எந்த தவறைச் செய்தாலும் ஆதாரமில்லாமல் செய்வான். மாட்டிக் கொள்ள மாட்டான்.அவனுக்கு எதிராக எந்த ஆதாரங்களும், சாட்சிகளும் இது நாள்வரை இல்லை.
அதனால், ஊரில் பெரிய மனிதராக வலம் வந்து கொண்டிருந்தான். அவனுடன் சேர்ந்து ஆதாயங்களை அனுபவிக்க ஒரு கூட்டமும் இருந்தது.
"இவ்வளவு தைரியமாக உலவி வருகிறாயே! உனக்கு பயமாக இல்லையா?", என்று எல்லோரும் கேட்பார்கள்.
"நான் தவறு செய்வதை நிரூபிக்கும் ஆதாரம் இருந்தால், காண்பியுங்கள். பிறகு தண்டியுங்கள்", என்பான் திருடன்.
அந்த நாட்டு அரசனும் எதுவும் செய்ய முடியாமல், அமைதியாக இருந்தான்.
அந்த நாட்டிற்கு ஒரு சாது வந்தார். அவரிடம் திருடனை பற்றியும், அரசனின் அமைதியை பற்றியும் மக்கள் முறையிட்டனர்.
ஒலை ஒன்றை எடுத்தார் சாது. அதில் ஏதோ எழுதினார். அதை அரசனிடம் கொடுத்தனுப்பினார்.
அன்று மாலை, திருடனை விருந்திற்கு அழைத்தார் அரசர். விருந்திற்குச் சென்ற திருடன் வீடு திரும்பவில்லை. அன்று இரவே திருடன் தூக்கிலிடப்பட்டான்.
அவனுடைய ஆதரவாளர்கள் நேராக அரசனிடம் சென்றனர். திருடனை தூக்கிலிட்டதற்கான காரணத்தைக் கேட்டனர்.
அரசர் அமைதியாக பதிலளித்தார். "மக்களே! உங்கள் நண்பரை நேற்று விருந்திற்கு அழைத்தேன். அப்போது அவன் ராஜ ரகசியத்தைத் திருடி விட்டான். அதனால் அவன் தூக்கிலிடப்பட்டான்", என்றார் அரசர்.
"அப்படி என்ன பொல்லாத ரகசியம்?", என்று கேட்டார்கள் ஆதரவாளர்கள்.
"அது ராஜ ரகசியம். அதை தெரிந்து கொண்டவர்கள் யாரும் உயிருடன் இருக்க முடியாது.
நீங்கள் யாராவது தெரிந்து கொள்ள வேண்டுமா?", என்று கேட்டார் அரசர்.
அவ்வளவுதான். அனைவரும் ஓட்டம் பிடித்தனர். நடப்பவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அரசி பேசினார்.
"அரசே! அதென்ன ராஜ ரகசியம்? என்னிடமாவது சொல்லுங்கள்", என்று கேட்டார் அரசி.
சாது தனக்கு அனுப்பிய ஓலைச் சுவடியை காண்பித்தார் அரசர். அதில் பின்வரும் வரிகள் எழுதப்பட்டிருந்தது.
"நியாயத்தை கடைபிடித்து, சட்டத்தின் விதிகளையும் மேற்கோள் காட்டி பிறகு தண்டிக்க வேண்டும் என்பது நியாயத்தின் மீதும், தர்மத்தின் மீதும் நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும். அநியாயக்காரர்களுக்கு பொருந்தாது".
"அநியாயக்காரர்களுக்கு முதலில் தண்டனையைக் கொடுங்கள்.
பிறகு அதை நியாயப்படுத்தும் விதிகளைத் தேடுங்கள். தண்ணீரில் வாழும் மீன்களுக்கு தண்டனையைத் தண்ணீரிலேயே தேடுவது புத்திசாலித்தனமல்ல." என்று எழுதியிருந்தது.
*விதிமீறல்கள் மூலம் அதிகார துஷ்பிரயோகம் செய்தோரைத் தண்டித்து, நீதியை நிலைநாட்ட நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?*
"அநியாயக்காரர்களுக்கு முதலில் தண்டனையைக் கொடுங்கள்.
"உலகம் யாவையும் தாமுள வாக்கலும்..."
