சிவாஸ்தானத்தில் (தேனம்பாக்கத்தில்) பெரியவா தங்கியிருந்தபோது, காட்டுப்புத்தூரை சேர்ந்த ஒரு பெரிய பணக்காரர் தரிசனம் பண்ண வந்தார். அவர் கொண்டு வந்த காணிக்கை இரண்டு
ரஸ்தாளி வாழைப்பழத் தார்கள்.
ஒவ்வொன்றிலும் 10, 12 சீப்புகள் இருக்கும். ஒரு தாரையே ரெண்டு பேர் சுமக்க வேண்டியிருந்தது. அத்தனை பெரிய பழங்கள்! சீப்பு கனம் என்பதால் மட்டும் இல்லை, பெரியவாளுக்கு சமர்ப்பிக்கும் போது, பழங்கள் நசுங்காமல் இருக்கவே ரெண்டு பேர் தூக்கிக் கொண்டு வந்தனர்.
அன்போடு தன்னைக் காண வந்த பக்தருக்கு பிரசாதம் கொடுத்து அனுப்பிவிட்டு, சிஷ்யரைக் கூப்பிட்டார்.
"டேய்! அந்த ரெண்டு தார்களையும் ஜாக்ரதையா எடுத்து உள்ள வை! பழத்த பாத்தியோ! எவ்வளவு மொழு மொழுன்னு இருக்கு! ஒரு பழம் சாப்ட்டாலே போறும் போலருக்கு. சாப்பாடே தேவையில்லே! நாலு நாளைக்கு
ஒங்களுக்கெல்லாம் கவலையே இல்லே!"
ம்ஹும்! இது வெறும் சிஷ்யாளோட கற்பனை. ஏனென்றால் பெரியவா இந்த மாதிரி உத்தரவிடவில்லை. மாறாக,
"இந்த ரெண்டு தாரையும் கொண்டு போய், வாசல்ல ஒரு பெரிய புளியமரம் இருக்கோல்லியோ? அதோட கெளைல கைக்கு எட்டறாப்ல கட்டி தொங்க விடுங்கோடா" என்று சொன்னார்.
அநியாயம்!
அக்கிரமம். பெரியவா இப்பிடி எல்லாம் எங்களுக்கு அநீதி இழைக்கக் கூடாது! நாங்கள் இதை பலமாக கண்டிக்கிறோம். என்றெல்லாம் வாயால் சொல்லவே முடியாது என்பது மட்டுமில்லை, மனசால் கூட நினைக்க முடியாது. சிவாஸ்தானம்-தேனம்பாக்கம் பகுதியை சேர்ந்த மக்கள் வறுமைக் கோட்டுக்கும் கீழே வாடுபவர்கள்.
பொறுப்பில்லாத ஆண் 'குடி' மக்கள் நன்றாக குடித்து விட்டு, பசியோடு வீட்டுக்கு போய் அங்குள்ள பெண்கள், குழந்தைகளை அடித்து நொறுக்குவார்கள். இது அன்றாடம் வாடிக்கையாக நடப்பது! நம்முடைய கருணைக்கடலுக்கு இது தெரியாதா? ஏழை பங்காளன் இல்லையா? வாழைத் தார் கட்டின அன்று இரவு அவ்வழியாக குடித்து
விட்டு வீட்டுக்கு போனவர்கள், வாழைத் தாரிலிருந்து பழத்தை பிய்த்து சாப்பிட்டுவிட்டு போனார்கள். பெரியவா 'ப்ளான்' படி, பசி வெகுவாக அடங்கியதால், வீட்டில் உள்ள பெண்களும், குழந்தைகளும் அடியிலிருந்து தப்பித்தனர். மறுநாள், நிரந்தர உத்தரவு வந்தது. “மடத்துக்கு வர்றவா குடுக்கற பழத்தையெல்லாம்
புளியமரத்ல தொங்க விடுங்கோ”அதிலிருந்து புளிய மரத்தில் தினமும் வாழைப்பழம்! சுமார் 15 நாட்களுக்குப் பின், அந்த கிராமத்தை சேர்ந்த பெரியவர் ஒருவர் வந்தார். “சாமி, இப்போ ரொம்ப ஆளுங்க திருந்திட்டாங்க. 'தண்ணி' போடறதையே விட்டுட்டங்க. குடிசைல பொம்பளைங்க, குழந்தைங்க எல்லாம் இப்போ சந்தோஷமா
இருக்காங்க” என்று வணங்கினார்.
