மைக்கேல் ஜாக்சன் 150 ஆண்டுகள் வாழ வேண்டும் என்று நினைத்தார்...
அதற்காக வீட்டில் 12 டாக்டர்களை வேலைக்கு அமர்த்தினார். தினமும் உச்சியில் இருந்து உள்ளங்கால் வரை அவர்கள் ஜாக்சனைப் பரிசோதிப்பார்கள்...
கண்டிப்பாக பரிசோதனைக் கூடத்தில் பரிசோதிக்கப்பட்ட பின்னரே அவருக்கான உணவு வழங்கப்படும்...
தினமும் அவர் செய்யும் உடற்பயிற்சிகளைக் கண்காணிக்க இன்னொரு 15 நபர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டார்கள்...
ஆக்சிஜன் லெவலை சமன்படுத்திக் கூடிய டெக்னாலஜி அவர் படுக்கையில் இருந்தது...
ஒரு ஆச்சரியமான விஷயம் என்னன்னா... தேவைப்பட்டால் உடனடியாக உறுப்புகளை மாற்ற வேண்டும் என்பதற்காக ஆர்கன் டோனர்ஸ் தயாராக வைக்கப்பட்டிருந்தார்கள். அந்த டோனர்களுக்கான தினப்படி செலவுத் தொகையை ஜாக்சனே வழங்கி வந்தார்...
150 ஆண்டுகள் வாழ்வோம் என்று நம்பிக் கொண்டிருந்தார் ஜாக்சன்... ஆனால் நடக்கவில்லை...
25 ஜூன் 2009ல் அவருடைய 50வது வயதில் அவருடைய இதயம் செயலிழந்தது... 12 டாக்டர்களின் ஒட்டுமொத்த முயற்சி கைகொடுக்கவில்லை... லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கலிஃபோர்னியாவில் இருந்து வந்த டாக்டர்களாலும் ஏதும் செய்ய முடியவில்லை...
சுமார் 25 ஆண்டுகள் மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் ஒரு அடியைக் கூட எடுத்து வைக்காதவரால் கூட 150 ஆண்டுகள் வாழ வேண்டும் என்ற தன்னுடைய கனவை நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை...
ஜாக்சனின் இறுதி யாத்திரையை 2.5 மில்லியன் பேர் டிவியில் கண்டு கழித்தார்கள். இந்நாள் வரை இது தான் உலகின் மிக நீண்ட லைவ் டெலிகாஸ்ட்...
அவர் இறந்த 25 ஜூன் 09, மதியம் 3.15 மணியளவில் விக்கிபீடியா, ட்விட்டர், AOL மெசஞ்சர் ஆகியவை இயக்கத்தை நிறுத்தின. காரணம் மில்லியன் கணக்கான மக்கள் மைக்கல் ஜாக்சன் பற்றி இணையத்தில் ஒரே நேரத்தில் தேடினார்கள்... அதனால் இணையமே ஸ்தம்பித்தது...
ஜாக்சன் மரணத்தை வெல்ல நினைத்தார். ஆனால் மரணம் அவரை வென்று விட்டது... பொருளாசை கொண்டவர்களுக்கு அதுவே தான் அவர்களின் அழிவுக்கான காரணியாக இருக்கிறது...
இப்போது நாம் சிந்திப்போம்...
நாம் சம்பாதிப்பது கட்டிடப் பொறியாளர்களுக்காக, இண்டீரியர் டிசைனர்களுக்காகவா...?!
விலையுயர்ந்த வீடு, கார், அதிக செலவிலான திருமணங்கள் மூலம் யாரைத் திருப்திப்படுத்த நினைக்கிறோம்...?!
போன வாரம் நடந்த திருமணத்தில் சாப்பிட்ட உணவு உங்களுக்கு நினைவிருக்கிறதா...?!
ஏன் மிருகங்கள் போல பாடுபடுகிறோம்...?!
ஏன் பல தலைமுறைகளுக்கு சேர்த்து வைக்க நினைக்கிறோம்...?!
