April 6th, 2023: @Twitter has been randomly shutting down API access for many apps and sadly we were affected today too. Hopefully we will be restored soon! We appreciate your patience until then.
திருமணத்தில் ஒரு பெண்ணின் கழுத்தில் தாலி ஏறியவுடனேயே அவளுடைய குல தெய்வம் புகுந்த வீட்டின் குல தெய்வம் ஆகி விடும் என்பது சாஸ்திரம்.
திருமணம் ஆகி குழந்தைகள் பிறந்த பின் அந்த பெண்ணுக்கு விவாகரத்து ஏற்பட்டால் அவள் எந்த குலதெய்வத்தை வணங்க வேண்டும்?
விவாகரத்து ஆவதற்கு முன் அவருக்கு குழந்தை பிறந்து இருந்தால் விவாகரத்து ஆன பின் அந்த குழந்தைகள் எந்த குலதெய்வத்தை வணங்க வேண்டும்?
இவை இரண்டுமே மிக முக்கியமான கேள்விகள் ஆகும்.
பொதுவாகவே பெண்கள் மட்டும் வெவ்வேறு குல தெய்வங்களை வணங்குபவர்களாக படைக்கப்பட்டு உள்ளார்கள்.
பிறந்த வீட்டில் இருக்கும்வரை அவளது தந்தையின் குலதெய்வத்தை ஆராதித்து வருகின்றாள்.
ஆனால் திருமணம் ஆகி புகுந்த வீட்டில் சென்ற பின் இன்னொரு தெய்வத்தை குலதெய்வமாக ஏற்றுக் கொண்டு பிறந்த வீட்டில் வணங்கி வந்திருந்த குலதெய்வ வழிபாட்டை துறக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விடுகின்றது.
திருமணம் ஆன பெண்கள் மாற்று குலதெய்வத்தை ஏற்கும் நிலை சாஸ்திரங்களின் அடிப்படையில் அமைந்தது.
அந்த நிலை ஒரு குலதெய்வம் அதுவரை தம்முடைய பாதுகாப்பில் இருந்த ஒருவரை இன்னொரு குலதெய்வத்திடம் அதே காரணத்திற்காக தாமாகவே ஒப்படைக்கும் தெய்வீக நிலைப்பாடாகும்.
ஒரு பெண்ணுக்கு பிறந்த வீட்டின் குலதெய்வமே நிரந்தர மற்றும் நிலையான தெய்வம் என்றாலும் திருமணம் ஆனபின் அதே குலதெய்வ அனுமதியுடன் ஒரு பெண்ணால் ஏற்கப்பட வேண்டிய குலதெய்வம் கணவர் வீட்டின் குலதெய்வம் ஆகும்.
தாலி கழுத்தில் ஏறியதும் அதுவரை அவளை அனைத்து நிலையிலும் பாதுகாத்து வந்திருந்த அவளது பிறந்த வீட்டின் குல தெய்வம் தனது பொறுப்பை விலக்கிக் கொண்டு அந்த பொறுப்பை அவள் புகுந்த வீட்டு குலதெய்வத்திடம் ஒப்படைத்து விடுகின்றது.
அது முதல் அவள் மீதான அனைத்து அதிகாரங்களும் புகுந்த வீட்டு குலதெய்வத்தின் கையில் சென்று விடும்.
இது குல தெய்வங்களுக்கு இடையே வகுக்கப்பட்டு உள்ள பிரம்ம நியதியாகும்.
அதனால் தான் புகுந்த வீட்டுக்கு சென்று விடும் பெண்ணின் குல தெய்வமும் கணவன் வீட்டினரின் குல தெய்வம் ஆகி விடுகின்றது.
சாஸ்திரங்களின்படி ஆணோ அல்லது பெண்ணோ எந்த குழந்தையாக இருந்தாலும் ஒரு தாய் தந்தைக்கு பிறக்கும் குழந்தைகள் அவர்களோடு இரத்த சம்மந்தம் கொண்டவை.
ஆகவே தாய் தந்தையோடு உள்ள அவர்களது அனைத்து குழந்தைகளுக்கும் அவர்களது தந்தை மற்றும் அவருடைய பதிமூன்று முன் தலைமுறையினர்
வழிபட்ட தெய்வமே அடிப்படை மற்றும் நிரந்தர தெய்வம் ஆகும்.
இந்த அடிப்படை நியதி அந்த வீட்டில் பிறக்கும் அனைத்து ஆண் குழந்தைகளுக்கும், அவர்களுக்கு திருமணம் ஆனாலும், இல்லை தனியாகவே இருந்தாலும், மாறாத நியதியாக இருக்கும்.
ஆனால் இந்த நிலை பெண் குழந்தைகளுக்கு மாறுபடும்.
பிறந்த வீட்டு தெய்வம் அவளுடைய தந்தை வீட்டில் வாழுந்தவரை அந்த பெண்ணை பாதுகாக்கும் பொறுப்பு அந்த வீட்டினரின் குலதெய்வத்தை சார்ந்தது என்பது அடிப்படை தத்துவம் ஆகும்.
