#சீதாராம_சாம்ராஜ்ஜிய_பட்டாபிஷேகம்
இலங்கையில் இருந்து திரும்பிய அனைவரும் அயோத்தி நகரை அடைந்தனர். அயோத்தி மக்கள் அனைவரும் தாயை பிரிந்த குழந்தை போல் இராமரை கண்டு அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர். அனைவரும் அரண்மனை அடைந்தனர். இராமர் பரதனிடம், "தம்பி! அனுமன், சுக்ரீவன், விபீஷணனுக்கு தேவையான
வசதிகளைக் செய்துக் கொடுத்து அரண்மனையை சுற்றி காண்பிப்பாயாக" என்றார். பிறகு பரதன் அரண்மனையை சுற்றி காண்பித்தான். அப்போது சுக்ரீவன் பரதனிடம், "பரதரே, முடி சூட்டும் விழாவிற்கு ஏன் தாமதமாகிறது”எனக் கேட்டான். பரதன், “ஐயனே! பட்டாபிஷேகத்திற்காக நாடு முழுவதும் உள்ள புண்ணிய தீர்த்தங்களை
கொண்டு வரத்தான் தாமதத்திற்கு காரணம்.”என்றான். உடனே சுக்ரீவன், அனுமனை நோக்கினான். சுக்ரீவனின் நோக்கத்தை அறிந்த அனுமன் புண்ணிய தீர்த்தங்களை கொண்டு வர புறப்பட்டான். அதன் பிறகு பரதன், வசிஷ்ட முனிவரிடம் சென்று, "குருவே! அண்ணல் இராமருக்கு விரைவில் பட்டாபிஷேகம் செய்ய வேண்டும்.
பட்டாபிஷேகம் செய்ய உகந்த நாளை தாங்கள் கணிந்து கூறுங்கள்" என்றான். வசிஷ்ட முனிவர், நல்ல நாட்களை கணித்து பார்த்து, "பரதரே! நாளையே நாம் இராமருக்கான முடிசூட்டும் விழாவை வைத்துக் கொள்வோம்.” என்றார். ஆனால் இந்த முறை சீதாராமர் இருவரையும் அரியணையில் அமர்த்தி பட்டாபிஷேகம் என்றார் வசிஷ்டர்
(ஏனென்றால் போன முறை ராமருக்கு பட்டாபிஷேகம் என்று நாள் குறித்து அது நடைபெறாமல் போயிற்று. அதனால் இம்முறை திருமகளுடன் சேர்ந்து பட்டாபிஷேகம்)
இதைக் கேட்டு பரதர் அளவற்ற மகிழ்ச்சி அடை ந்தார். இச்செய்தி தாய்மார்களுக்கும், அனுமன், சுக்ரீவன், விபீஷணனுக்கும் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்டு
அனைவரும் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர். இச்செய்தி நாட்டு மக்கள் அனைவருக்கும் அறிவிக்கப்பட்டது. மக்கள் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர். இராமருக்கு பட்டாபிஷேகம் செய்வதற்கான ஏற்பாடுகள் விரைவாக நடக்க தொடங்கியது. ஸ்ரீராமருக்கு நாளை முடிசூட்டும் விழா என்ற செய்தி ஓலை மூலம் மன்னர்களுக்கும்,
சிற்றரசர்களுக்கும் அனுப்பப்பட்டது. குகனுக் கும் இராமரின் முடிசூட்டும் விழாவிற்கு வரும்படி அழைப்பு விடப்பட்டிருந்தது. அயோத்தி மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளை அலங்கரித்தனர். மறுநாள் பட்டாபிஷேக த்திற்கான மண்டபத்தை பொன்னாலும், மலர்களாலும் அலங்கரித்தனர். அப்பொழுது அனுமன், பல நாடுகளில்
இருந்து புண்ணிய தீர்த்தங்களை கொண்டு வந்தான். இராமரின் பட்டாபிஷேகத்தை காண பல நாடுகளிலிருந்தும் மன்னர்களும், சிற்றரசர்களும் குவிந்த வண்ணம் இருந்தனர். குகனும் பட்டாபிஷேகத்தை காண வந்து சேர்ந்தான். பட்டாபிஷேகத்திற்கு தேவையான பொருட்கள் எல்லாம் அமைச்சர் சுமந்திரர் தலைமையில் கொண்டு வரப்
பட்டது. வசிஷ்டர் முதலான முனிவர்கள் வேள்விகளை ஆரம்பித்தனர். இராமரும் சீதையும் அரியணையில் அமர்திருக்க, பரதன் வெண்கொற்ற குடையை பிடித்தான். இலட்சுமணனும், சத்ருக்கனும் இருப்புறங்களில் நின்று கொண்டு வெண்சாமரம் வீசினர்.
