#ராமாயணம்#ராவண_வதம்
(திருப்பூர் கிருஷ்ணன் எழுதிய ‘அபூர்வ ராமாயணம்’ வரிசையில் 2ஆம் தொகுதியான ‘அனுமன் கதைகள்’ என்ற புத்தகத்திலிருந்து.)
ராம ராவண யுத்தத்தின் அன்றைய போர், சூரியாஸ்தமனம் ஆகிவிட்டதால் நிறுத்தப்பட்டிருந்தது. ராமன் தரப்பு வீரர்கள் அனைவரும் தங்கள் பாசறைகளுக்குத்
திரும்பி இருந்தார்கள். அன்று நடைபெற்ற போர் குறித்துப் பேசுவதற்காக ராமனது பாசறையில் அவசர அவசரமாக மந்திராலோசனை சபை கூட்டப்பட்டிருந்து. ராமன், லட்சுமணன், அனுமன், வீடணன், ஜாம்பவான், சுக்கிரீவன், அங்கதன் முதலிய முக்கியப் பிரமுகர்கள் ஒன்று கூடிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
என்ன
ஆச்சரியம் இது! ராமபிரான் மாறி மாறி எத்தனையோ அஸ்திரங்களைப் பிரயோகம் செய்து பார்க்கிறார். ஆனால் எந்த அம்பாலும் ராவணனது உயிரைப் போக்க முடியவில்லையே? இந்த விந்தையின் சூட்சுமம் என்ன? ஏன் இப்படி நிகழ்கிறது? ராமன் கேள்விக் குறியோடு விபீஷணனைப் பார்த்தான். விபீஷணன் அந்த சூட்சுமத்தை
விளக்கலானான்: ‘பிரபோ! அதற்கு ஒரு காரணம் உண்டு. ராவணனின் உயிரை வாங்கக் கூடிய அம்பு என்றோர் அம்பு இருக்கிறது. அந்த அம்பு மட்டுமே ராவணனின் உயிரை எடுப்பதற்கான அதிகாரம் பெற்றிருக்கிறது. மற்ற எந்த அம்பாலும் ராவணன் உயிரைப் போக்க முடியாது.’ இந்த ரகசியத்தைக் கேட்ட அனைவரும் நிமிர்ந்து
உட்கார்ந்தார்கள். முக்கியமாக அனுமன், சொல்லப்படும் விஷயத்தைக் காதைத் தீட்டிக்கொணடு கேட்கலானான். விபீஷணன் மேலும் தொடர்ந்து பேசலானான். `சிவபெருமானிடம் அத்தகைய வரம் பெற்றிருக்கிறார் என் அண்ணன். தன்னைக் கொல்லக் கூடிய அந்த ஒரே அம்பைச் சிவனிடமிருந்து கேட்டுத் தானே வாங்கி வைத்துக் கொண்டு
இருக்கிறார். அந்த அம்பு தன்வசமே இருப்பதாலும் அது எதிரிக்குக் கிடைக்க வாய்ப்பே இல்லை ஆதலாலும் தன்னை யாரும் கொல்ல முடியாது என்பதை உணர்ந்து அவர் செருக்குடன் இருக்கிறார். இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் என் அண்ணனை வெல்ல முடியாமல் போனதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம். ராவணனைக் கொல்லும்
அம்பு ராவணனிடமே தான் இருக்கிறது.’ ராமன் யோசனையோடு கேட்டான், ‘அதுசரி. அந்த அம்பு நம் கைக்குக் கிடைத்துவிட்டால் அதன் மூலம் ராவணனை வதம் செய்து விடலாம் அல்லவா? அந்த அம்பு இருக்குமிடம் தெரிந்துவிட்டால் அதைக் கைப்பற்றி விடலாமே? அம்பு எங்கிருக்கிறது? யாரிடம் இருக்கிறது? சொல் விபீஷணா!’
