K. RAJESH Profile picture
Mar 20 6 tweets 2 min read
#TNBudget2023#PTRPalanivelThiagarajan சொல்லுறது ஒண்ணே ஒன்னுதான்...

படிங்கப்பா, படிங்கம்மா. பள்ளிக்கூடத்துக்கு வாங்க பிள்ளைகளா. மத்ததை எல்லாம் நாங்க பார்த்துக்குறோம்.

Fiscal Deficit ஐ 50% குறைச்சதெல்லாம் ஒன்னும் பெரிய விஷயமில்லை. அது நிதியமைச்சரோட goals ல ஒன்னு.

ஆனா...
கல்விக்கான ஒதுக்கீடுகள் தான் இந்த பட்ஜெட் ல கவனிக்க வேண்டிய விஷயம். மேம்போக்கா நிதி ஒதுக்கீட்டு போகாம, அடிப்படை கல்விக்கான challenges என்னென்ன என்பதை நன்றாக ஆராய்ந்து, அதற்கேற்றவாறு பட்ஜெட் allocation கல்வி, மற்றும் கல்வி நிலையங்களின் மேம்பாட்டிற்காக செய்யப் பட்டுள்ளது.
கல்விக்கான ஒதுக்கீடு (உயர்கல்வி உட்பட), கல்வி கற்று வரும் மாணாக்கருக்கு வேலை வாய்ப்பு தருவதற்கான தொழிற்துறை முன்னேற்றத்திற்கான ஏற்பாடுகள், மகளிர் சுய உதவிக் குழு மூலம் சொந்த தொழில் தொடங்க கடனுதவி, SIPCOT மூலம் வேலைவாய்ப்பு என்று ஒரு better நீண்ட கால forward-looking budget இது.
சமூக நீதிக்கான ஆட்சியில், அச் சமூக நீதிக்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அவை அனைத்தும் செய்ய வழிவகை செய்யப் பட்டிருக்கிறது இந்த பட்ஜெட்டில்.

கல்விக்கு மட்டும் சுமார் ₹60,000 கோடி ஒதுக்கீடு. இவை அனைத்தும் அரசு பள்ளிகளுக்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
கல்வி மட்டுமல்லாது, தொழிற்துறை வளர்ச்சிக்கு ஒதுக்கீடு, அதற்க்கேற்ற பெருகப்போகும் மின்சார தேவைகளை கணக்கில் கொண்டு 14,500 மெகா வாட் மின் உற்பத்திக்கு சுமார் ₹77,000 கோடி ஒதுக்கீடு என்பன போன்ற பல்நோக்கு திட்டங்களுக்கு இந்த பட்ஜெட் இடமளித்துள்ளது.
Overall, திமுக அரசின் சமூக நீதி கொள்கைகளை சரியாக உள்வாங்கி அதற்கேற்றவாறு இந்த பட்ஜெட் தயாரிக்கப் பட்டுள்ளது.

நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான்.

படிங்க.
படிக்க வைங்க.

🙏🙏🙏🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with K. RAJESH

K. RAJESH Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @rajeshkmoorthy

Mar 22
வங்கிகள் எப்படியெல்லாம் வாடிக்கையாளர்களை ஏமாற்றுகின்றன?

ஒரு சிறிய இழை. படித்து, பயன்பெறவும்.

1. லோன் எடுக்கையில் இன்சூரன்ஸ் "கட்டாயம்" என்று சொல்லுவது.

வாகன இன்சூரன்ஸ் தவிர, மற்ற எந்த இன்சூரன்சுமே இந்தியாவில் கட்டாயம் கிடையாது.

மேலும் விபரங்களுக்கு: bit.ly/skymanwp
Insurance is a subject matter of solicitation.
இன்சூரன்ஸ் எடுப்பது தனிநபர் விருப்பத்தை பொறுத்தது. வங்கிகள், பெரும்பாலும், லோன் எடுப்பவர்களைத்தான் குறி வைக்கின்றன. அவர்களுடைய ரிஸ்க்கை குறைக்க, மற்றும் upselling மூலம் தங்களுக்கு அதிக லாபம் தரக்கூடிய பொருட்களை விற்க, இந்த வழியை
பயன்படுத்துகின்றன.

