#அமைதி_புரட்சி
அதே பழைய உளுத்துப் போன வடை, அன்று அண்ணா ஹஜாரே செய்த அலப்பறையை இன்று அரவிந்த் கெஜ்ரிவால் வேற விதமாக சொல்கிறார். ஹஜாரே உடன் சேர்த்து தாசுக்கு பிரைம் டைம்ல கொடுத்த முக்கியத்துவத்தை இன்று அரவிந்துக்கு அளிக்கின்றன ஊடகங்கள்.பிரதமரை தாக்கி பேசுவது பெரிதாக்க படுவது ஏன்?
ஊழல் இல்லாத நாடு எது?
பல தேசிய இனங்கள் வாழும் தேசத்தில் அவர்கள் மொழி, கலாச்சாரம், உணவு முறை, அணியும் உடை பேரில் தினம் நிகழும் அடக்குமுறைகளை விட ஊழல் தான் பெரிது என நம்ப வைத்து தகுதியே இல்லாத ஒருவரை 140 கோடி பேர் தலையில் கட்டியதை விடவா பெரிய ஊழல் உள்ளது?
அன்றைய காலகட்டத்தில் குருவையும் சிசியனையும் பிரித்தே பார்க்க முடியாது. கூட நாலு அஞ்சு டிக்கெட் இருந்தது. அது எல்லாம் காலப்போக்கில் ஆளுக்கு ஒரு பதவி வாங்கி என்ன பாண்டிச்சேரி கவர்னர் கிரண் பேடி போல லைஃப்ல செட்டில் ஆனது. திட்டமிட்டபடி சிஷ்யன் குருவை விட்டு பிரிந்தார்
#பாட்டிகாலத்து_காங்கிரஸ்
தளத்திலும் களத்திலும்
திமுக தொண்டர்கள் பொறுத்து பொறுத்து போவார்கள் ஒரு லெவல் தாண்டியதும் கடுப்பாகி தூக்கி போட்டு மிதித்துவிட்டு, "யாருகிட்ட? நாங்க தாத்தா காலத்து திமுகடா" என்பார்கள்
நேற்று காங்கிரஸ்காரர்களுக்கு அப்படி சொல்லிக்க சந்தர்ப்பம் கிடைத்தது
#சிவகங்கை_சீமான்
கடந்த 2019 தேர்தலிலேயே சிவகங்கைல அப்பச்சி குடும்பத்திற்கு சீட்டுக்கொடுக்க ராகுல் சம்மதிக்கல. அப்பச்சி ஆல்ரெடி ராஜ்யசபா எம்பி வேற இருந்தார். தன் மொத்த பலத்தையும் பிரயோகித்து சீட்டு வாங்கி கொடுத்தார் அப்பச்சி. காரிய கமிட்டிய விட்டு கடுப்பில் வெளியே வந்தார் ராகுல்
#விளையாட்டு_பிள்ளை
காங்கிரஸ் சிக்கலில் இருக்கும்போது சிறுபிள்ளைத்தனமாக விளையாடுவது இவருக்கு வாடிக்கை. கூட்டணியில் இருந்து கொண்டு திமுகவை கலாய்த்து டிவிட்டு போடுவதை கூட விட்டுவிடலாம். ஆனால் காங்கிரஸின் பரம்பரை எதிரி பாஜகவுக்கு பலமுறை ஆதரவா பேசி இருக்கிறார் இந்த ஓசி டிக்கெட்
#சென்னை_சம்பவம்
ரெண்டு நாளாக ராகுல் அவர்களின் தகுதி நீக்க செய்தியில் மனம் உறைந்து இருந்ததால், இந்த டெல்லி சம்பவம் பற்றி விரிவாக அறிந்து கொள்ள முடியவில்லை நேற்று @perungkizhavan இந்த கஜக்கஸ்தான் கிராண்ட் மாஸ்டர் விலகல் கடிதத்தை பதிந்த போது எனக்கு இன்னொரு சம்பவம் நினைவு வந்தது
#பழைய_கதை
ஐந்து ஆண்டுகள் முன்பு நடந்ததா முகப்பு புத்தகத்தில் சுற்றியது . மீண்டும் பகிர காரணம் மற்ற இந்திய நகரங்கள் போல் அல்லாது சென்னை தன் தனித்துவத்தை பல விதங்களிலும் காட்டி நிற்கின்றது. படிப்புக்கு அரசு மட்டுமல்ல சாதாரண மனிதர்களும் எப்படி துணையாக நிற்கிறார்கள் என்று காட்டுகிறது
#கற்கைநன்றே
காலை 6.30 மணியளவில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், கிராமத்தில் இருந்து வந்திருக்கும் ஒரு தாயும் மகளும், அண்ணா அரங்கத்திற்கு வழிகேட்டபடி நின்றுள்ளனர். 8.30 மணிக்கு துவங்க இருக்கும் பி.எஸ்.சி அக்ரிகல்ச்சர் படிப்பிற்கான கவுன்சிலிங்கில்கலந்துகொள்வதற்காக, திருச்சிக்கு