‘அது எங்கிருக்கிறது என்று யாருக்கும் தெரியாது பிரபோ! ஆனால் யாரிடம் இருக்கிறது என்பதை நான் மட்டும் அறிவேன். தன் மாங்கல்யத்தைக் காப்பாற்றிக் கொள்வதையே லட்சியமாகக் கொண்டவரான என் அண்ணியார் மண்டோதரி தேவியிடம் தான் அது மிக மிக பத்திரமாக இருக்கிறது. ராவணன் மண்டோதரி தேவியிடம் அந்த அம்பை
கொடுத்துப் பத்திரப்படுத்தச் சொன்ன போது நான் ராவணன் அருகேதான் இருந்தேன். ஆனால் அந்த அம்பை என் அண்ணியார் எங்கு பாதுகாப்பாக வைத்திருக்கிறார் என்ற ரகசியம் என் அண்ணியாரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது!’ திடீரென அனுமன் குறுக்கிட்டான், ‘அதனால் என்ன? அந்த அம்பை எங்கு வைத்திருக்கிறார்
என்பது மண்டோதரி தேவிக்குத் தெரியுமல்லவா? அது போதுமே? நான் எப்படியாவது அந்த அம்பை எடுத்து வந்துவிடுகிறேன்!’ அனைவரும் வியப்போடு அனுமனைப் பார்த்தார்கள். ஆனால் எந்த சாகசச் செயலையும் அனுமன் செய்துமுடிப்பான் என்ற நம்பிக்கை அனைவருக்குமே இருந்தது. ‘எப்படி அந்த அம்பைப் பெறப்போகிறாய்
அனுமா? மண்டோதரி தேவியை அணுகுவதே சிரமம். அப்படி அணுகினாலும் அம்பு எங்குள்ளது என்ற ரகசியத்தை அவர் தெரிவிக்க வேண்டுமே?’ - ராமன் கனிவோடு கேட்டான். அனுமன் புன்முறுவலோடு சொன்னான், ‘பிரபோ! உங்கள் அருளிருந்தால் எதுதான் சாத்தியமில்லை? கபட சன்னியாசி வேடத்தில் ராவணன் தன்னைத் தூக்கி வந்ததாக
அன்னை சீதாப்பிராட்டி என்னிடம் சொன்னார். ராவணன் எந்த வேடத்தில் அன்னையைத் தூக்கிச் சென்றானோ நான் அதே வேடத்தில் சென்று அம்பைத் தூக்கி வருகிறேன் பாருங்கள்!’ அடுத்த கணம் அனுமன் தன் வடிவை ஒரு துறவி போல் மாற்றிக் கொண்டான். ஒளிவீசும் ஒரு துறவி காவி ஆடையில் கமண்டலத்தோடு விண்ணில் பறந்து
இலங்கை நகருக்குள் புகுவதை ஸ்ரீராமனது பாசறையில் இருந்த அனைவரும் ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள். ‘பவதி பிட்சாம் தேஹி!’ என மிக மதுரமான ஒரு குரல் தன் அரண்மனை வாயிலிலிருந்து கேட்பதை உணர்ந்து வாயிலுக்கு வந்தாள் தேவி மண்டோதரி. யார் இந்த சன்னியாசி? வானுலகத்திலிருந்து பறந்து
மண்ணுலகம் வந்தவரா? ஒளி வீசும் நயனங்கள். பிரம்மச்சரியத்தின் பொலிவு துலங்கும் அழகிய முகம். அவரது ஒளியை ஓரளவேனும் கட்டுப்படுத்த முயன்று தோற்றுக் கொண்டிருந்தது அவர் அணிந்திருந்த காவி ஆடை. ஒரு கையில் கமண்டலத்தோடும் ஒரு கையில் திருவோடோடும் கம்பீரமாக அவர் நின்ற கோலம், அவரைக் கைகூப்பி
வணங்க வேண்டும் என்ற உணர்வை அல்லவா தூண்டுகிறது! மண்டோதரி இருகரம் கூப்பி தன்முன் நின்ற துறவியை மனமார வணங்கினாள்.
‘மங்கலம் உண்டாகட்டும்!’ என்றோ ‘தீர்க்க சுமங்கலீ பவ!’ என்றோ எல்லோரும் வழக்கமாகக் கூறும் விதத்தில் ஆசி கூறாமல், ‘தர்மம் வெல்லட்டும்!’என ஆசி கூறினார் அந்த அதிசயத் துறவி.
