புதுகை விஸ்வா Profile picture
Mar 27 21 tweets 10 min read Twitter logo Read on Twitter
#திருடர்_மோடி என்ற காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தியின் கருத்து குஜராத் மக்களிடையே எவ்வித சர்ச்சையையும், எந்த பரபரப்பையும் ஏற்படுத்தவில்லை. உண்மையில், 'மோடி' பெயருடைய சமூகத்தினர் கூட இதனைக் கண்டு கொள்ளவில்லை. இதற்கு முக்கிய காரணம். 2004-ஆம் ஆண்டு முதல் நாங்கள் (குஜராத் மக்கள்)
நரேந்திர மோடியின் மிகவும் மோசமான அருவருப்பான மற்றும் கலாச்சாரமற்ற கருத்துக்களை கேட்டு பழகிவிட்டோம் என்பதுதான்
- தீபால் திரிவேதி,
#குஜராத்_பத்திரிகையாளர்
சமூக ஊடகங்களில் கேலி செய்வது போல் குஜராத்தியர் அனைவரும் நரேந்திர தாஸ் பக்தர்கள் அல்ல. நம்மைப் போலவே அவர்களும் போராடுகிறார்கள்
#இந்திய_ஜனநாயகம் என்பதே சிறுபான்மை குரலை புறக்கணித்து பெரும்பான்மையை நிரூபிப்பதில் தானே இருக்கிறது. அசுரப் பெரும்பான்மை பலத்தின் மூலம் கட்டவிழ்த்து விடப்பட்ட கோயபல்ஸ் தனமான பிரச்சாரத்தில் தீபால்களின் குரல் அமுங்கியது அல்லது #அமித்_ஷா போன்ற அரசியல் எடுபிடிகளால் அடக்கப்பட்டது
#குஜராத்_பத்ரிக்கையாளர்கள்
நாட்டின் பிற பகுதியினர் போலவே, 2014 முன்பு குஜராத் ஊடக துறையும் தன்னிச்சையாக தான் செயல்பட்டது. நரேந்திரா மனைவி பற்றிய உண்மைகளை வெளிக் கொண்டு வந்த ஹைமா தேஷ்பாண்டே என்றபெண் பத்திரிக்கையாளர் தான்
2009லேயே ஜசோதா பென்னை துணிச்சலுடன் பேட்டி எடுத்தவர்.
#காங்கிரஸ்_கலகக்குரல்கள்
மன்னர் பரம்பரை, வாரிசு அரசியல் என பழிக்கப்பட்டாலும், காங்கிரஸுக்குள் நிலவும் குறைந்த பட்ச ஜனநாயகம் கூட மற்ற இந்திய கட்சிகளிடம் இல்லை. அதனால் தான் கார்த்தி சிதம்பரம், அமெரிக்கை நாராயணன் போன்ற செமி சங்கி, முழு சங்கிகள் இஷ்டத்துக்கு பேச முடிகிறது
#சோனியா_அரசியல்வருகை
1968 ல் கேம்பிரிட்ஜ்ல படித்த போது ராஜீவ் காந்தியை மணந்த போது அவருக்கு தெரியாது, அடுத்த 50 ஆண்டுகள் தன் பெயர் பலவாறு கலாச்சாரம் இல்லாத கும்பலால் உருட்டப் பட போகிறது என்று.
1991ல் அன்புக் கணவர் பொட்டலமாக கட்டப்பட்டபோது இந்த நாட்டை விட்டு ஓடிவிடத்தான் எண்ணினார்
#ராஜீவ்_மரணத்திற்குபின்
கட்சிக்குள் எழுந்திருந்த அடுத்த தலைவர் சிக்கலை விட, OBC க்கு 27% இட ஒதுக்கீடு வழங்கும் மண்டல் கமிஷன் அறிக்கையை சாக்காக வைத்து, ரத யாத்திரை நடத்தி வட இந்தியாவில் ரத்த களரி உண்டாக்கி இருந்த காவிக் கும்பல், பரிசோதனையை இந்தியா முழுவதும் நடத்தத் திட்டமிட்டன
#நரசிம்மராவ்_ஆட்சி
தன் மாமியாரும் தன் கணவரும் படுகொலை செய்யப் பட்ட உடன். சோனியா தன் இரு குழந்தைகளுடன் பரம்பரையாக தனக்கு கிடைத்த சொத்துக்களுடன் தன் தாய் நாட்டிற்கோ, ஏதாவது மேலைநாட்டிற்கு குடியேறி இருக்கலாம். சாதாரண பெண்கள் செய்திருப்பார்கள்.
சொத்துக்காகவா அவர் ராஜீவை மணந்தார்?
#சோனியா_அந்நியர்
முகலாய பேரரசர்கள் ஜஹாங்கிர் ஷாசகான் உள்ளிட்டோர், இந்து தாய்களுக்கு பிறந்தவர் தான். அக்பரின் அரசியல் நடவடிக்கைகளில் ராஜா பகவான் தாஸ் தங்கை பங்களிப்பு பற்றி சரித்திரம் பேசுகிறது. கணவர நாட்டின் நிலையை கண்டு வருந்தி இங்கேயே தங்க முடிவெடுத்த போது காவிகள் சுதாரித்தனர்
#காங்கிரஸ்_தலைவி
அரசியல் நிலையாமை தொடர்ந்தது. காவி பயங்கரவாதமும் வளர்ந்தது.
1996ல் தேவகவுடா தலைமை கூட்டணி ஆட்சியும் கவிழ, பல ஆண்டுகளாக கட்சிக்குள் எழுந்த அழைப்பை தவிர்க்க முடியாத நிலையில், 1997 ல் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்க சோனியா அன்னியர் கோசம் வலுவாக பிரச்சாரம் செய்யப்பட்டது
