#சென்னை_சம்பவம்
ரெண்டு நாளாக ராகுல் அவர்களின் தகுதி நீக்க செய்தியில் மனம் உறைந்து இருந்ததால், இந்த டெல்லி சம்பவம் பற்றி விரிவாக அறிந்து கொள்ள முடியவில்லை நேற்று @perungkizhavan இந்த கஜக்கஸ்தான் கிராண்ட் மாஸ்டர் விலகல் கடிதத்தை பதிந்த போது எனக்கு இன்னொரு சம்பவம் நினைவு வந்தது
#பழைய_கதை
ஐந்து ஆண்டுகள் முன்பு நடந்ததா முகப்பு புத்தகத்தில் சுற்றியது . மீண்டும் பகிர காரணம் மற்ற இந்திய நகரங்கள் போல் அல்லாது சென்னை தன் தனித்துவத்தை பல விதங்களிலும் காட்டி நிற்கின்றது. படிப்புக்கு அரசு மட்டுமல்ல சாதாரண மனிதர்களும் எப்படி துணையாக நிற்கிறார்கள் என்று காட்டுகிறது
#கற்கைநன்றே
காலை 6.30 மணியளவில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், கிராமத்தில் இருந்து வந்திருக்கும் ஒரு தாயும் மகளும், அண்ணா அரங்கத்திற்கு வழிகேட்டபடி நின்றுள்ளனர். 8.30 மணிக்கு துவங்க இருக்கும் பி.எஸ்.சி அக்ரிகல்ச்சர் படிப்பிற்கான கவுன்சிலிங்கில்கலந்துகொள்வதற்காக, திருச்சிக்கு
அருகேயுள்ள சிறு கிராமத்தில் இருந்து வந்திருப்பதாக கூறியுள்ளனர்.
ஆனால் விவசாயக் கூலியான படிக்காத அந்த தாய்க்கும், அந்த சிறுமிக்கும், அந்த படிப்பிற்கான கலந்தாய்வு கோயம்புத்தூரில் நடக்கிறது என்பது தெரிந்திருக்கவில்லை. ஏதோ தவறான தகவலின்படி சென்னைக்கு வந்துவிட்டனர். காலையில் அங்கே
நடைப்பயிற்சி செல்பவர்கள் சிலர் இந்த விவரங்களை கேட்டறிந்து, கலந்தாய்வு நடப்பது கோயம்புத்தூரில் என்ற விவரத்தைக் கூறியிருக்கின்றனர்.
+2 தேர்வுகளின் போது உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட நிலையிலும் அந்தப் பெண் 1017 மதிப்பெண்கள் எடுத்திருக்கிறாள். விவரங்களை கேட்டறிந்த நடைப்பயிற்சிக்கு
வந்த ஒருவர், அவர்கள் இருவரையும் விமானம் மூலம் கோயம்புத்தூருக்கு அனுப்பும் செலவை தான் ஏற்றுக்கொள்வதாகசொல்லியிருக்கிறார். அங்கிருந்த மற்றவர்கள், கோயம்புத்தூரில் இருக்கும் தங்கள் நண்பர்கள் மூலம், கலந்தாய்வில் இருக்கும் ரெஜிஸ்ட்டாரிடம் இந்த நிலைமையை எடுத்துச் சொல்லியிருக்கின்றனர்.
பின் தாய்க்கும் மகளுக்கும் காலை உணவு ஏற்பாடு செய்யப்பட்டு கொடுத்து இருக்கு
விமான பயண செலவை ஏற்பதாக சொன்னவர், காலை 8.15 மணியளவில் விமான நிலையத்திற்கு புறப்பட்டு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறார். தாயும் மகளும் காலை 10.05 க்கு புறப்படும் கோயம்பத்தூர் விமானத்தை பிடித்துள்ளனர்.
11.40க்கு விமானம் கோயம்புத்தூரில் தரை இறங்கி இருக்கு.
அங்கிருந்து இருவரையும் கலந்தாய்வு நடக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்ல சென்னையை சேர்ந்தவர்களின் நண்பர்கள் தயாராக இருந்திருக்கின்றனர். இருவரையும் மதியம் 12.15 மணிக்கு கவுன்சிலிங் நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர்
ரெஜிஸ்டார் அந்தப் பெண் கலந்தாய்வில் கலந்துகொள்வதற்காக முறையான ஏற்பாடுகளை செய்துகொடுத்திருக்கிறார். அதன்பின் கவுன்சிலிங்கில் கலந்துகொண்ட அந்த பெண்ணுக்கு கோயம்புத்தூர் அக்ரிக்கல்ச்சர் யுனிவர்சிட்டியில் பயோடெக்னாலஜி படிப்பதற்கான இடம் அன்று மதியமே 2 மணியளவில் கிடைத்திருக்கிறது.
