#அமாவாசை #தர்ப்பணம் #ஸ்ராத்தம்

மாதுர்காரனாகிய சந்திரனும் பிதுர்காரகனாகிய சூரியனும் ஒன்றாக இணையும் காலமே அமாவாசை எனப்படும். #சந்திரன் என்றால் தாய் மற்றும் தாய்வழி உறவினர்கள் #சூரியன் என்றால் தந்தை மற்றும் தந்தை வழி உறவினர்கள். இவர்கள் இருவரும் இணையும் அமாவாசை தினத்தில் மறைந்த
முன்னோர்கள், அவர்களது சந்ததியினர் வாழ்வில் முன்னேற தடைகள் அகல, பலவித தோஷசங்கள் நிவர்த்தி பெற இந்த உலகிற்கு எந்த ரூபத்திலாவது வந்து அருள் புரிவார்கள் என்பது ஐதீகம். அதனால் தான் அமாவாசையன்று காகம், ஈ, எறும்பு, நாய், பசு போன்ற ஜீவராசிகளுக்கு உணவிட வேண்டும் என்று நம் முன்னோர்கள்
சம்பிரதாயத்தை வகுத்துள்ளனர். நம் வீட்டில் எந்த நல்லது, கெட்டது நடந்தாலும் முதலில் தெரிவது இவர்களுக்கு தான். நம் வீட்டிற்க்கு உறவினர் வரப் போகிறார்கள் என்றால் நம் வீட்டில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் காகம் கத்தும். மற்றோரு உறவினர் ஒரு கெட்ட செய்தியை சொல்ல வருகிறார் என்றால் வேறு
இடத்தில் இருந்து காகம் கரையும் இதை கவனித்துப் பார்த்தால் தெரியும். நல்ல விசயத்தை ஒரு இடத்திலும், கெட்ட செய்தியை வேறு இடத்திலும் இருந்து காகவடிவில் நமக்கு தெரிவிப்பது நமது முன்னோர்களே!
நமது வீட்டில் ஒரு ஜீவன் பிரிய போகிறது என்றால் நம் வீட்டில் உள்ள மாடு, நாய்களுக்கு தான் முதலில்
தெரியும். இந்த உலகில் இருந்து பிரிந்த ஒவ்வொரு ஆத்மாவும் வலிமை உள்ளவையே. அதுவே நம் தாத்தா பாட்டி, முன்னோர்கள் என்றால், அவர்களை முறையாக வழிபட்டால், அவர்களின் அத்தனை சக்தியும் நம் முன்னேற்றத்திற்கு கிடைக்க முழு ஆசீர்வாதம் செய்வார்கள். நம் ஒவ்வொரு அசைவையும் அவர்கள் கண்காணித்துக்
கொண்டு தான் இருக்கிறார்கள். நமது முன்னோர்களும், பெற்றோர்களும் ஏற்கனவே இறைவனடி சேர்ந்திருந்தாலும் அவர்கள் அனைவரின் ஆன்மாக்களும் நம்மை எங்கிருந்தோ ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறது என்பது நம் இந்து மத சாஸ்திரம். நம் முன்னோர்களின் ஆன்மாக்கள் நம்மைச் சுற்றி எங்கும் வியாபித்திருக்கிறது.
அவர்களை நம் சாதாரணக் கண் கொண்டு அடையாளம் தெரிந்து கொள்ள இயலாது. ஒவ்வொருவரையும் தனித்தனியாக வணங்கிடவும் இயலாது. இதனால் தான் அவர்களுக்கு ஹோமம் வளர்த்து யாகம் அனுசரித்து பஞ்ச பூதங்களையும் முன்நிறுத்தி உரிய மந்திரங்களோடு வணங்குகிறோம். இதுவே பித்ரு (தில) ஹோமம் எனப்படுகிறது.
அமாவாசை
