April 6th, 2023: @Twitter has been randomly shutting down API access for many apps and sadly we were affected today too. Hopefully we will be restored soon! We appreciate your patience until then.
கிரஹண புண்ணிய காலங்களில் வேதாத்யயன ஸம்பத்து உள்ள பெரியோர்களுக்கு தானம் செய்ய வேண்டும்.
யாசித்தாலும் தன் சக்திக்குத் தகுந்தபடி ஸ்ரத்தையுடன் கொடுக்க வேண்டும்.
ஜலம் தானம் கொடுப்பவன் திருப்தியையும்,
அன்னம் கொடுப்பவன்
குறைவில்லா சுகத்தையும்,
எள்ளு கொடுப்பவன் நல்ல சந்ததியையும்,
தீபம் கொடுப்பவன் நல்ல கண்ணையும்,
பூமியைக் கொடுப்பவன் பூமியையும்,
தங்கம் கொடுப்பவன் தீர்க்கமான ஆயுஸ்ஸையும்,
வீடு கொடுப்பவன் உயர்ந்த வீடுகளையும்,
வெள்ளி கொடுப்பவன் உயர்ந்த ரூபத்தையும்,
வேஷ்டி கொடுப்பவன் சந்திர லோகத்தையும்
அந்த அந்த தானத்திற்குத் தகுந்தபடி பலன் கூறப்பட்டது.
எல்லா தானத்தைக் காட்டிலும் வேத தானம்/வேதம் சொல்லிக் வைப்பது உயர்ந்தது.
தானம் யாருக்கும் செய்யலாம். ஆனால் பாத்ரம், காலம் இவைகளை அனுசரித்து பலன் அதிகம். கலியில் தானத்திற்கு மகிமை அதிகம். ஸ்ரத்தையுடன் தானம் செய்ய வேண்டும்.
#பீஷ்மபிதாமகரே எந்த தானம் சிறந்தது? பிராமணர்களுக்கு திருப்தி அளிப்பது அவற்றில் எது? அதால் என்ன பயன் கிடைக்கும்? என்று #யுதிஷ்டிரன் கேட்டான்.
“யுதிஷ்டிரா. இந்த கேள்வியை நீ மட்டும் கேட்டாய் என்று நினைக்காதே. உனக்கு முன் நானே இதை நாரதரிடம் கேட்டிருக்கிறேன். அவர் என்ன சொன்னார்
தெரியுமா? கேள்:
உணவு ஒன்றே அனைவரும் விரும்புவது. உயிர்கள் அனைத்துக்கும் ஆதார தேவை அது. அன்னதானத்துக்கு ஈடானது எதுவுமில்லை. உலகமே இயங்கும் சக்தி அதில் தான் உள்ளது. பித்ருக்களுக்கு ஸ்ராத்தம் என்பது கூட அவர்களுக்கு தேவையான உணவை வருஷத்துக்கு ஒரு முறையாவது பிண்டமாக அளிப்பதே.
எள்ளும் நீரிலுமே மனமுவந்து அவர்கள் சந்ததியை வாழ்த்துகிறார்கள். இந்த ஒரு தானத்தில் தான் பெறுபவன் முழுதும் திருப்தி அடைய வழி உள்ளது. அவன் போதும் என்று சொல்வது இந்த ஒரு தானத்தை பெறும்போது மட்டும் தான். யுதிஷ்டிரா, ஒரு தரம் தேவகியும் நாரதரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது நாரதர்
தானம் கொடுக்கும் சிறந்த காலங்களை விளக்கினார். 1. கிருத்திகை அன்று நெய் பாயசம் தானம் செய்தவன் பரம சந்தோஷம் பெறுவான். 2. ரோஹிணியில் அன்ன தானம் செய்தால் கடன் தொல்லை தீரும். 3. மிருகசீரிஷத்தில் கோ தானம் கன்றுக் குட்டியுடன் செய்பவன் விஷ்ணு லோகம் செல்கிறான். 4. புனர்பூசத்தில் இனிப்பும்