நமக்கு பொதுவாக ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்... நம் தேவைக்கும் ஆசைக்கும் இருக்கும் இடைவெளி குறித்து என்றாவது யோசித்திருக்கிறோமா...?!
நம் பிள்ளைகளால் தன் தேவைக்கு சம்பாதிக்க முடியாது, அதனால் நாம் சொத்து சேர்த்து வைக்க வேண்டும் என்று நினைப்பது அறிவீனம் தானே...?!
உங்களுக்காக, உங்கள் குடும்பத்துக்காக, உங்கள் நண்பர்களுக்காக நீங்கள் நேரத்தை செலவளிக்கிறீர்களா ?!
நாம் சம்பாதிப்பதோடு மட்டுமல்லாமல் வாழ்க்கையில் நமக்கு சந்தோஷமும் கிடைக்கிறதா...?!
மிக ஆழமாக இது குறித்து நீங்கள் சிந்தித்தால் உங்கள் இதயம் செயலிழக்கக் கூடும்... உயர்கொழுப்பும் தூக்கமின்மையும் உங்களைத் தழுவக் கூடும்...
முடிவாக...
உங்களுக்காக கொஞ்சம் நேரத்தை செலவிடுங்கள்... உங்களுக்கு சொந்தமாக எந்த சொத்துக்களும் இல்லை. மாறாக சொத்து பத்திரத்தில் தற்காலிகமாக சில காலம் உங்கள் பெயர் இருக்கிறது... அவ்வளவு தான்...
இது என் சொத்து என்று சொல்லும் போது இறைவன் நம்மைப் பார்த்து நகைக்கிறான்...
ஒரு மனிதனின் கார் மற்றும் உடைகளைப் பார்த்து அவர்களை எடை போடாதீர்கள்... பெரிய பெரிய கணிதமேதைகளும் விஞ்ஞானிகளும் வாழ்நாள் முழுக்க சைக்கிள் அல்லது ஸ்கூட்டரில் தான் சென்றார்கள்...
வசதியாக இருப்பது பாவமல்ல... ஆனால் பணத்தால் மட்டுமே வசதியாக இருப்பது பாவம் தான்...
உங்கள் வாழ்க்கையை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்... இல்லையெனில் வாழ்க்கை உங்களைக் கட்டுப்படுத்தி விடும்...
வாழ்வின் இறுதியில் நமக்குத் தேவைப்படுவது போதுமென்ற மனமும், ஆத்மதிருப்தியும் மன அமைதியும் தான்...
ஒரு சோகமான விஷயம் என்னவென்றால் இவற்றைப் பணத்தால் வாங்கிவிட முடியாது... 🙏
சீர்காழியில் இருந்து சுமார் 10 கி.மி. தொலை விலுள்ள தேவாரத்தலம், கீழைத்திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேசுரர் கோவில். இறைவன் திருநாமம் ஆரண்யேசுரர். வனத்தின் மத்தியில் இருந்தவர் என்பதால் இவர் 'ஆரண்யேசுரர்' என்று அழைக்கப் படுகிறார்.
1
விருத்தாசுரன் என்ற அசுரன், தேவர்களை துன்புறுத்தி வந்தான். அவனிடம் இருந்து தங்களை காக்கும்படி தேவர்கள் இந்திரனிடம் முறை யிட்டனர். எனவே, விருத்தாசுரனுடன் போரிட்ட இந்திரன், அவனை சம்காரம் செய்தான். இதனால் அவனுக்கு தோஷம் உண்டானது.
2
தேவலோகத் தலைவன் பதவியும் பறிபோனது. தனக்கு மீண்டும் தேவ தலைவன் பதவி கிடைக்க தேவகுருவிடம் ஆலோசனை செய்தான். அவர், பூலோகத்தில் சிவனை வணங்கிட விமோசனம் கிடைக்கப் பெறும் என்றார். அதன்படி பூலோகத்தில் பல தலங் களுக்குச் சென்ற இந்திரன், இத்தலம் வந்தான்.
'சுயநலம்' ஒரு தொற்று வியாதி என்றும் கூறலாம். சுயநலவாதிகளோடு உறவு கொள்பவர்கள் தம்மை அறியாமலே அக்குணம் தம்மை பிடிக்க விட்டு விடுவார்கள்.