பர்சனல் லோனுக்கு இன்சூரன்ஸ் தேவையில்லை. ஏனென்றால், அதனுடைய ரிஸ்க் அதிகமாதலால், வட்டியும் அதிகம். நீங்கள் எடுக்க வேண்டுமென்பது கட்டாயம் இல்லை. அந்த ரிஸ்க்கை அவர்கள் தான் எடுக்க வேண்டும். நாம் அல்ல.

வீட்டு லோன் மற்றும் நகைக்கடன் - இவை இரண்டுமே, loan against
Read 15 tweets
Mar 15
#SVB Silicon Valley Bank பிரச்சனை - பயந்து ஓடலாமா? துணிந்து இறங்கலாமா? ஒரு சிறப்புப் பார்வை.

மார்ச் 8, 2023 அன்று அந்த வங்கி, தனது balance ஷீட் அட்ஜஸ்ட்மென்ட் க்காக $2.25 பில்லியன் கடன் வாங்கப் போவதாக சொன்னது. இந்த அறிவிப்பு சந்தை மற்றும் வங்கி வட்டாரங்களில் தீயைப் போல பரவியது.
2008 வீழ்ச்சி போல் இது ஆகி விடுமோ என்கிற பயத்தில் பீதியடைந்த முதலீட்டாளர்கள், அடுத்த 48 மணி நேரத்தில் $42 பில்லியன் தொகையை withdraw செய்தனர்.

SVB, அமெரிக்காவின் 16 ஆவது பெரிய வங்கி. 40 வருட பாரம்பரியம் கொண்டது. $175 பில்லியன் அளவுக்கு வாடிக்கையாளர்களின் டெபாசிட்ஸ் வைத்திருந்தது
இந்த வங்கியில் பெரும்பாலும் Startup நிறுவன முதலீட்டாளர்களே அதிகம்.

என்ன நடந்தது?

கடந்த 2020 வருடம், அதன் Balance ஷீட் ல் இருந்த தொகை, மொத்தம் $55 பில்லியன். வெறும் இரண்டு வருடங்களில், அந்த தொகை $186 பில்லியன் ஆனது.

எப்படி?
2020-22 வருடங்களில் வெளியான IPO வில் பெரும்பான்மையான
Read 16 tweets
Mar 13
#NPS - #NationalPensionSystem

Voluntary #retirement scheme.
Managed by #PFRDA (Pension Fund Regulatory and Development Authority).
Anyone from 18 to 65 yrs of age can invest.

For New NPS Registration: dynm.in/F2147
For NPS Contribution: dynm.in/93AC2
Type of Accounts:
Tier I : Retirement A/c. Mandatory. Cannot withdraw until retirement. Initial Contr - ₹500
Tier II : No restrictions. Anytime withdrawal. Tier II can be opened only if you have a Tier I account. Initial Contr - ₹1000

Annual Min Contr : I - ₹1000, II - ₹250
Market linked returns. Invests in 3 diff funds with a mix of the following asset classes.
Equity (E): Stocks
Corporate Debt (C): PSU Bonds, PFIs, Infra comp and Money Market
Government Securities (G)
Alternative Investment Funds (A): CMBS, REITS, AIFs, etc
Read 9 tweets
Feb 28
EPF - அதிக பென்ஷன் பெரும் தேர்வு.

செப்டம்பர் 1, 2014 தேதியன்று நீங்கள் சம்பளம் பெறும் ஊழியராக இருந்திருந்தால், ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS) கீழ் அதிக ஓய்வூதியம் (ஓய்வு பெற்ற பிறகு) பெறுவதற்கு உங்கள் நிறுவனம் உங்களுக்கு அதற்கான தெரிவை தெரிவிக்க சொல்லியிருப்பார்கள்.
சரி. அப்படீன்னா என்னன்னு குழப்பமா இருக்கா? சொல்றேன்.