மாற்றத்துக்கு காரணம் வாழைப்பழமா? இல்லை. ஞானப்பழமாக பூமியில் உதித்த பெரியவாளின் பெரும் கருணை மட்டுமே இது!
#கோட்டயம்_மள்ளியூர்_ஸ்ரீமகாகணபதி_ஆலயம்
மூலவர்: விநாயகர்
பழமை: 500 வருடங்களுக்குள்
ஊர்: மள்ளியூர்
மாவட்டம்: கோட்டயம்
மாநிலம்: கேரளா
திருவிழா: விநாயகர் சதுர்த்தி, கோகுலாஷ்டமி
இக்கோவிலில் கர்ப்பக்கிரகத்தில் கணபதியின் மடியில், கிருஷ்ண பகவான் அமர்ந்திருப்பது சிறப்பு.
கோயில் சுற்றுப்
பகுதியில் சாஸ்தா, மகாவிஷ்ணு, துர்க்கை, அந்தி மகா காவலன், யக்ஷி, நாகர் சன்னதிகள் உள்ளன. தோஷத்திலிருந்து விடுபடவும், நோயிலிருந்து விடுபடவும் மக்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கின்றனர். திருமணத் தடை நீங்குவதற்காக செவ்வாய், வெள்ளி கிழமைகளில் செய்யப்படும் #பழமாலை மிகவும் சக்தி
வாய்ந்தது. குழந்தை பாக்கியத்திற்காக பால் பாயாசம் படைக்கப்படுகிறது. பித்ரு கடன் செய்பவர்கள் இங்கு #சதுர்த்தியூட்டு எனப்படும் வழிபாடு செய்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியவர்கள், தாங்கள் விரும்பிய பொருட்களை காணிக்கையாக செலுத்துகிறார்கள். இசை நாயகன் கிருஷ்ணனை மகிழ்விக்கும் நிகழ்ச்சி
இராவணன் மகன் இந்திரஜித்கும் இலட்சுமணனுக்கும் இடையே நடந்த போரில், இந்திரஜித் ஏவிய அஸ்திரத்தால், இலட்சுமணன் மூர்ச்சையாகி வீழ்ந்தார். இலங்கை அரச மருத்துவர் சுசேனர், இலட்சுமணனை குணப்படுத்த இமயமலையில் வளரும் #சஞ்சீவினி
மூலிகை மருந்துச் செடிகளை பறித்து வர அறிவுறுத்தினார். சஞ்சீவினி மூலிகை மருந்தினை இமயமலையில் இருந்து கொண்டு வருவதற்காக பெரும் பலவானாகிய அனுமன் விரைந்து சென்றார். இதை அறிந்த இராவணன் அனுமனுக்கு பல்வேறு தடைகளை ஏற்படுத்த, அவற்றை எல்லாம் கடந்து அனுமன் சஞ்சீவினி மலையை அடைந்தார். அங்கு
அனுமனைக் கொல்ல காலநேமியை இந்திரஜித் அனுப்பி வைத்தான். காலநேமி என்னும் அசுரன் மாரீசனின் மகன். அனுமன் இமயமலையின் சஞ்சீவினி மூலிகை உள்ள பகுதியை அடைந்து, சஞ்சீவினிச் செடிகளை பறிக்க முற்படுகையில், அவ்விடத்தில் போலித் துறவி வேடத்தில் வந்த காலநேமி, அனுமனை வரவேற்று, அருகில் உள்ள ஏரியில்
அளவிலா தவமலையாகிய ஸ்ரீ மஹா பெரியவாள் நினைத்தால் நடக்காத காரியம் பதினான்கு உலகிலும் இல்லை. இப்படிப்பட்ட அநுக்ரஹம் யாருக்கு கிடைக்கும் என்றால் காதலாகி கசிந்து கண்ணீர்
மல்க பெரியவாளிடம் பக்தி செய்தால் கிடைக்கும். அப்படிப்பட்ட பக்தர்களில் ஒருவர் பெங்களூரில் வசிக்கும் பாலகிருஷ்ணன். அவரது தந்தை காலம் சென்ற கந்தஸ்வாமி அய்யர், பெரியவாளுக்கு ஆத்மார்த்தமாகபல கைங்கர்யங்கள் செய்தவர். மல்லேஸ்வரம் சங்கரமடம் கட்டியது. பொதுக்கிணறு எடுத்தது முதலிய பணிகளில்
ஈடுபட்டவர். கங்கா ஸ்நானம், துங்கா பானம் என்று சொல்லியிருக்கிறது. அதாவது கங்கா ஜலத்தில் குளிப்பதும், துங்கா ஜலத்தை குடிப்பதும் விசேஷம். பெரியவாளுக்கு தவறாமல் துங்கா ஜலம் சமர்ப்பித்த பக்தர் அவர். AG's Office ல் பாலகிருஷ்ணனுக்கு உத்தியோகம் கிடைத்தது. பதவி உயர்வு பெற்று மேலே முன்னேற
#ராமநவமி_ஸ்பெஷல்
24,000 ஸ்லோகங்களை கொண்டது வால்மீகி ராமாயணம். 10569 பாடல்கள் கொண்டது கம்பராமாயணம். யாரால் படிக்க முடியும் என்று நினைப்பவர்களுக்கு 16 வார்த்தை ராமாயணம் இதோ.