#மன்மோகன்சிங்_ஆட்சி
வாஜ்பாயின் India Shines வெத்து வேட்டு சல்லித்தனமான விளம்பரங்களால் வெறுத்துப்போன இந்தியா மீண்டும் காங்கிரசுக்கு 2004ல் வாய்ப்பு வழங்க மீண்டும் கட்சிக்குள் சோனியா அன்னியர் கோசம் முடுக்கி விடப்பட மன்மோகன் சிங்கை பிரதமர் ஆக்கி காங்கிரஸ் தலைவியாக ஒதுங்கிக் கொண்டார்
#அரசியலில்_ராகுல்காந்தி
அமெரிக்கா சென்று துணை ஜனாதிபதி ஆன கமலஹாரிஸ். பிரிட்டனின் பிரதமரான ரிஷி சுனக். அவர்களை நம்மவா என தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய கும்பல் தான், 55 ஆண்டுகளாக இங்கு வாழும் சோனியாவை அன்னியர் என்று இன்னமும் பிரச்சாரம் செய்கிறது. 2007 ல் ராகுல் குதிக்கிறார்
#காந்திகுடும்பம்_தலையீடு
மன்மோகனை மௌனச்சாமியார் என்றது பிஜேபி. சேலை அனுப்பி அசிங்கப்படுத்தினார் சுமிருதி இராணி. காந்தி குடும்ப பொம்மை என்றது.
நரேந்திரா யாருடைய பொம்மை என்று யாரும் சொல்லாமலே உலகம் காண்கிறது. காந்திகளின் தலையீட்டில் தான் இதுவரை இல்லாத உயரங்களை இந்தியா எட்டியது
#இல்லாத_2gஊழல்
மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி அளிப்பு திட்டம்
தகவல் பெறும் உரிமைச் சட்டம்
கல்வி பெறும் உரிமைச் சட்டம்
போன்ற புரட்சிகளை இந்தியா நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது, குஜராத்தில் போட்டோஷாப்பில் இல்லாத புரட்சி உருவாகி கொண்டிருந்தது. அதை கவனிக்க கணிக்க காங்கிரஸ் தவறி விட்டது
#காங்கிரசின்_மாபெரும்தவறு
சொராபுதீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கில் அந்த நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.
அதற்கு முன்பும் அவர் மேல் பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. தன் முதலாளிக்காக இளம் பெண்களை வேவு பார்த்தது அதில் ஒன்று. அவரை கைது செய்த சிபிஐ பின்னர் விடுவித்தது
#ஃபாசிசஆட்சி_தொடக்கம்
அந்த நபர் அமித்ஷா, அப்போது குஜராத் உள்துறை அமைச்சர். இளம் பெண்களை வேவு பார்த்தது அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திராவுக்கு.
ஒரு போலி காந்தியவாதியின் உண்ணா விரத நாடகத்தை
தொடர்ந்து நிகழ்ந்தது ஒன்பது ஆண்டு அறிவிக்கப்படாத கொடுங்கோல் ஆட்சியின் இருண்ட பக்கங்கள்
#ராகுலின்_பெருந்தன்மை
"என் தாயை பார் டான்சர் என்று பழித்தாலும், என் உயிரே போனாலும் மோடி ஜி தாயார் குறித்தோ அவர் குடும்பம் குறித்தோ ஒரு வார்த்தை என் வாயிலிருந்து தவறாக வராது"
வயதுக்கு மீறிய முதிர்ச்சியுடன் அதே நேரம் தன் கொள்ளு தாத்தா நேரு போல குழந்தைத்தனம் கொண்ட அந்த இளைஞனா பப்பு?
#கார்த்திக்குகளுக்கு
அன்று உங்கள் தந்தை சக்தி வாய்ந்த உள்துறை அமைச்சர்.
மெத்த படித்த மேதாவி. மன்மோகனின் நிழலாக இருந்தவர்
அவர் தன் கடமையை சரியாக செய்யாததன் பலன் படிப்பறிவோ மனிதநேயமோ இல்லாத ஒரு மூன்றாம் தர அரசியல்வாதியால் 27 மணி நேரம் சிபிஐ காவலில் வைக்கப்பட்டார்
#வரலாற்று_தேவை
நாட்டுக்கு சேவை செய்ய ராணுவத்தில் தான் சேர வேண்டும் என்பது இல்லை. சங்கிகளை எதிர்த்துப் பேசினாலே போதும். #தீபாலித்ரிபாதி மற்றும் #ஹைமாதேஷ்பாண்டே காட்டிய துணிச்சலில் 1% காட்டுங்கள் கார்த்தியே, இல்லாவிட்டால் காங்கிரஸ்ல இருந்து ராகுலை நாங்கள் காப்பாற்ற நேரிடும்
#மேல்தகவலுக்கு
குஜராத் போலி என்கவுண்டர், Stalking உள்ளிட்ட மறந்து போன /மறைக்கப்பட்ட விவரங்கள் @accused_1 ஐடியில் தொடராக வருகிறது படித்து, பகிருங்கள். ராகுல் இதனை எல்லாம் பேச மாட்டார்.
ஆனால் நாம் பேசுவோம்