இவர் தோற்றம் மட்டுமல்ல, இவரது வாழ்த்தும் கூட வித்தியாசமாகத் தான் இருக்கிறது என நினைத்துக் கொண்ட மண்டோதரி, ‘சுவாமி! இதோ பிட்சை அரிசியைக் கொண்டு வருகிறேன்!’ என உள்ளே விரைந்தாள். ஒரு தங்கப் பாத்திரம் நிறைய அரிசியை எடுத்துக் கொண்டு வாயிலுக்கு வந்தாள். பணிவோடு குனிந்து அந்த அரிசியை
அவரது திருவோட்டுப் பாத்திரத்தில் சரித்தாள். சன்னியாசி மண்டோதரி தேவியின் விழிகளையே உற்றுப் பார்த்தார். பின் ஒரு பெருமூச்சோடு சொன்னார், ‘தாயே! மிக உயர்ந்த பத்தினி நீ. பெரும் புண்ணியங்கள் செய்தவள். ஆனால் எனக்கு நீ குனிந்து பிட்சை இடும்போது உன் மாங்கல்யம் நடுங்குவதைப் பார்க்கிறேன்.
உன் மாங்கல்யத்திற்கு ஏதோ ஆபத்து காத்திருக்கிறது. அதை எவ்விதமாவது எச்சரிக்கையாகக் காப்பாற்றிக் கொள்ள முயற்சி செய் அம்மா!’ என்ற அவர் ‘தர்மம் வெல்லட்டும்!’ என மறுபடி ஆசி கூறிவிட்டு, நின்றவாறே இரு விழிகளை மூடிய தோரணையில் அவளின் நன்மையின் பொருட்டாக ஜபிப்பதைப் போல் பாவனை செய்தார்.
மண்டோதரி திகைத்தாள். என்ன இது? ஒளிவீசும் இந்தத் துறவி இப்படி எச்சரிக்கிறாரே? என் கணவரைக் கொல்லும் அம்பு என்னிடம் பத்திரமாக இருக்கும்வரை அவரை யாரும் கொல்ல முடியாது என்பது உண்மைதானே? அந்த அம்பு பத்திரமாகத் தானே இருக்கிறது? பார்த்துவிடுவோம் என எண்ணியவாறு அவசர அவசரமாகத் தன் படுக்கை
அறை நோக்கி விரைந்தாள். மண்டோதரியின் உளவியல் இப்படித்தான் இயங்கும் என்பதை எதிர்பார்த்த அனுமன் மண்டோதரியிடம் அரிசி பெற்ற அந்த பிட்சா பாத்திரமான திருவோட்டை அங்கேயே கீழே வைத்தான். மறுகணமே தன் வடிவத்தை ஒரு கட்டெறும்பு அளவு சிறியதாக்கிக் கொண்டான். மண்டோதரி அறியாமல் தாவித் தாவி அவள்
பின்னே விரைந்து சென்றான். அவள் என்ன செய்கிறாள் என்பதை அந்தப் படுக்கையறையின் உள்ளே சென்று வசதியான ஓர் இடத்தில் தாவி அமர்ந்து கூர்ந்து கவனிக்கலானான். அவசரமாக சயன அறையின் உள்ளே வந்த மண்டோதரி அறைக் கதவையும் சாளரக் கதவுகளையும் இறுக மூடினாள். பின் அன்னத்தின் இறகுகளால் செய்யப் பட்ட தன்
பஞ்சணையை மெல்லத் தூக்கினாள். அந்தப் பஞ்சணையின் கீழே அந்த விசேஷ அம்பு பத்திரமாக வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தாள். அவள் முகத்தில் மகிழ்ச்சி பரவியது.