உணவும் தானமும் செய்பவன் சிறந்த புகழ், பெருமை, அழகை பெறுகிறான். 5. பூசத்தில் தங்கம் ஒரு பொட்டாவது தானம் செய்பவன் தேக காந்தி பெறுகிறான். 6. ஆயில்யத்தில் வெள்ளியில் நந்தி, தருபவன் பயத்திலிருந்து விடுபட்டு செல்வம் அவனிடம் சேர்கிறது. 7. மகத்தில் மண்பாத்திரத்தில் எள் தானம் செய்பவன்
புத்ர சந்தான அபிவிருத்தி பெறுகிறான். 8. உத்தரத்தில் பால் சாதம் வழங்குபவன் புண்யம் கூடுகிறது. 9. ஹஸ்தத்தில் யானை தானம் சிறந்தது. 10. சித்திரையில் வாசனை திரவியம் தானம் செய்பவன் கந்தர்வன் ஆகிறான். 11. ஸ்வாதியில் காசு தானம் செய்பவன் இந்திரனோடு வாசம் செயகிறான். 12. அனுஷத்தில் வஸ்திர
தானம் செய்பவன் ஸ்வர்கத்தில் நூறு யுகம் இருப்பான். 13. மூலத்தில் பழங்கள், கிழங்குகள் கொடுப்பவன் பித்ருக்களின் ஆசியை பெறுகிறான். 14. உத்தராடத்தில் பார்லி ஜலம், நெய் கரும்புச்சாறு கொடுத்தவன் விண்ணுலகத்தில் வெள்ளைத் தேரில் ஏறி பயணம் செய்வான். 15. ஆவணியில் போர்வை கொடுத்தவன்
பசுக்கள் நிறைய பெறுவான்.
சில தான வசதிகள் எதிர்பார்ப்புகள் பற்றி மட்டுமே உதாரணமாக கொஞ்சம் மட்டுமே மேலே குறிப்பிட்டவை. இன்னும் நிறைய இதுபோல் இருக்கிறது.
“தானங்களை பற்றி சொல்லும்போது ஒரு கதை நினைவுக்கு வருகிறது சொல்கிறேன் கேள்” என்கிறார் பீஷ்மர்.
யமன் தன்னுடைய தூதனை கூப்பிட்டு
''கங்கை யமுனைக்கு இடையே ஒரு பிரதேசம் உள்ளது. அங்கே நிறைய ப்ராமணர்கள் வசிக்கிறார்கள். அங்கே அகஸ்தியர் வம்சத்தை சேர்ந்த சர்மின் என்ற வேதங்கள் கற்று உபதேசிக்கும் ரிஷி ஒருவர் இருக்கிறார். அவரைப் போலவே மற்றொருவரும் அதே கல்வி கேள்வி ஞானத்தோடு அருகே அதே ஊரில் வசிக்கிறார். ஆளை மாற்றி
கொண்டு வந்துவிடாதே. சர்மினைக் கொண்டுவரும் போது மற்றவர்கள் போல் கயிற்றால் இழுத்துக் கொண்டு வந்து விடாதே. பவ்யமாக நமஸ்கரித்து மரியாதையோடு அழைத்து வா. அவரிடம் சில விஷயங்கள் கேட்டுவிட்டு அவரைத் திரும்ப கொண்டுவிட வேண்டும்.” யமதூதன் எதிர்பார்த்த படியே தவறாக மற்ற பிராமண ரிஷியை அழைத்து
கொண்டுவந்து விட்டான். பிராமண ரிஷியை எழுந்து வணங்கி யமன் வரவேற்றான். தூதனை அழைத்தான். ''சொல்லி அனுப்பியும் தப்பாகவே செயகிறாயே. இவரை கொண்டு அங்கேயே விட்டுவிட்டு சர்மினை அழைத்து வா” என்று சொன்னான். வந்த பிராமண ரிஷி யமனைப் பார்த்து “யமதர்மா, எனக்கு பூலோகத்தில் வேதங்களை எல்லாம் கற்று
மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுக்கும் வேலை முடிந்து விட்டது. உன் கணக்குப் படி நான் இன்னும் எவ்வளவு காலம் பூமியில் இருக்க வேண்டுமோ அதை இங்கேயே கழித்து விடுகிறேனே” என்றார்.
“ப்ராம்மணோத்தமரே, எனக்கு உங்களுக்கு எவ்வளவு காலம் அங்கே இருக்கவேண்டும் என்று தெரிந்து கொள்ள கட்டளை இல்லை.
