#ஸ்ரீசக்கரத்தாழ்வார் திருமாலின் ஆயுதங்களில் ஒன்றான சக்கராயுதத்தின் திருவுருவம் இவர். சுதர்சனர், திருவாழியாழ்வான், சக்கரம், திகிரி என்றும் அறியப்படுகிறார். #சுதர்சனம் என்பதற்கு நல்ல காட்சி என்று பொருள். தீயவர்களை அழிக்கும் போது மறச்சக்கரமாகவும், (வீராவேசம் கொண்ட), நல்லவர்களுக்கு
அறச்சக்கரமாகவும் (தர்மச் சக்கரம்) இருப்பது இவர் சிறப்பு. சக்கரத்தாழ்வார் அறுங்கோண சக்கரத்தின் நடுவில் இருப்பார். மூன்று கண்கள் இருக்கும்.(நெற்றிக்கண்) தலையில் அக்னி கிரீடம் தாங்கி, 16 கரங்களில் ஆயுதம் ஏந்தி காட்சியளிப்பார். ஜீவாலா கேசமும், திரிநேத்ரமும், 16 கரங்களும் 16 வித
ஆயுதங்களும் உடைய இவரை வழிபடுவதால் முப்பிறவியிலும், இப்பிறவியிலும் உண்டான பாவங்கள், மற்றவர்களால் ஏற்படும் தீங்குகள், தீவினைகள், தோஷங்களால் கெடுதிகள் யாவும் நீங்கும். அமைதியும், ஆனந்தமும் கூடிய சுகவாழ்வு அமையும். பகவானுக்கு பஞ்சாயுதங்கள் (5). ஆனால் ஸ்ரீ சுதர்சனாழ்வானுக்கு ஆயுதங்கள்
16! சக்கரம், ஈட்டி, கத்தி, கோடாரி, சதமுகாக்னி, மாவட்டி, தண்டம், சக்தி என்னும் எட்டு ஆயுதங்களை வலது கையிலும், இடது கையில், சங்கு, வில், கண்ணி, கலப்பை, உலக்கை, கதை, வஜ்ரம், சூலம் என ஏந்தியுள்ளார். ஆனி மாதம் தசமி திதியில், சித்திரை நட்சத்திரம் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் அவதாரத் திருநாள்
#ஸ்ரீசுதர்சன_ஜயந்தி உற்சவமாக கொண்டாடப் படுகிறது. திருமால் கோவில்களில் சக்கரத்தாழ்வாருக்கென தனி சந்நிதி உண்டு, சந்நிதிகள் பல திவ்ய தேசங்களிலும் உள்ளன. காஞ்சிவரதர் கோயில், திருவரங்கம், திருமோகூர், ஸ்ரீவில்லிபுத்தூர், திருக்குடந்தை உள்ளிட்ட ஆலயங்களில் தனி சந்நிதியில் சேவை
சாதிக்கிறார் சக்கரத்தாழ்வார். திருமால் தரிக்கும் 5 ஆயுதங்களிலும் #சக்கரம் என்ற ஸ்ரீசுதர்சனாழ்வார் தான் முதன்மை ஆனவர். ஆகவே இவரை #ஐவருள்_முதல்வர் என்கின்றனர் ஆன்றோர். #ஆண்டாள் திருப்பாவையில் 'சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்' என்றே பெருமாளை பாடுகிறார். இவருக்கு #ஹேதிராஜன் என்ற
திருநாமமும் உண்டு. சுவாமி தேசிகன் இவரை #சக்ர_ரூபஸ்ய_சக்ரிண என்று போற்றுகிறார். சக்கரத்துடன் இணைந்தவரே திருமால் என்பது #நம்மாழ்வார் வாக்கு. அவர் திருமாலுக்கு 'சுடராழி வெண்சங்கேந்தி வாராய்' என்று பாமாலை சூட்டுகிறார். அதாவது திருமாலுக்கு இணையானவர் என்று பொருள். பெரியாழ்வாரும்
சக்கரத்தாழ்வாரை, ‘வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு’ என்று வாழ்த்துகிறார். மேலும் ‘என்னையும் என் உடமையையும் உன் சக்கரப் பொறி ஒற்றிக்கொண்டு’ என்று குறிப்பிடுகிறார் இவர் #ராமாவதாரத்தில் பரதனாக அவதரித்து ஸ்ரீராமருக்கு சேவை செய்ததால் தான் #பரதாழ்வான் எனப்பட்டார்.
