#கண்நோய்_தீர்க்கும்_கரியமாணிக்கப்_பெருமாள்
திருநெல்வேலி டவுன் நெல்லையப்பர் கோயில் பின்புறம் மகா விஷ்ணு, கரிய மாணிக்கப் பெருமாள் என்ற திருநாமத்தில் கோயில் கொண்டு உள்ளார். இத்தலத்தில் நின்ற, அமர்ந்த, சயன திருக்கோலங்களில் சேவை சாதிக்கிறார். மகா பாரதத்தை நமக்கருளிய #வியாசமாமுனிவரின்
முதல்சீடரான #பைலர் தாமிரபரணி நதிக்கரையில் வாழ்ந்து வந்தார். இவர் தான் தாமிரபரணி கரையில் #திருவேங்கடாநாதபுரம் ஸ்ரீனிவாசர் தீர்த்தக்கட்டம் உருவாக காரணமானவர். ஒருநாள் இவர் தாமரபரணி கரையில் குறுக்குத் துறையில்அமர்ந்து ஸ்ரீனிவாசப் பெருமானை நினைத்து தவம் புரிந்தார். இங்கு கோயில் இல்லா
காரணத்தினால் பைலர் மனதிற்குள் பெருமானை நினைத்து பூஜை செய்தார். சுமார் 1 கோடி மலரை அர்ச்சனை செய்தார். அந்த கோடி மலரும் ஒன்றாக சேர்ந்து மிப் பிரகாசமான #நீலரத்தினமாக மாறியது. அதன் பின் அவரே கரிய மாணிக்கனாராக தாமிரபரணி நதிக்குள் காட்சி தந்தார். அவரை பைலர் #நீலமணிநாதர் என்ற திருநாமம்
சூட்டி வணங்கினார். பகவானே உங்கள் வடிவத்தை நான் காணப்பேறு பெற்றுள்ளேன். வடக்கே வேங்கட மலை திருப்பதியில் குடி கொண்ட வெங்கடாசலபதி பெருமானே இந்த அடியவனுக்கு காட்சி கொடுத்தது போலவே நீவிர் புடை சூழ தோன்றிப் பக்தர்களுக்கு அருள் வழங்க வேண்டும். உம்மைத் தேடி வரும் பக்தர்களின் தேவைகளை
பூர்த்தி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். உமது விருப்பப்படியே ஆகட்டும் என்று பெருமாளும் அருளினார். இந்த க்ஷேத்திரம் #ஸ்ரீ_நீல_ரத்னக்ஷேத்திரமானது. கரி என்றால் சனிபகவானையும் மாணிக்கம் என்றால் ஆதித்யனையும் குறிப்பிடுவார்கள். ஆகவே #சனி_சூரியன் ஆகிய கிரகங்களினால் ஏற்பட்ட
உபாதைகளை நீக்கி நல்லருள் அளிக்கும் பெருமாளின் தலமாக இத்தலம் திகழ்கிறது. கண்ணுக்கு ஒளி தரும் என் கரிய மாணிக்கமே என நம்மாழ்வாரால் பாடல் பெற்ற க்ஷேத்திரம் இந்த க்ஷேத்திரமாகும்.