#மனிதம்_சாகவில்லை
சம்பவம் புதுசோ பழசோ, திமுக ஆட்சியில் நடந்ததோ அதிமுக ஆட்சியில் நடந்ததோ,
ஆனால் இந்த உலகம் மனிதர்களால் இயங்கவில்லை மனிதத்தால் இயங்குகிறது.
என்பதை காட்ட இங்கு பகிர்ந்தேன். மக்கள் எவ்வழி ஆள்வோர் அவ்வழி. மக்களிடம் இருந்து தானே மக்கள் பிரதிநிதிகள் உருவாகிறார்கள்
#சென்னை_சதுரங்கம்
உக்கிரைன் ரஷ்யா போரின் காரணமாக, இந்தப் போட்டியை எங்கே நடத்துவது என்று சர்வதேச செஸ் சங்கம் குழம்பிய போது, தமிழ்நாடு அரசின் சார்பாக சென்னையில் நடத்த கோரிக்கை விடப்பட்டது. சென்னை பல கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கியதை கவனத்தில் கொண்ட சம்மேளனம், அதற்கு சம்மதித்தது
#எங்கஊரு_திருவிழா
இரண்டாம் தர குடிமக்களாக கருதப்படும் ஒரு மாநிலத்தில் நிகழும் மூன்றாம் தரமாக கூட கருதப்படாத ஒரு விளையாட்டை ஏதோ தங்கள் மாநில விழாவை போல அரசு கொண்டாடியது. பொதுமக்களும் தங்களுக்கு சதுரங்கம் விளையாட தெரிகிறதோ இல்லையோ அதனைப் பற்றி பேசிப் பேசி மாய்ந்து போனார்கள்
#தம்பி
போட்டி நாள் நெருங்க நெருங்க தமிழ்நாட்டின் பட்டி தொட்டி எங்கும் போட்டியின் நாயகன் தம்பி வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு படை பரிவாரங்களுடன் வலம் வந்தார். சென்னை சுற்றுவட்டாரத்தில் உள்ள பள்ளி கல்லூரிகள் விழாக்கோலம் பூண்டன. பேருந்துகளும் சாலைகளும் செஸ் சாயம் பூசிக் கொண்டன
#ரஹ்மான்_anthems
பொழுது போகாத வீணர்கள் பொச்செரிச்சல் புலம்பல்களும் தொடங்கியது. ரஹ்மானின் பாட்டில் குறை கண்டனர். விழாவுக்கு முக்கியத்துவம் யாருக்கு கொடுக்க வேண்டும் என பாடம் நடத்தினர். அரசின் விளம்பரங்களுக்கு போட்டியாக ஒன்றிய பிரதமரை சுவர்களில் ஒட்டி வைத்தனர். முதல்வர் சிரித்தார்
#பாராட்டு_மழை
கலந்துகொண்ட சர்வதேச வீரர்கள் தங்களுக்கு வேறு எங்கும் இவ்வளவு மரியாதை கிடைக்க வில்லை என வெளிப்படையாகவே பாராட்டினர். 8 வயசு பொண்ணு முதல் 8 கிராண்ட் ஸ்லாம் வென்றவர் வரை தங்களை தமிழர்கள் நடத்திய விதம் பற்றி நெகிழ்ந்தனர். ஊர் திரும்பிய பின்னும் டிவிட்டரில் பகிர்ந்தனர்
#டெல்லி_சதுரங்கம்
ஓராண்டு முடியவில்லை. இதோ அதன் சர்வதேச தாக்கம் கஜகஸ்தான் வீரர் மூலமாக
மீண்டும் சென்னையை உலகம்
முழுவதும் பேச வைத்திருக்கிறது. இந்தியாவில் வேண்டுமானால் கிரிக்கெட் வீரர்கள் கடவுள்களாக
இருக்கலாம். 600 கோடி மக்கள் வாழும் உலகில் அதையும் தாண்டிய சில விஷயங்கள் இருக்கு
#நெகிழ்ச்சியான_தருணம்
இஸ்ரேலிய ஆதிக்கவாதிகளால் பல ஆண்டுகளாக ஒடுக்கப்படும் பாலஸ்தீனிய சிறுமிக்கு சென்னை விழாவில் கிடைத்த முக்கியத்துவம் உலகம் எங்கும் நெகிழ்ச்சியாக பகிரப்பட்டது..