"பிறந்தார் வளர்ந்தார் கற்றார் பெற்றார்
மணந்தார் சிறந்தார் துறந்தார் நெகிழ்ந்தார் இழந்தார் அலைந்தார்
ஆசை என்று உள்ளே ஒன்று மோசம் செய்யுதே
அது பூசை என்று வெளியே உன் மேல் பாசம் செய்யுதே
நாளும் உன்னை நேசிப்பதாய் போடும் வேஷமே
அது நாளுக்கு நாள் நானே எனக்கு தேடும் நாசமே
எல்லோருக்கும் நன்மை செய்தோம் என்று தோணுதே
செய்த ஒவ்வொன்றிலும் சுயநலமே என்ன,
நாணுதே
போதும் போதும் போதும் இந்த போலி நாடகம்
உந்தன் பாதம் ஒன்றே ஆக வேண்டும் எந்தன் தாரகம்
பேரும் புகழும் வேண்டாம் என்று உள்ளம் சொல்லுதே
பலர் புகழ இன்னும் புகழு என்னும் கள்ளம் வெல்லுதே
காமகோபம் வென்றோம் என்று வாயும் சொல்லுதே
உள்ளே விருப்பும் வெறுப்பும் தலைவிரித்தே ஆடிச்செல்லுதே
பசி ருசியை கடந்தோம் என்று மார் தட்டுதே
இந்தா புசி-என்றே-திநம் நாக்கும் வயிறும் காலைக் கட்டுதே
போதும் போதும் போதும் இந்த போலி நாடகம்
எந்தன் மாமுநிவன் பாதம் அல்லால் யாதும் பாதகம
சுகத்தை விட மனசு இல்லை உள்ள நிலை இது
ஆனால் ஜகத்தினையே ஜயித்ததாக சொல்லி அலையுது
நன்று செய்த நல்லவரை அன்ற
#ஸ்ரீசக்கரத்தாழ்வார் திருமாலின் ஆயுதங்களில் ஒன்றான சக்கராயுதத்தின் திருவுருவம் இவர். சுதர்சனர், திருவாழியாழ்வான், சக்கரம், திகிரி என்றும் அறியப்படுகிறார். #சுதர்சனம் என்பதற்கு நல்ல காட்சி என்று பொருள். தீயவர்களை அழிக்கும் போது மறச்சக்கரமாகவும், (வீராவேசம் கொண்ட), நல்லவர்களுக்கு
அறச்சக்கரமாகவும் (தர்மச் சக்கரம்) இருப்பது இவர் சிறப்பு. சக்கரத்தாழ்வார் அறுங்கோண சக்கரத்தின் நடுவில் இருப்பார். மூன்று கண்கள் இருக்கும்.(நெற்றிக்கண்) தலையில் அக்னி கிரீடம் தாங்கி, 16 கரங்களில் ஆயுதம் ஏந்தி காட்சியளிப்பார். ஜீவாலா கேசமும், திரிநேத்ரமும், 16 கரங்களும் 16 வித
ஆயுதங்களும் உடைய இவரை வழிபடுவதால் முப்பிறவியிலும், இப்பிறவியிலும் உண்டான பாவங்கள், மற்றவர்களால் ஏற்படும் தீங்குகள், தீவினைகள், தோஷங்களால் கெடுதிகள் யாவும் நீங்கும். அமைதியும், ஆனந்தமும் கூடிய சுகவாழ்வு அமையும். பகவானுக்கு பஞ்சாயுதங்கள் (5). ஆனால் ஸ்ரீ சுதர்சனாழ்வானுக்கு ஆயுதங்கள்