உங்கள் காலம் முடிந்த பிறகு மட்டுமே நான் அறிபவன். உங்கள் புண்ய பாப கர்மாகளுக்கு தக்கவாறு இங்கே இடவசதி அளிப்பவன். ஆகவே உங்கள் காலம் முடிவுக்கு வரும்வரை இங்கே உங்களை அனுமதிக்க இயலாது. ஆகவே உங்களை இவன் திரும்பக் கொண்டு செல்வான். வேறு ஏதாவது கேட்கவேண்டுமானால் கேளுங்கள்” என்றான்
யமன்.
“யமதர்மா, எதைச் செய்வதன் மூலம் ஒருவன் மூன்று உலகிலும் உயர்வும் மேன்மையும் பெறுகிறான்?”
“எள் தானம் தான் சிறந்தது. அதனால் கிடைக்கும் மேன்மை மற்றதற்கில்லை. உயர்ந்தது. ஒவ்வொரு நாளும் எள் தானம் செய்பவன் நினைத்ததை எல்லாம் அடைவான். ஸ்ராத்தங்களில் எள்ளுக்கு மிகவும் பிரதானம்.
அதை தானமாக அதனால் தான் கொடுக்கிறார்கள். பிராமணர்களுக்கு எள் தானம் நிறைய கொடு. அவர்களை துளியாவது எள்ளை சாப்பிட வை. (ஸ்ராத்தங்களில் எள்ளுருண்டை அவசியம் இதனால் தான்!) விசாக பவுர்ணமி அன்று பிராமணர்களுக்கு எள் தானம் பண்ணுவது உயர்ந்தது. அதே போல் தண்ணீர், விளக்குகள் ஆகியவற்றையும் நிறைய
தானம் பண்ண வேண்டும்.” என்றான் யமன்.
பண்டை காலத்தில் பிரபுக்கள், ராஜாக்கள் எல்லாம் நிறைய குளம் குட்டை, ஏரிகளை வெட்டி நீர் நிலைகளாக்கினார்கள். ஜல தானம் சுபிட்சத்தை தந்தது. (நாம் அவற்றை தூர்த்துவிட்டு, விற்று காசு
பண்ணுகிறோம். வீடு கட்டுகிறோம். வெள்ளத்தில் மூழ்குகிறோம்)
யம தூதன் அந்த பிராமணனை எங்கிருந்து கொண்டு வந்தானோ அங்கே விட்டுவிட்டு சர்மினை அழைத்து வருகிறான். சர்மினை வணங்கி யமன் அவனிடம் தனது சில சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டு சர்மினையும் திரும்ப கொண்டு விடச் சொல்கிறான்.
சர்மினுக்கும் எள், தண்ணீர், விளக்கு தானங்கள் பற்றி எமன் விளக்குகிறான். சர்மின் மற்றும் அவனுக்கு பதில் தவறாக யமனை சந்தித்த பிராமண ரிஷி இருவருமே பூமிக்கு திரும்பியவுடன் நிறைய எள் , நீர், விளக்கு தானம் செய்ய எல்லோருக்கும் அறிவுரை வழங்கினார்கள். யமன் தன்னுடைய தூதனை கூப்பிட்டு
“கங்கை யமுனைக்கு இடையே ஒரு பிரதேசம் உள்ளது. அங்கே நிறைய ப்ராமணர்கள் வசிக்கிறார்கள். அங்கே அகஸ்தியர் வம்சத்தை சேர்ந்த சர்மின் என்ற வேதங்கள் கற்று உபதேசிக்கும் ரிஷி ஒருவர் இருக்கிறார். அவரைப் போலவே மற்றொருவரும் அதே கல்வி கேள்வி ஞானத்தோடு அருகே அதே ஊரில் வசிக்கிறார். ஆளை மாற்றி
கொண்டு வந்துவிடாதே. சர்மினைக் கொண்டுவரும்போது மற்றவர்கள் போல் கயிற்றால் இழுத்துக் கொண்டு வந்து விடாதே. பவ்யமாக நமஸ்கரித்து மரியாதையோடு அழைத்து வா. அவரிடம் சில விஷயங்கள் கேட்டுவிட்டு அவரைத் திரும்ப கொண்டுவிட வேண்டும்.” யமதூதன் எதிர்பார்த்த படியே தவறாக மற்ற பிராமண ரிஷியை
அழைத்துக் கொண்டுவந்து விட்டான். பிராமண ரிஷியை எழுந்து வணங்கி யமன் வரவேற்றான். தூதனை அழைத்தான். ''சொல்லி அனுப்பியும் தப்பாகவே செயகிறாயே. இவரை கொண்டு அங்கேயே விட்டுவிட்டு சர்மினை அழைத்து வா '' என்று சொன்னான். வந்த பிராமண ரிஷி யமனைப் பார்த்து “யமதர்மா, எனக்கு பூலோகத்தில்
வேதங்களை எல்லாம் கற்று மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுக்கும் வேலை முடிந்து விட்டது. உன் கணக்குப் படி நான் இன்னும் எவ்வளவு காலம் பூமியில் இருக்க வேண்டுமோ அதை இங்கேயே கழித்து விடுகிறேனே” என்கிறார்.