#திருமழிசையாழ்வார் இவரின் அம்சமாக அவதரித்தார். புண்டரிக வாசுதேவன் மற்றும் சீமாலி ஆகிய அரக்கர்களின் ஆணவம் அழிந்திட சக்கரத்தாழ்வாரே காரணம். மகாபாரதப் போரில் ஜெயத்ரதனை அழிக்க கிருஷ்ண பரமாத்மா சூரியனை மறைக்க சுதர்ஸனரையே பயன்படுத்தினார். சிசுபாலனை சக்கரத்தாழ்வாரைக் கொண்டே அழித்தார்
ஸ்ரீகிருஷ்ணர். கஜேந்திர மோட்சத்தில் இவரைக் கொண்டே முதலையின் கழுத்தை அறுத்து கஜேந்திரன காப்பாற்றினார் திருமால். வாமன அவதாரத்தில், சுக்ராச் சாரியாரின் கட்டளையை மீறி மகாபலி வாமனனுக்குத் தானம் கொடுக்க தாரைவார்த்த போது, சுக்ராச்சாரியார் வண்டாக வந்து கமண்டல நீர்ப்பாதையை அடைத்தார்.
அப்போது திருமால் பவித்திரத்தால் கிளற, சுக்ராச்சாரி யார் தன் கண்ணை இழந்தார். அங்கு பவித்திரமாக வந்தவர் சுதர்சனரே. நரசிம்ம அவதாரத்தில் இரணியனை வதம் செய்வதற்கு நகங்களாக இருந்தவர் சுதர்ஸனர் தான். துர்வாச முனிவரின் சாபத்தில் இருந்து விஷ்ணு பக்தனான அம்பரீசனை காப்பாற்றி துர்வாசரின்
கர்வத்தை அடக்கியது சக்கரமே. கும்பகோணம் சக்ர படித்துறையில் உள்ள சக்கர தீர்த்தத்தில் பிரம்மா அவப்ருத ஸ்னானம் செய்து யாகம் செய்தார். உடனே பாதாளத்தில் இருந்து சகக்ரம் வெளிக் கிளம்பி மேலே வந்தது. அந்த சக்கரத்தின் நடுவில் பிரம்மனுக்கு அன்று காட்சி தந்த ஸ்ரீமந்நாராயணன் நமக்கு ஸ்ரீ
சக்ரபாணியாக காட்சி தருகிறார். சுதர்ஸன பெருமாளுக்கு தனி கோவில் இங்கு மட்டுமே உள்ளது. சக்கரத்தாழ்வாரின் பின்புறம் உள்ள யோக நரசிம்மரை சுதர்சன நரசிம்மர் என்று போற்றுவர். சாளக்ராமங்களில் சுதர்சன சாளக்ராமம் மிகச் சிறந்தது. ஒரு சக்கரம் மட்டுமே உள்ள மிகப் பெரிய சாளக்ராமம் சுதர்சனமாகும்.