@accused_1 #உள்ளடி_வேலை
"மோடி" என்பது சாதிப் பெயர் என தெரிந்து விட்டதால்
இனி ஒன்றியபிரதமரை நரேந்திரன் தாமோதர் தாஸ்
என்று வழங்க முடிவு செய்து கட்டுரை முழுவதும் நரேந்திரா என்றே குறிப்பிட்டுள்ளேன்
🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with புதுகை விஸ்வா

புதுகை விஸ்வா Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @VIS1976AL

Mar 28
#சென்னை_சம்பவம்
ரெண்டு நாளாக ராகுல் அவர்களின் தகுதி நீக்க செய்தியில் மனம் உறைந்து இருந்ததால், இந்த டெல்லி சம்பவம் பற்றி விரிவாக அறிந்து கொள்ள முடியவில்லை நேற்று @perungkizhavan இந்த கஜக்கஸ்தான் கிராண்ட் மாஸ்டர் விலகல் கடிதத்தை பதிந்த போது எனக்கு இன்னொரு சம்பவம் நினைவு வந்தது Image
#பழைய_கதை
ஐந்து ஆண்டுகள் முன்பு நடந்ததா முகப்பு புத்தகத்தில் சுற்றியது . மீண்டும் பகிர காரணம் மற்ற இந்திய நகரங்கள் போல் அல்லாது சென்னை தன் தனித்துவத்தை பல விதங்களிலும் காட்டி நிற்கின்றது. படிப்புக்கு அரசு மட்டுமல்ல சாதாரண மனிதர்களும் எப்படி துணையாக நிற்கிறார்கள் என்று காட்டுகிறது
#கற்கைநன்றே
காலை 6.30 மணியளவில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், கிராமத்தில் இருந்து வந்திருக்கும் ஒரு தாயும் மகளும், அண்ணா அரங்கத்திற்கு வழிகேட்டபடி நின்றுள்ளனர். 8.30 மணிக்கு துவங்க இருக்கும் பி.எஸ்.சி அக்ரிகல்ச்சர் படிப்பிற்கான கவுன்சிலிங்கில்கலந்துகொள்வதற்காக, திருச்சிக்கு Image
Read 18 tweets
Mar 26
#ராகுலைவிரும்பும்_தமிழ்நாடு

