாலிசி போட மாட்டாங்க! அதாவது, சேமிப்பு குறைஞ்சு செலவு அதிகரிக்கும். (3/n)
Read 10 tweets
Nov 7, 2022
போன வருஷத்த விட இப்ப 58 மில்லி மீட்டர் அதி கனமழை பேஞ்சுருக்கு!

- #HelpChennai #SaveChennai போன்ற ஹேஸ்டேக், இந்த மழைக்கு யாரும் போடல!

- ஆண்டுதோறும் நடக்கும் "சென்னைக்கு உதவுங்கள்" உண்டியல் வசூல் இன்று இல்லை.

- ரொட்டி வேணும், பால் வேணும்-னு கண்ணீர் சிந்தும் நிலை யாருக்கும் வரல.
- மின் தட்டுப்பாடு, மெழுகுவர்த்தி தட்டுப்பாடு, தகவல் தொடர்பில் சிரமம்-னு எதுவுமே இல்ல.

- வானத்துல இருந்து "ஸ்டிக்கர் ஒட்டுன உணவுப் பொட்டலம்" போடுற கேவலமான நிலை இந்த வருஷம் இல்லவே இல்ல!

**குறிப்பா, சென்னைக்கு பொழைக்க வந்த யாரும் லீவு போட்டுட்டு சொந்த ஊருக்கு போகல.
- மலேரியா, டெங்கு-னு மருத்துவ மனையை நோக்கி கூட்டம் கூட்டமா யாரும் போகல.

- எல்லாத்துக்கும் மேல, வீட்லயே முடங்கிக் கிடக்காம எல்லாரும் வேலைக்கு போக முடிஞ்சது.

- காணுக்கால் தண்ணியில போட் விடக்கூட முடியல.

~ தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மிகச்சிறப்பாக பணி செஞ்சதுக்கு இதுவே சாட்சி.🔥
Read 4 tweets
Jul 30, 2022
உலகம் உருண்டை-னு முதலில் சொன்னவர் கிரேக்க அறிஞர் பிதாகரஸ் (காலம் கி.மு:570)

உலகின் முதல் வராகர் சிலை, குப்த பேரரசில் ஏரான் எனும் இடத்தில் கட்டப்பட்ட வராகர் கோயிலின் சிலை (படம்)

குப்தர் காலம்: கி.பி 320-550

உலகம் உருண்டை-னு தெரிஞ்சு 1120 ஆண்டுகள் ஆகியும் வாயில பூமி இல்ல! (1/n)
இரண்டாவது பழமையான சிலை, கி.பி: 700-728 பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட மஹாபலிபுரம் ஆதிவராக குடவரை படிமம்.(படம்)

உலகம் உருண்டைதான் என்ற பிதாகாரஸ் கோட்பாட்டை உறுதிசெய்தவர் அரிஸ்டாட்டில்(கி.மு 384-322)

பூமி உருண்டைதான்-னு உறுதிசெஞ்சு 1050 ஆண்டுகள் பின்னரும் வாயில உருண்டை இல்ல! (2/n)
கி.பி: 900-925 காலத்தை சேர்ந்த கஜூரஹோ வராஹர் சிலைதான் மூன்றாவது பழமையான சிலை(படம்)

அதுலயாச்சும் உலகஉருண்டை இருந்துச்சான்னு பாத்தா, அதுலயும் இல்ல!😂

இதுல சோகம் என்னன்னா, நாம பன்றி தலை மனித உடல்-னு டிசைன் பண்ண காலத்துல கூட, வடக்கானுக முழு பன்னியாதான் சிலை செஞ்சுருக்காய்ங்க (3/n)
Read 8 tweets
May 14, 2022
ராமாயண காலம் #Thread

"ராமர் வாழ்ந்த காலம் இன்றிலிருந்து 7500 ஆண்டுகளுக்கு முன்" அப்டின்னு நெறய நூல் பதிவுகள் பார்க்க முடிஞ்சது.

