#ஜாம்பவான் திருமாலின் அவதாரங்களில் மிகவும் முக்கியமான இரண்டு அவதாரங்கள் இராம அவதாரமும், கிருஷ்ண அவதாரமும். தேவர்கள் மற்றும் முனிவர்களை தவிர்த்து இந்த இரண்டு அவதாரங்களையும் பார்த்தது யாருமில்லை என்று நினைப்போம். ஆனால் உண்மையில் ஒருவர் மட்டும் இந்த இரண்டு அவதாரங்களிலும் வந்ததோடு
அவர்களுக்கு உதவியும் செய்துள்ளார்.
யாருக்குமே கிடைக்காத இந்த அதிர்ஷ்டம் கிடைத்த அவரின் பெயர் #ஜாம்பவான். இவரை #ஜாம்பவந்தா என்றும் அழைப்பார்கள். கரடிகளின் ராஜாவான இவர் மிகவும் சோம்பேறியான கரடியாக அனைவராலும் அறியப்படுகிறார். பிரம்மாவின் மகன்களுள் ஒருவரான இவர் சாகாவரம் பெற்றவர்
என்று கூறப்படுகிறது. இவர் #ரிக்ஷராஜா என்று அழைக்கப்பட்டார். ரிக்ஸ என்பது வானரங்களின் ஒருவகையாகும் பின்னாளில் இது கரடி என்று கூறப்பட்டது. இவர் ராவணனுடனான போரில், இமயமலையின் மன்னராக இருந்த இவர், இராமருக்கு உதவி செய்ய கரடியாக படைக்கப் பட்டார். போரில் உதவி செய்ததற்காக இவருக்கு இராமர்
நீண்ட ஆயுளுடனும், அழகுடனும் மற்றும் பத்துலட்ச சிங்கங்களின் பலத்துடன் இருப்பாய் என்று வரம் வழங்கினார். #ராமாயணத்தில் ஜாம்பவந்தா இராமரின் மனைவியான சீதையை கண்டு பிடிப்பதற்கும், இராமரின் எதிரியான இராவணனுடன் போர் புரியவும் அவருக்கு உதவி புரிந்தார். ஆஞ்சநேயர் தன்னுடைய மகத்தான திறமைகளை
உணரவும், கடல் கடந்து சென்று இலங்கையில் சீதையை தேடும்படியும் கூறியது இவர் தான்.
#மகாபாரதத்தில் ஜாம்பவாந்தா ப்ரசேனனை கொன்று சியாமந்தக ரத்தினைத்தை எடுத்துச் சென்ற சிங்கத்தை கொன்று அந்த ரத்தினத்தை கைப்பற்றினார். சியாமந்தக திருட்டு பழி கிருஷ்ணர் மீது விழவே அவர் அதை துடைக்கும்
பொருட்டு வனத்திற்குள் சென்றார். அங்கு ப்ரசேனன் கொல்லப் பட்டதையும், சியாமந்தகம் ஜாம்பவந்தாவிடம் சென்றதையும் அறிந்த கிருஷ்ணர் அவரின் குகைக்கு சென்றார். அங்கு இருவருக்கும் இடையில் கடும் போர் நடந்தது, கிட்டத்தட்ட 28 நாட்களுக்கு பிறகு ஜாம்பவந்தா தான் யாருடன் போர் புரிகிறோம் என்பதை
அறிந்து கொண்டார். எனவே அவர் சியாமந்தகத்தை கொடுத்ததோடு தன் மகள் #ஜாம்பவதியையும் கிருஷ்ணருக்கு கொடுத்தார். ஜாம்பவந்தா மிகவும் அனுபவம் வாய்ந்தவராகவும், அறிவில் சிறந்தவராகவும் விளங்கினார். ராஜ்ஜியத்தை வழி நடத்துவதில் இவர் அதிக ஞானம் உடையவராக இருந்தார். சுக்ரீவனின் ஆலோசகர்களில் ஐவரில்
ஒருவராக இருந்தார். சுக்ரீவன் தன் ஆலோசகர்களுடன் ரிஷ்யமுகா மலையில் வசித்து வந்தார். இராமரும், இலட்சுமணனும் அங்கு வந்தபோது அவர்களின் நோக்கம் என்ன அவர்கள் யார் என்பதை அறிந்து கொள்ள அனுமனை அனுப்பியது அவர்தான். ஜாம்பவந்தா தன் இளமைப் பருவத்தில் மாபெரும் சக்திசாலியாக விளங்கினார்.
