கொடுத்துள்ள @news7tamil செய்தி பற்றி
கட்டுரை எழுத பழைய வரலாறு தேடிய போது.
ராணி இதழில் கலைஞரின் 50 ஆண்டு சட்டமன்ற அனுபவம் பற்றிய கேள்வி பதில் கண்டேன்
பொக்கிஷத்தை
அப்படியே தந்து இருக்கிறேன்
படித்து பகிருங்கள்
என் கட்டுரை?
அத எப்ப வேணாலும் விடலாம்
1. சட்டசபையில் முதல்நாள் அனுபவம் எப்படியிருந்தது?
கலைஞர் : பந்தயக் குதிரையைப் படைவீரர் அணிவகுப்பில் நிறுத்தி வைத்தது போல் இருந்தது.
2.பேசிய முதல் பேச்சு?
கலைஞர் : நான் 1957இல் வெற்றிபெற்ற குளித்தலைத் தொகுதியில் உள்ள “நங்கவரம்” பண்ணை விவசாயிகளின் “கையேரு வாரம் மாட்டேரு வாரம்”
என்ற பிரச்சினைக்காகப் பேசியதே பேரவையில் எனது முதல் பேச்சு.
3. அதிக நேரம் பேசிய நாள்?
கலைஞர் :அதிக நேரம் பேசிய நாட்கள் பல உண்டு. இருப்பினும் 1997ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்தபோது நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்துக்கு, நான் அளித்த பதிலுரைதான் இரண்டு மணி நேரத்துக்கு நீடித்தது.
4.உங்களுக்கு பிடித்த சட்டமன்றப் பேச்சு?
கலைஞர் : அருமை நண்பர் எம்.ஜி.ஆர். ஆட்சியில்: எதிர்கட்சித் தலைவராக நானிருந்த போது, “பூம்புகார்” நிறுவனத்தின் சார்பில் வாங்கப்பட இருந்த “பல்கேரியா பால்டிகா” என்ற கப்பல் பேர ஊழல் குறித்து இருபது ஆதாரங்களை ஒன்றன் பின் ஒன்றாக எடுத்துவைத்துக் .
குற்றம் சாட்டிப்பேசியதால், அந்த இரு கப்பல்களுமே வாங்குவது நிறுத்தப்பட்டுவிட்டது என்பது சட்டப் பேரவையின் பரபரப்பான வரலாறு
5. உங்களுக்குப் பிடித்த சட்டமன்றப் பேச்சாளர்?
கலைஞர் : எந்த மன்றமானாலும் சரி, அங்கே கொடிமரம் போல் உயர்ந்துநிற்கும் ஆற்றல்மிகு பேச்சாளர் அறிஞர் அண்ணாதான்.
6.பிடித்த சபாநாயகர்?
கலைஞர் : ஆரம்ப காலத்தில் டாக்டர்.யு.கிருஷ்ணராவ்-இடைக்காலத்தில் செல்லப்பாண்டியன்-அடுத்து கே.ராஜாராம்-அண்மைக் காலத்தில் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன்.
7. உங்களுக்குக் கிடைத்த மறக்க முடியாத பதில்?
கலைஞர் : 24.03.1960 அன்று சட்டப் பேரவையில், ஓவியர் வேணுகோபால்
சர்மா அவர்களால் “தபால் தலைகளுக்கு என வரையப்பட்ட திருவள்ளுவர் ஓவியத்தைச் சட்டமன்றத்தில் வைக்கும் உத்தேசம் அரசாங்கத்திற்கு உண்டா?” என்று நான் கேட்டதற்கு பெரியவர் மாண்புமிகு பக்தவத்சலனார் அவர்கள் “சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி அவர்கள் அம்மாதிரி
படத்தை இங்கு சமர்ப்பிக்க முன்வந்தால்
கனம் சபாநாயகர் அவர்கள் அதைப்பற்றி யோசிப்பார்கள்” என்று கூறிய பதில் தான். ஏனென்றால் அந்தப் பதிலின் காரணமாகத்தான் சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் 22.3.1964 அன்று அன்றையக் குடியரசுத் தலைவர் மேதகு ஜாகீர் உசேன் அவர்களால் திருவள்ளுவரின் திருவுருவப்படம் திறந்து வைத்த நிகழ்ச்சி நடைபெற்றது
இதன் தொடர்ச்சியாக தி.மு.கழக ஆட்சியில் பேருந்துகள், அரசு விருந்தினர் மாளிகைகளில் திருவள்ளுவர் படங்கள் என தொடங்கி, வள்ளுவர் கோட்டம், குமரி முனையில் வானுயர் வள்ளுவர் சிலை என ஆயிற்று!
8. நீங்கள் சொன்ன மறக்க முடியாத பதில்?