மூன்று நிலைகளில் கரியமாணிக்கப் பெருமாள் இங்கு தரிசனம் கொடுக்கிறார். மூலவர் நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீ
கரிய மாணிக்கப் பெருமாள் என்றும் சயனத் திருக்கோலத்தில் ஸ்ரீ அனந்த பத்மநாப பெருமாள் என்றும்
அமர்ந்த திருக்கோலத்தில் லட்சுமி நாராயணன் கோலத்தில் காட்சி தருவது மிகச்சிறப்பானதாகும். இந்த க்ஷேத்திரம் #நீலரத்னக்ஷேத்திரம் ஸ்தலம் வேணுவனம், தீர்த்தங்கள் ஸ்ரீபத்பநாப தீர்த்தம் தாமிரபரணி
தீர்த்தம், விமானம் ஆனந்த விமானம், வடக்கு நோக்கி ஜெய ஹனுமான் சந்நதி, கோயில் பரப்பளவு 17,800 சதுர அடி, இக்கோயிலில் சூரியன், சனி, ராகு, கேது ஆகிய பரிகார ஸ்தலமாகும். இங்குள்ள தாயார்கள் சௌந்தரவல்லித் தாயார், கோதைவல்லித் தாயார் ஆகியோர் கோயில் வளாகத்தில் சனி சந்நதியில் அருள்
பாலிக்கின்றனர். கோயில் தலவிருட்சம் மூங்கிலாகும். திருமலையை போலவே இந்த ஆலயத்தில் ஏழு நிலை கடந்தே பகவானை தரிசிக்க முடியும். பந்தல் மண்டபம், வேணுகோபால் பஜனை மடம் உள்ள கொடைவரை வாசல் மண்டபம், மகாமண்டபம், மணி மண்டபம், கருட மண்டபம், அர்த்த மண்டபம், கர்ப்பகிரகம் என்ற 7நிலை இருப்பதால் இது
#தென்திருப்பதி என அழைக்கப்படுகிறது. இந்த ஆலயத்தில் சித்திரை விஷு திருவிழா, வைகாசி விசாகத் திருவிழா, ஆனிமாத திருமஞ்சனம்,ஆடி சுவாதி, ஆவணி உறியடி திருவிழா, புரட்டாசி சனிக்கிழமை கருட சேவை, ஐப்பசி விஷு கருடசேவை, கார்த்திகை மாதம் சொக்கபனை திருவிழா, மார்கழி மாதம் 30 நாளும் திருப்பாவை
திருவிழா ஆகியவை நடைபெறுகிறது. வைகுண்ட ஏகாதசியும், 11 நாள் பரமபதவாசல் திறப்பு விழா மிக விசேஷமாகும். தை மாதம் வருஷாபிஷேகத்தின் போது இரண்டாம் நாள் லட்சார்ச்சனை புஷ்பாஞ்சலி கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இக்கோயிலில் பங்குனி திருவிழாவின் முக்கிய நாளான #ஐந்தாம்திருவிழா அன்று_மூன்று
கருடசேவைகள், ஹனுமந்த வாகனம், அன்ன வாகனம் என ஐந்து வாகனங்களில் சுவாமி புறப்பாடு செய்து திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருளுவார். பத்தாம் திருநாளன்று #திருத்தேரோட்டம் நடைபெறும். பங்குனி வளர்பிறை ஸ்ரீ ராம நவமி உற்சவத்தின் போது சுவாமி திருவீதி உலா வருவார்.
இவர் தை மாத ரத சப்தமியில் ஒரே நாளில் 7 முறை வீதி புறப்பாடு செய்து மக்களுக்கு அருள்பாலிக்கிறார். பங்குனி திருவோணத்தில் 4 ரதவீதிகளில் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். #கருடசேவை_சங்கமம்#பெரியதேர் முதலான வைபவங்கள் இந்த திருத்தலத்தின் முக்கிய விழாக்களாகும்.
நிகழ்ச்சியில் உற்சவர்களாக தென்திருப்பதி ஸ்ரீ வேங்கட நாத பெருமாள், ஸ்ரீமகிழ்வண்ணநாதர்
ஸ்ரீ லட்சுமி நரசிங்க பெருமாள்,
சங்காணி ஸ்ரீ வரதராஜ பெருமாள்,
ஸ்ரீகரிய மாணிக்க பெருமாள் ஆகியோர் கருட வாகனத்தில் சேவை சாதிப்பது விசேஷமாகும்.
இந்த ஆலயம் 2 ஆயிரம்ஆண்டு பழமையானது. ராஜ ராஜ சோழ
மன்னனுக்கு கரிய மாணிக்கன் என்ற சிறப்பு பெயர் உண்டு. இம்மன்னனின் ஆட்சி காலத்தில் இக்கோயில் மறு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் தான் இவருக்கு #கரியமாணிக்கனார் என்ற பெயர் உண்டானது என்பர். இத்தல #நீலமணிநாதர்_கரியமாணிக்கம் என்ற பெயரில் கண்நோய் தீர்க்கும் இறைவனாக விளங்குகிறார். இதை
விளக்கும் விதமாக இங்குள்ள #கருடனுக்கு#இரண்டுசிவப்புகண்கள் பொருந்தியிப்பது சிறப்பானதாகும்.
