அன்பெழில் Profile picture
Mar 31 9 tweets 2 min read Twitter logo Read on Twitter
#நற்சிந்தனை ஒரு வியாபாரி, தரமான குதிரை விற்பனைக்குத் தயாராக இருப்பதை சந்தையில் பார்க்க நேரிட்டது. வாங்க முற்படுகையில் கடுமையான பேரம் ஆரம்பித்தது. தன் திறமையை பயன்படுத்தி, தான் முடிவு செய்த நல்ல விலைக்கே குதிரையை விற்றார் அதன் சொந்தக்காரர். குதிரையை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு
வந்தவுடன், அந்த வியாபாரி தன் பணியாளரை அழைத்து, குதிரை மேலுள்ள சேணத்தை எடுக்கச் சொன்னார். அந்த கனமான சேணத்தை தான் ஒருவரே எடுப்பது, அந்த பணியாளருக்கு மிக கஷ்டமாக இருந்தது. சேணத்திற்கு அடியில், ஒளித்து வைக்கப் பட்ட ஒரு சிறிய வெல்வெட் பை ஒன்றை அந்தப் பணியாளர் கண்டு பிடித்தார்.
அதைத் திறந்து பார்க்கும் போது, பை நிறையை விலைமதிப்பற்ற நகைகள் இருப்பதை கண்டுபிடித்தார். அந்தப் பணியாளர் மிகவும் உற்சாகம் அடைந்தார்! “எஜமானரே, நீங்கள் குதிரை வாங்கி வந்தீர்கள். ஆனால், அதனுடன் இலவசமாக வந்திருக்கும் இவற்றைப் பாருங்கள்!” என்றார்.
பணியாளரின் உள்ளங்கையில்
இருக்கும் அந்த ஆபரணங்களைப் பார்த்து அந்த வியாபாரி திகைத்தார். அவை அனைத்தும் அசாதாரணமான ரகத்தைச் சேர்ந்தவை. சூரிய ஒளியில் அவை மின்னிக் கொண்டும், ஒளியை உமிழ்ந்து கொண்டும் இருந்தன. “நான் குதிரையை தான் வாங்கினேன். இந்த நகைகளை அல்ல. இதை குதிரை விற்றவரிடமே திருப்பிக் கொடுத்து
விடுகிறேன்” என்றார். பணியாளர் ஆச்சரியம் அடைந்தார்! அவரது எஜமானர் உண்மையிலேயே ஒரு முட்டாள். “எஜமானரே! இதை நீங்களே வைத்துக் கொள்ளலாம். இது யாருக்கும் தெரியாது!” என்றார்.
ஆனால், அந்த வியாபாரி, மீண்டும் சந்தைக்குத் திரும்பிச் சென்றார். அங்கே அந்த குதிரை விற்றவரிடம் அந்த
வெல்வெட் பையை ஒப்படைத்தார். குதிரை விற்றவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். “நான் பாதுகாப்பிற்காக, இந்த நகைகளை சேணத்திற்கு அடியில் ஒளித்து வைத்து இருந்தேன். அதை நான் மறந்து விட்டேன். இப்போது இதில் ஒரு நகையை எடுத்துக் கொள்ளுங்கள், ஒரு வெகுமதியாக இருக்கட்டும்.” என்றார். வியாபாரி
கூறினார், “நான் குதிரைக்கு மட்டும்தான் விலை கொடுத்தேன். எனக்கு அது போதும். உங்களுக்கு நன்றி. எனக்கு எந்த வெகுமதியும் வேண்டாம்.” மீண்டும் அவர் வற்புறுத்தினார். “இந்த வெல்வெட் பையை உங்களிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்த உடனேயே, நான் அதிலிருந்து இரண்டு விலைமதிப்பு
மிக்க நகைகளை எடுத்து எனக்காக வைத்துக் கொண்டேன்.” என்றார்.
அதாவது “என்னுடைய உண்மைத் தன்மையும், என்னுடைய திடமான மனத்தின் சமநிலையும் தான் அவை.”என்றார்.
எல்லா சூழல்களிலும், எல்லா செயல்பாடுகளிலும், மனத்தில் சமநிலையைக் கொண்டு இருத்தல் என்பதே நம் பகவத் கீதையின் சராம்சம் ஆகும். ஒரு
மனிதனின் சரியான மனோபாவத்தின் வெளிப்பாடு சமநிலை ஆகும். அது அவரது குணநலனின் ஒரு பிரதிபலிப்பாக இருக்கிறது.

சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Apr 1
#நம்மை_திருத்தும்_நவக்கிரகங்கள்
எவர் ஒருவர் தங்கள் சொந்த பந்தங்களை மதிக்காமல் அலட்சியமாக மரியாதை குறைவாக நடத்துகிறார்களோ, அவர்களுக்கு நவகிரகத்தின் ஆசீர்வாதமும், அனுக்கிரஹமும் கட்டாயம் கிடைக்கவே கிடைக்காது.
அப்பாவை மரியாதையாக நடத்தவில்லை என்றால், அப்பாவிற்கு கொடுக்க வேண்டிய Image
ஸ்தானத்தை அவருக்கு கொடுக்கவில்லை என்றால் திருமணம் தள்ளிப்போகும். வேலை வாய்ப்பில் பிரச்சனை ஏற்படும். சொந்த தொழில் முன்னேற்றம் ஏற்படாது. ஏனென்றால், அப்பா ஸ்தானத்தை குறிப்பது #சூரியன்
அம்மாவை மதிக்கவில்லை என்றால், அவர்களை மரியாதை குறைவாக நடத்தினால், அவர்களை அவமானப்படுத்தி பேசினால்
கட்டாயம் அவரின் அழகு குறைய ஆரம்பிக்கும். அறிவாற்றல் மங்கிப் போகும். குழப்பமான வாழ்க்கை வாழத் தொடங்குவர். மனநிம்மதியே இருக்காது. ஏனென்றால், அம்மா ஸ்தானத்தை குறிப்பது #சந்திரபகவான்
கணவனாக இருந்தால், வீட்டில் இருக்கும் மனைவியை மரியாதையோடு நடத்த வேண்டும். மனைவிக்கு மரியாதை இல்லை
Read 12 tweets
Apr 1
#தியாகராஜரும்_ஶ்ரீராமரும்
வீட்டு திண்ணையில் அமர்ந்தபடி, கண்களை மூடியவாறு ராம ஜபம் செய்து கொண்டிருந்த தியாகராஜர், குரல் கேட்டு சட்டென்று கண் விழித்தார். எதிரே ஒரு வயதான தம்பதி. அருகே, கூப்பிய கரங்களுடன் ஒரு இளைஞன். மெல்லிய குரலில் அந்த முதியவர் பேச ஆரம்பித்தார்.
''ஸ்வாமி, Image
நாங்கள் வடக்கே ரொம்ப தூரத்தில் இருந்து கால்நடையாய் ஷேத்ராடனம் பண்ணிட்டு வரோம். நாளை ராமேஸ்வரம் போகணும். இன்று ஒரு ராத்திரி மட்டும் உங்க இடத்துல தங்கிவிட்டு, காலை பொழுது விடிந்ததும் கிளம்பிடறோம்.
தயவு செய்து எங்களுக்கு உதவி செய்யணும்” மெல்லிய குரலில், பேசினார் அவர். வயதான
அந்த தம்பதியின் அழுக்கு படிந்த உடைகள், முகங்களில் தெரிந்த களைப்பு, வாட்டம் மற்றும், பேச்சில் தெரிந்த ஆயாசம் இவற்றை தாண்டி அம்மூவரின் முகலாவண்யமும் தெய்வீக அம்சமும் தியாகராஜரை என்னவோ செய்ய அவருக்கு ஒரு வித பக்தி மயக்கம் ஏற்பட்டது. ஒரு கணம் நிலை தடுமாறியவர் பின், மெலிதான
Read 16 tweets
Mar 31
#சீதாராம_சாம்ராஜ்ஜிய_பட்டாபிஷேகம்
இலங்கையில் இருந்து திரும்பிய அனைவரும் அயோத்தி நகரை அடைந்தனர். அயோத்தி மக்கள் அனைவரும் தாயை பிரிந்த குழந்தை போல் இராமரை கண்டு அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர். அனைவரும் அரண்மனை அடைந்தனர். இராமர் பரதனிடம், "தம்பி! அனுமன், சுக்ரீவன், விபீஷணனுக்கு தேவையான Image
வசதிகளைக் செய்துக் கொடுத்து அரண்மனையை சுற்றி காண்பிப்பாயாக" என்றார். பிறகு பரதன் அரண்மனையை சுற்றி காண்பித்தான். அப்போது சுக்ரீவன் பரதனிடம், "பரதரே, முடி சூட்டும் விழாவிற்கு ஏன் தாமதமாகிறது”எனக் கேட்டான். பரதன், “ஐயனே! பட்டாபிஷேகத்திற்காக நாடு முழுவதும் உள்ள புண்ணிய தீர்த்தங்களை
கொண்டு வரத்தான் தாமதத்திற்கு காரணம்.”என்றான். உடனே சுக்ரீவன், அனுமனை நோக்கினான். சுக்ரீவனின் நோக்கத்தை அறிந்த அனுமன் புண்ணிய தீர்த்தங்களை கொண்டு வர புறப்பட்டான். அதன் பிறகு பரதன், வசிஷ்ட முனிவரிடம் சென்று, "குருவே! அண்ணல் இராமருக்கு விரைவில் பட்டாபிஷேகம் செய்ய வேண்டும்.
Read 24 tweets
Mar 31
#மகாபெரியவா
மகா பெரியவா தர்சன அனுபவங்களில் இருந்து:

“எங்கயோ இருக்கிற எனக்கு அமெரிக்காவுல இருக்கிற விஸ்வநாதன் பொண்ணு அபர்ணாக்கு இன்னும் கல்யாணம் ஆகலனு தெரியறது. எங்கயோ இருக்கிற எனக்கு அமெரிக்காவுல வேலை பார்க்கிற வைத்தியநாதன் பையன் ஸ்ரீனிவாசனுக்கு இன்னும் கல்யாணம் ஆகல தெரியறது.
இப்படி இதெல்லாம் எனக்கு தெரிய வரும் போது சதாசர்வகாலம் நானே கெதினு இருக்கிற என் குழந்தளேக்கு என்ன தேவைபடறது என்ன நடந்துன்டு இருக்கு நல்லது கெட்டது நான் பார்க்காம வேற யாரு பார்ப்பா. என் குழந்தேளுக்கு ஒரு கஷ்டம்னா கை விட்டருவேனோ கல்யாணம் ஆகல, குழந்தை இல்ல, வேலை இல்ல, நல்ல மார்க்
வரனும், நல்ல வரன் வரனும், சொத்து பிரச்சனை, பணம் பிரச்சனை, வறுமைல இருக்கேன், இப்படி எதாவது ஒன்ன தலைல போட்டுன்டு ஓடி வரேளோ இல்லியோ அவா அவா தேவைக்கு நன்னா பிராத்தனை பண்ணின்டு நமஸ்காரம் பண்ணி பாரத்தை என் தலைமேல போட்டுரேள். நான் அதை நன்னா நடத்தி தரவேண்டாமோ நிச்சயம் நடத்தி தருவேன்
Read 22 tweets
Mar 30
#chardham சார்தாம் எனப்படும் நான்கு முக்கியமான திருத்தலங்களில் ஒன்று ராமேஸ்வரம். தெற்கில் ராமேஸ்வரம், கிழக்கில் பூரி ஜெகந்நாதரும், வடக்கில் ஸ்ரீபத்ரி நாராயணரும், மேற்கில் துவாரகையில் துவாரகாநாதரும் இந்திய தீபகற்பத்தை நான்கு திசைகளிலும் இருந்து பாதுகாக்கின்றனர் என்று புராணங்களும்
இதிகாசங்களும் தெரிவிக்கும் செய்தி. இவற்றில் தென்னிந்தியாவில் உள்ள ராமேஸ்வரம் பன்னிரு ஜ்யோதிர் லிங்கங்களில் ஒன்றாவது மிக சிறப்பானதாகும். இத்தகைய ராமநாதசுவாமி கோவிலின் க்ஷேத்திர பாலகாரகர்களாக #சேதுமாதவ பெருமாளும் பாதாள பைரவரும் இருக்கின்றனர். காசியில் பிந்து மாதவராகவும்,
அலகாபாத்தில் வேணி மாதவராகவும் (வேணி என்றால் தலை முடி இதனால் தான் அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமத்தில் வேணி தானம் செய்ய வேண்டும் அதாவது நமது அகந்தையை இறக்கி விடுகிறோம் என அர்த்தம்), ஆந்திர பிரதேசத்தில் உள்ள பித்தாபுரத்தில் குந்தி மாதவராகவும், ராமேஸ்வரத்தில் சேது மாதவராகவும்
Read 10 tweets
Mar 30
#பயனுள்ள_தகவல்கள்
நான்கு வகை உயிரினங்க:

1. #சுவேதஜம்
– புழுக்கத்திலிருந்து பிறக்கக்கூடியன – புழு, பூச்சி, கொசு போன்றவை.

2. #உத்பிஜம்
– பூமியைப் பிளந்து கொண்டு வெளிவருவன – மரம், செடி, கொடி போன்றவை.

3. #அண்டஜம்
– முட்டையிலிருந்து வெளிவருவன – பறவைகள், சில நீர்வாழ்வன போன்றவை
4. #ஜராயுதம்
– கருப்பையிலிருந்து வெளிவருவன – மனிதன், சில விலங்குகள் போன்றவை.

ஆதித்தனுடைய ஏழு புத்திரர்கள்:
1. கர்ணன்
2. காளைந்தி
3. சுக்ரீவன்
4. தத்திய மகன்
5. சனி
6. நாதன்
7. மனு

நந்தியின் அருள் பெற்ற எட்டுப்பேர்:
1. சனகர்
2. சனாதனர்
3. சனந்தகர்
4. சனத்குமாரர்
5. வியாக்கிரபாதர்
6. பதஞ்சலி
7. சிவயோக முனிவர்
8. திருமூலர்

அஷ்ட பர்வதங்கள்:
1. கயிலை
2. இமயம்
3. ஏமகூடம்
4. கந்தமாதனம்
5. நீலகிரி
6. நிமிடதம்
7. மந்தரம்
8. விந்தியமலை

ஆத்ம குணங்கள்:
1. கருணை
2. பொறுமை
3. பேராசையின்மை
4. பொறாமையின்மை
5. நல்லனவற்றில் பற்று
Read 17 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(