ராகுலுக்குள் கொஞ்சூண்டு #கலைஞர் இருக்கிறார்

நரேந்திராவுக்கு பதிலடி கொடுக்க சரியான ஆள் என்று தமிழ்நாடு 2018லயே உணர்த்திருந்தது.

காங்கிரஸ் உள்ளேயும் வெளியேயும் ராகுல் குறித்து பரப்பப்படும் வதந்திகளுக்கு மூர்க்கத்தனமாக தமிழ்நாடு பதிலடி கொடுத்தது
#காங்கிரஸ்_மென்சங்கிகள்
ஜோதிராதித்யா சிந்தியா, குலாம் நபி ஆசாத் போன்ற பழம் தின்னு கொட்டை போட்ட சுயநலவாதிகள் ராகுலை எதிர்த்து வெளியேறிய போது அவர்கள் தமிழ்நாட்டுக்கே துரோகம் செய்தது போல் தமிழர்கள் சமூக வெளியில் காறி துப்பினார்கள். கார்த்தி சிதம்பரம் இப்ப வரை troll செய்யப் படுகிறார்
#ராகுலுடன்_உடன்பிறப்புகள்
தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுலுக்கு ஆதரவாக தமிழ்நாடு காங்கிரஸ் அதிரடி நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கோபத்தில் திமுக உடன் பிறப்புகள் சமூக வெளியில் பகிர்ந்த மீம்கள், கோபப் பதிவுகள் வைரலாகின. பழைய கசப்புணர்வுகளை மறந்து மூத்த திமுகவினரே ராகுலுடன் நின்றனர்
Read 16 tweets
Mar 25
#BlackDayForIndianDemocracy
1991 ம் ஆண்டு, ஹார்வர்டில் வகுப்புக்குச் செல்ல, தயாராகி கொண்டிருக்கிறார் அந்த இளைஞன். அறைக் கதவு தட்டப்படுகிறது. இரு FBI அதிகாரிகள், அவருடைய HOD மற்றும் இந்திய தூதரக அதிகாரி ஒருவரும் நிற்கிறார்கள். இளைஞன் " என் தந்தை மரணமடைந்து விட்டாரா?" என்கிறார்
#மரணத்தின்_நிழலில்
சாதாரண இந்திய இளைஞனுக்கு அமைய வேண்டிய பள்ளி கல்லூரி வாழ்க்கை ராகுலுக்கு கிட்டியதே இல்லை. அந்தக் குடும்பத்தவர்கள் அரசியலில் காலடி எடுத்து வைத்த அடுத்த நொடியில் இருந்து மரணமும் அருவருக்கத்தக்க விமர்சனங்களும் துரத்த தொடங்கும். அதற்காக யாரும் பின்வாங்கியது இல்லை
#திருடப்பட்ட_குழந்தைப்பருவம்
1980ல் தில்லி செயிண்ட் கொலம்பஸ் பள்ளியில் படித்த போது அவர் பாட்டி இந்திய பிரதமர். எந்நேரமும் பாதுகாப்பு படை சூழ பள்ளியில் இருந்ததால் ஆசிரியர்களும் சக மாணவர்களும் நெருங்க அஞ்சினர். பெருந்தலைகள் வாரிசுகள் மட்டுமே அவருடன் பழக அனுமதிக்கப் பட்டனர்
Read 17 tweets
Mar 24
#BlackDayForIndianDemocracy

RSS கும்பல் எப்படி செயல்படுகிறது?