அயோத்தி மக்கள் அனைவரும் தங்களுக்கே முடிசூட்டு விழா என்பது போல்
மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர். வசிஷ்டர் முதலான முனிவர்கள் வேதங்கள் ஓதினர். அனுமன் இராமரின் பாதத்தில் பணிவாக நின்று கொண்டிருந்தான். கொண்டு வரப்பட்ட புண்ணிய தீர்த்தங்களால் இராமருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அபிஷேக நீர் இராமரின் தலை முதல் பாதம் வரை தொட்டுச் சென்றது. அதேபோல் அபிஷேக
நீர் அனுமனின் தலையில் பட்டு அனுமனை கௌரவிப்பது போல் இருந்தது. இதைப் பார்த்த அனைவரும் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். கௌசலை, சுமித்திரை, கைகேயி கண்களில் ஆனந்தக் கண்ணீர் பொங்கி வழிந்தது. வசிஷ்டர் முதலான முனிவர்கள் மந்திரங்கள் பாடி வாழ்த்த, திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளலின்
குலத்து முன்னோர்கள் மகுடத்தை எடுத்துக் கொடுக்க, அதனை
வாங்கி வசிஷ்ட முனிவர் ஸ்ரீராமருக்கு சூட்டினார். சுபமுகூர்த்த நன்னாளில், முனிவர்கள் வேதங்கள் ஓத இராமரின் பட்டாபிஷேகம் இனிதாக நடை பெற்றது. அப்பொழுது இராமர், திருமால் போல் அனைவருக்கும் காட்சி அளித்தார். தன் பட்டாபிஷேகம் முடிந்த
பின் இராமர், பரதனுக்கு இளவரசர் பட்டம் சூட்டி தனது ஆட்சியை நீதிநெறி தவறாமல் செங்கோலுடன் ஆட்சி புரியுமாறு கட்டளையிட்டார். இதைப் பார்த்து முனிவர்களும், தேவர்களும் அளவற்ற மகிழ்ச்சி அடைந்து மலர்மழை தூவினர். பட்டாபிஷேகம் முடிந்த பிறகு இராமர் ஏழை, எளியவர்களுக்கு பொன், பொருள் ஆடை அணிகலன்
கொடுத்து மகிழ்ந்தார். அதன் பின் இராமர் தனக்கு துணை நின்றவர்களுக்கு பரிசளிக்க விரும்பினார். முதலில் இராமர் சுக்ரீவனை அழைத்து, தன் தந்தை தசரதர் இந்திரனிடம் இருந்து வென்ற இரத்தின கடகத்துடன் யானைகளையும், குதிரைகளையும் பரிசாக கொடுத்து, கிரீடம் அணிவித்து தன் நன்றியை தெரிவித்தார்.
சுக்ரீவன் இராமரின் கைகளை பற்றி கண்களில் ஒற்றி கொண்டான். அங்கதனை அழைத்து, இந்திரன் கொடுத்த மணிக்கடகத்தையும், விலை மதிப்பற்ற முத்தாரங்களையும், குதிரைகளையும், யானைகளையும் பரிசாக கொடுத்தார். பிறகு விபீஷணனை அழைத்து, தேவர்கள் கொடுத்த இரத்தின கடகத்தையும், பொன்னும் பொருளும் பரிசாக
கொடுத்து வாழ்த்தினார். அதன் பிறகு நீலன், ஜாம்பவான் முதலிய வானர படைத் தலைவர்களுக்கு இரத்தின மாலைகளையும், யானைகளும், குதிரைகளும், பொன்னும் பொருளும் கொடுத்தார். பிறகு இராமர் அனுமனை அழைத்து, "அனுமனே! நீ எனக்கு தக்க சமயத்தில் உதவி செய்துள்ளாய். உனக்கு ஆயிரமாயிரம் பொருட்கள் பரிசாக
கொடுத்தாலும் ஈடாகாது. உன்னுடைய வலிமையும், தியாக உதவியும் மேன்மை யானது. உனக்கு என்ன பரிசு கொடுப்பது என்று தெரியவில்லை. அதனால் என்னையே உனக்கு கொடுக்கிறேன்” எனக் கூறி அனுமனை அன்போடு தழுவிக் கொண்டார். இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.