மூவுலகயைம் 7 சுற்றுகள் சுற்றுமளவிற்கு இவரிடம் ஆற்றல் இருந்தது. இராவணனுடன் போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் இவர் மிகவும் ஆக்ரோஷமானவராகவும், வேகமானவராகவும் இருந்தார். மூர்க்கத் தனமாக இராவணனை தாக்கிய இவர் இராவணனின் மார்பில் எட்டி உதைத்ததில் இராவணன் தன் ரதத்தை விட்டு கீழே விழுந்தான்
இதன் விளைவாக இராவணனின் ரதம் நொறுக்கப்பட்டது. ஜாம்பவந்தாவின் நகரமாக கருதப்படுவது இப்போது மத்திய பிரதேசத்திலுள்ள #ஜம்தான் கிராமம் ஆகும். இது ரத்தலம் மாவட்டத்தில் உள்ளது. இது ஜாம்பவந்தாவின் நகரம் என்று அழைக்கப்படுகிறது. புராதான கால குறிப்புகளும், ஆதாரங்களும் இங்கிருந்து கிடைத்து
உள்ளது. ஜாம்பவந்தாவின் வீரம், அனுபவம் அனைத்தையும் விட அவரின் கடவுள் பக்தியே முதன்மையானதாகும். அவர் கடவுள் பக்தியில் சிறந்து விளங்கியதால் தான் அவருக்கு ஒரே பிறவியில் திருமாலின் இரண்டு அவதாரங்களான இராமரையும், கிருஷ்ணரையும் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. ஜாம்பவந்தா எவராலும்
தோற்கடிக்க முடியாத ஒருவராவார். இராமாயணத்தின் போதே இராமர் நாம் மீண்டும் சந்திப்போம் உன்னை நான் தோற்கடித்தால் மட்டுமே உன்னால் என்னை அடையலாம் காண முடியும் என்று கூறியிருந்தார். அதன்படி சியாமாந்தக ரத்தினத்திற்காக கிருஷ்ணர் போர் புரிந்த பொது 28 நாட்களுக்கு பிறகு ஜாம்பவந்தாவை
தோற்கடித்த பிறகே அவரால் கிருஷ்ணரை அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது.
நம் புராணங்களை தெரிந்து கொள்வோம். அவை சொல்லும் கருத்துகள் படி வழி நடப்போம்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#ராமாயணம்_சொல்லும்_பாடம்#Hanumath_Jayanhi
மாருதி எனும் வாயுபுத்திரன் ராம ஸேவை ஒன்றையே லட்சியமாகக் கொண்டு, ராம நாமத்தையே யுகம் யுகமாக ஜபித்துக் கொண்டு இருப்பவன். அப்பேர்பட்ட ஹனுமனுக்கும் ஸ்ரீராமருக்கும் யுத்தம் நடந்துள்ளது. எப்படி? அப்படியொரு
சம்பவம் நம் புராணங்களில் சொல்லப்
பட்டிருக்கிறது. பட்டாபிஷேகத்துக்குப் பிறகு நீதி தவறாது ராமராஜ்ஜியம் நடத்தி வந்த ஸ்ரீராமர், மக்களின் நலன் கருதி, நாட்டின் வளமைக்காக, வசிஷ்டர், விஸ்வாமித்திரர், அத்ரி முதலான மகரிஷிகளைக் கொண்டு யாகம் ஒன்றை நடத்தினார், அயோத்தியை அடுத்த அழகிய வனத்தில், பெரிய யாக குண்டங்கள் அமைத்து,
முனிவர்கள் யாகத்தை நடத்திக் கொண்டு இருந்தனர். சக்கரவர்த்தி ஸ்ரீராமரின் ராஜ்ஜியத்துக்கு உட்பட்ட ஒரு சிறிய நாட்டின் மன்னன் சகுந்தன். அவன் ஒருநாள், வேட்டையாடிவிட்டு வரும்போது, யாகசாலைக்கு அருகில் வந்தான். தான் வேட்டையாடிவிட்டுத் திரும்பியிருந்தபடியால், யாக சாலைக்குள் நுழைவது சரியல்ல
இன்று #பங்குனி_உத்திரம்
பங்குனி உத்திரம் என்பது பௌர்ணமியும் உத்திரம் நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாளாகும். மற்ற மாதங்களில் வரும் பௌர்ணமியைக் காட்டிலும் பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரமும் சந்திரனும் ஒரே நேர்கோட்டில் இணையும் போது தோன்றும் பௌர்ணமி நிலவு மிகப் பெரியதாகவும்
மிகப் பிரகாசமாகவும் தோன்றும். மற்றொரு சிறப்பு என்னவென்றால், தமிழ் மாதங்களில் பனிரெண்டாவது மாதம் பங்குனி, அதே போல் நட்சத்திர வரிசையில் பனிரெண்டாவது நட்சத்திரம் உத்திரம். பங்குனி உத்திர நாளில் தான் தெய்வீக திருமணங்கள் அதிகம் நிகழ்ந்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. ஸ்ரீராமபிரான்-சீதா