சனி பீடிகையில் உள்பட்டவர் சனிக்கிழமை தோறும் இங்கு வந்து வணங்கி நின்றால் சனி பிரச்னை தீரும். புதன்கிழமை வழிபடுவோருக்கு கல்வி கிடைக்கும், வெள்ளிக்கிழமை லட்சுமி நாராயணரை வணங்கி நிற்போர்
கல்யாண வரம்பெறுவர், மார்கழி மாதம் ஆண்டாள் உற்சவத்தினை கலந்து கொண்டால், வேண்டிய வரம் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்கள் திருமணப் பேறு பெறுவார்கள், குழந்தை வரம் கிடைக்கும். குழந்தைகளை திருவோணம் நட்சத்திரத்தில் தத்து கொடுப்போர் எண்ணிக்கை அதிகம். இது போல பல்லாயிரக் கணக்கோர், இந்த
கோயிலில் குழந்தைகளை தத்து கொடுத்துள்ளனர். அந்த குழந்தைகள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வளர்ந்து வருகிறார்கள். கோயிலுக்குள் நுழைந்தவுடன் பந்தல் மண்டபம், அதைத் தொடர்ந்து வேணுகோபால சுவாமி பஜனை மண்டபம் உள்ள கொட்டகை மண்டபம், உள்ளே நுழைந்தால் இடது புறத்தில் நாகம், சிம்மம், அன்னம்,
குதிரை வாகனங்கள் தொடர்ந்து உள்ளே சென்றால் ஆஞ்சநேயர் வடக்கு நோக்கி நின்ற கோலத்தில் கும்பிட்ட தோற்றத்தில் உள்ளார். இவர் எதிரே #சயனகோலத்தில் இருக்கும் பெருமானை சேவிக்கும் நிலையில் விளங்குகிறார். பின்புறம் லிங்க வடிவத்தில் சிவபெருமான் வீற்றிருக்க, ஆலயத்தினை சுற்றி வந்தால்
#சொர்க்கவாசல் என்னும் பரமபதவாசல் உள்ளது.
இத்திருத்தலம் திருநெல்வேலி நகர் அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயிலுக்கு பின்புறம் அமைந்துள்ள #சந்திவிநாயகர்_திருக்கோயிலுக்கு பஸ் நிலையத்தில் இறங்கினால் நடந்தே சென்று விடலாம்
Time : 7am-11am, 530pm-830pm
Priest : A. Vijayaraghava Bhattar
92457 77727 or 0462 2320020
ஓம் நமோ நாராயணாய
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#உண்ணும்போது_கடைபிடிக்க_வேண்டிய_விதிகள்
அளவிற்கு அதிகமாக உண்டால் நோய்வரும் ஆயுள் குறையும். எனவே வயிறு புடைக்க மூச்சு முட்ட உண்ணக் கூடாது. பசிக்கும் போது தான் சாப்பிட வேண்டும். மிளகு சேர்ப்பதால் உணவில் உள்ள விஷம் நீங்குகிறது. உடலில் உள்ள விஷமும் முறிகிறது. உணவில் சீரகம்
சேர்ப்பதால் உடம்பை சீராக வைப்பது மட்டும் அல்லாமல் குளிர்ச்சியை தருகிறது. வெந்தயம் உஷ்ணத்தைக் குறைக்கிறது. வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் தண்ணீருடன் பருகி வந்தால் உடம்பில் உள்ள உஷ்ணத்தை குறைக்கிறது. கடுகு, உடலில் உள்ள உஷ்ணத்தை ஒரே அளவாக வைக்கிறது. இஞ்சியை
உணவில் சேர்ப்பதால் பித்தம், தலை சுற்றல், வாந்தி போன்ற கோளாறுகள் வருவதில்லை. உணவு உண்பதற்கு முன்பு கை, கால், வாய், போன்றவற்றை நீரால் கழுவ வேண்டும். காலில் ஈரம் உலர்வதற்கு முன்பே உணவு உண்ணத் தொடங்க வேண்டும். உணவு உண்ணும் போது பேசக் கூடாது, படிக்கக் கூடாது, இடதுகையை கீழே ஊன்றக்
#திருவார்பு_கிருஷ்ணா_கோயில்
உலகிலேயே மிகவும் அசாதாரணமான 1500 ஆண்டுக்கும் மேல் பழமையான கோவில் கேரளாவில் கோட்டயம் மாவட்டம் திருவார்புவில் உள்ளது. ஒவ்வொரு நாளும் நடை 23 மணி நேரம் 58 நிமிடங்கள் திறந்திருக்கும். 365 நாட்களும் கோவில் திறந்திருக்கும். கோயில் மூடுவதற்கு நேரம் இல்லை.