“ப்ராம்மணோத்தமரே, எனக்கு உங்களுக்கு எவ்வளவு காலம் அங்கே இருக்கவேண்டும் என்று
தெரிந்து கொள்ள கட்டளை இல்லை. உங்கள் காலம் முடிந்த பிறகு மட்டுமே நான் அறிபவன். உங்கள் புண்ய பாப கர்மாக்களுக்கு தக்கவாறு இங்கே இடவசதி அளிப்பவன். ஆகவே உங்கள் காலம் முடிவுக்கு வரும் வரை இங்கே உங்களை அனுமதிக்க இயலாது. ஆகவே உங்களை இவன் திரும்பக் கொண்டு செல்வான். வேறு ஏதாவது
கேட்க வேண்டுமானால் கேளுங்கள்” என்றான் யமன்.
“யமதர்மா, எதைச் செய்வதன் மூலம் ஒருவன் மூன்று உலகிலும் உயர்வும் மேன்மையும் பெறுகிறான்?”
“எள் தானம் தான் சிறந்தது. அதனால் கிடைக்கும் மேன்மை மற்றதற்கில்லை. உயர்ந்தது. ஒவ்வொரு நாளும் எள் தானம் செய்பவன் நினைத்ததை எல்லாம் அடைவான்.
ஸ்ராத்தங்களில் எள்ளுக்கு மிகவும் பிரதானம். அதை தானமாக அதனால் தான் கொடுக்கிறார்கள். பிராமணர்களுக்கு எள் தானம் நிறைய கொடு. அவர்களை துளியாவது எள்ளை சாப்பிட வை. (ஸ்ராத்தங்களில் எள்ளுருண்டை அவசியம் இதனால் தான்!) விசாக பவுர்ணமி அன்று பிராமணர்களுக்கு எள் தானம் பண்ணுவது உயர்ந்தது. அதே
போல் தண்ணீர், விளக்குகள் ஆகியவற்றையும் நிறைய தானம் பண்ண வேண்டும்.” என்றான் யமன்.
பண்டை காலத்தில் பிரபுக்கள், ராஜாக்கள் எல்லாம் நிறைய குளம் குட்டை, ஏரிகளை வெட்டி நீர் நிலைகளாக்கினார்கள். ஜல தானம் சுபிட்சத்தை தந்தது. (நாம் அவற்றை தூர்த்து விட்டு, விற்று காசு பண்ணுகிறோம். வீடு
கட்டுகிறோம். வெள்ளத்தில் மூழ்குகிறோம்)
யம தூதன் அந்த பிராமணனை எங்கிருந்து கொண்டு வந்தானோ அங்கே விட்டுவிட்டு சர்மினை அழைத்து வந்தான். சர்மினை வணங்கி யமன் அவனிடம் தனது சில சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டு சர்மினையும் திரும்ப கொண்டு விடச் சொல்கிறான். சர்மினுக்கும் எள், தண்ணீர்,
விளக்கு தானங்கள் பற்றி எமன் விளக்குகிறான். சர்மின் மற்றும் அவனுக்கு பதில் தவறாக யமனை சந்தித்த பிராமண ரிஷி இருவருமே பூமிக்கு திரும்பியவுடன் நிறைய எள் , நீர், விளக்கு தானம் செய்ய எல்லோருக்கும் அறிவுரை வழங்கினார்கள்.
