#மஹாபெரியவா அருள்வாக்கு
எமன் ஒரு நொடி நேரத்தைக் கூட வீணாகக் கழிப்பதில்லை. ஒவ்வொரு வினாடியும் நம்மை நெருங்கி வந்து கொண்டிருக்கிறான். எப்போது நம்மை பிடித்துக் கொள்வானோ தெரியாது. அதனால், அவன் வருவதற்குள் கடவுளின் பாதங்களைப் பற்றிக் கொண்டால் நமக்குப் பயமில்லை. கோபம் கொண்டவனோடு
பழகினால் நமக்கும் கோபம் வந்து விடுகிறது. தீயவனோடு பழகினால் நாமும் கெட்ட எண்ணம் கொண்டவனாக மாறி விடுகிறோம். யாரோடு பழகுகிறோமோ அவர்களுடைய குணங்கள் நம்முள் உண்டாகி விடுகின்றன. அதனால் நல்லவர்களுடன் மட்டும் பழக்கம் கொள்வது அவசியமானதாகும். நமக்கு உண்டாகும் கஷ்டங்களைக் கண்டவர்களிடமும்
சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். கேட்பவர்கள் எப்படி எடுத்துக்கொண்டார்களோ என்று சிந்தித்து மேலும் கஷ்டப்படாதீர்கள். கஷ்டத்தை பிறரிடம் சொல்வது என்று முடிவெடுத்தால், அதை கடவுளிடம் மட்டும் சொல்லுங்கள். நிச்சயம் வழி பிறக்கும். மனிதன் மிருக நிலையில் இருக்கிறான். முதலில் மிருக
நிலையிலிருந்து மனிதனாக மாற வேண்டும். தர்மம், ஒழுக்கம், பக்தி முதலியவற்றை பின்பற்றினால் மட்டுமே மனிதனாக மாறமுடியும். பின்னரே மனிதன் தன்னை தெய்வநிலைக்கு உயர்த்த முடியும். -ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
காசியாத்திரை முடித்து கங்கா ஜலத்தை எடுத்து வந்த ஒரு பக்தர், தன் தாயாரின் ஆசைப்படி அதை பரமாசார்யரிடம் சேர்ப்பித்தார். அப்பொழுது அவர் முகாம் இட்டிருந்த இடத்தினருகே
உள்ள துங்கபத்ராவில் மூழ்கி ஸ்நானம் செய்த போது மகாபெரியவா கங்கா ஜலத்தையும் சிரசில் ஊற்றி குளித்தார். ஸ்நானம் அனுஷ்டானம் முடிந்ததும் அப்படியே ஆற்று மணலில் நடந்து முகாம் இருந்த இடத்துக்குப் புறப்பட்டார். இந்த சமயத்தில் கங்கா ஜலத்தை தந்திருந்த அந்த பக்தர், மகாபெரியவாளின் திருப்பாதம்
பதிந்த தடத்தைப் பார்த்தார். அந்த பக்தருக்கு எதோ பொறிதட்டினாற் போல் இருந்தது. பரமாசார்யா இது தனக்காகவே தந்திருக்கிற பிரத்யேக பிரசாதம் என்று தோன்றியது. உடனே ஆசார்யா பாதம் பதிஞ்சிருந்த மண்ணை அப்படியே சேகரிச்சு எடுத்து, தன்னிடம் இருந்த பட்டுத்துணியில் முடிச்சா கட்டி எடுத்துக் கொண்டார
#ஆதிசங்கர_பகவத்பாதாள்#விஷ்ணுசஹஸ்ரநாமம்
பண்டிதர்கள் முதல் பாமரர் வரை படித்துப் பயன்பெறும் படி லலிதா சஹஸ்ரநாமத்திற்கு விரிவுரை எழுதவேண்டும் என்று நினைத்தார் ஆதிசங்கரர். உடனே தன் சீடர்களுள் ஒருவனை அழைத்து,
"சிஷ்யனே, பூஜையறையில் லலிதா சஹஸ்ரநாம ஓலைச் சுவடி இருக்கும். அதை எடுத்து வா"
என்றார். உள்ளே சென்ற சீடன் ஓலைச் சுவடிகளுக்கிடையே லலிதா சஹஸ்ரநாமத்தை தேடி எடுத்து சங்கரரிடம் கொடுத்தான். அதை வாங்கிப் பார்த்த சங்கரர், "சீடனே நான் உன்னைக் கேட்டது லலிதா சஹஸ்ரநாமம். ஆனால் நீ என்ன கொண்டு வந்திருக்கிறாய் பார்" என்றார். சீடன் படித்துப் பார்த்த போது 'விஷ்ணு சஹஸ்ர
நாமம்' என்றிருந்தது. மன்னிப்புக் கேட்ட சீடன், மறுபடி உள்ளே சென்று தேடி லலிதா சஹஸ்ரநாம சுவடிகளைக் கொண்டு வந்து கொடுத்தான்.
