#மகாபெரியவா_அருள்வாக்கு
சரீரம் எடுத்தது சாதனைக்கே!
மனதை அடக்குவதற்கு இரண்டு சாதனங்கள் உண்டு. வெளிப்படையாய் செய்வது பகிரங்கம். தனக்கு மட்டும் தெரியச் செய்வது அந்தரங்கம். தானதர்மங்கள் செய்வது, பூஜிப்பது, யாகம் நடத்துவது போன்ற செயல்கள் பகிரங்கமாக பலருக்குத் தெரியும்படி செய்வதாகும்.
அந்தரங்க சாதனம் என்பது தியானம் செய்வதாகும். தியானத்திற்கு துணை செய்வது ஐந்து குணங்கள். அவை அகிம்சை, சத்தியம், தூய்மை, புலனடக்கம், திருடாமை ஆகியவை, இந்த ஐந்து நற்குணங்களால் மனதை அடக்கினால் தியானம் எளிதில் கைகூடும்.
அகிம்சை என்பது எல்லாவுயிர்களையும் அன்புமயமாகப் பாவிப்பதாகும்.
எண்ணம், சொல், செயல் இம்மூன்றாலும் உண்மைவழியில் நடப்பது சத்தியம். தூய்மை என்பது அகத்தூய்மை, புறத்தூய்மை ஆகிய இரண்டுமாகும். புலனடக்கம் என்பது புலன் களை கட்டுப்பாட்டில் வைப்பதாகும். அதாவது கண் முதலிய ஐம்புலன்களையும் ஒழுக்கநெறியில் செலுத்துவதாகும் . திருடாமை என்பது பிறர் பொருள் மீது
ஆசைப்படாதிருப்பதாகும். இந்த குணங்கள் ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம். இச்சாதனைகளைச் செய்வதற்கே நாம் சரீரம் என்னும் உடம்பை பெற்றிருக்கிறோம். இந்த ஐந்து ஒழுக்க நெறிகளை "சாமான்ய தர்மங்கள்' என்றே சாஸ்திரங்கள் சொல்கின்றன. சாமான்யம் என்றால் மக்கள் அனைவருமே பின்பற்ற வேண்டியவை என்பது பொருள்
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
மன நோய் அகற்றும் #திருவிடைமருதூர்
சிவ பெருமான் தன்னை தானே பூஜித்து, வழிபட்ட லிங்கமானதால் இவர் #மகாலிங்கமானார் இவரை தரிசிப்போருக்கு மன நோய் நீங்கும். நீண்ட நாட்கள் நோயால் பாதிக்கப் பட்டோர், இத் தலநாயகனை வழிபட்டால் குணம் அடைவர்.
மன நோய் கொண்டுள்ளோர், இக்கோயிலின் வெளிச் சுற்றை வலம் வந்தால் குணம் பெறுவர். கும்பகோணத்தில் இருந்து மாயவரம் செல்லும் சாலையில் சுமார்10 கி.மீ. தொலைவில் உள்ளது இத்திருத்தலம்.
கற்கடேஸ்வரர் திருக்கோவில். கற்கடேஸ்வரர் வீற்றிருக்கும் திருந்து தேவன்குடியின் நாயகி, தீராநோய்கள் தீர்க்கும் அருமருந்தம்மை. இங்கு அம்மனுக்கு சார்த்தப்படும் எண்ணெய் பின்னர் வேண்டுவோர்க்கு, பிரசாதமாக வழங்கப் படுகிறது. இது சர்வ வியாதிகளுக்கும் ஆன ஒரு நிவாரணி. அதிலும், மிக குறிப்பாக,
#பரந்தாமன்#கிருஷ்ண_பக்தர்கள்_தவறாமல்_படியுங்கள்
ஒருநாள் யமுனை நதி தீரத்தில் பரமாத்மா குடிசை போட்டுக் கொண்டு ருக்மணியுடன் இருக்கிறான். மழைத் தூறல். குளிர்காற்று அடிக்கிறது. பரமாத்மா தூங்கவேயில்லை. ருக்மிணி பிராட்டி பரமாத்மாவின் பாதத்தைப் பிடித்து தூங்கப் பண்ண வந்தாள். எவ்வளவு
நேரம் ஆகியும் பரமாத்மா தூங்கவேயில்லை. ஏன் நித்திரை கொள்ளவில்லை என்று கேட்டாள் ருக்மிணி. யமுனையின் அக்கரையில் என்னிடத்தில் ஆழ்ந்த பக்தி கொண்ட ராதிகா இருக்கிறாள். அவள் தூங்கவில்லை. அதனால் நான் தூங்கவில்லை என்றான் பரமாத்மா.