கலைஞர் : திருச்செந்தூர் கோவில் கொலைக்காக அமைக்கப்பட்ட பால்
கமிசன் அறிக்கை மீது விசாரணை நடத்தாதது குறித்தும், திருச்செந்தூர் கோவிலில் வைரவேல் களவாடப்பட்டதைக் கண்டித்தும் நான் திருச்செந்தூர் நடைபயணம் சென்றேன். அதைப் பற்றி ஆளுங்கட்சி உறுப்பினர், “கருணாநிதி திருச்செந்தூர் போனார், முருகனே அவரைப் பார்க்கப்பிடிக்காமல் எம்.ஜி.ஆரின் ராமாவரம்
தோட்டத்திற்கு வந்து விட்டார்" என்றார் கிண்டலாக.
“திருச்செந்தூரில் முருகனின் வேல்தான் களவாடப்பட்டது என்று நினைத்தேன். சிலையும் காணாமல் போய்விட்ட விஷயம் இப்போது தான் தெரிகிறது!” என்று நான் கூறியதும் அவை சிரிப்பிலே ஆழ்ந்தது.
9.கேள்வி : சட்டமன்றத்தில் சிறப்பான முதல்வர் யார்?
கலைஞர் : பெருந்தலைவர் காமராஜர், அவையிலே பேசாமலேயே அமர்ந்திருந்து, ஆனால் நிர்வாகத்தைச் சிறப்பாக நடத்தியவர்.
10.சட்டமன்றப் பேச்சுக்கும்- பொதுக்கூட்டப் பேச்சுக்கும் என்ன வித்தியாசம்
கலைஞர் : மனக்கணக்குக்கும்-வீட்டுக்கணக்குக்கும் உள்ள வித்தியாசம்
11. 1957ல் முதல்முறையாகச் சட்டமன்ற உறுப்பினராக ஆனபோது மனைவி, குழந்தைகளைச் சட்டமன்றத்திற்கு அழைத்துச் சென்றதுண்டா?
கலைஞர்: சென்றதில்லை. அவர்களாகவே வந்து நான் உரையாற்றும் நாட்களில் சட்டமன்ற நிகழ்ச்சிகளைக் கண்டதுண்டு.
12.சட்ட மன்றத்தில் உங்களுக்குக் கிடைத்த முதல் பாராட்டு யாரால்?
கலைஞர் : எனது முதல் கன்னிப் பேச்சில், எனது முதல் தொகுதியான குளித்தலையில் இருந்த, “கையேரு வாரம், மாட்டேரு வாரம்” என்ற பிரச்சினை குறித்து நான் வேகமாகப் பேசி அமர்ந்தவுடன், ஒரு துண்டுத் தாளில் பேரவைத் தலைவராக அப்போதிருந்த யு.கிருஷ்ணாராவ் அவர்கள், “Very Good Speech” என்று எழுதிச்
செயலாளர் மூலமாக என்னிடம் கொடுத்தனுப்பியது
13. மறக்கமுடியாத சம்பவம்?
கலைஞர் :சட்டப் பேரவையில் “தமிழ்நாடு” பெயர் வைக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, பேரறிஞர் அண்ணா, “நான் மூன்று முறை தமிழ்நாடு என்று சொல்வேன், அனைவரும் வாழ்க! என்று சொல்ல வேண்டுமென்று கூறி அவ்வாறே முழக்கமிட்டது
14.வருத்தப்பட வைத்த சம்பவம்?
கலைஞர் : 1976ம் ஆண்டு ஆட்சி கலைக்கப்பட்டு, அதன் பின்னர் 13 ஆண்டுகள் எதிர்க்கட்சியாக இருந்து, மீண்டும் 1989ல் பதவிப் பொறுப்புக்கு வந்து முதல் நிதிநிலை அறிக்கையை நான் படிக்க முனைந்தபோது, ஏற்கனவே அவர்கள் வீட்டிலே நடத்திய ஒத்திகைப்படி என் கையிலே இருந்த
நிதிநிலை அறிக்கையைப் பறிக்க முயற்சித்து, முகத்திலும் கட்சிக்காரர்களை விட்டுக் குத்துமாறு ஏவிவிட்டு, அதன் பின்னர், தன்னை ஆளுங்கட்சிக்காரர்கள் தாக்கிவிட்டதாகத் தலையை விரித்துப் போட்டுக்கொண்டு, செய்தியாளர்கள் முன் வதந்திகளைப் பரப்பிய நிகழ்ச்சிதான் என்னை வருத்தமடையச் செய்தது
#அமைதி_புரட்சி
அதே பழைய உளுத்துப் போன வடை, அன்று அண்ணா ஹஜாரே செய்த அலப்பறையை இன்று அரவிந்த் கெஜ்ரிவால் வேற விதமாக சொல்கிறார். ஹஜாரே உடன் சேர்த்து தாசுக்கு பிரைம் டைம்ல கொடுத்த முக்கியத்துவத்தை இன்று அரவிந்துக்கு அளிக்கின்றன ஊடகங்கள்.பிரதமரை தாக்கி பேசுவது பெரிதாக்க படுவது ஏன்?