கோயில் 2 நிமிடங்களுக்குமட்டுமே மூடப்படுகிறது. 11.58 மணி முதல் 12 மணி வரை. இங்கே இருக்கும் கிருஷ்ணருக்கு எப்பொழுதும் பசித்துக் கொண்டே இருக்குமாம். இந்த கோவிலின் இன்னொரு தனிச்சிறப்பு என்னவென்றால், கோவில் நடை சாத்தி அடுத்த இரண்டாவது நிமிடம் மீண்டும் கோவில் நடை திறக்க தந்திரியின்
கைகளில் ஒரு கோடாரியும் கொடுக்கப் படுகிறது. கிருஷ்ணா பசியை சகித்துக் கொள்ள முடியாது என்று நம்புவதால், ஏதாவது ஒரு காரணத்தால் கதவு திறக்கப்படுவதற்கு தாமதம் ஏற்பட்டால் கோடாரி உதவியுடன் கதவைத் திறக்க அனுமதிக்கப்படுகிறது. கம்சனைக் கொன்ற பிறகு கிருஷ்ணர் மிக உஷ்ணமாக இருந்தார். அந்த
#சத்தியமூர்த்திபெருமாள்_திருக்கோயில்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் என்னும் ஊரில் அருள்மிகு சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. புதுக்கோட்டையிலிருந்து 19 கி.மீ தொலைவில் திருமயம் உள்ளது. திருமயத்திலிருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
இத்திருக்கோயிலில் சத்தியமூர்த்தி, திருமெய்யர் என இரண்டு மூலவர்கள் உள்ளனர். சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக ஒரே சுற்றுச்சுவருடன் இக்கோயிலும், இதற்கு பக்கத்தில் பெருமாள் கோயிலும் அமைந்துள்ளன. இவ்விரு கோயில்களும் திருமயம் மலை சரிவில் ஒரே கல்லில் குடைவரைக் கோயில்களாக உள்ளது.