16.04.19 ராகுல் காந்திக்கு எதிராக சூரத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது

24.06.21 சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி ஆஜராகிறார்

07.03.22 வழக்கு போட்டவரே குஜராத் உயர்நீதிமன்றம் சென்று, வழக்கிற்கு தடை வாங்குகிறார்
ஓராண்டு அமைதி

07.02.23 அதானியும் மோடியும் இருக்கும் புகப்படத்தை காட்டி பாராளுமன்றத்தில் மோடியை நாக்கை புடுங்குவது போல் ராகுல் காந்தி கேள்வி கேட்கிறார்.

16.02.23 வழக்கு போட்டவர் திடீரென்று குஜராத் உயர்நீதிமன்றம் சென்று தான் பெற்ற தடை உத்தரவை திரும்ப பெறுகிறார்.
17.03.23 வாதங்களை தொடர நீதிபதி அனுமதிக்கிறார். தீர்ப்புக்கும் உடனே தேதி அறிவிக்கிறார்.

23.03.23 ராகுல் காந்திக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்படுகிறது.
🤪🤪🤪🤪🤪🤪🤪
Read 4 tweets
Mar 23
#வெல்லமுடியாதவரா_எம்ஜிஆர்
கலைஞரை இழிவுபடுத்த எதிரிகள் அடிக்கடி சொல்வது
பத்து வருஷம் கூப்பில் வைத்தோம் இல்லை.
தமிழ்நாட்டில் தேர்தல் முடிவுகள் பெரும்பாலும் அமையும் கூட்டணியை பொறுத்தே மாறி இருக்கின்றன. ஆனால் இதை எம்ஜிஆர்/ஜெயாவின் தனிப்பட்ட வெற்றியாக கட்டமைத்தது பார்ப்பனிய ஊடகம் Image
#ஜெயலலிதா_கூட்டணி
2006 சட்டமன்றத் தேர்தலில் திட்டமிட்டு இறக்கி விடப்பட்ட விஜயகாந்த் மூன்றாவதாக வந்து திமுகவின் ஓட்டுகளை பிரித்திருந்தார். 2011 இல் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க போட்டியிட்ட 41 தொகுதிகளில் 29 வென்று சட்டமன்றத்தில் நுழைந்தது
விதைத்தது வீண் போகவில்லை Image
#சென்னை_வெள்ளம்
2015 சென்னை வெள்ளம் மற்றும் அதனைத் தொடர்ந்த வெள்ள " இழப்பீடு" ஜெயாவுக்கு நல்ல முறையில் பலன் கொடுத்தது. தேர்தல் கமிஷன் முடிவு அறிவிக்கப்படும் முன்பே காலை பத்தரை மணிக்கு அதனை விட அதிக அதிகாரம் கொண்ட ஒரு வரிடம் இருந்து அதிமுகவின் வெற்றி அறிவிக்கப்பட்டது. அவர் மோடி Image
Read 9 tweets
Mar 22
#கச்சத்தீவும்_கலைஞரும்
தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படும் போதெல்லாம் குடி தேஷ்களும், அவர்களின் உரிமையாளர்களும் கூலாக பரப்புவது :
"கருணாநிதி மட்டும் கச்சத்தீவை..
அவ்வளவு ஏன் கடலையே காணாத காலை மட்டுமே கண்டவன் கூட எங்க இரும்பு லேடி மட்டும் இருந்திருந்தா.
#யாருக்குசொந்தம்
இந்திய நில அளவைத் துறை உயர் அலுவலர் கர்னல் வாக்கர், உதவியாளர் மேஜர் பிரான்ஃபீல்டு சென்னை மாகாணத்தில் அளவை மேற்கொண்டு, 285 ஏக்கர் 20 சென்ட் என அளந்து சர்வே எண்.1250 என குறித்து கச்சதீவு அந்தோணியார் கோயில் முன்பு கல்லில் பொரித்து நட்டனர். 1956 வரை நில அளவை
ஆவணங்களில் கச்ச தீவு ஒரு பகுதியாக இருந்தது.
1920 இல் முதன் முதலாக இலங்கை அதில் உரிமை கோரியது
இந்தியாவிலும் இலங்கையிலும் அதிகாரிகள் மட்டத்தில் நடந்த பேச்சு வார்த்தையில் அது இராமநாதபுரம் ஜமீனுக்கு சொந்தமானது என பிரிட்டிஷ் இந்திய தரப்பில் ஆதாரம் காட்ட. இலங்கை ஏற்றுக்கொண்டது
Read 20 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(