ஒரு பெண்ணின் திருமணத்துக்குப் பிறகு தான் அவளை புகுந்த வீட்டின் தெய்வத்திடம் தந்தை வீட்டு தெய்வம் குலதெய்வ நியதிகளின் படி ஒப்படைக்கின்றது.
திருமணம் ஆகி புகுந்த வீட்டுக்கு செல்லும் பெண்களின் குல தெய்வம் கணவர் வழிபடும் குலதெய்வமாக மாறி விடுவதினால்,
திருமணம் ஆகி புகுந்த வீட்டுக்கு செல்லும் பெண்களின் நலனைப் பாதுகாக்கும் பொறுப்பை பிறந்த வீட்டு தெய்வம் அவளுடைய புகுந்த வீட்டினரின், அதாவது தனது சகோதர, சகோதரி குல தெய்வத்திடம் தற்காலிகமாக ஒப்படைத்து விடுகின்றது.
ஆனால் அவளை தன்னை விட்டு முற்றிலும் விலக்கி விட வில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
விவாகரத்து பெறும் பெண்ணின், அதாவது புகுந்த வீட்டினரின் குலதெய்வம், மீண்டும் அவளை அவளது மூல குலதெய்வத்திடம் (பெற்றோர் வணங்கிய) ஒப்படைத்து விடுகின்றது.
விவாகரத்து பெற்ற பெண் கணவனை பிரிந்து ஒன்று பிறந்த வீட்டிற்கு வந்து விட்டாள், இல்லை தனியாகவே வாழத் துவங்குகிறாள்.
சில காலம் கடந்த பின் இன்னொரு கணவரை மணந்து கொண்டு விட்டால் அவருடைய குலதெய்வத்தை ஆராதிக்கத் துவங்க வேண்டும்.
கணவனை பிரிந்து விடும் ஒரு பெண், இன்னொரு திருமணம் செய்து கொள்ளும் வரை அந்த இடைப்பட்ட காலத்தில் அவளுக்கு நேரடி இரத்த சம்மந்தம் உள்ள தந்தையின் குலதெய்வத்தையே தற்காலிக குலதெய்வமாக மீண்டும் ஏற்க வேண்டும் என்பது நியதி ஆகின்றது.
இந்த நிலை அவள் மீண்டும் மறுமணம் செய்து கொள்வதை பொறுத்தது.
விவாகரத்து ஆன பெண்கள் திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்து கொண்டு இருந்தால் அவர்கள் வணங்கி கொண்டு இருக்க வேண்டிய குலதெய்வம் தந்தை வீட்டு குலதெய்வமே ஆகும்.
விவாகரத்து ஆனவர்களுக்கு பிறந்திருந்த குழந்தைகள் நேரடி இரத்த சம்மந்தம் உள்ள தந்தையின் குலதெய்வத்தைத் தான் ஏற்க வேண்டும் என்பது நியதி.
இதில் எந்த வித கருத்து வேறுபாடும் கிடையாது.
விவாகரத்து ஆனவர்களுக்கு பிறந்திருந்த ஆண் குழந்தைகள் தாயாரோடு வளர்ந்தாலும் சரி தந்தையோடு வளர்ந்தாலும் சரி அவர்கள் வணங்க வேண்டிய குலதெய்வம் மூல தந்தையின் குலதெய்வத்தையே சார்ந்து இருக்கும்.
பெண் குழந்தைகளை பொறுத்தவரை அவர்களது குலதெய்வம் அவர்களுடைய திருமணத்தின் போது மாறி விடுகின்றது என்பதினால் பெண் குழந்தைகள் பற்றிய சச்சரவு கிடையாது.
பஞ்ச சம்ஸ்காரம் என்பது வழிப்படுத்தும் ஐந்து வகையான நெறிமுறை ஆகும். சிறப்பு பதிவு.
1) பெருமாளின் சங்கு, சக்கரம் ஆகியவற்றை நிரந்தரமாக உடலில் தரித்துக்கொள்ளும் #தாபசம்ஸ்காரம்.
2) நெற்றியில் மட்டுமின்றி உடலில் பன்னிரு இடங்களில் பன்னிரு மூர்த்திகளை தியானித்து திருமண் காப்பு அணியத் துவங்குதல் #புண்ட்ரசம்ஸ்காரம் ஆகும்.
3) பெற்றோர்கள் வைத்த பெயரைத் தவிர ஆச்சார்யன் (குரு) சூட்டும் நாமமாக ஒன்றை வைத்துக் கொள்ளுதல் #நாமசம்ஸ்காரம் ஆகும்.
4) எட்டெழுத்தான நாராயண மந்திரத்தையும் மறை பொருளோடு த்வயம், சரம ஸ்லோகம் (மோட்சத்துக்கான வழி) ஆகியவற்றையும் ஆச்சாரியன் மூலம், வலது செவியில் உபதேசமாகப் பெறுதல் #மந்திரசம்ஸ்காரம் ஆகும்.