அன்று சர்வகோடி லோகங்களிலுள்ள மகரிஷிகள் உள்பட அனைத்து தேவதைகளும் ஜீவன்களும் பூலோகத்திற்கு வந்து புண்ணிய நதிக் கரைகளிலும், கடலோரங்களிலும் காசி ராமேஸ்வரம், கயை போன்ற புண்ணிய தலங்களிலும் தர்ப்பண பூஜையை மேற்கொள்கின்றனர் என்பது சாஸ்திரங்கள் நமக்கு உரைத்திடும் உண்மை. இந்தத் தர்ப்பண பூஜை
பித்ருக்களுக்கு மட்டுமின்றி, வம்சா வழியிலுள்ள நமக்கும் தான் பெரிதும் பயன் தருவதாய் உள்ளது. இதனாலேயே அமாவாசையில் கொடுக்கப்படும் பெற்றோருக்கான அல்லது முன்னோருக்கான திதி வழிபாடு மிகவும் சிறப்புடையதாய் விளங்குகிறது. பொதுவாக வலது ஆள் காட்டி (குருவிரல்) விரலுக்கும், கட்டை விரலுக்கும்
(சுக்கிரவிரல்) இடையிலுள்ள பித்ரு பூம்ய ரேகைகள் வழியாக தர்ப்பணங்கள் அளிக்கப்படுகின்றன. இந்த தர்ப்பண நீரின் சக்தியானது, பூமியின் ஆகர்ஷன சக்தியை மீறி மேல்நோக்கி எழும்பிச் சென்று, எத்தனையோ கோடி மைல்களுக்கு தொலைவில் உள்ள பித்ரு லோகத்தை அடைகின்றது. சாதாரணதாக, அமாவாசையன்று கீழிருந்து
மேல் செல்வதே பித்ரு லோக அந்தர ஆக்ரஷன சக்தியின் தெய்வீகக் தன்மையாகும். தை அமாவாசையன்று இச்சக்தியானது மிகவும் அபரிதமானதாகப் பெருகுகிறது. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்யும் போது பசு தயிர் கொண்டு தர்ப்பணம் செய்வது திருப்தியளிப்பதாய் கருதப்படுகிறது. பித்ரு லோகத்திலுள்ள மூலிகையாய்
விளங்குவது புடலங்காயே. இதன் நிழலில் தான் பித்ரு- தேவர்கள் இளைப்பாறுவதாய் ஐதீகம். ஆக, அதி அற்புதமான தெய்வீக ஆற்றல்களைக் கொண்ட நமது பித்ருக்களுக்குத் தர்ப்பணங்கள், திவசங்கள், படையல்களை முறையாக அளித்து பல்லாயிரக்கணக்கான நம் கர்மவினைகளுக்குப் பரிகாரம் தேடிக் கொள்ளலாம்.
#சிராத்தம், #தர்ப்பணம் ஆகியவற்றுக்கான வித்தியாசம்:
சிராத்தம் (திவசம்) என்றால்.
காலம் சென்ற நம் முன்னோர்களின் நினைவு நாளன்று அவர்களுக்கு பிரியமான உணவு, உடைகளைப் படைத்து வணங்கிப் பின்னர் அதனை ஏழைகளுக்கு தானமாக வழங்குதல் திதி அல்லது சிரார்த்தம் எனப்படும். முறைகள் குலத்துக்குத்
தகுந்தபடி மாறும். தர்ப்பணம் என்பது எள்ளும், நீரும் கொண்டு வலது ஆள் காட்டி (குருவிரல்) விரலுக்கும், கட்டை விரலுக்கும் (சுக்கிரவிரல்) இடையிலுள்ள பித்ரு பூம்ய ரேகைகள் வழியாக நீரை வார்த்து செய்வது. தர்ப்பணம் செய்ய அந்த வேத மந்திரங்கள் தெரிந்த வேதியர் தான் வேண்டும் என்பதில்லை
செய்பவர்களுக்கு அந்த மந்திரங்கள் மற்றும் வழிமுறைகள் தெரிந்திருந்தால் போதும். சிராத்தம் செய்விக்க உபாத்தியார் ஒருவரும் அன்னமிட தகுந்த நபர்களும் தேவை. சிராத்தத்தில் குறிப்பிடத் காய்கறிகள் மட்டுமே சேர்க்க வேண்டும். தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், அமாவாசை நாளே சிறந்தது.
