*மகாவிஷ்ணு எழுந்தருளியுள்ள முக்கிய தலங்கள் 108 திவ்ய தேசங்களாக புகழப்படுகிறது.*
இதில் தமிழ்நாட்டில்தான் அதிக திவ்ய தேசங்கள் இருக்கின்றன.
வடமாநிலங்களிலும் குறிப்பிடத்தக்க திவ்ய தேசங்கள் உள்ளன.
*அவற்றில முக்கியமானது அயோத்தி.மகாவிஷ்ணு ராமஅவதாரம் எடுத்த புண்ணிய பூமி.*
எவ்வளவுதான் சிறந்த பக்தனாக இருந்தாலும், நாட்டு மக்களுக்கு எவ்வளவுதான் நன்மைகள் செய்தாலும், குடும்பத்தார் மீது எவ்வளவுதான் பாசம் வைத்திருந்தாலும்
*அவன் மாற்றான் மனைவி மீது ஆசை கொண்டால் அவன் அனைத்தையும் இழந்துவிடுவான் என்பதை உலகுக்கு நிரூபிக்க மகாவிஷ்ணு இன்னொரு அவதாரம் எடுக்க வேண்டியது இருந்தது.*
ஒரு நாடகம் அரங்கேற கதாபாத்திரங்களை தேர்ந்து எடுப்பார்கள் அல்லவா? அதேபோல் மகாவிஷ்ணு மீண்டும் பூமியில் அவதாரம் எடுக்க தன்னுடன் பயணிக்க சிலரை சகோதரர்களாக தேர்ந்து எடுத்தார்.
பெரிய பிராட்டியை சீதாதேவியாக ஜனக மன்னனுக்கு மகளாக பிறக்க பணித்தார்.
தான் துயில் கொள்ளும் பாம்பான ஆதிசேடனை தம்பி இலக்குவனாகவும், சங்கும்&சக்கரமும் பரதனாவும்,
சத்ருக்கனாவும் பிறக்க வைத்தார்.
அதன்படி அயோத்தில் தசரத மன்னனுக்கு மகனாக ராமபிரான் அவதரித்தார்.
அவரது தம்பிகளான பரதன், லட்சுமணன், கோசலை, கைகேயி, சுமித்திரை என்ற மூன்று மனைவியர். இதில் கோசலைக்கு ராமரும், கைகேயிக்கு பரதனும், சுமித்திரைக்கு லட்சுமணன், சத்ருக்கனும் பிறந்தனர்.
தனக்கு பிறகு ராமருக்கு பட்டாபிஷேகம் செய்ய தசரதர் முடிவு செய்தார். தன் மகன்போல் ராமரை பாவித்து வந்த கைகேயி, கூனியின் துர்உபதேசத்தால் தன் மகனுக்கு பட்டம் சூட்ட நினைத்தாள்.
ஏற்கனவே தசரதர் தருவதாக கூறிய இரண்டு வரங்களை கைகேயி இப்போது கேட்டாள். அதாவது தன் மகன் பரதன் பட்டம் சூட்ட வேண்டும் என்றும், ராமர் பதினான்கு வருடம் காடு செல்லவேண்டும் எனவும் கூறினாள்.
தந்தை வாக்கு தவறக்கூடாது என்பதற்காகவும் தன் சிற்றன்னை கைகேயிக்கு மதிப்பு கொடுக்கும் விதமாகவும் ராமர் காட்டுக்கு புறப்பட்டார்.
அருடன் மனைவி சீதை, தம்பி லட்சுமணன் ஆகியோரும் கானகம் சென்றனர்.
அண்ணன் வனவாசம் செய்த தகவல் பாட்டனார் வீட்டில் இருந்த பரதனுக்கு தெரியாது. இந்த நிலையில் ராமர் பிரிந்த வேதனையில் தசரதர் உயிர்துறந்தார்.
அதன்பின்னர்தான் பரதன் சொந்த ஊர் வந்து உண்மையை அறிந்தான். அன்னை செய்த தவறை அறிந்து அவளை திட்டினான்.
அண்ணனை தேடி காடு சென்றான்.
ராமரின் அறிவுரைபடி நாட்டை காக்க தயாரானான். ஆனால் அரியணை ஏறாமல் அந்த சிம்மாசனத்தில் ராமரின் காலணியை வைக்க முடிவு செய்தான்.
அதன்படி ராமரின் காலணியை சிம்மானத்தில் வைத்து அண்ணன் வரும் வரை நாட்டை ஆண்டான்.
இந்த நிலையில்தான் இலங்கை வேந்தன் ராவணன் சீதையை கடத்தினான். அனுமன் உதவியோடு ராமர் சீதையை மீட்டு வந்தார். பின்னர் அயோத்தி வந்து அயோத்தியை ஆண்டார்.
