*அவன் சிறந்த போர் வீரன். அவனுடைய வாள் வீச்சிற்கு அந்த நாடே ஈடு கொடுக்க முடியாது. அந்த அளவிற்குச் சிறந்த வீரன்.*
*அவன் ஒருமுறை அரண்மனையில் வாள் பயிற்சி செய்துக் கொண்டிருக்கையில், ஒரு எலி குறுக்கே ஓடியது.*
*உடனே அதன் மீது வாளை வீசினான்.*
*அந்த எலி தப்பித்துச் சென்றது.*
*பிறகு மீண்டும் அதனைத் துரத்தி வாளை வீசினான், மீண்டும் தப்பித்து வளைக்குள் புகுந்துகொண்டது.*
*உடனே மனம் உடைந்து போனான்.*
*அப்போது வந்த அரசர், ஏன் சோகமாக இருக்கிறாய்? என கேட்டார்.*
*அதற்கு இளவரசன், இந்த நாடே எனது வாள் வீசும் திறமைக்கு ஈடு கொடுக்க முடியாதபோது, இந்த சாதாரண எலியை என்னால் கொல்ல முடியவில்லையே! என விவரித்தான் இளவரசன்.*
*மன்னர் சிரித்துவிட்டு எலியைக் கொள்ள வாள் பயிற்சி எதற்கு? அரண்மனைப் பூனையைக் கொண்டு வந்தாலே போதுமே! என்றார்.*
*உடனே அரண்மனை பூனை வரவழைக்கப்பட்டது.*
*அந்தப் பூனையும் எலியை வேட்டையாட முயன்றது.*
*ஆனாலும் அந்த எலி எளிதாக அதனிடம் இருந்து தப்பித்து, தப்பித்துச் சென்றது.*
*மீண்டும் இளவரசருடன் அரசரும் சோகமானார். அப்போது மந்திரி வந்தார். என்ன அரசே.. நீங்களும் இளவரசரும் சோகமாக இருக்கிறீர்கள்? என்றார்.*
*அதற்கு அரசர் நடந்ததை கூறினார். நம் நாட்டு பூனைகள் எதற்கு உதவாது. ஜப்பான், பாரசீகம் போன்ற நாடுகளில் உள்ள பூனைகள் புலி உயரம் உள்ளன.*
*எனவே அங்கிருந்து வரவழைப்போம் என்றார் மந்திரி. அதேபோல் அந்நாடுகளில் இருந்து பூனைகள் வரவழைக்கப்பட்டன.*
*ஆனால் அவற்றிடமிருந்தும் அந்த எலி சாமர்த்தியமாகத் தப்பித்துச் சென்று வளைக்குள் புகுந்தது.*
*எலிக்கு இவ்வளவு திறமையா! என அனைவரும் வியந்து கொண்டிருக்கையில்,
அங்கே இருந்த அரண்மனைக் காவலன் இளவரசே! இந்த எலிக்குப் போய் எதுக்கு இவ்வளவு சிரமம் படனும் மகாராஜா.*
*எங்க வீட்டுப் பூனையே போதும் என்றான்.மன்னருக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. என்ன.. அரண்மனையில் வளர்ந்து வரும் பூனையால் முடியாதது சாதாரண பூனையால் முடியுமா? என்றார்.*
*உடனே இளவரசர் மறித்து சரி... எடுத்து வா உனது பூனையை என்றார். வீட்டிற்குச் சென்று தனது பூனையைக் கொண்டு வந்தான்.அந்தப் பூனை அந்த எலியை ஒரே தாவலில் லபக் என்று கவ்விச்சென்றது.*
*இதனைப் பார்த்த இளவரசருக்குப் பெருத்த ஆச்சரியம். என்ன இது அதியசம்!*
*ஜப்பான், பாரசீக அரண்மனையில் வளர்ந்த பூனைகளிடம் இல்லாத திறமை எப்படி இந்தச் சாதாரண பூனைக்கு.ஏற்பட்டது? எப்படி சாத்தியம்? என்ன பயிற்சி கொடுத்துப் பூனையை வளர்க்கிறீர்கள்? என்று வியந்தவாறே கேள்விகளை கேட்க தொடங்கினார்.*