மாதம் தோறும் அமாவாசையன்று தர்ப்பணம் தர முடியாதோர், ஆண்டுக்கு ஒரு முறை வரும் மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து மாதத்திலும் தர்ப்பணம் தந்த பலனை பெறலாம். இறந்தவருக்கு சிரார்த்தம் தர்ப்பணம் போன்றவற்றை செய்பவர்களுக்கு
நீண்ட ஆயுள், ஆரோக்கியம், கடன்நிவர்த்தி, வம்ச
விருத்தி, முதலான பலன்கள் கிடைக்கும். பித்ருக்களுக்கான கர்மாக்களை யார் முறையாகச் செய்யவில்லையோ அவர்களுக்கு குடும்பத்தில் குழப்பம், சண்டை, வியாதி, வம்ச விருத்தி இன்மை போன்ற சில துன்பங்கள் நேரிடலாம். ஆகவே சகோதர்களுக்குள் யாரோ ஒருவர் செய்து விட்டாரே நாம் ஏன் சிரார்த்தம், தர்ப்பணம்
மறுபடியும் செய்ய வேண்டும் என்று தவறாக எண்ணி ஒருவர் பெற்றோருக்குச் செய்ய வேண்டிய சிரார்த்தம், தர்ப்பணம் போன்றவற்றைச் செய்யாமல் இருந்து விட்டால், நஷ்டம் அவருக்குத்தானே தவிர, பித்ருக்களுக்கு இல்லை. அதாவது சிரார்த்தம் தர்ப்பணம் முதலான பித்ரு கர்மாக்களைச் செய்யாதவனுக்கு பித்ரு தோஷம்
ஏற்படலாம். ஒரு வேளை அதிகமான புண்ணிய பலத்தால் பித்ரு தோஷத்தை ஒருவன் தன் வாழ்நாளில் அனுபவிக்காமல் போனாலும் அந்த பித்ரு தோஷத்தை அவன் வம்சத்தினர் அனுபவிக்க நேரலாம். ஆகவே அவரவர்களின் அப்பா, தாத்தா செய்து வந்த வழிமுறையை ஒட்டி பித்ருக்களுக்கான சிரார்த்தம் தர்ப்பணம் முதலானவற்றை அந்தந்த
காலங்களில் தவறாது செய்து விட வேண்டும். நம்பிக்கை இருந்தாலும், இல்லாவிட்டாலும் தன்னை நம்பி வாழும் தனது குடும்பத்தினரின் நன்மையைக் கருதி கட்டாயம் பித்ரு கர்மாக்களை செய்வது நல்லது. அவர்களுக்கு நாம் எந்த ஒரு சொத்தும் பணமும் சேர்த்து வைக்காவிட்டாலும், பித்ரு கர்மாக்கள் செய்யாததால்
ஏற்படும் பித்ரு தோஷத்தை சொத்தாக வைத்து விட்டுச் செல்லக்கூடாது. ஆகவே அண்ணன், தம்பிகள் பலர் இருந்தால் அனைவரும் தனித்தனியே அவரவர்களுக்குரிய கடமைகளை அதாவது சிரார்த்தம் தர்ப்பணம் போன்ற பித்ரு கர்மாக்களை தனித்தனியே கட்டாயம் செய்ய வேண்டும். அல்லது அண்ணனோ, தம்பியோ பித்ருக்களுக்கு
தர்ப்பணம் செய்யும் போது அவர்களுடன் சேர்ந்து நின்றாவது பித்ரு கர்மாக்களைச் செய்யவேண்டும். முன்னோர்களுக்கு செய்யவேண்டிய கடமைகளை செய்யாமல் நாம் எத்தனை பூஜை செய்தாலும் நாம் செய்யும் தொழில் குடும்பம் இவற்றில் முன்னேற்றமே ஆகாது. ஒருவரது வாழ்வில் குலதெய்வ வழிபாடும், முன்னோர்கள்
வழிபாடும் மிக மிக முக்கியமான ஒன்று ஆகும்.

சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
தவறுதலாக இடது கை படம் வந்துவிட்டது. மன்னிக்கவும்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Mar 25
#குறிப்பிட்ட_சில_கோவில்களில்_வணங்குவதால்_வரும்_பலன்

மன நோய் அகற்றும் #திருவிடைமருதூர்
சிவ பெருமான் தன்னை தானே பூஜித்து, வழிபட்ட லிங்கமானதால் இவர் #மகாலிங்கமானார் இவரை தரிசிப்போருக்கு மன நோய் நீங்கும். நீண்ட நாட்கள் நோயால் பாதிக்கப் பட்டோர், இத் தலநாயகனை வழிபட்டால் குணம் அடைவர். ImageImage
மன நோய் கொண்டுள்ளோர், இக்கோயிலின் வெளிச் சுற்றை வலம் வந்தால் குணம் பெறுவர். கும்பகோணத்தில் இருந்து மாயவரம் செல்லும் சாலையில் சுமார்10 கி.மீ. தொலைவில் உள்ளது இத்திருத்தலம்.

புற்றுநோய் தீர்க்கும் #திருந்துதேவன்குடி_அருமருந்தம்மை
புற்று நோய்தீர்க்கும் தலம் திருந்துதேவன்குடி Image
கற்கடேஸ்வரர் திருக்கோவில். கற்கடேஸ்வரர் வீற்றிருக்கும் திருந்து தேவன்குடியின் நாயகி, தீராநோய்கள் தீர்க்கும் அருமருந்தம்மை. இங்கு அம்மனுக்கு சார்த்தப்படும் எண்ணெய் பின்னர் வேண்டுவோர்க்கு, பிரசாதமாக வழங்கப் படுகிறது. இது சர்வ வியாதிகளுக்கும் ஆன ஒரு நிவாரணி. அதிலும், மிக குறிப்பாக, Image
Read 53 tweets
Mar 25
#பரந்தாமன் #கிருஷ்ண_பக்தர்கள்_தவறாமல்_படியுங்கள்
ஒருநாள் யமுனை நதி தீரத்தில் பரமாத்மா குடிசை போட்டுக் கொண்டு ருக்மணியுடன் இருக்கிறான். மழைத் தூறல். குளிர்காற்று அடிக்கிறது. பரமாத்மா தூங்கவேயில்லை. ருக்மிணி பிராட்டி பரமாத்மாவின் பாதத்தைப் பிடித்து தூங்கப் பண்ண வந்தாள். எவ்வளவு Image
நேரம் ஆகியும் பரமாத்மா தூங்கவேயில்லை. ஏன் நித்திரை கொள்ளவில்லை என்று கேட்டாள் ருக்மிணி. யமுனையின் அக்கரையில் என்னிடத்தில் ஆழ்ந்த பக்தி கொண்ட ராதிகா இருக்கிறாள். அவள் தூங்கவில்லை. அதனால் நான் தூங்கவில்லை என்றான் பரமாத்மா.
அவள் ஏன் தூங்கவில்லை என்று கேட்டாள் பிராட்டி. அதற்கு Image
கண்ணன், அவள் நித்யம் 2 படி பாலைச் சுண்டக் காய்ச்சி பரிமள திரவியங்கள் எல்லாம் போட்டு அந்தப் பாலைப் பருகுவது வழக்கம். இன்றைக்கு அவள் பால் பருகவில்லை. பால் பருகாததால் அவள் தூங்கவில்லை. அதனால் நான் தூங்கவில்லை என்றான். அவள் தூங்காததால் பரமாத்மாவின் தூக்கத்திற்குத் தடை. அவள்
Read 11 tweets
Mar 25
#திரு_எனத்தொடங்கும்_பாடல்பெற்ற_தலங்கள்

திருவாரூரில் தியாகராஜர்

திருநெல்வேலியில் நெல்லையப்பர்

திருவையாறில் ஐயாறப்பர்

திருவண்ணாமலையில் அண்ணாமலையார்

திருவாவடுதுறையில் கோமுக்தீஸ்வரர்

திருவெண்காட்டில் சுவேதாரண்யேஸ்வரர்

திருவானைக்காவலில் ஜம்புகேஸ்வரர்

திருக்கருகாவூரில் ImageImageImage
முல்லைவனநாதர்

திருவாலாங்காட்டில் வடாரண்யேஸ்வரர்

திருமருகலில் ரத்தினகிரீஸ்வரர்

திருவிசநல்லூரில் யோகநந்தீஸ்வரர்

திருப்புகலூரில் வர்த்தமானீஸ்வரர்

திருத்தங்கூரில் வெள்ளிமலைநாதர்

திருக்கழுகுன்றத்தில் வேதகிரீஸ்வரர்

திருநீலக்குடியில் நீலகண்டேஸ்வரர்

திருச்சிராப்பள்ளியில் Image
தாயுமானவர்

திருநள்ளாரில் தர்ப்பாரண்யேஸ்வரர்

திருமணஞ்சேரியில் உத்வாகநாதர்

திருவேள்விக்குடியில் கல்யாண சுந்தரேஸ்வரர்

திருவேற்காட்டில் வேதபுரீஸ்வரர்

திருக்கண்ணபுரத்தில் ராமநாதர்

திருமழபாடியில் வைத்தியநாதர்

திருக்கோவிலூரில் வீரட்டேஸ்வரர்

திருப்புனவாசலில் விருத்தபுரிஸ்வரர்
Read 8 tweets
Mar 25
#மகாபெரியவா சங்கராம்ருதம் - 460

ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத் பாத சங்கரம் லோக சங்கரம்

காஞ்சி மகாபெரியவருக்கு ஒரு சமயம் கடுமையான காய்ச்சல், கபம் இருந்தது. வெங்குடி டாக்டர் என்பவர் தான், பெரியவரைச் சோதித்து மருந்து கொடுப்பார். இந்தத் தடவை அவர் கொடுத்த Image
மருந்துகளை ஏனோ சாப்பிடவில்லை. காய்ச்சலும் குறையவில்லை.
ஒரு பக்தை தினமும் தரிசனத்திற்கு வருவார். பெரியவருக்கு காய்ச்சல் என்பதை அறிந்து, குங்குமப்பூவை சந்தனத்துடன் சேர்த்து கொஞ்சம் சூடுபண்ணி கொண்டு வந்தார். பெரியவரிடம் கொடுத்து, “சுவாமி! கொஞ்சம் பற்று போட்டுக் கொள்ளுங்கள்” என்றார்.
அதை ஒரு தொன்னையில் வாங்கிக் கொண்ட பெரியவர் ஓர் ஓரமாக வைத்து விட்டார். பற்று போட்டுக் கொள்ளவில்லை. அந்த அம்மையார் பெரியவர் பற்றுப் போடுவார் என காத்து நின்றார். இதனிடையே வெளியே மேளச் சத்தம் கேட்டது. தனக்கு மருந்து தந்த பக்தையை நோக்கி, "வாசல்லே காமாட்சி வந்திருக்கா! போய் தரிசனம்
Read 9 tweets
Mar 24
#மகாபெரியவா
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்
தட்டச்சு வரகூரான் நாராயணன்.

மகா செல்வக் குடும்பம். ஸ்ரீ மடத்துக்கு நிறையக் கைங்கர்யம் செய்தவர்கள். பெரியவாளைச் சாட்சாத் பரமேசுவரனாகவே கருதி வணங்கினர். ஆனால், அந்த குடும்பத்தில் நிம்மதியில்லை. கஷ்டத்தின் மேல்
கஷ்டம். அடுக்கடுக்காகத் துன்பம், அலை அலையாக இடையூறுகள். பரிகாரங்கள் செய்து பார்த்தாகி விட்டது. பலன் ஏதும் கிடைக்கவில்லை. குடும்பத் தலைவர், பெரியவாளிடம் வந்து ஏறக்குறையஅழுகிற குரலில், தன் கஷ்டங்களைத் தெரிவித்துக்கொண்டார். பெரியவாள் சிறிது நேரம் மௌனமாக இருந்தார்.

"நான் ஏதாவது
குற்றம் குறை சொன்னா தப்பா எடுத்துக்கமாட்டியே?"-பெரியவா.

அவர் தவித்தார். "பெரியவா சொல்றதுதான் எங்களுக்கு வேதவாக்கு. பெரியவா அனுக்ரஹத்துக்காக காத்திண்டிருக்கோம்"

"உங்க ஊர்க் கோயிலில் வருஷா வருஷம் தேரோட்டம் நடக்கும். உன் குடும்பத்தவர்கள் தான் .அதை நடத்திண்டிருந்தா. உன் தகப்பனார்
Read 7 tweets
Mar 24
#மகாபெரியவா_அருள்வாக்கு
சரீரம் எடுத்தது சாதனைக்கே!
மனதை அடக்குவதற்கு இரண்டு சாதனங்கள் உண்டு. வெளிப்படையாய் செய்வது பகிரங்கம். தனக்கு மட்டும் தெரியச் செய்வது அந்தரங்கம். தானதர்மங்கள் செய்வது, பூஜிப்பது, யாகம் நடத்துவது போன்ற செயல்கள் பகிரங்கமாக பலருக்குத் தெரியும்படி செய்வதாகும்.
அந்தரங்க சாதனம் என்பது தியானம் செய்வதாகும். தியானத்திற்கு துணை செய்வது ஐந்து குணங்கள். அவை அகிம்சை, சத்தியம், தூய்மை, புலனடக்கம், திருடாமை ஆகியவை, இந்த ஐந்து நற்குணங்களால் மனதை அடக்கினால் தியானம் எளிதில் கைகூடும்.
அகிம்சை என்பது எல்லாவுயிர்களையும் அன்புமயமாகப் பாவிப்பதாகும்.
எண்ணம், சொல், செயல் இம்மூன்றாலும் உண்மைவழியில் நடப்பது சத்தியம். தூய்மை என்பது அகத்தூய்மை, புறத்தூய்மை ஆகிய இரண்டுமாகும். புலனடக்கம் என்பது புலன் களை கட்டுப்பாட்டில் வைப்பதாகும். அதாவது கண் முதலிய ஐம்புலன்களையும் ஒழுக்கநெறியில் செலுத்துவதாகும் . திருடாமை என்பது பிறர் பொருள் மீது
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(