ஒரு கிராமத்தில் மஹாபெரியவர் முகாம். கிராமத்தில் பல
வகையான தொழில் செய்பவர்களும் - விவசாயம், பெட்டிக்கடை, துணி வெளுத்தல், காய்கறிக் கடை, டெய்லர், பால்-தயிர் வியாபாரம், தோட்ட வேலை, கூலியாட்கள் என்றுள்ளவர்கள் - தரிசனம் செய்ய வந்தார்கள்.
பெரியவருக்குக் கள்ளங்கபடமறியாத கிராமத்து மக்களிடம் ரொம்பவும் பரிவு உண்டு. அதிகமான படிப்பு குறிப்பாக சமயக்கல்வி - இல்லாவிட்டாலும், அவர்களில் பெரும்பாலனவர்கள் தர்ம வழியில் நடக்கிறார்கள் என்ற நம்பிக்கை.. அதனால் அவர்களிடம் நெருங்கிப் பேசுவார்கள்.
வேளாள வம்சத்தில் வந்த நல்ல ஜோசியர் ஒருவர் பெரியவர் தரிசனத்துக்கு வந்தார்.
வழக்கம்போல் பெரியவர், பெயர் -தொழில் விசாரித்தார்கள்.
"சாமி! நான் ஜோசியம் சொல்லிப் பிழைக்கிறேனுங்க. பரம்பரைத் தொழில். அதனால விட முடியலே. நல்ல நாள் குறிப்பது, கல்யாணத் தேதின்னு சொல்லுவேன்.
*கோட்டயம் மாவட்டம் கேரள மாநிலம் மள்ளியூர் அருள்மிகு மகா கணபதி ஆலயம்*
*மூலவர்:விநாயகர்*
*பழமை:500 வருடங்களுக்குள்*
மள்ளியூர்*
கோட்டயம்*
கேரளா*
*திருவிழா*
*விநாயகர் சதுர்த்தி, கோகுலாஷ்டமி*
1
*தல சிறப்பு*
*கர்ப்பக்கிரகத்தில் முழு முதற்கடவுளான கணபதியின் மடியில், காக்கும்கடவுளான கிருஷ்ணன் அமர்ந்திருப்பது சிறப்பு.*
2
*பொது தகவல்*
*கோயில் சுற்றுப்பகுதியில் சாஸ்தா, மகாவிஷ்ணு, துர்க்கை, அந்தி மகா காவலன், யக்ஷி, நாகர் சன்னதிகள் உள்ளன. கேரள மாநிலம் அருகே வேறெங்கும் இல்லாத விசேஷம் இக்கோயிலில் உள்ளது.
* யுகங்களாக புராணப் பெருமை கொண்டது கும்பகோணம். அதில் ரத்னமாக ஒளிர்கிறது ராமஸ்வாமி திருக்கோயில்.
1
* புராணத்திற்கு இணையாக நானூறு ஆண்டுகட்கு முன்பு சரித்திரப் பின்னணியில் பெரும் போர்ச் சூழலின் இறுதியில் எழுப்பப்பட்டது. ராஜபக்தியில் விளைந்த ஞானப்பிரானின் கருணை கருவூலமே இந்த ராமஸ்வாமி திருக்கோயில்.
2
* கும்பகோண நகரத்தின் மையமாக அமைந்துள்ளது ஸ்ரீராமஸ்வாமி கோயில். ராஜகோபுரம் நெடிதுயர்ந்து ராமநாம முத்திரையுடன் வரவேற்கிறது.
* மகாமண்டபத்திற்குள் நுழைந்தவுடன் மாபெரும் சிற்பக்காடுகளுக்குள், எழில் சூழ் சிற்பச் சோலைகளுக்குள் நுழைகிறோம்.
ஓர் விசித்திர அனுபவம் பற்றி திருமலை திருப்பதியின் பிரதான அர்ச்சகர் டாக்டர் ரமண தீட்சிதர் சொல்வதை பார்ப்போம்
“சுவாமியை தரிசனம் செய்ய கருவறைக்குள் சென்றதும் நம் வேண்டுதல்கள் மறந்து போய்விடும், அடுத்து, சுவாமியை தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்ததும்,
சுவாமியை நாம் தரிசனம் செய்தபோது இருந்து அலங்காரம், சுவாமியின் கோலம் எல்லாம் மறந்துபோகும் இது ஏன்..எல்லோருக்கும் இப்படி ஓர் விசித்திர அனுபவம் ஏற்படுவதுண்டு.
அறிவுக்கு அப்பாற்பட்ட விஷயங்களில் இதுவும் ஒன்று. இதற்கு காரணத்தை இன்று நாம் ஆராய்வோம்.