#திருடர்_மோடி என்ற காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தியின் கருத்து குஜராத் மக்களிடையே எவ்வித சர்ச்சையையும், எந்த பரபரப்பையும் ஏற்படுத்தவில்லை. உண்மையில், 'மோடி' பெயருடைய சமூகத்தினர் கூட இதனைக் கண்டு கொள்ளவில்லை. இதற்கு முக்கிய காரணம். 2004-ஆம் ஆண்டு முதல் நாங்கள் (குஜராத் மக்கள்)
நரேந்திர மோடியின் மிகவும் மோசமான அருவருப்பான மற்றும் கலாச்சாரமற்ற கருத்துக்களை கேட்டு பழகிவிட்டோம் என்பதுதான்
- தீபால் திரிவேதி, #குஜராத்_பத்திரிகையாளர்
சமூக ஊடகங்களில் கேலி செய்வது போல் குஜராத்தியர் அனைவரும் நரேந்திர தாஸ் பக்தர்கள் அல்ல. நம்மைப் போலவே அவர்களும் போராடுகிறார்கள்
#இந்திய_ஜனநாயகம் என்பதே சிறுபான்மை குரலை புறக்கணித்து பெரும்பான்மையை நிரூபிப்பதில் தானே இருக்கிறது. அசுரப் பெரும்பான்மை பலத்தின் மூலம் கட்டவிழ்த்து விடப்பட்ட கோயபல்ஸ் தனமான பிரச்சாரத்தில் தீபால்களின் குரல் அமுங்கியது அல்லது #அமித்_ஷா போன்ற அரசியல் எடுபிடிகளால் அடக்கப்பட்டது
நரேந்திராவுக்கு பதிலடி கொடுக்க சரியான ஆள் என்று தமிழ்நாடு 2018லயே உணர்த்திருந்தது.
காங்கிரஸ் உள்ளேயும் வெளியேயும் ராகுல் குறித்து பரப்பப்படும் வதந்திகளுக்கு மூர்க்கத்தனமாக தமிழ்நாடு பதிலடி கொடுத்தது
#காங்கிரஸ்_மென்சங்கிகள்
ஜோதிராதித்யா சிந்தியா, குலாம் நபி ஆசாத் போன்ற பழம் தின்னு கொட்டை போட்ட சுயநலவாதிகள் ராகுலை எதிர்த்து வெளியேறிய போது அவர்கள் தமிழ்நாட்டுக்கே துரோகம் செய்தது போல் தமிழர்கள் சமூக வெளியில் காறி துப்பினார்கள். கார்த்தி சிதம்பரம் இப்ப வரை troll செய்யப் படுகிறார்
#ராகுலுடன்_உடன்பிறப்புகள்
தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுலுக்கு ஆதரவாக தமிழ்நாடு காங்கிரஸ் அதிரடி நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கோபத்தில் திமுக உடன் பிறப்புகள் சமூக வெளியில் பகிர்ந்த மீம்கள், கோபப் பதிவுகள் வைரலாகின. பழைய கசப்புணர்வுகளை மறந்து மூத்த திமுகவினரே ராகுலுடன் நின்றனர்
#BlackDayForIndianDemocracy
1991 ம் ஆண்டு, ஹார்வர்டில் வகுப்புக்குச் செல்ல, தயாராகி கொண்டிருக்கிறார் அந்த இளைஞன். அறைக் கதவு தட்டப்படுகிறது. இரு FBI அதிகாரிகள், அவருடைய HOD மற்றும் இந்திய தூதரக அதிகாரி ஒருவரும் நிற்கிறார்கள். இளைஞன் " என் தந்தை மரணமடைந்து விட்டாரா?" என்கிறார்
#மரணத்தின்_நிழலில்
சாதாரண இந்திய இளைஞனுக்கு அமைய வேண்டிய பள்ளி கல்லூரி வாழ்க்கை ராகுலுக்கு கிட்டியதே இல்லை. அந்தக் குடும்பத்தவர்கள் அரசியலில் காலடி எடுத்து வைத்த அடுத்த நொடியில் இருந்து மரணமும் அருவருக்கத்தக்க விமர்சனங்களும் துரத்த தொடங்கும். அதற்காக யாரும் பின்வாங்கியது இல்லை
#திருடப்பட்ட_குழந்தைப்பருவம்
1980ல் தில்லி செயிண்ட் கொலம்பஸ் பள்ளியில் படித்த போது அவர் பாட்டி இந்திய பிரதமர். எந்நேரமும் பாதுகாப்பு படை சூழ பள்ளியில் இருந்ததால் ஆசிரியர்களும் சக மாணவர்களும் நெருங்க அஞ்சினர். பெருந்தலைகள் வாரிசுகள் மட்டுமே அவருடன் பழக அனுமதிக்கப் பட்டனர்