திருமாலின் சக்ராயுதத்தின் பூர்ண சக்தி இதற்கு உண்டு. சுதர்சனரை வழிபடச் சித்திரை நட்சத்திர தினங்கள் சிறப்பானவை. சித்திரை அவருக்குரிய நட்சத்திரம். சுவாமி தேசிகனின் சுதர்சனாஷ்டகமும், க்ஷோடசாயுத ஸ்தோத்திரமும் சொல்லி வந்தால் எளிதில் ஸ்ரீசுதர்சனரின் அருளைப் பெறலாம். திருவரங்க
சக்கரத்தாழ்வாருக்கும் அரங்கனுக்கும் தொடர்பு உண்டு. ஒருமுறை காவிரியில் அரங்கனுக்கு தெப்ப உற்சவம் நடைபெற்ற போது, காவிரியில் வேகம் அதிகரித்தது. அரங்கனை அந்த வெள்ளத்தில் இருந்து மீட்க முடியுமா என்ற பயம் ஏற்பட்டபோது, ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருந்த #கூரநாராயண_ஜீயர் சுதர்சன சதகத்தை
இயற்றி சுதர்சனரை வேண்ட, காவிரி வெள்ளம் குறைந்து அரங்கன் கரையேறினான். இந்த சுதர்சன சதக பாராயணம் பல சங்கடங்களைப் போக்கும் மாமருந்தாகும்! சுதர்சனருக்கான விசேஷமான ஆராதனைகள் #விகசை என்ற மகாமுனியால் ஏற்படுத்தபபட்டவை. பொதுவாக சக்கரம் திருமாலின் வலது கரத்தில் இடம்பெற்றிருக்கும். ஒரு சில
தலங்களில் இடம் மாறியும் காட்சி தருவதைக் காணலாம். திருக்கோவிலூரில் மூலவர் வலக்கையில் சங்கும் இடக்கையில் சக்கரமுமாக, வலக்காலால் வையகத்தை அளந்து நிற்கும் திருக்கோலத்தைத் தரிசிக்கலாம். பஞ்ச கிருஷ்ண திருத்தலங்களில் ஒன்றான திருக்கண்ணபுரத்தில் மூலவரின் வலது கரத்தில் பிரயோகிக்கும்
நிலையில் சக்கரம் காட்சி தருகிறது. சுதர்சனர் பிரத்யட்ச தெய்வம். தீவிரமாக உபாசிப்பவர்களுக்கு விரும்பியதை அளித்து காப்பாற்றுவார். திருமாலுக்கு செய்யப்படும் அனைத்து வழிபாடுகளும் சுதர்சனருக்கும் செய்வது என்பது நடைமுறையில் உள்ளது. ஸ்ரீ சக்கரத்தாழ்வாரையும், அவர் பின்புறமுள்ள
ஸ்ரீ நரசிம்மரையும் வணங்கி பிரதட்சணம் செய்தால், நான்கு வேதங்களையும், பஞ்ச பூதங்களையும் அஷ்ட லட்சுமிகளையும், எட்டு திசைகளையும் வணங்கிய பலன் கிடைக்கும். 16 வகையான பேரருளும் கிடைக்கும் என்பது முன்னோர்களின் வாக்கு. பல வைணவ ஆலயங்களில் நிகழும், பிரத்மோத்ஸவ விழாவின்போது, தினமும் காலை,
மாலையில் ஸ்ரீ சுதர்ஸனர் எழுந்தருளிய பின்பே, பெருமாள் புறப்பாடு (வீதியுலா) நடைபெறும். பிரம்மோத்ஸவம் மற்றும் பெருமாள் கடலுக்குச் சென்று தீர்த்தவாரி மேற்கொள்ளும் சமயங்களிலும் சுதர்சனருக்கு முக்கியப் பங்கு உண்டு. ஸ்ரீ அனந்தன் என்ற நாகம், கருடன், ஸ்ரீ சுதர்ஸனம், இம்மூவரும் பகவானை ஒரு
நொடி கூட பிரியாது அவரைத் தொழும் #நித்யசூரிகள்
வியாழக்கிழமை ஸ்ரீ சக்கரத்தாழ்வாருக்கு சிவப்பு மலர்களால் மாலை சூட்டி வழிபட்டால், நினைத்த காரியங்களில் வெற்றி கிட்டும். ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வழிபட பக்தர்கள் ஓரடி எடுத்து வைத்தால், அவர் உடனே இரண்டடி முன்வைத்து பிரச்சினைகளை, துன்பங்களை
தீர்த்து சந்தோஷத்தில் ஆழ்த்துவார் என்பது விதியாகும். ஸ்ரீ சக்கரத்தாழ்வார் சந்நிதியில் நெய் விளக்கேற்றி, 'ஓம் நமோ பகவதே மகா சுதர்சனாய நமஹ' என்று கூறி வழிபடுதல் கூடுதல் பலனைத் தரும். ஸ்ரீ சுதர்ஸனாழ்வார், ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீ அனந்தாழ்வார் என இவர்கள் மூவர்கள் மட்டுமே ஸ்ரீ பகவானை
ஆட்கொண்டவர்கள் என்பதால் ஏற்பட்ட சிறப்பாகும் – ஆழ்வார் என்ற அடைமொழி. ஸ்ரீ மகாவிஷ்ணு, இவரிடம் “திருவாழியே உலக வாழ்வுக்கு முக்யமான, ஆயுள், ஆரோக்யம், ஐச்வர்யம இவற்றை இனி உம்மிடம் கேட்டாலும் மக்களுக்கு கொடும். இது தவிர வேறெந்த நல்ல விஷயம் கேட்டாலும் கொடும்” என இவருக்கு ஆணையிட்டார்.