அவள் ஏன் தூங்கவில்லை என்று கேட்டாள் பிராட்டி. அதற்கு
கண்ணன், அவள் நித்யம் 2 படி பாலைச் சுண்டக் காய்ச்சி பரிமள திரவியங்கள் எல்லாம் போட்டு அந்தப் பாலைப் பருகுவது வழக்கம். இன்றைக்கு அவள் பால் பருகவில்லை. பால் பருகாததால் அவள் தூங்கவில்லை. அதனால் நான் தூங்கவில்லை என்றான். அவள் தூங்காததால் பரமாத்மாவின் தூக்கத்திற்குத் தடை. அவள்
காஞ்சி மகாபெரியவருக்கு ஒரு சமயம் கடுமையான காய்ச்சல், கபம் இருந்தது. வெங்குடி டாக்டர் என்பவர் தான், பெரியவரைச் சோதித்து மருந்து கொடுப்பார். இந்தத் தடவை அவர் கொடுத்த
மருந்துகளை ஏனோ சாப்பிடவில்லை. காய்ச்சலும் குறையவில்லை.
ஒரு பக்தை தினமும் தரிசனத்திற்கு வருவார். பெரியவருக்கு காய்ச்சல் என்பதை அறிந்து, குங்குமப்பூவை சந்தனத்துடன் சேர்த்து கொஞ்சம் சூடுபண்ணி கொண்டு வந்தார். பெரியவரிடம் கொடுத்து, “சுவாமி! கொஞ்சம் பற்று போட்டுக் கொள்ளுங்கள்” என்றார்.
அதை ஒரு தொன்னையில் வாங்கிக் கொண்ட பெரியவர் ஓர் ஓரமாக வைத்து விட்டார். பற்று போட்டுக் கொள்ளவில்லை. அந்த அம்மையார் பெரியவர் பற்றுப் போடுவார் என காத்து நின்றார். இதனிடையே வெளியே மேளச் சத்தம் கேட்டது. தனக்கு மருந்து தந்த பக்தையை நோக்கி, "வாசல்லே காமாட்சி வந்திருக்கா! போய் தரிசனம்
மாதுர்காரனாகிய சந்திரனும் பிதுர்காரகனாகிய சூரியனும் ஒன்றாக இணையும் காலமே அமாவாசை எனப்படும். #சந்திரன் என்றால் தாய் மற்றும் தாய்வழி உறவினர்கள் #சூரியன் என்றால் தந்தை மற்றும் தந்தை வழி உறவினர்கள். இவர்கள் இருவரும் இணையும் அமாவாசை தினத்தில் மறைந்த
முன்னோர்கள், அவர்களது சந்ததியினர் வாழ்வில் முன்னேற தடைகள் அகல, பலவித தோஷசங்கள் நிவர்த்தி பெற இந்த உலகிற்கு எந்த ரூபத்திலாவது வந்து அருள் புரிவார்கள் என்பது ஐதீகம். அதனால் தான் அமாவாசையன்று காகம், ஈ, எறும்பு, நாய், பசு போன்ற ஜீவராசிகளுக்கு உணவிட வேண்டும் என்று நம் முன்னோர்கள்
சம்பிரதாயத்தை வகுத்துள்ளனர். நம் வீட்டில் எந்த நல்லது, கெட்டது நடந்தாலும் முதலில் தெரிவது இவர்களுக்கு தான். நம் வீட்டிற்க்கு உறவினர் வரப் போகிறார்கள் என்றால் நம் வீட்டில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் காகம் கத்தும். மற்றோரு உறவினர் ஒரு கெட்ட செய்தியை சொல்ல வருகிறார் என்றால் வேறு
மகா செல்வக் குடும்பம். ஸ்ரீ மடத்துக்கு நிறையக் கைங்கர்யம் செய்தவர்கள். பெரியவாளைச் சாட்சாத் பரமேசுவரனாகவே கருதி வணங்கினர். ஆனால், அந்த குடும்பத்தில் நிம்மதியில்லை. கஷ்டத்தின் மேல்
கஷ்டம். அடுக்கடுக்காகத் துன்பம், அலை அலையாக இடையூறுகள். பரிகாரங்கள் செய்து பார்த்தாகி விட்டது. பலன் ஏதும் கிடைக்கவில்லை. குடும்பத் தலைவர், பெரியவாளிடம் வந்து ஏறக்குறையஅழுகிற குரலில், தன் கஷ்டங்களைத் தெரிவித்துக்கொண்டார். பெரியவாள் சிறிது நேரம் மௌனமாக இருந்தார்.
"நான் ஏதாவது
குற்றம் குறை சொன்னா தப்பா எடுத்துக்கமாட்டியே?"-பெரியவா.
அவர் தவித்தார். "பெரியவா சொல்றதுதான் எங்களுக்கு வேதவாக்கு. பெரியவா அனுக்ரஹத்துக்காக காத்திண்டிருக்கோம்"
"உங்க ஊர்க் கோயிலில் வருஷா வருஷம் தேரோட்டம் நடக்கும். உன் குடும்பத்தவர்கள் தான் .அதை நடத்திண்டிருந்தா. உன் தகப்பனார்