#MahaPeriyava
It was on May 1, 1969 when MahaSwamigal had darshan of Lord Balaji in Tirupati. He stepped out of the Sanctum Sanctorum after receiving the temple honours and prasadam. There was not a trace of tiredness in Him despite having waved the Chamaram (fan) for Lord
Venkateshwara during the entire Sahasranama Archana for the Lord in the Sanctum Sanctorum. Swamigal came out of the Sanctum Sanctorum in all His radiant Tejas! He then stood in a spot and raised His Hand. And then there was pin drop silence amongst the devotees who had assembled
there. Said He,
"I am going to bestow a spiritual instruction to you all, please listen. After waking up in the morning one must say 'Sri Venkateshaya Namaha' and in the night just before sleeping one must say 'Sri Venkateshaya Mangalam'!"
#மகாபெரியவா
குஜராத்தில் எங்கோ ஒரு கிராமத்தில் ஒரு சிறிய அழகான வீடு. கணவன்-மனைவி மட்டுமே! பெரியவாளைப் பற்றி எதுவுமே தெரியாத குஜராத்தி குடும்பம். ஒரு நாள் விடிகாலை. தூங்கியெழுந்து பல் துலக்கிவிட்டு, சூடான தேநீருக்காக காத்துக் கொண்டு இருக்கும் கணவரிடம் வந்தாள் அந்த அம்மா.
“நான் டீ போடுவதற்குள், முனையில் உள்ள கடையிலிருந்து இன்றைய ந்யூஸ் பேப்பரை கொஞ்சம் வாங்கிக் கொண்டு வந்து விடுங்களேன்”கடைக்குப் போய் பேப்பரை வாங்கிக் கொண்டுவந்து மனைவியிடம் தந்தார்.
மடமடவென்று குஜராத்தி மொழியில் இருந்த பேப்பரைப் பிரித்து, அங்கே இங்கே கண்களை ஓடவிட்டாள்.
கடைசி
பக்கத்தில் முழுப் பக்கத்துக்கு ஒரு விளம்பரம்! ராமேஶ்வரத்தில் ஸமுத்ர ஸ்நானம் பண்ணும் இடத்தில், ஸமுத்ரத்தை பார்த்தபடி ஸ்ரீ ஶங்கர பகவத்பாதாள் நான்கு ஶிஷ்யர்களோடு கூடிய அழகான பெரிய பளிங்கு மூர்த்தங்கள், பெரியவாளுடைய திவ்ய ஹஸ்தங்களால் ப்ரதிஷ்டை செய்யப் படப் போகும் வைபவத்தையும், அந்த
#ராமாயணம்_சொல்லும்_பாடம்#Hanumath_Jayanhi
மாருதி எனும் வாயுபுத்திரன் ராம ஸேவை ஒன்றையே லட்சியமாகக் கொண்டு, ராம நாமத்தையே யுகம் யுகமாக ஜபித்துக் கொண்டு இருப்பவன். அப்பேர்பட்ட ஹனுமனுக்கும் ஸ்ரீராமருக்கும் யுத்தம் நடந்துள்ளது. எப்படி? அப்படியொரு
சம்பவம் நம் புராணங்களில் சொல்லப்
பட்டிருக்கிறது. பட்டாபிஷேகத்துக்குப் பிறகு நீதி தவறாது ராமராஜ்ஜியம் நடத்தி வந்த ஸ்ரீராமர், மக்களின் நலன் கருதி, நாட்டின் வளமைக்காக, வசிஷ்டர், விஸ்வாமித்திரர், அத்ரி முதலான மகரிஷிகளைக் கொண்டு யாகம் ஒன்றை நடத்தினார், அயோத்தியை அடுத்த அழகிய வனத்தில், பெரிய யாக குண்டங்கள் அமைத்து,
முனிவர்கள் யாகத்தை நடத்திக் கொண்டு இருந்தனர். சக்கரவர்த்தி ஸ்ரீராமரின் ராஜ்ஜியத்துக்கு உட்பட்ட ஒரு சிறிய நாட்டின் மன்னன் சகுந்தன். அவன் ஒருநாள், வேட்டையாடிவிட்டு வரும்போது, யாகசாலைக்கு அருகில் வந்தான். தான் வேட்டையாடிவிட்டுத் திரும்பியிருந்தபடியால், யாக சாலைக்குள் நுழைவது சரியல்ல
இன்று #பங்குனி_உத்திரம்