சுயநலம் மனதை இருட்டாக்கி விடும். சுற்றி இருப்பவர்களை வெறுக்க வைத்து விடும். சுயநலம் நல்ல குணம் அல்ல.
சுயநலம் கொண்டவர்களிடம் தன்னை விட மற்றவர்கள் முன்னுக்கு வந்து விடுவார்களோ என்ற பரபரப்பு இருந்து கொண்டே இருக்கும். அதனால் அவர்கள் நிம்மதியை இழந்துத் தவிப்பார்கள்.
இன்று பெரும்பாலானவர்கள் அதிகப்படியான
மனஅழுத்தத்தால் அவதிப்படுகிறார்கள். அதற்கு சுயநலமும் ஒரு காரணம்.
சுயநலம் அதிகம் கொண்டவர்கள் தன் வளர்ச்சியைப் பற்றி சிந்திக்க மாட்டார்கள். தன்னைச் சுற்றி இருப்பவர்களின் வளர்ச்சியைப் பற்றி பொறாமைபட்டுக் கொண்டு அவர்களுக்கு எப்படி எல்லாம் நெருக்கடி கொடுக்க முடியும் என்று தான் சிந்தித்துக் கொண்டு இருப்பார்கள்.
இந்திய சுதந்திரத்துக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு வீரத் தியாகியை நமக்குத் தெரியவில்லை என்பது மன்னிக்க முடியாத தவறு. இதற்கு சரித்திரத்தை தன் போக்குக்கு இழுத்துச் சென்ற காங்கிரஸே காரணம்.
சுதந்திரம் என்ற வார்த்தையை சொன்னவுடன் தாத்தா காந்தி, மாமா நேரு போன்ற தலைவர்களை மட்டும் தேசியமயமாக்கிவிட்டு, மற்றவர்களை அந்தந்த மாநிலங்களுக்குச் சொந்தமாக்கிய காங்கிரஸின் பாடத் திட்டமே இதற்குக் காரணம்.
அடுத்தவரை குறை சொல்லி பிரயோஜனமில்லை. வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லாத நமக்கும் அதில் பங்கு உண்டு.
எந்த ஒரு வேலையைச் செய்தாலும் அதற்கான பலன் நமக்குக் கிடைக்க வேண்டும். இதுதான் நம் ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பாக இருக்கும்.
விவசாயி ஒருவர் புதிதாக ஒரு ஆலமரக்கன்றை தனது தோட்டத்தில் நட்டு வைத்தார். அது காற்றில் அசைந்து ஒடிந்து விடாமல் இருக்க அருகில் ஒரு குச்சியை நட்டு வைத்து செடியை அதில் கட்டி வைத்தார்.
பிறகு அதை சுற்றி வலையால் வேலி அமைத்தார். நேரத்துக்கு நேரம் தண்ணீரும் உரமும் போடப்பட்டது.
இதைப் பார்த்த எதிரே இருந்த காட்டுச்செடி ஒன்று, " இப்படி ஒரு வாழ்க்கை தேவையா..? எங்களை பார் நாங்கள் எவ்வளவு சுதந்திரமாக இருக்கிறோம். ஆனால் நீயோ, குச்சியால் கட்டப்பட்டு கூண்டுக்குள் அடைப்பட்டு கிடக்கிறாய்"
என ஏளனம் செய்தது.
கோவையிலிருந்து சுமார் 14 கி.மீ தொலைவில் ஒத்தக்கால் மண்டபம் என்ற ஊர் அமைந்துள்ளது. 'கோவில்களின் கிராமம்' என்றழைக்கப்படும் பகுதி இது.திரும்பிய திசையெங்கும் ஆன்மிக மணம் வீசும் வகையில் அற்புதத் தலங்கள் பல உள்ளன.
2
வைணவப் பெரியவரான ராமானுஜர் இத்திருத்தலத்திற்கு வந்து,துறவறம் பூண்டு இந்த பெருமாளின் அன்பையும் அருளையும் பெற்றார் என்கிறது தல வரலாறு.