ஒரு நிம்மதிப் பெருமூச்சோடு மீண்டும் பஞ்சணையால் அம்பை மறைத்து விட்டு, சாளரக் கதவுகளைத் திறந்தாள். அறைக் கதவையும் திறந்துகொண்டு வெளி
ஏறினாள். அடுத்தகணம் அனுமன் தன் சுய உருக் கொண்டதையோ பஞ்சணையின் கீழிருந்த அம்பை அவன் தன் கையில் எடுத்துக் கொண்டதையோ சாளரத்தின் வழியே கையில் அம்போடு பாய்ந்து தாவி ராமபிரானிடம் சென்றதையோ மண்டோதரி கவனிக்கவில்லை.
வாயிலுக்கு வந்த மண்டோதரி, அங்கே துறவி இல்லாததையும் ஆனால் பிட்சைப்
பாத்திரமான திருவோடு மட்டும், தான் அளித்த பிட்சையோடு அப்படியே அங்கு வைக்கப் பட்டிருப்பதையும் கண்டாள். ஒரு துறவி தான் கொடுத்த பிட்சையை ஏற்கவில்லை என்றால் அது நல்ல சகுனமல்லவே என்றெண்ணிய அவள், கலக்கத்தோடு மீண்டும் படுக்கை அறைக்கு வந்தாள். படுக்கையறையின் கதவை மூடக் கூட மறந்த அவள்
அவசரமாகப் படுக்கையைத் தூக்கிப் பார்த்தாள். அங்கே அந்த அம்பு இல்லாதிருந்ததைப் பார்த்து அவள் ஆ என்ற அலறலுடன் மயங்கிச் சரிந்தாள்.
ராவணனைக் கொல்லக் கூடிய அந்த விசேஷ அம்பு தங்கள் தரப்பிற்கு வந்து சேர்ந்து விட்டதை எண்ணியும் அனுமனது சாகசச் செயலை எண்ணியும் ஜெய் ஹனுமான் என்று வானரங்கள்
அனைத்தும் சேர்ந்து முழங்கிய முழக்கம் மயக்கம் காரணமாக மண்டோதரியின் செவிகளில் விழவில்லை. ஆனால் அந்தப் பெரும் முழக்கம் அசோக வனத்திலிருந்த சீதாதேவியை எட்டியது. ஸ்ரீராமன் தரப்பில் ஏதோ நல்லது நடந்திருக்கிறது என்பதையும் அதனால் தான் அந்த ஆரவார முழக்கம் என்பதையும் உணர்ந்துகொண்ட
சீதாதேவியின் மனம் மிகுந்த மகிழ்ச்சி கொண்டது.
ஜெய் ஶ்ரீராம்
ஜெய் ஆஞ்சனேயா
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
காசியாத்திரை முடித்து கங்கா ஜலத்தை எடுத்து வந்த ஒரு பக்தர், தன் தாயாரின் ஆசைப்படி அதை பரமாசார்யரிடம் சேர்ப்பித்தார். அப்பொழுது அவர் முகாம் இட்டிருந்த இடத்தினருகே
உள்ள துங்கபத்ராவில் மூழ்கி ஸ்நானம் செய்த போது மகாபெரியவா கங்கா ஜலத்தையும் சிரசில் ஊற்றி குளித்தார். ஸ்நானம் அனுஷ்டானம் முடிந்ததும் அப்படியே ஆற்று மணலில் நடந்து முகாம் இருந்த இடத்துக்குப் புறப்பட்டார். இந்த சமயத்தில் கங்கா ஜலத்தை தந்திருந்த அந்த பக்தர், மகாபெரியவாளின் திருப்பாதம்
பதிந்த தடத்தைப் பார்த்தார். அந்த பக்தருக்கு எதோ பொறிதட்டினாற் போல் இருந்தது. பரமாசார்யா இது தனக்காகவே தந்திருக்கிற பிரத்யேக பிரசாதம் என்று தோன்றியது. உடனே ஆசார்யா பாதம் பதிஞ்சிருந்த மண்ணை அப்படியே சேகரிச்சு எடுத்து, தன்னிடம் இருந்த பட்டுத்துணியில் முடிச்சா கட்டி எடுத்துக் கொண்டார
#ஆதிசங்கர_பகவத்பாதாள்#விஷ்ணுசஹஸ்ரநாமம்