*அதற்குக் காவலாளி பெரிதாக என் பூனைக்குத் திறமையோ, பயிற்சிகளோ எதுவும் இல்லை இளவரசே...என் பூனைக்கு ரொம்பப் பசி அவ்வளவுதான் என்றான். உடனே இளவரசுருக்கு சுரீர் என்றது.*
*அரண்மனைக்குள் பூனைகள் நன்கு தின்று கொழுத்திருப்பதால் அவற்றுக்கு பசி என்பதே என்னவென்று தெரிய வாய்பில்லை, எனவே அவற்றால் எலியை எப்படி பிடிக்கமுடியும்?*
*எந்த ஒரு வேலையையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்க வேண்டுமென்றால், முதலில் அதனைப் பற்றிய பசி அல்லது தேவை இருக்க வேண்டும்.*
*அப்போதுதான் அந்தக் காரியத்தை கச்சிதமாக செய்து முடிக்க முடியும்.*
*கோட்டயம் மாவட்டம் கேரள மாநிலம் மள்ளியூர் அருள்மிகு மகா கணபதி ஆலயம்*
*மூலவர்:விநாயகர்*
*பழமை:500 வருடங்களுக்குள்*
மள்ளியூர்*
கோட்டயம்*
கேரளா*
*திருவிழா*
*விநாயகர் சதுர்த்தி, கோகுலாஷ்டமி*
1
*தல சிறப்பு*
*கர்ப்பக்கிரகத்தில் முழு முதற்கடவுளான கணபதியின் மடியில், காக்கும்கடவுளான கிருஷ்ணன் அமர்ந்திருப்பது சிறப்பு.*
2
*பொது தகவல்*
*கோயில் சுற்றுப்பகுதியில் சாஸ்தா, மகாவிஷ்ணு, துர்க்கை, அந்தி மகா காவலன், யக்ஷி, நாகர் சன்னதிகள் உள்ளன. கேரள மாநிலம் அருகே வேறெங்கும் இல்லாத விசேஷம் இக்கோயிலில் உள்ளது.
* யுகங்களாக புராணப் பெருமை கொண்டது கும்பகோணம். அதில் ரத்னமாக ஒளிர்கிறது ராமஸ்வாமி திருக்கோயில்.
1
* புராணத்திற்கு இணையாக நானூறு ஆண்டுகட்கு முன்பு சரித்திரப் பின்னணியில் பெரும் போர்ச் சூழலின் இறுதியில் எழுப்பப்பட்டது. ராஜபக்தியில் விளைந்த ஞானப்பிரானின் கருணை கருவூலமே இந்த ராமஸ்வாமி திருக்கோயில்.
2
* கும்பகோண நகரத்தின் மையமாக அமைந்துள்ளது ஸ்ரீராமஸ்வாமி கோயில். ராஜகோபுரம் நெடிதுயர்ந்து ராமநாம முத்திரையுடன் வரவேற்கிறது.
* மகாமண்டபத்திற்குள் நுழைந்தவுடன் மாபெரும் சிற்பக்காடுகளுக்குள், எழில் சூழ் சிற்பச் சோலைகளுக்குள் நுழைகிறோம்.
ஓர் விசித்திர அனுபவம் பற்றி திருமலை திருப்பதியின் பிரதான அர்ச்சகர் டாக்டர் ரமண தீட்சிதர் சொல்வதை பார்ப்போம்
“சுவாமியை தரிசனம் செய்ய கருவறைக்குள் சென்றதும் நம் வேண்டுதல்கள் மறந்து போய்விடும், அடுத்து, சுவாமியை தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்ததும்,
சுவாமியை நாம் தரிசனம் செய்தபோது இருந்து அலங்காரம், சுவாமியின் கோலம் எல்லாம் மறந்துபோகும் இது ஏன்..எல்லோருக்கும் இப்படி ஓர் விசித்திர அனுபவம் ஏற்படுவதுண்டு.
அறிவுக்கு அப்பாற்பட்ட விஷயங்களில் இதுவும் ஒன்று. இதற்கு காரணத்தை இன்று நாம் ஆராய்வோம்.