தேவி, லட்சுமணன்-ஊர்மிளை, பரதன்-மாண்டவி, சத்ருக்கணன்-ச்ருத கீர்த்தி என ஸ்ரீராம சகோதரர்களின் திருமணம் இன்று நடந்தது. பங்குனி உத்திரத் திருவிழாவின் நாயகனான முருகப் பெருமான்-தெய்வானையை திருமணம் செய்து கொண்டதும் இந்த நன்னாளில் தான். அதோடு ஸ்ரீவள்ளிக்குறத்தி அவதரித்த நாளும் இந்த நாள்
#எட்டுக்குடி_முருகன்_திருக்கோயில்
நாகப்பட்டினம் அருகிலுள்ள பொருள்வைத்த சேரி என்கிற ஊரில் இறைத்தன்மை கொண்ட சிற்பி ஒருவன் வாழ்ந்து வந்தான். எப்போதும் சரவண பவ என்று உச்சரித்தவாறு இருந்த அந்த சிற்பி ஒரு அற்புதமான முருகன் சிலையை செதுக்கினான். அப்போது ஆட்சியில் இருந்த சோழ மன்னன்
அச்சிற்பி வடித்த சிலையில் சொக்கி போனான். இது போன்று தெய்வீகமான வேறு சிலைகளை அச்சிற்பி செதுக்கக் கூடாது என்ற எண்ணத்தில் அந்த சிற்பியின் கட்டை விரலை மன்னன் வெட்டி வீசினான். இதனால் வேதனையடைந்த சிற்பி பக்கத்துக்கு ஊருக்கு வந்தான். அந்த ஊரில் தன் விடா முயற்சியால் மற்றொரு அற்புதமான
முருகன் சிலையை வடித்தான். தெய்வீகமான அந்த சிலையில் இருந்து ஒளி வீச தொடங்கியது. சிற்பம் முழுவதுமாக முடிவதற்குள் அச்சிலைக்கு உயிர் வந்து சிலையில் முருகன் அமர்ந்திருக்கும் மயில் பறக்க தொடங்கியது. அதை கண்ட மன்னன் அந்த மயிலை “எட்டிப்பிடி” என உத்தரவிட்டான். அதன் பிறகு அந்த மயில் அங்கேய
#MahaPeriyava
Source: "Hindu Dharma"- English translation of #Deivathin_Kural a collection of invaluable and engrossing speeches of Sri Sri Sri Chandrasekharendra Saraswathi MahaSwami
"There are a number of simple rites, the performance of which will free you from inner
impurities. From generation to generation our forefathers performed them and earned happiness and contentment. We must follow in their footsteps. We do not have to go in search of any new way of life, any new doctrine or belief. We can learn from the great men of our past who
have left us lessons not only in Atmic matters but in the conduct of family and social life. For instance, kinship and friendship in their time were based on high principles. When there was a marriage or obsequial ceremony all friends and relatives came forward to help. It was
#மகாபெரியவா
கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி-05-05-2016 தேதியிட்ட குமுதம் பக்தி (சுருக்கமான ஒரு பகுதி)
பழையனூர் என்ற ஊரில் மகா பெரியவாளின் பக்தர் ஒருவர் மாதம் ஒரு முறையாவது பெரியவாளை தரிசனம் பண்ண வந்துடுவார். சொந்த ஊரில் வேலை பார்த்து வந்த
அவரை சென்னைக்கு வேலை மாத்தல் உத்தரவு வந்தது. பட்டணம் வந்ததும் வாங்கின சம்பளத்தில் செலவெல்லாம் போக மிச்சம் பார்த்த அவருக்கு இங்கே கைக்கு வாங்கறது வாய்க்கும் வயத்துக்குமே சரியா இருக்கு என்பது புரிந்தது. மாதம் ஒரு முறை பெரியவாளை தரிசனம் செய்தவர் ஆறேழு மாசத்துக்கு ஒரு தரம் கூட வர
முடியலை. பொருளாதார நிலைமை குறைந்து கொண்டே போனது. ஒரு நாள் காதில் போட்டு இருந்த கடுக்கனையும் கழட்டி விற்கிற நிலைமை வந்தது. ரொம்பவே மனம் உடைந்து போனவர், பரமாசார்யா படத்துக்கு முன்னால் நின்னு, "இப்படி ஒரு நிலை எனக்கு வந்துடுத்தே. பகவானே நீங்க பார்த்துண்டு இருக்கலாமா? பாரம்பரியமா