ஊழல் இல்லாத நாடு எது?
பல தேசிய இனங்கள் வாழும் தேசத்தில் அவர்கள் மொழி, கலாச்சாரம், உணவு முறை, அணியும் உடை பேரில் தினம் நிகழும் அடக்குமுறைகளை விட ஊழல் தான் பெரிது என நம்ப வைத்து தகுதியே இல்லாத ஒருவரை 140 கோடி பேர் தலையில் கட்டியதை விடவா பெரிய ஊழல் உள்ளது?
அன்றைய காலகட்டத்தில் குருவையும் சிசியனையும் பிரித்தே பார்க்க முடியாது. கூட நாலு அஞ்சு டிக்கெட் இருந்தது. அது எல்லாம் காலப்போக்கில் ஆளுக்கு ஒரு பதவி வாங்கி என்ன பாண்டிச்சேரி கவர்னர் கிரண் பேடி போல லைஃப்ல செட்டில் ஆனது. திட்டமிட்டபடி சிஷ்யன் குருவை விட்டு பிரிந்தார்
#பாட்டிகாலத்து_காங்கிரஸ்
தளத்திலும் களத்திலும்
திமுக தொண்டர்கள் பொறுத்து பொறுத்து போவார்கள் ஒரு லெவல் தாண்டியதும் கடுப்பாகி தூக்கி போட்டு மிதித்துவிட்டு, "யாருகிட்ட? நாங்க தாத்தா காலத்து திமுகடா" என்பார்கள்
நேற்று காங்கிரஸ்காரர்களுக்கு அப்படி சொல்லிக்க சந்தர்ப்பம் கிடைத்தது
#சிவகங்கை_சீமான்
கடந்த 2019 தேர்தலிலேயே சிவகங்கைல அப்பச்சி குடும்பத்திற்கு சீட்டுக்கொடுக்க ராகுல் சம்மதிக்கல. அப்பச்சி ஆல்ரெடி ராஜ்யசபா எம்பி வேற இருந்தார். தன் மொத்த பலத்தையும் பிரயோகித்து சீட்டு வாங்கி கொடுத்தார் அப்பச்சி. காரிய கமிட்டிய விட்டு கடுப்பில் வெளியே வந்தார் ராகுல்
#விளையாட்டு_பிள்ளை
காங்கிரஸ் சிக்கலில் இருக்கும்போது சிறுபிள்ளைத்தனமாக விளையாடுவது இவருக்கு வாடிக்கை. கூட்டணியில் இருந்து கொண்டு திமுகவை கலாய்த்து டிவிட்டு போடுவதை கூட விட்டுவிடலாம். ஆனால் காங்கிரஸின் பரம்பரை எதிரி பாஜகவுக்கு பலமுறை ஆதரவா பேசி இருக்கிறார் இந்த ஓசி டிக்கெட்
#சென்னை_சம்பவம்
ரெண்டு நாளாக ராகுல் அவர்களின் தகுதி நீக்க செய்தியில் மனம் உறைந்து இருந்ததால், இந்த டெல்லி சம்பவம் பற்றி விரிவாக அறிந்து கொள்ள முடியவில்லை நேற்று @perungkizhavan இந்த கஜக்கஸ்தான் கிராண்ட் மாஸ்டர் விலகல் கடிதத்தை பதிந்த போது எனக்கு இன்னொரு சம்பவம் நினைவு வந்தது
#பழைய_கதை
ஐந்து ஆண்டுகள் முன்பு நடந்ததா முகப்பு புத்தகத்தில் சுற்றியது . மீண்டும் பகிர காரணம் மற்ற இந்திய நகரங்கள் போல் அல்லாது சென்னை தன் தனித்துவத்தை பல விதங்களிலும் காட்டி நிற்கின்றது. படிப்புக்கு அரசு மட்டுமல்ல சாதாரண மனிதர்களும் எப்படி துணையாக நிற்கிறார்கள் என்று காட்டுகிறது
#கற்கைநன்றே
காலை 6.30 மணியளவில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், கிராமத்தில் இருந்து வந்திருக்கும் ஒரு தாயும் மகளும், அண்ணா அரங்கத்திற்கு வழிகேட்டபடி நின்றுள்ளனர். 8.30 மணிக்கு துவங்க இருக்கும் பி.எஸ்.சி அக்ரிகல்ச்சர் படிப்பிற்கான கவுன்சிலிங்கில்கலந்துகொள்வதற்காக, திருச்சிக்கு