அந்தச் சிறுமி எந்த நாடு எந்த ஊரு என்று எதுவுமே தெரியாத நிலையில் தமிழர்கள் காட்டிய அன்பு சிறப்பு
#மேலதிக_தகவல்
மனித நேயத்தையும் விருந்தோம்பலையும் இணைத்து இந்த கட்டுரை வடிக்க இன்ஸ்பிரேஷனாக இருந்த கசகஸ்தான் வீரரின் விலகல் கடிதத்தின் தமிழாக்கம்
#திருடர்_மோடி என்ற காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தியின் கருத்து குஜராத் மக்களிடையே எவ்வித சர்ச்சையையும், எந்த பரபரப்பையும் ஏற்படுத்தவில்லை. உண்மையில், 'மோடி' பெயருடைய சமூகத்தினர் கூட இதனைக் கண்டு கொள்ளவில்லை. இதற்கு முக்கிய காரணம். 2004-ஆம் ஆண்டு முதல் நாங்கள் (குஜராத் மக்கள்)
நரேந்திர மோடியின் மிகவும் மோசமான அருவருப்பான மற்றும் கலாச்சாரமற்ற கருத்துக்களை கேட்டு பழகிவிட்டோம் என்பதுதான்
- தீபால் திரிவேதி, #குஜராத்_பத்திரிகையாளர்
சமூக ஊடகங்களில் கேலி செய்வது போல் குஜராத்தியர் அனைவரும் நரேந்திர தாஸ் பக்தர்கள் அல்ல. நம்மைப் போலவே அவர்களும் போராடுகிறார்கள்
#இந்திய_ஜனநாயகம் என்பதே சிறுபான்மை குரலை புறக்கணித்து பெரும்பான்மையை நிரூபிப்பதில் தானே இருக்கிறது. அசுரப் பெரும்பான்மை பலத்தின் மூலம் கட்டவிழ்த்து விடப்பட்ட கோயபல்ஸ் தனமான பிரச்சாரத்தில் தீபால்களின் குரல் அமுங்கியது அல்லது #அமித்_ஷா போன்ற அரசியல் எடுபிடிகளால் அடக்கப்பட்டது
நரேந்திராவுக்கு பதிலடி கொடுக்க சரியான ஆள் என்று தமிழ்நாடு 2018லயே உணர்த்திருந்தது.
காங்கிரஸ் உள்ளேயும் வெளியேயும் ராகுல் குறித்து பரப்பப்படும் வதந்திகளுக்கு மூர்க்கத்தனமாக தமிழ்நாடு பதிலடி கொடுத்தது
#காங்கிரஸ்_மென்சங்கிகள்
ஜோதிராதித்யா சிந்தியா, குலாம் நபி ஆசாத் போன்ற பழம் தின்னு கொட்டை போட்ட சுயநலவாதிகள் ராகுலை எதிர்த்து வெளியேறிய போது அவர்கள் தமிழ்நாட்டுக்கே துரோகம் செய்தது போல் தமிழர்கள் சமூக வெளியில் காறி துப்பினார்கள். கார்த்தி சிதம்பரம் இப்ப வரை troll செய்யப் படுகிறார்
#ராகுலுடன்_உடன்பிறப்புகள்
தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுலுக்கு ஆதரவாக தமிழ்நாடு காங்கிரஸ் அதிரடி நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கோபத்தில் திமுக உடன் பிறப்புகள் சமூக வெளியில் பகிர்ந்த மீம்கள், கோபப் பதிவுகள் வைரலாகின. பழைய கசப்புணர்வுகளை மறந்து மூத்த திமுகவினரே ராகுலுடன் நின்றனர்
#BlackDayForIndianDemocracy
1991 ம் ஆண்டு, ஹார்வர்டில் வகுப்புக்குச் செல்ல, தயாராகி கொண்டிருக்கிறார் அந்த இளைஞன். அறைக் கதவு தட்டப்படுகிறது. இரு FBI அதிகாரிகள், அவருடைய HOD மற்றும் இந்திய தூதரக அதிகாரி ஒருவரும் நிற்கிறார்கள். இளைஞன் " என் தந்தை மரணமடைந்து விட்டாரா?" என்கிறார்
#மரணத்தின்_நிழலில்