"உனக்கு எழுதப் படிக்க கற்றுக் கொடுக்கவில்லையா? நான் கேட்டதைக் கொண்டு வராமல் மறுபடியும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தையே கொண்டு வருகிறாயே?" என்று கடிந்து கொண்டார் சங்கரர்
#காயத்ரி என்பது மந்திரம் அல்ல, இது 24 எழுத்துக்கள் கொண்ட ஒரு மீட்டர் ஆகும், அதில் ஆயிரக்கணக்கான எழுத்துக்கள் உள்ளன. புகழ்பெற்ற #காயத்ரி மந்திரம் சாவித்ரி என்று அழைக்கப்படுகிறது. இது ரிக் வேதம் 3:5:6:10 ல் இருந்து வருகிறது.
சவிதா காயத்ரி மந்திரத்திரத்திற்கு மேலான் மந்திரம் உலகில்
கிடையாது. விசுவாமித்திரரால் அருளப்பட்டது இந்த மந்திரம்.
பொருள்
இந்த முழுப் பிரபஞ்சத்தையும் உருவாக்கியுள்ள உன்னதமானவரின் ஒளியை (அதாவது சூரியனை) தியானிக்கிறோம். அதுவே நம் மனதை ஞானத்தை நோக்கித்
தூண்டட்டும் அல்லது அந்த ஒருவர் நம் புத்தியை ஒளிரச் செய்வாராக. அந்த ஒருவர் நம் மனம், பேச்சு மற்றும் செயல்களை வழிநடத்தட்டும். காயத்ரி மந்திரங்கள் 3 பகுதிகளைக் கொண்டுள்ளது - எதில்? எதன் மூலம்? எப்படி? #தியானம்
கேள்வி 1. எதைப் பற்றி சிந்திக்க அல்லது தியானிக்க வேண்டும்?
பதில்: உச்ச
#மகாலட்சுமியும்_நுனிப்பகுதியும் எதில் ஒன்றிலும் நுனிப் பகுதி லட்சுமி ஸ்தானமாகும். கை கால் நுனி விரல் ஆனாலும் இலைகளின் நுனி ஆனாலும் பழங்களின் நுனி ஆனாலும் நாக்கின் நுனியும் லட்சுமி ஸ்தானமாகும். மகா சரஸ்வதியும் மகா லட்சுமியும் ஆட்சி செய்யும் நாக்கில் சுப வார்த்தைகள் எதை பேசினாலும்
அதன் பலனை நமக்கும் கொடுப்பார்கள். அது போல் காய் கிழங்கு பழம் வகைகள் வெட்டினாலும் முதலில் அடிப் பகுதியை வெட்டிய பின்னரே மற்ற பகுதியை நறுக்குவது நல்லது. அடிப் பகுதி எதிலும் சக்தி பகுதியாகும், முனை பகுதியே வளர்ந்து வரும் பகுதி. அதன் முனையை கிள்ளினால் வளர்ச்சி தடைபடுகிறது.