இராமர் தன் கழுத்தில்
இருந்த முத்துமாலையை எடுத்து, “சீதா! என் பரிசளிப்பு முடிந்துவிட்டது. இந்த முத்துமாலையை நீ விரும்பியவருக்கு பரிசாக அளிக்கலாம் எனக் கூறி சீதையின் கையில் கொடுத்தார். முத்துமாலையை கையில் வாங்கிய சீதை முதலில் பார்த்தது அனுமனைத்தான். அனுமனை பார்த்து, "சுந்தரா" என அன்போடு அழைத்தாள்.
அனுமன் சீதையின் அருகில் வந்து நின்றான். சீதை, முத்துமாலையை அனுமனின் கழுத்தில் அணிவித்தாள் "எனக்கு தக்க சமயத்தில் உதவி செய்த உனக்கு என் பரிசு” என்றாள். இராமர், "சீதா நீ நான் நினைத்ததை தான் செய்துள்ளாய்.” பிறகு இராமர் அனுமனை பார்த்து, "அனுமனே உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்”என்றார்
அனுமன், "பெருமானே! நான் வேண்டுவதை தாங்கள் தவறாமல் கொடுக்க வேண்டும்" எனக் கூறிவிட்டு, “நான் உங்களின் அடிமையாக இருக்க வேண்டும். என்னை வேண்டுபவர்களுக்கு முதலில் உங்கள் நாமமே நினைவுக்கு வர வேண்டும்" எனக் கேட்டான். பிறகு இராமர் புன்னகைத்து விட்டு, " உனக்கு அவ்வரமே தருகிறேன்” எனக்
கூறினார். அனுமனின் இவ்வரத்தை கேட்டு மக்கள் அனைவரும் ஆர்ப்பரித்தனர். இராமரின் முடிசூட்டும் விழா அறுபது நாள் கோலாகலமாக நடந்தது. குகன், சுக்ரீவன், அங்கதன், விபீஷணன், அனுமன் முதலியவர்கள் இராமரின் பட்டாபிஷேகத்தை கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தனர். இராமர், குகன், சுக்ரீவன், அங்கதன்,
விபீஷணன், அனுமன் முதலியவர்களை அழைத்து, அரசன் இல்லாத நாடு வெறுமையாகிவிடும். ஆதலால் தாங்கள் அவரவர் இருப்பிடத்திற்கு சென்று, உங்களது நாட்டை மேன்மையுடன் நல்லாட்சி புரியுங்கள் என்று கூறி விடை கொடுத்தார். இராமரிடம், விடைபெற்ற அவர்கள் இராமரையும், சீதையும். தம்பியர்களையும், வசிஷ்ட
முனிவரையும், தாய்மார்களையும் வணங்கி விடை பெற்றனர். அனைவரும் புஷ்பக விமானத்தில் ஏறி, குகன் சிருங்கிபேரத்திலும், சுக்ரீவன் கிஷ்கிந்தையிலும் இறங்கினார்கள். பிறகு விபீஷணன் இலங்கைக்குச் சென்றான். அனைவரும் இராமரின் திருநாமத்தை சொல்லிக் கொண்டு நல்லாட்சி புரிந்தனர்.
இராமர், தம்பிகளுடன்
அயோத்தியை நீதி நெறியுடன், ஆட்சி புரிந்தார். இராமரின் அரு ளால் மண்ணுலகம் செழித்து விளங்கியது.