இதனை #சுதர்ஸன_சதகம் விளக்குகிறது. ஸ்ரீ மகாவிஷ்ணு அனேக அவதாரங்களிலும், துஷ்ட நிக்ரஹத்தை ஸ்ரீ சுதர்ஸனம் மூலமே நிகழ்த்தி அருளினார். உலக இயக்கத்திற்கே ஆதாரம் ‘மகா சுதர்ஸனமே’ என்கின்றனர். ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வழிபட்டால் நவகிரகங்களால் ஏற்படும் இடையூறுகள், துன்பங்கள் எல்லாம் நீங்கும்.
ஸ்ரீசுதர்சன வழிபாடு பயங்கரமான கனவு, சித்தபிரமை, சதாமனோ வியாகூலம், பேய்விசாசு, பில்லி சூன்யம், ஏவல் முதலிய துன்பங்களிலிருந்து காக்க வல்லது.
மனத்தாலும், கைகள், கால்களால் செய்த பாவங்களை அந்த உறுப்புக்களினாலும் மட்டுமே தீர்க்க முடியும்.
வெளியில் இருந்து வரும் பொருள்களில் தான் மகிழ்ச்சி இருப்பதாக எண்ணி அவற்றைச் சுற்றியே மனிதன் துரத்திக் கொண்டு ஓடுகிறான். வெளியில் இருப்பது எதுவும் நம் வசத்தில் இருப்பதல்ல. அது வந்தாலும்
#ஶ்ரீராமநவமி_ஸ்பெஷல்#வடுவூர்கோதண்டராமர்
ஶ்ரீராமநவமியை ஒட்டி இன்று தொடங்கி 10 நாட்கள் இங்கு பிரம்மோத்ஸவம் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. வடுவூர் #தெட்சிண_அயோத்தி என்னும் பெருமையை உடையது. முன்மண்டபத்தில் ருக்மணி சத்யபாமாவுடன் கோபாலன் தனி சன்னதியில் அருளுகிறார். ராமர் பிரதிஷ்டைக்கு
முன்பு இவரே மூலஸ்தானத்தில் இருந்தார். பிரகாரத்தில் ஹயக்ரீவர், விஷ்வக்ஷேனர், ஆண்டாள், ஆழ்வார்கள் உள்ளனர். சரயு தீர்த்தம் கோயிலுக்கு வெளியில் இருக்கிறது.
மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் #புஷ்பக_விமானம் எனப்படுகிறது. ராமரிடம் வேண்டிக் கொள்ள பெற்றோர் சொல் கேட்கும் குழந்தைகள்
பிறப்பார்கள், நியாய சிந்தனை உண்டாகும் என்பது நம்பிக்கை. இங்கு பக்தர்கள் சுவாமிக்கு திருமஞ்சனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். மூலஸ்தானத்தில் ராமபிரான், சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயருடன் காட்சி தருகிறார். மார்பில் மகாலட்சுமி பதக்கம் மற்றும் சாளக்கிராம மாலை அணிந்து
#பக்தி#பாவம்_bhavam
ஒரு பாகவதர் தினமும் கிருஷ்ண பஜனை பாடியபடியே வீடு வீடாக சென்று அன்னம் யாசிப்பது அவரது வழக்கம். ஒரு நாள் அவருக்கு யாரும் அன்னமிடவில்லை. பசியோடு நடந்து கொண்டே கிருஷ்ண பஜனை பாடி கொண்டிருந்தார். அப்பொழுது அவரின் கையை ஓர் 8 வயது சிறுமி பிடித்து, ஸ்வாமி என்று
அழைத்தாள். அவர் நின்று அந்த சிறுமியை பார்த்தார். அவள் கிழிந்த உடையை அழகாக தைத்து உடுத்தி இருந்தாள். மலர்ந்த முகத்தோடு ஸ்வாமி என்று அழைத்தாள். அவர் அந்த சிறுமியிடம், யாரம்மா நீ என்ன வேண்டும் உனக்கு என்று கேட்டார். அதற்கு அந்த சிறுமி, ஸ்வாமி நான் அருகே உள்ள குடிசையில் இருந்து