இத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமாள் சத்திய மூர்த்தி எனும் திருநாமத்துடன் நின்ற திருக்கோலத்தில் சோமச்சந்திர விமானத்தின் கீழ் ஒரு கரத்தில் பிரயோகச் சக்கரத்துடனும், மற்றொரு கரத்தில் சங்குடனும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இத்தலத்திற்கு திருமெய்யம் எனும் பெயர் வரக் காரணமாகிய
#ராமாயணம்#ஜடாயு_சிலை கழுகு பார்வையில் பிரமாண்டமான ஜடாயு சிலை, இறக்கை வெட்டுப்பட்டு ஜடாயு விழுந்த இடத்தில், கேரளா மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் இருக்கிறது. மகா விஷ்ணுவுக்கு வாகனமாக விளங்கும் கருடனின் சகோதரனான அருணனின் மகன் தான் ஜடாயு. வனத்தில் ராமனோடு இருந்த சீதையை, ராவணன் இங்கே
நயவஞ்சகமாக தூக்கிக்கொண்டு புஷ்பக விமானத்தில் பறந்தான். அப்போது ஜடாயு, ராவணனோடு போரிட்டார். அப்போது ஏற்பட்ட சண்டையில், ராவணன் தன் வாளால், ஜடாயுவின் இறக்கைகளில் ஒன்றை வெட்டினான். படுகாயம் அடைந்த ஜடாயு, ராமனிடம் சீதையை தூக்கிப் போன திசையை காட்டி விட்டு உயிரிழந்தது. இறக்கை வெட்டுப்
பட்டு ஜடாயு விழுந்த இடம், கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள சடையமங்கலம் (ஜடாயுமங்கலம்) என்று சொல்லப்படுகிறது. இந்த இடத்தில் தான் பிரமாண்டமான ஜடாயு சிலை ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு மலையேற்ற பயிற்சி எனப்படும் ‘டிரெக்கிங்’ மிகவும் பிரசித்தி பெற்றதாக இருக்கிறது. இந்த
#ஆனந்தநிலையம்#திருமலை திருமலையில் திருவேங்கடவன் கொலுவிருக்கும் கருவறையின் மேற்கூரையே ஆனந்த நிலையம் என அழைக்கப்படுகிறது. இது முழுதும் கல்லால் வேயப்பட்டு பொன்னால் போர்த்தப் பட்டதாகும். வாயு தேவனுக்கும் ஆதிசேஷனுக்கும் இடையே ஒரு பந்தயம் நடந்தது. அதில் வாயுதேவன், ஆதிசேஷனை கீழே விழும்
படிச் செய்தான். அவ்வாறு விழுந்த ஆதிசேஷன், சேஷாசலம் என ஏழுமலையில் ஒன்றாக ஆனார். சேஷாசலம் மீது ஆனந்தன் இருப்பதால் அந்த பிரதேசத்திற்கு ஆனந்த நிலையம் என்ற பெயர் வந்தது. அதன் காரணமாக ஸ்ரீனிவாசனான ஸ்ரீவேங்கடேஸ்வரன் உள்ள கர்ப்பாலயம் மீது நிர்மாணிக்கப்பட்ட விமானத்திற்கும் #ஆனந்தநிலையம்
என்று பெயர் வந்தது. மூன்று அடுக்கு விமானம், இரண்டு அடுக்கு வரையிலும் சதுரமாகவும் அதன் மீது உள்ள கழுத்து வட்டமாகவும் நிர்மாணிக்கப் பட்டுள்ளது. கற்கள், சுண்ணாம்பினால் கட்டப்பட்ட இந்த விமானம் மீது செப்புத் தகடுகளைக் கொண்டு வேய்ந்து அதன் மீது தங்க முலாம் பூசப்பட்டதால் ஆனந்த நிலையம்
காசியாத்திரை முடித்து கங்கா ஜலத்தை எடுத்து வந்த ஒரு பக்தர், தன் தாயாரின் ஆசைப்படி அதை பரமாசார்யரிடம் சேர்ப்பித்தார். அப்பொழுது அவர் முகாம் இட்டிருந்த இடத்தினருகே
உள்ள துங்கபத்ராவில் மூழ்கி ஸ்நானம் செய்த போது மகாபெரியவா கங்கா ஜலத்தையும் சிரசில் ஊற்றி குளித்தார். ஸ்நானம் அனுஷ்டானம் முடிந்ததும் அப்படியே ஆற்று மணலில் நடந்து முகாம் இருந்த இடத்துக்குப் புறப்பட்டார். இந்த சமயத்தில் கங்கா ஜலத்தை தந்திருந்த அந்த பக்தர், மகாபெரியவாளின் திருப்பாதம்
பதிந்த தடத்தைப் பார்த்தார். அந்த பக்தருக்கு எதோ பொறிதட்டினாற் போல் இருந்தது. பரமாசார்யா இது தனக்காகவே தந்திருக்கிற பிரத்யேக பிரசாதம் என்று தோன்றியது. உடனே ஆசார்யா பாதம் பதிஞ்சிருந்த மண்ணை அப்படியே சேகரிச்சு எடுத்து, தன்னிடம் இருந்த பட்டுத்துணியில் முடிச்சா கட்டி எடுத்துக் கொண்டார