ஜெய் ஶ்ரீராம்
ஜெய் ஆஞ்சனேயா
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#நம்மை_திருத்தும்_நவக்கிரகங்கள்
எவர் ஒருவர் தங்கள் சொந்த பந்தங்களை மதிக்காமல் அலட்சியமாக மரியாதை குறைவாக நடத்துகிறார்களோ, அவர்களுக்கு நவகிரகத்தின் ஆசீர்வாதமும், அனுக்கிரஹமும் கட்டாயம் கிடைக்கவே கிடைக்காது.
அப்பாவை மரியாதையாக நடத்தவில்லை என்றால், அப்பாவிற்கு கொடுக்க வேண்டிய
ஸ்தானத்தை அவருக்கு கொடுக்கவில்லை என்றால் திருமணம் தள்ளிப்போகும். வேலை வாய்ப்பில் பிரச்சனை ஏற்படும். சொந்த தொழில் முன்னேற்றம் ஏற்படாது. ஏனென்றால், அப்பா ஸ்தானத்தை குறிப்பது #சூரியன்
அம்மாவை மதிக்கவில்லை என்றால், அவர்களை மரியாதை குறைவாக நடத்தினால், அவர்களை அவமானப்படுத்தி பேசினால்
கட்டாயம் அவரின் அழகு குறைய ஆரம்பிக்கும். அறிவாற்றல் மங்கிப் போகும். குழப்பமான வாழ்க்கை வாழத் தொடங்குவர். மனநிம்மதியே இருக்காது. ஏனென்றால், அம்மா ஸ்தானத்தை குறிப்பது #சந்திரபகவான்
கணவனாக இருந்தால், வீட்டில் இருக்கும் மனைவியை மரியாதையோடு நடத்த வேண்டும். மனைவிக்கு மரியாதை இல்லை
#தியாகராஜரும்_ஶ்ரீராமரும்
வீட்டு திண்ணையில் அமர்ந்தபடி, கண்களை மூடியவாறு ராம ஜபம் செய்து கொண்டிருந்த தியாகராஜர், குரல் கேட்டு சட்டென்று கண் விழித்தார். எதிரே ஒரு வயதான தம்பதி. அருகே, கூப்பிய கரங்களுடன் ஒரு இளைஞன். மெல்லிய குரலில் அந்த முதியவர் பேச ஆரம்பித்தார்.
''ஸ்வாமி,
நாங்கள் வடக்கே ரொம்ப தூரத்தில் இருந்து கால்நடையாய் ஷேத்ராடனம் பண்ணிட்டு வரோம். நாளை ராமேஸ்வரம் போகணும். இன்று ஒரு ராத்திரி மட்டும் உங்க இடத்துல தங்கிவிட்டு, காலை பொழுது விடிந்ததும் கிளம்பிடறோம்.
தயவு செய்து எங்களுக்கு உதவி செய்யணும்” மெல்லிய குரலில், பேசினார் அவர். வயதான
அந்த தம்பதியின் அழுக்கு படிந்த உடைகள், முகங்களில் தெரிந்த களைப்பு, வாட்டம் மற்றும், பேச்சில் தெரிந்த ஆயாசம் இவற்றை தாண்டி அம்மூவரின் முகலாவண்யமும் தெய்வீக அம்சமும் தியாகராஜரை என்னவோ செய்ய அவருக்கு ஒரு வித பக்தி மயக்கம் ஏற்பட்டது. ஒரு கணம் நிலை தடுமாறியவர் பின், மெலிதான
#நற்சிந்தனை ஒரு வியாபாரி, தரமான குதிரை விற்பனைக்குத் தயாராக இருப்பதை சந்தையில் பார்க்க நேரிட்டது. வாங்க முற்படுகையில் கடுமையான பேரம் ஆரம்பித்தது. தன் திறமையை பயன்படுத்தி, தான் முடிவு செய்த நல்ல விலைக்கே குதிரையை விற்றார் அதன் சொந்தக்காரர். குதிரையை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு
வந்தவுடன், அந்த வியாபாரி தன் பணியாளரை அழைத்து, குதிரை மேலுள்ள சேணத்தை எடுக்கச் சொன்னார். அந்த கனமான சேணத்தை தான் ஒருவரே எடுப்பது, அந்த பணியாளருக்கு மிக கஷ்டமாக இருந்தது. சேணத்திற்கு அடியில், ஒளித்து வைக்கப் பட்ட ஒரு சிறிய வெல்வெட் பை ஒன்றை அந்தப் பணியாளர் கண்டு பிடித்தார்.