பங்குனி உத்திரம் என்பது பௌர்ணமியும் உத்திரம் நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாளாகும். மற்ற மாதங்களில் வரும் பௌர்ணமியைக் காட்டிலும் பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரமும் சந்திரனும் ஒரே நேர்கோட்டில் இணையும் போது தோன்றும் பௌர்ணமி நிலவு மிகப் பெரியதாகவும்
மிகப் பிரகாசமாகவும் தோன்றும். மற்றொரு சிறப்பு என்னவென்றால், தமிழ் மாதங்களில் பனிரெண்டாவது மாதம் பங்குனி, அதே போல் நட்சத்திர வரிசையில் பனிரெண்டாவது நட்சத்திரம் உத்திரம். பங்குனி உத்திர நாளில் தான் தெய்வீக திருமணங்கள் அதிகம் நிகழ்ந்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. ஸ்ரீராமபிரான்-சீதா
தேவி, லட்சுமணன்-ஊர்மிளை, பரதன்-மாண்டவி, சத்ருக்கணன்-ச்ருத கீர்த்தி என ஸ்ரீராம சகோதரர்களின் திருமணம் இன்று நடந்தது. பங்குனி உத்திரத் திருவிழாவின் நாயகனான முருகப் பெருமான்-தெய்வானையை திருமணம் செய்து கொண்டதும் இந்த நன்னாளில் தான். அதோடு ஸ்ரீவள்ளிக்குறத்தி அவதரித்த நாளும் இந்த நாள்
#எட்டுக்குடி_முருகன்_திருக்கோயில்
நாகப்பட்டினம் அருகிலுள்ள பொருள்வைத்த சேரி என்கிற ஊரில் இறைத்தன்மை கொண்ட சிற்பி ஒருவன் வாழ்ந்து வந்தான். எப்போதும் சரவண பவ என்று உச்சரித்தவாறு இருந்த அந்த சிற்பி ஒரு அற்புதமான முருகன் சிலையை செதுக்கினான். அப்போது ஆட்சியில் இருந்த சோழ மன்னன்
அச்சிற்பி வடித்த சிலையில் சொக்கி போனான். இது போன்று தெய்வீகமான வேறு சிலைகளை அச்சிற்பி செதுக்கக் கூடாது என்ற எண்ணத்தில் அந்த சிற்பியின் கட்டை விரலை மன்னன் வெட்டி வீசினான். இதனால் வேதனையடைந்த சிற்பி பக்கத்துக்கு ஊருக்கு வந்தான். அந்த ஊரில் தன் விடா முயற்சியால் மற்றொரு அற்புதமான
முருகன் சிலையை வடித்தான். தெய்வீகமான அந்த சிலையில் இருந்து ஒளி வீச தொடங்கியது. சிற்பம் முழுவதுமாக முடிவதற்குள் அச்சிலைக்கு உயிர் வந்து சிலையில் முருகன் அமர்ந்திருக்கும் மயில் பறக்க தொடங்கியது. அதை கண்ட மன்னன் அந்த மயிலை “எட்டிப்பிடி” என உத்தரவிட்டான். அதன் பிறகு அந்த மயில் அங்கேய
#MahaPeriyava
Source: "Hindu Dharma"- English translation of #Deivathin_Kural a collection of invaluable and engrossing speeches of Sri Sri Sri Chandrasekharendra Saraswathi MahaSwami
"There are a number of simple rites, the performance of which will free you from inner
impurities. From generation to generation our forefathers performed them and earned happiness and contentment. We must follow in their footsteps. We do not have to go in search of any new way of life, any new doctrine or belief. We can learn from the great men of our past who
have left us lessons not only in Atmic matters but in the conduct of family and social life. For instance, kinship and friendship in their time were based on high principles. When there was a marriage or obsequial ceremony all friends and relatives came forward to help. It was