சாதாரண இந்திய இளைஞனுக்கு அமைய வேண்டிய பள்ளி கல்லூரி வாழ்க்கை ராகுலுக்கு கிட்டியதே இல்லை. அந்தக் குடும்பத்தவர்கள் அரசியலில் காலடி எடுத்து வைத்த அடுத்த நொடியில் இருந்து மரணமும் அருவருக்கத்தக்க விமர்சனங்களும் துரத்த தொடங்கும். அதற்காக யாரும் பின்வாங்கியது இல்லை
#திருடப்பட்ட_குழந்தைப்பருவம்
1980ல் தில்லி செயிண்ட் கொலம்பஸ் பள்ளியில் படித்த போது அவர் பாட்டி இந்திய பிரதமர். எந்நேரமும் பாதுகாப்பு படை சூழ பள்ளியில் இருந்ததால் ஆசிரியர்களும் சக மாணவர்களும் நெருங்க அஞ்சினர். பெருந்தலைகள் வாரிசுகள் மட்டுமே அவருடன் பழக அனுமதிக்கப் பட்டனர்
#வெல்லமுடியாதவரா_எம்ஜிஆர்
கலைஞரை இழிவுபடுத்த எதிரிகள் அடிக்கடி சொல்வது
பத்து வருஷம் கூப்பில் வைத்தோம் இல்லை.
தமிழ்நாட்டில் தேர்தல் முடிவுகள் பெரும்பாலும் அமையும் கூட்டணியை பொறுத்தே மாறி இருக்கின்றன. ஆனால் இதை எம்ஜிஆர்/ஜெயாவின் தனிப்பட்ட வெற்றியாக கட்டமைத்தது பார்ப்பனிய ஊடகம்
#ஜெயலலிதா_கூட்டணி
2006 சட்டமன்றத் தேர்தலில் திட்டமிட்டு இறக்கி விடப்பட்ட விஜயகாந்த் மூன்றாவதாக வந்து திமுகவின் ஓட்டுகளை பிரித்திருந்தார். 2011 இல் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க போட்டியிட்ட 41 தொகுதிகளில் 29 வென்று சட்டமன்றத்தில் நுழைந்தது
விதைத்தது வீண் போகவில்லை
#சென்னை_வெள்ளம்
2015 சென்னை வெள்ளம் மற்றும் அதனைத் தொடர்ந்த வெள்ள " இழப்பீடு" ஜெயாவுக்கு நல்ல முறையில் பலன் கொடுத்தது. தேர்தல் கமிஷன் முடிவு அறிவிக்கப்படும் முன்பே காலை பத்தரை மணிக்கு அதனை விட அதிக அதிகாரம் கொண்ட ஒரு வரிடம் இருந்து அதிமுகவின் வெற்றி அறிவிக்கப்பட்டது. அவர் மோடி
#கச்சத்தீவும்_கலைஞரும்
தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படும் போதெல்லாம் குடி தேஷ்களும், அவர்களின் உரிமையாளர்களும் கூலாக பரப்புவது :
"கருணாநிதி மட்டும் கச்சத்தீவை..
அவ்வளவு ஏன் கடலையே காணாத காலை மட்டுமே கண்டவன் கூட எங்க இரும்பு லேடி மட்டும் இருந்திருந்தா.
#யாருக்குசொந்தம்
இந்திய நில அளவைத் துறை உயர் அலுவலர் கர்னல் வாக்கர், உதவியாளர் மேஜர் பிரான்ஃபீல்டு சென்னை மாகாணத்தில் அளவை மேற்கொண்டு, 285 ஏக்கர் 20 சென்ட் என அளந்து சர்வே எண்.1250 என குறித்து கச்சதீவு அந்தோணியார் கோயில் முன்பு கல்லில் பொரித்து நட்டனர். 1956 வரை நில அளவை
ஆவணங்களில் கச்ச தீவு ஒரு பகுதியாக இருந்தது.
1920 இல் முதன் முதலாக இலங்கை அதில் உரிமை கோரியது
இந்தியாவிலும் இலங்கையிலும் அதிகாரிகள் மட்டத்தில் நடந்த பேச்சு வார்த்தையில் அது இராமநாதபுரம் ஜமீனுக்கு சொந்தமானது என பிரிட்டிஷ் இந்திய தரப்பில் ஆதாரம் காட்ட. இலங்கை ஏற்றுக்கொண்டது