அதைத் திறந்து பார்க்கும் போது, பை நிறையை விலைமதிப்பற்ற நகைகள் இருப்பதை கண்டுபிடித்தார். அந்தப் பணியாளர் மிகவும் உற்சாகம் அடைந்தார்! “எஜமானரே, நீங்கள் குதிரை வாங்கி வந்தீர்கள். ஆனால், அதனுடன் இலவசமாக வந்திருக்கும் இவற்றைப் பாருங்கள்!” என்றார்.
பணியாளரின் உள்ளங்கையில்
#மகாபெரியவா
மகா பெரியவா தர்சன அனுபவங்களில் இருந்து:
“எங்கயோ இருக்கிற எனக்கு அமெரிக்காவுல இருக்கிற விஸ்வநாதன் பொண்ணு அபர்ணாக்கு இன்னும் கல்யாணம் ஆகலனு தெரியறது. எங்கயோ இருக்கிற எனக்கு அமெரிக்காவுல வேலை பார்க்கிற வைத்தியநாதன் பையன் ஸ்ரீனிவாசனுக்கு இன்னும் கல்யாணம் ஆகல தெரியறது.
இப்படி இதெல்லாம் எனக்கு தெரிய வரும் போது சதாசர்வகாலம் நானே கெதினு இருக்கிற என் குழந்தளேக்கு என்ன தேவைபடறது என்ன நடந்துன்டு இருக்கு நல்லது கெட்டது நான் பார்க்காம வேற யாரு பார்ப்பா. என் குழந்தேளுக்கு ஒரு கஷ்டம்னா கை விட்டருவேனோ கல்யாணம் ஆகல, குழந்தை இல்ல, வேலை இல்ல, நல்ல மார்க்
வரனும், நல்ல வரன் வரனும், சொத்து பிரச்சனை, பணம் பிரச்சனை, வறுமைல இருக்கேன், இப்படி எதாவது ஒன்ன தலைல போட்டுன்டு ஓடி வரேளோ இல்லியோ அவா அவா தேவைக்கு நன்னா பிராத்தனை பண்ணின்டு நமஸ்காரம் பண்ணி பாரத்தை என் தலைமேல போட்டுரேள். நான் அதை நன்னா நடத்தி தரவேண்டாமோ நிச்சயம் நடத்தி தருவேன்
#chardham சார்தாம் எனப்படும் நான்கு முக்கியமான திருத்தலங்களில் ஒன்று ராமேஸ்வரம். தெற்கில் ராமேஸ்வரம், கிழக்கில் பூரி ஜெகந்நாதரும், வடக்கில் ஸ்ரீபத்ரி நாராயணரும், மேற்கில் துவாரகையில் துவாரகாநாதரும் இந்திய தீபகற்பத்தை நான்கு திசைகளிலும் இருந்து பாதுகாக்கின்றனர் என்று புராணங்களும்
இதிகாசங்களும் தெரிவிக்கும் செய்தி. இவற்றில் தென்னிந்தியாவில் உள்ள ராமேஸ்வரம் பன்னிரு ஜ்யோதிர் லிங்கங்களில் ஒன்றாவது மிக சிறப்பானதாகும். இத்தகைய ராமநாதசுவாமி கோவிலின் க்ஷேத்திர பாலகாரகர்களாக #சேதுமாதவ பெருமாளும் பாதாள பைரவரும் இருக்கின்றனர். காசியில் பிந்து மாதவராகவும்,
அலகாபாத்தில் வேணி மாதவராகவும் (வேணி என்றால் தலை முடி இதனால் தான் அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமத்தில் வேணி தானம் செய்ய வேண்டும் அதாவது நமது அகந்தையை இறக்கி விடுகிறோம் என அர்த்தம்), ஆந்திர பிரதேசத்தில் உள்ள பித்தாபுரத்தில் குந்தி மாதவராகவும், ராமேஸ்வரத்தில் சேது மாதவராகவும்