**நம்ம சூத்திர சங்கிகள் வழக்கம் போல "பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்"-னு உருட்டிட்டு கெடக்கானுவ!😝

(1/n)
அது இருக்கட்டும்...நமக்கு நல்லா தெரிஞ்ச புத்தர் வாழ்ந்த காலத்துக்கு வருவோம் முதல்ல!

புத்தர் இறந்த ஆண்டு : கிமு 483 அல்லது கி.மு 400 (அதாவது இன்று முதல் அதிகபட்சம் 2503 ஆண்டுகளுக்கு முன்)

அப்போ, அதுக்கப்பறம்தான் பெளத்த கோயில்களும், பெளத்த சன்னியாசிகளும் இருந்துருப்பாங்க!

(2/n)
ராமாயணத்துல..

அயோத்தியா காண்டம்
சருக்கம் : 6 பக்கம் : 22

ராமனுக்கு பட்டாபிஷேகம் நடத்துறதுக்கு புத்த ஆலயங்களின் உயரமான கோபுரங்களில் கொடி கட்டுனாங்களாம்!

(3/n)
Read 8 tweets
Mar 15, 2022
ரொம்பநாளா எழுதனும்-னு நெனச்சுட்டு இருந்த த்ரெட்... #காமாட்சிவிளக்கு

இந்த விளக்கை சுத்தி ஏகப்பட்ட சடங்குகள் இருக்கு.

1. சாயங்காலம் கண்டிப்பா விளக்கு ஏத்தனும்
2. விளக்கு அணையாமல் பாத்துக்கனும்
3. கல்யாணம் ஆகி புருசன் வீட்டுக்கு புதுசா வர்ற பொண்ணு இந்த விளக்க ஏத்தனும்
இந்த விளக்கோடா சிறப்பு என்னன்னா, இது இந்துக்கள் வீடுகளோட மட்டும் நிக்காம கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் வீடுகள்லகூட பாக்க முடியும்ங்குறதுதான்.

விளக்கின் சடங்குகள் பற்றி தெரிஞ்சுக்குறதுக்கு முன்னாடி தீப்பெட்டி பத்தி தெரிஞ்சுக்குவோம்.
இந்திய வரலாற்றை அதிலும் குறிப்பா தமிழக வரலாற்றை இரண்டா பிரிக்கலாம்

1. தீப்பெட்டிக்கு முன்
2. தீப்பெட்டிக்குப் பின்

கி.பி.1920-க்கு முன்னாடி தமிழகத்துல தீப்பெட்டி-னு ஒன்னு இல்ல. அப்போ எப்டி சமையல் பண்ணிருப்பாங்க? முக்கியத்துவம் வாய்ந்த கமாட்சி விளக்க எப்டி ஏத்திருப்பாங்க? 🤔
Read 16 tweets
Nov 15, 2021
கும்பாபிஷேகம் / குடமுழுக்கு நிகழ்வின்போது கழுகு பறப்பது ஏன்? #Debunk

கொஞ்சம் பெரிய த்ரெட், ஆனா முக்கியமானது....
இதை தெரிந்துகொள்வதற்குமுன், "Hot Air Baloon" எப்படி வேலை செய்கிறது என்பதை தெரிந்துகொள்வோம்.

பொதுவாக "காற்றை சூடாக்கும்போது, காற்றின் அடர்த்தி குறைந்து காற்று மேல்நோக்கி செல்லும்" இயல்பு உடையது.
மேல் நோக்கிச் செல்லக்கூடிய காற்றின் பாதையில், அதை தடுத்து நிறுத்தும் வகையில் பலூனின் பை உள்ளதால் மேல் எழும்பும் காற்றுடன் சேர்ந்து பலூனும் பறக்கிறது.

மேல் எழும்பும் காற்று நேரான பாதையில் செல்வதில்லை வட்ட வடிவ சுழல் அமைப்பில் பயணிக்கிறது. எனவேதான் பலூன் சூழன்று கொண்டே பறக்கிறது.
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(