இந்தியா முழுவதும் ராமபிரானுக்கு கோவில்கள் உள்ளன. குறிப்பாக தமிழ்நாட்டில் பல இடங்களில் ராமருக்கு கோவில்கள் உள்ளன.
ஏனெனில் ராமர் வரலாற்றில் தமிழகமும் முக்கிய இடம் வகிக்கிறது.
ராமர் பிறந்ததும் அயோத்தி. அதேபோல் அந்த அவதாரத்தை முடித்துக் கொண்டதும் இதே அயோத்தியில்தான்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த அயோத்தி ஓர் உன்னதமான புண்ணித்தலமாக விளங்குகிறது.
ராமர் பிறந்த இடமான அயோத்தில் அவர் கோவில் கொண்டுள்ளார்.
அவருக்கு ராமர், சக்கரவர்த்தி திருமகன், ரகுநாயகன் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். அவர் வடதிசைநோக்கி அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். தாயார் சீதா பிராட்டி. இக்கோவில் விமானத்திற்கு புஷ்கல விமானம் என்று பெயர்.
இங்குள்ள சரயுநதி, பரமபத புஷ்கரணி ஆகியவை புண்ணிய தீர்த்தங்களாக உள்ளது.
சென்னைக்கு அருகில் உள்ள திருநின்றவூர் ஒரு திவ்ய தேசம். மஹாலக்ஷ்மி இருப்பிடமாகக் கொண்டதலம் இது. நாளடைவில் மருவி தின்னனூர் என்றழைக்கப்படுகிறது.
இங்குள்ள புகழ்பெற்ற கோவில் பக்தவத்ஸலப் பெருமாளுடையது. இதே தலத்தில் தான் ராமபிரான் பக்தவத்ஸலர் ஆலயத்திற்கு அருகிலேயே ஏரிக்கரையில் கோவில் கொண்டுள்ளார். இதுவும் பக்தவத்ஸலர் கோவிலைச் சேர்ந்த தனிக் கோவிலாகும்.
திருநின்றவூர் ஏரி ப்ரம்மாண்டமானதாக அக்கரையே தெரியாத அளவுக்குக் காட்சி அளிக்கிறது. அந்த ஏரிக்கு முன்புறமே அஞ்சன வண்ணனின் ஆலயம் உள்ளது.
*பரதனும் சத்ருக்கனனும் இணைந்து காட்சி தரும் ஸ்ரீராம அனுமன் கோயில்* முட்லூர்
‘‘கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ’’ என்பது நம்மாழ்வார் திருவாக்கு. இதில் நம்மாழ்வார் இராமாயணத்தை மட்டும் படிக்கச் சொல்லவில்லை. இராமபிரானைப் பக்தியோடு கற்க வேண்டும் என்கிறார்.
இந்திரஜித்துக்கும் இளையபெருமாளாகிய இலக்குவனனுக்கும் போர் நடக்கிறது. போர்க் களத்தில் இந்திரஜித் கடும் போர் செய்தான். சகல அஸ்திரங்களையும் பிரயோகிக்கிறான் இலக்குவன். ஆயினும் இந்திரஜித்தை வெல்ல முடியவில்லை.
அப்பொழுது ஒரு அர்த்த சந்திர பாணத்தை எடுத்து இராமனுடைய பெயரைச் சொல்லி பிரயோகம் செய்கின்றான் இலக்குவன். அந்த அர்த்த சந்திர பாணமானது இந்திரஜித்தை கீழே தள்ளுகிறது. பாணத்தைப் பிரயோகிக்கும்போது அவன் என்ன சங்கல்பம் சொல்கிறான் தெரியுமா?
கண்ணனிடத்திலே அதிக ஈடுபாடு கொண்ட கவியரசு கண்ணதாசன், கம்பராமாயணத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.
தனக்கு கம்பன் மீது எப்படி ஆர்வம் வந்தது என்பதை தன்னுடைய சுயசரிதமான வனவாசத்தில் அவர் விவரித்து இருக்கிறார். அவர் கம்பராமாயணம் படிக்கத் தொடங்கியதன் நோக்கம், கம்பனை விமர்சிக்கவும், கம்பராமாயணத்தை எதிர்த்து மேடைகளில் பேசவும்தான் என்று அவரே சொல்லிவிட்டு,
கம்பனை எதிர்க்க வேண்டும் என்று நினைத்து கம்பனில் மூழ்கிய நான், அவனுக்கு அடிமையாகிப் போனேன். என் கவிதைகளுக்கும், திரைப்படப் பாடல்களுக்கும் துணை நிற்பது அவனுடைய பல கவிதைவரிகளும், சொற்களும்தான் என்பதை;