மாதா மாதம் உங்களுக்கு PF தொகை (நிறுவனத்தின் contribution - 12% of Basic) உங்கள் நிறுவனம் செலுத்தும் அல்லவா? நிறுவனம் செலுத்தும் தொகையை நீங்கள் கவனித்து இருந்தீர்களானால், அது உங்களின் contribution ஐ விட சற்றே குறைவாக இருக்கும்
ஏனென்றால், நிறுவனம் செலுத்தும் தொகை இரண்டு பிரிவாக செலுத்தப்படும்.
EPF - Employee Provident Fund
EPS - Employee Pension Scheme

இதில் EPS க்கு செலுத்தும் தொகை எப்பொழுதுமே ஒரே தொகையாக இருக்கும் (8.33% of ₹15,000 = ₹1,250). ஏனென்றால், இதுவரை, இதன் சம்பள உச்சவரம்பு ₹15,000 ஆக
Read 12 tweets
Feb 24
Asset க்கும் Liability க்கும் உள்ள வித்தியாசத்தை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

எந்தவொரு பொருள் உங்களின் முதலீட்டிற்கு பணமீட்டித் தருகிறதோ, அதுதான் Asset.

நீங்கள் கடனில் வாங்கிய வீடு (தற்பொழுது குடியிருப்பது), Asset அல்ல. கடனில் வாங்கும் எதுவும் Asset கிடையாது.
வங்கிகளுக்குத் தான் அது asset. ஏனென்றால், அவர்கள் கொடுத்த கடனுக்கு வட்டி வருமானம் ஈட்டிக் கொடுப்பதினால்.

₹50 லட்சம் வீட்டுக் கடன் எடுத்து ஒருவர் வீடு வாங்கியிருக்கிறேன் என்று சொன்னால் அது சரியல்ல.

அவர் வீடு வாங்கவில்லை. கடன் வாங்கியிருக்கிறார். அவ்வளவே.
அதுவே, ஒரு வீட்டை கடனில் ஒருவர் வாங்கி, அது அவருக்கு மாதா மாதம் காட்டுகிற EMI + சொத்துவரி + Maintenance இவற்றைவிட அதிகமாக வாடகை வருமானம் ஈட்டித் தந்தால், அப்பொழுது அது Asset வகையில் சேரும்.

ஆனால் வாடகை வருமானம் எப்பொழுதுமே நாம் கட்டும் EMI யில் 1/3 தான் இருக்கும். அதுதான் உண்மை.
Read 6 tweets
Feb 23
வீட்டுக்கடன் வட்டி அதிகரிப்பு - என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

தற்போதுள்ள 6.5% ரெபோ வட்டி விகிதத்தால், அனைத்து வீட்டுக் கடன்களின் வட்டிகளையும் வங்கிகள் அதிகரித்து விட்டன. அதன் பெருஞ்சுமை மக்களை வாட்டி வதைக்கிறது.

இந்த நேரத்தில் என்ன செய்யக் கூடாது?

bit.ly/skymanwp
1. கடனை வேறொரு வங்கிக்கு மாற்றுதல்.
கூடவே கூடாது... ஏன்?

உதாரணமாக, ஒருவர், ₹40 லட்சம் கடனுக்காக ஒரு வங்கியிடம் ₹40,000 EMI செலுத்துகிறார் என்று வைத்துக் கொள்வோம். முதல் ஐந்து வருடங்களில் அவர் செலுத்திய EMI எதில் போய் சேர்ந்திருக்கும்?

வட்டி: ₹21,36,000 (89%)
அசல்: ₹2,64,000
வட்டி விகிதம் அதிகரிக்கின்றது. உடனே அவர் தனது வீட்டுக்கடனை 1% வட்டி குறைப்பிற்காக வேறொரு வங்கிக்கு மாற்றுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் எவ்வளவு கடனை மாற்றுவார்?

₹37,36,000 (₹40 லட்சம் - அசல் கட்டியது ₹2,64,000)

பிரச்சனை என்னவன்றால், இந்த புதிய வங்கி, இந்த கடனை
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(