பண்டிதர்கள் முதல் பாமரர் வரை படித்துப் பயன்பெறும் படி லலிதா சஹஸ்ரநாமத்திற்கு விரிவுரை எழுதவேண்டும் என்று நினைத்தார் ஆதிசங்கரர். உடனே தன் சீடர்களுள் ஒருவனை அழைத்து,
"சிஷ்யனே, பூஜையறையில் லலிதா சஹஸ்ரநாம ஓலைச் சுவடி இருக்கும். அதை எடுத்து வா"
என்றார். உள்ளே சென்ற சீடன் ஓலைச் சுவடிகளுக்கிடையே லலிதா சஹஸ்ரநாமத்தை தேடி எடுத்து சங்கரரிடம் கொடுத்தான். அதை வாங்கிப் பார்த்த சங்கரர், "சீடனே நான் உன்னைக் கேட்டது லலிதா சஹஸ்ரநாமம். ஆனால் நீ என்ன கொண்டு வந்திருக்கிறாய் பார்" என்றார். சீடன் படித்துப் பார்த்த போது 'விஷ்ணு சஹஸ்ர
நாமம்' என்றிருந்தது. மன்னிப்புக் கேட்ட சீடன், மறுபடி உள்ளே சென்று தேடி லலிதா சஹஸ்ரநாம சுவடிகளைக் கொண்டு வந்து கொடுத்தான்.
"உனக்கு எழுதப் படிக்க கற்றுக் கொடுக்கவில்லையா? நான் கேட்டதைக் கொண்டு வராமல் மறுபடியும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தையே கொண்டு வருகிறாயே?" என்று கடிந்து கொண்டார் சங்கரர்
#காயத்ரி என்பது மந்திரம் அல்ல, இது 24 எழுத்துக்கள் கொண்ட ஒரு மீட்டர் ஆகும், அதில் ஆயிரக்கணக்கான எழுத்துக்கள் உள்ளன. புகழ்பெற்ற #காயத்ரி மந்திரம் சாவித்ரி என்று அழைக்கப்படுகிறது. இது ரிக் வேதம் 3:5:6:10 ல் இருந்து வருகிறது.
சவிதா காயத்ரி மந்திரத்திரத்திற்கு மேலான் மந்திரம் உலகில்
கிடையாது. விசுவாமித்திரரால் அருளப்பட்டது இந்த மந்திரம்.
பொருள்
இந்த முழுப் பிரபஞ்சத்தையும் உருவாக்கியுள்ள உன்னதமானவரின் ஒளியை (அதாவது சூரியனை) தியானிக்கிறோம். அதுவே நம் மனதை ஞானத்தை நோக்கித்
தூண்டட்டும் அல்லது அந்த ஒருவர் நம் புத்தியை ஒளிரச் செய்வாராக. அந்த ஒருவர் நம் மனம், பேச்சு மற்றும் செயல்களை வழிநடத்தட்டும். காயத்ரி மந்திரங்கள் 3 பகுதிகளைக் கொண்டுள்ளது - எதில்? எதன் மூலம்? எப்படி? #தியானம்
கேள்வி 1. எதைப் பற்றி சிந்திக்க அல்லது தியானிக்க வேண்டும்?
பதில்: உச்ச
#மகாலட்சுமியும்_நுனிப்பகுதியும் எதில் ஒன்றிலும் நுனிப் பகுதி லட்சுமி ஸ்தானமாகும். கை கால் நுனி விரல் ஆனாலும் இலைகளின் நுனி ஆனாலும் பழங்களின் நுனி ஆனாலும் நாக்கின் நுனியும் லட்சுமி ஸ்தானமாகும். மகா சரஸ்வதியும் மகா லட்சுமியும் ஆட்சி செய்யும் நாக்கில் சுப வார்த்தைகள் எதை பேசினாலும்
அதன் பலனை நமக்கும் கொடுப்பார்கள். அது போல் காய் கிழங்கு பழம் வகைகள் வெட்டினாலும் முதலில் அடிப் பகுதியை வெட்டிய பின்னரே மற்ற பகுதியை நறுக்குவது நல்லது. அடிப் பகுதி எதிலும் சக்தி பகுதியாகும், முனை பகுதியே வளர்ந்து வரும் பகுதி. அதன் முனையை கிள்ளினால் வளர்ச்சி தடைபடுகிறது.