தலையிலும்
லட்சுமி வாசம் செய்வதால் தான் தலையில் யாரும் கொட்டக்கூடாது என்பர். பாவம் போக்க கங்கைக்கு போனாலும் தலை மூழ்கி தான் பாவம் தீர குளிக்க வேண்டும், ஆக சிரசு மிக முக்கியம், சுத்த லட்சுமி ஸ்தானமாகும்.
எதை நாம் அடைய விரும்புகிறோமோ அதை பற்றிய சிந்தனை நம் நினைவில் இருந்து பார்த்துக் கொண்டால்
#கண்நோய்_தீர்க்கும்_கரியமாணிக்கப்_பெருமாள்
திருநெல்வேலி டவுன் நெல்லையப்பர் கோயில் பின்புறம் மகா விஷ்ணு, கரிய மாணிக்கப் பெருமாள் என்ற திருநாமத்தில் கோயில் கொண்டு உள்ளார். இத்தலத்தில் நின்ற, அமர்ந்த, சயன திருக்கோலங்களில் சேவை சாதிக்கிறார். மகா பாரதத்தை நமக்கருளிய #வியாசமாமுனிவரின்
முதல்சீடரான #பைலர் தாமிரபரணி நதிக்கரையில் வாழ்ந்து வந்தார். இவர் தான் தாமிரபரணி கரையில் #திருவேங்கடாநாதபுரம் ஸ்ரீனிவாசர் தீர்த்தக்கட்டம் உருவாக காரணமானவர். ஒருநாள் இவர் தாமரபரணி கரையில் குறுக்குத் துறையில்அமர்ந்து ஸ்ரீனிவாசப் பெருமானை நினைத்து தவம் புரிந்தார். இங்கு கோயில் இல்லா
காரணத்தினால் பைலர் மனதிற்குள் பெருமானை நினைத்து பூஜை செய்தார். சுமார் 1 கோடி மலரை அர்ச்சனை செய்தார். அந்த கோடி மலரும் ஒன்றாக சேர்ந்து மிப் பிரகாசமான #நீலரத்தினமாக மாறியது. அதன் பின் அவரே கரிய மாணிக்கனாராக தாமிரபரணி நதிக்குள் காட்சி தந்தார். அவரை பைலர் #நீலமணிநாதர் என்ற திருநாமம்
#தருமமிகு_மயிலை மயிலாப்பூரில் கபாலீஸ்வரர் கோயில் அருகே, 6 பழமையான, அதிகம் அறியப்படாத சிவாலயங்கள் அருகருகே உள்ளன. இவை சென்னையின் #சப்தவிடங்க_ஸ்தலங்களைப் போல் அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சப்தரிஷிகளால் வணங்கப்பட்ட ஸ்தலங்கள் இதன் விசேஷமாகும். இந்த 7 சிவ ஆலயங்களையும் ஒரே நாளில்
தரிசித்தால் முக்தி பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த ஏழு சிவாலயங்களுக்கு நவக்கிரகத்தோடும் தொடர்பு உள்ளது. இவற்றோடு அப்பர் ஸ்வாமி ஆலயத்திற்கும் சென்று தரிசனம் செய்துவிட்டால் அஷ்ட வீரட்டான ஸ்தலங்களுக்குச் சென்ற பலனும் கிட்டும் என்பது நம்பிக்கை. இந்த ஏழு கோயில்களுமே 12-ம்
நூற்றாண்டைச் சேர்ந்தவை. ஸ்ரீ ராமரும் முருகப்பெருமானும் இந்தக் கோயில்களுக்கு விஜயம் செய்த போது, அவர்கள் வழிபட்ட முறையில் தான் இன்றைக்கும் வழிபடும் மரபு உள்ளது என்பது ஆன்மிக அன்பர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. 1. விசாலாட்சி உடனுறை ஸ்ரீவிருபாக்ஷீஸ்வரர் கோயில் (சூரியன் ஸ்தலம்)
மயிலை