சென்னைக்கு அருகில் உள்ள திருநின்றவூர் ஒரு திவ்ய தேசம். மஹாலக்ஷ்மி இருப்பிடமாகக் கொண்டதலம் இது. நாளடைவில் மருவி தின்னனூர் என்றழைக்கப்படுகிறது.
இங்குள்ள புகழ்பெற்ற கோவில் பக்தவத்ஸலப் பெருமாளுடையது. இதே தலத்தில் தான் ராமபிரான் பக்தவத்ஸலர் ஆலயத்திற்கு அருகிலேயே ஏரிக்கரையில் கோவில் கொண்டுள்ளார். இதுவும் பக்தவத்ஸலர் கோவிலைச் சேர்ந்த தனிக் கோவிலாகும்.
திருநின்றவூர் ஏரி ப்ரம்மாண்டமானதாக அக்கரையே தெரியாத அளவுக்குக் காட்சி அளிக்கிறது. அந்த ஏரிக்கு முன்புறமே அஞ்சன வண்ணனின் ஆலயம் உள்ளது.
*பரதனும் சத்ருக்கனனும் இணைந்து காட்சி தரும் ஸ்ரீராம அனுமன் கோயில்* முட்லூர்
‘‘கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ’’ என்பது நம்மாழ்வார் திருவாக்கு. இதில் நம்மாழ்வார் இராமாயணத்தை மட்டும் படிக்கச் சொல்லவில்லை. இராமபிரானைப் பக்தியோடு கற்க வேண்டும் என்கிறார்.
இந்திரஜித்துக்கும் இளையபெருமாளாகிய இலக்குவனனுக்கும் போர் நடக்கிறது. போர்க் களத்தில் இந்திரஜித் கடும் போர் செய்தான். சகல அஸ்திரங்களையும் பிரயோகிக்கிறான் இலக்குவன். ஆயினும் இந்திரஜித்தை வெல்ல முடியவில்லை.
அப்பொழுது ஒரு அர்த்த சந்திர பாணத்தை எடுத்து இராமனுடைய பெயரைச் சொல்லி பிரயோகம் செய்கின்றான் இலக்குவன். அந்த அர்த்த சந்திர பாணமானது இந்திரஜித்தை கீழே தள்ளுகிறது. பாணத்தைப் பிரயோகிக்கும்போது அவன் என்ன சங்கல்பம் சொல்கிறான் தெரியுமா?
கண்ணனிடத்திலே அதிக ஈடுபாடு கொண்ட கவியரசு கண்ணதாசன், கம்பராமாயணத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.
தனக்கு கம்பன் மீது எப்படி ஆர்வம் வந்தது என்பதை தன்னுடைய சுயசரிதமான வனவாசத்தில் அவர் விவரித்து இருக்கிறார். அவர் கம்பராமாயணம் படிக்கத் தொடங்கியதன் நோக்கம், கம்பனை விமர்சிக்கவும், கம்பராமாயணத்தை எதிர்த்து மேடைகளில் பேசவும்தான் என்று அவரே சொல்லிவிட்டு,
கம்பனை எதிர்க்க வேண்டும் என்று நினைத்து கம்பனில் மூழ்கிய நான், அவனுக்கு அடிமையாகிப் போனேன். என் கவிதைகளுக்கும், திரைப்படப் பாடல்களுக்கும் துணை நிற்பது அவனுடைய பல கவிதைவரிகளும், சொற்களும்தான் என்பதை;