தினமும் உங்கள் கண்ணன் பாடல்களை ரசித்து கேட்பேன். அதை கேட்டு கேட்டு பாடல்கள் முழுக்க எனக்கு மனப்பாடம் ஆயிற்று. அதனால் உங்களை என் குருநாதராக நினைத்து அழைக்கிறேன், என் வீட்டிற்கு உணவருந்த வருகிறீர்களா என்று அன்போடு அழைத்தாள். பசியோடு இருந்த பாகவதரும் அவளது அன்பான வார்த்தையில் மயங்கி
#கோட்டயம்_மள்ளியூர்_ஸ்ரீமகாகணபதி_ஆலயம்
மூலவர்: விநாயகர்
பழமை: 500 வருடங்களுக்குள்
ஊர்: மள்ளியூர்
மாவட்டம்: கோட்டயம்
மாநிலம்: கேரளா
திருவிழா: விநாயகர் சதுர்த்தி, கோகுலாஷ்டமி
இக்கோவிலில் கர்ப்பக்கிரகத்தில் கணபதியின் மடியில், கிருஷ்ண பகவான் அமர்ந்திருப்பது சிறப்பு.
கோயில் சுற்றுப்
பகுதியில் சாஸ்தா, மகாவிஷ்ணு, துர்க்கை, அந்தி மகா காவலன், யக்ஷி, நாகர் சன்னதிகள் உள்ளன. தோஷத்திலிருந்து விடுபடவும், நோயிலிருந்து விடுபடவும் மக்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கின்றனர். திருமணத் தடை நீங்குவதற்காக செவ்வாய், வெள்ளி கிழமைகளில் செய்யப்படும் #பழமாலை மிகவும் சக்தி
வாய்ந்தது. குழந்தை பாக்கியத்திற்காக பால் பாயாசம் படைக்கப்படுகிறது. பித்ரு கடன் செய்பவர்கள் இங்கு #சதுர்த்தியூட்டு எனப்படும் வழிபாடு செய்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியவர்கள், தாங்கள் விரும்பிய பொருட்களை காணிக்கையாக செலுத்துகிறார்கள். இசை நாயகன் கிருஷ்ணனை மகிழ்விக்கும் நிகழ்ச்சி
இராவணன் மகன் இந்திரஜித்கும் இலட்சுமணனுக்கும் இடையே நடந்த போரில், இந்திரஜித் ஏவிய அஸ்திரத்தால், இலட்சுமணன் மூர்ச்சையாகி வீழ்ந்தார். இலங்கை அரச மருத்துவர் சுசேனர், இலட்சுமணனை குணப்படுத்த இமயமலையில் வளரும் #சஞ்சீவினி
மூலிகை மருந்துச் செடிகளை பறித்து வர அறிவுறுத்தினார். சஞ்சீவினி மூலிகை மருந்தினை இமயமலையில் இருந்து கொண்டு வருவதற்காக பெரும் பலவானாகிய அனுமன் விரைந்து சென்றார். இதை அறிந்த இராவணன் அனுமனுக்கு பல்வேறு தடைகளை ஏற்படுத்த, அவற்றை எல்லாம் கடந்து அனுமன் சஞ்சீவினி மலையை அடைந்தார். அங்கு
அனுமனைக் கொல்ல காலநேமியை இந்திரஜித் அனுப்பி வைத்தான். காலநேமி என்னும் அசுரன் மாரீசனின் மகன். அனுமன் இமயமலையின் சஞ்சீவினி மூலிகை உள்ள பகுதியை அடைந்து, சஞ்சீவினிச் செடிகளை பறிக்க முற்படுகையில், அவ்விடத்தில் போலித் துறவி வேடத்தில் வந்த காலநேமி, அனுமனை வரவேற்று, அருகில் உள்ள ஏரியில்