தலையிலும்
லட்சுமி வாசம் செய்வதால் தான் தலையில் யாரும் கொட்டக்கூடாது என்பர். பாவம் போக்க கங்கைக்கு போனாலும் தலை மூழ்கி தான் பாவம் தீர குளிக்க வேண்டும், ஆக சிரசு மிக முக்கியம், சுத்த லட்சுமி ஸ்தானமாகும்.
எதை நாம் அடைய விரும்புகிறோமோ அதை பற்றிய சிந்தனை நம் நினைவில் இருந்து பார்த்துக் கொண்டால்
#கண்நோய்_தீர்க்கும்_கரியமாணிக்கப்_பெருமாள்
திருநெல்வேலி டவுன் நெல்லையப்பர் கோயில் பின்புறம் மகா விஷ்ணு, கரிய மாணிக்கப் பெருமாள் என்ற திருநாமத்தில் கோயில் கொண்டு உள்ளார். இத்தலத்தில் நின்ற, அமர்ந்த, சயன திருக்கோலங்களில் சேவை சாதிக்கிறார். மகா பாரதத்தை நமக்கருளிய #வியாசமாமுனிவரின்
முதல்சீடரான #பைலர் தாமிரபரணி நதிக்கரையில் வாழ்ந்து வந்தார். இவர் தான் தாமிரபரணி கரையில் #திருவேங்கடாநாதபுரம் ஸ்ரீனிவாசர் தீர்த்தக்கட்டம் உருவாக காரணமானவர். ஒருநாள் இவர் தாமரபரணி கரையில் குறுக்குத் துறையில்அமர்ந்து ஸ்ரீனிவாசப் பெருமானை நினைத்து தவம் புரிந்தார். இங்கு கோயில் இல்லா
காரணத்தினால் பைலர் மனதிற்குள் பெருமானை நினைத்து பூஜை செய்தார். சுமார் 1 கோடி மலரை அர்ச்சனை செய்தார். அந்த கோடி மலரும் ஒன்றாக சேர்ந்து மிப் பிரகாசமான #நீலரத்தினமாக மாறியது. அதன் பின் அவரே கரிய மாணிக்கனாராக தாமிரபரணி நதிக்குள் காட்சி தந்தார். அவரை பைலர் #நீலமணிநாதர் என்ற திருநாமம்
#தருமமிகு_மயிலை மயிலாப்பூரில் கபாலீஸ்வரர் கோயில் அருகே, 6 பழமையான, அதிகம் அறியப்படாத சிவாலயங்கள் அருகருகே உள்ளன. இவை சென்னையின் #சப்தவிடங்க_ஸ்தலங்களைப் போல் அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சப்தரிஷிகளால் வணங்கப்பட்ட ஸ்தலங்கள் இதன் விசேஷமாகும். இந்த 7 சிவ ஆலயங்களையும் ஒரே நாளில்
தரிசித்தால் முக்தி பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த ஏழு சிவாலயங்களுக்கு நவக்கிரகத்தோடும் தொடர்பு உள்ளது. இவற்றோடு அப்பர் ஸ்வாமி ஆலயத்திற்கும் சென்று தரிசனம் செய்துவிட்டால் அஷ்ட வீரட்டான ஸ்தலங்களுக்குச் சென்ற பலனும் கிட்டும் என்பது நம்பிக்கை. இந்த ஏழு கோயில்களுமே 12-ம்
நூற்றாண்டைச் சேர்ந்தவை. ஸ்ரீ ராமரும் முருகப்பெருமானும் இந்தக் கோயில்களுக்கு விஜயம் செய்த போது, அவர்கள் வழிபட்ட முறையில் தான் இன்றைக்கும் வழிபடும் மரபு உள்ளது என்பது ஆன்மிக அன்பர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. 1. விசாலாட்சி உடனுறை ஸ்ரீவிருபாக்ஷீஸ்வரர் கோயில் (சூரியன் ஸ்தலம்)
மயிலை