#ஆதிசங்கர_பகவத்பாதாள்#விஷ்ணுசஹஸ்ரநாமம்
பண்டிதர்கள் முதல் பாமரர் வரை படித்துப் பயன்பெறும் படி லலிதா சஹஸ்ரநாமத்திற்கு விரிவுரை எழுதவேண்டும் என்று நினைத்தார் ஆதிசங்கரர். உடனே தன் சீடர்களுள் ஒருவனை அழைத்து,
"சிஷ்யனே, பூஜையறையில் லலிதா சஹஸ்ரநாம ஓலைச் சுவடி இருக்கும். அதை எடுத்து வா"
என்றார். உள்ளே சென்ற சீடன் ஓலைச் சுவடிகளுக்கிடையே லலிதா சஹஸ்ரநாமத்தை தேடி எடுத்து சங்கரரிடம் கொடுத்தான். அதை வாங்கிப் பார்த்த சங்கரர், "சீடனே நான் உன்னைக் கேட்டது லலிதா சஹஸ்ரநாமம். ஆனால் நீ என்ன கொண்டு வந்திருக்கிறாய் பார்" என்றார். சீடன் படித்துப் பார்த்த போது 'விஷ்ணு சஹஸ்ர
நாமம்' என்றிருந்தது. மன்னிப்புக் கேட்ட சீடன், மறுபடி உள்ளே சென்று தேடி லலிதா சஹஸ்ரநாம சுவடிகளைக் கொண்டு வந்து கொடுத்தான்.
"உனக்கு எழுதப் படிக்க கற்றுக் கொடுக்கவில்லையா? நான் கேட்டதைக் கொண்டு வராமல் மறுபடியும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தையே கொண்டு வருகிறாயே?" என்று கடிந்து கொண்டார் சங்கரர்
அதற்கு அவன் சொன்னான், "சுவாமி, நான் லலிதா சஹஸ்ரநாமத்தைத் தான் எடுத்தேன். ஆனால் ஒரு சிறுமி, மறுபடியும் மறுபடியும் என் கையில் இதைக் கொடுத்து அவரிடம் கொடு என்று கட்டளை இடுகிறாள். பார்த்தால் விஷ்ணு சஹஸ்ரநாமம். நான் என்ன செய்வது? தவறு என் மீதல்ல. அந்தச் சிறுமியின் விஷமம் இது" என்றான்.
வியப்படைந்த ஆதிசங்கரர் ஒரு கணம் கண்களை மூடி தியானம் செய்தார். தன் சீடனுடைய கையில் லலிதா சஹஸ்ர நாமத்திற்கு பதிலாக விஷ்ணு சஹஸ்ர நாமத்தைக் கொடுத்து, இதற்கு உரை எழுதச் சொல் என்றது அந்த அம்பாளே என்பதை அறிந்து மகிழ்ந்தார். அம்பாள் தன் சீடனுக்கு காட்சியளித்ததைத் கண்டு மகிழ்ந்தாலும்,
தனக்கு அவள் தரிசனம் தரவில்லையே என்று வருந்தினார். அம்பாளுடைய கட்டளைக்கு ஏற்ப விஷ்ணு சஹஸ்ரநாமத்திற்கு உரை எழுதினார். அது இன்றளவும் பகவத்பாதருடைய பெருமையைப் பேசுகிறது.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#உண்ணும்போது_கடைபிடிக்க_வேண்டிய_விதிகள்
அளவிற்கு அதிகமாக உண்டால் நோய்வரும் ஆயுள் குறையும். எனவே வயிறு புடைக்க மூச்சு முட்ட உண்ணக் கூடாது. பசிக்கும் போது தான் சாப்பிட வேண்டும். மிளகு சேர்ப்பதால் உணவில் உள்ள விஷம் நீங்குகிறது. உடலில் உள்ள விஷமும் முறிகிறது. உணவில் சீரகம்
சேர்ப்பதால் உடம்பை சீராக வைப்பது மட்டும் அல்லாமல் குளிர்ச்சியை தருகிறது. வெந்தயம் உஷ்ணத்தைக் குறைக்கிறது. வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் தண்ணீருடன் பருகி வந்தால் உடம்பில் உள்ள உஷ்ணத்தை குறைக்கிறது. கடுகு, உடலில் உள்ள உஷ்ணத்தை ஒரே அளவாக வைக்கிறது. இஞ்சியை
உணவில் சேர்ப்பதால் பித்தம், தலை சுற்றல், வாந்தி போன்ற கோளாறுகள் வருவதில்லை. உணவு உண்பதற்கு முன்பு கை, கால், வாய், போன்றவற்றை நீரால் கழுவ வேண்டும். காலில் ஈரம் உலர்வதற்கு முன்பே உணவு உண்ணத் தொடங்க வேண்டும். உணவு உண்ணும் போது பேசக் கூடாது, படிக்கக் கூடாது, இடதுகையை கீழே ஊன்றக்
#திருவார்பு_கிருஷ்ணா_கோயில்
உலகிலேயே மிகவும் அசாதாரணமான 1500 ஆண்டுக்கும் மேல் பழமையான கோவில் கேரளாவில் கோட்டயம் மாவட்டம் திருவார்புவில் உள்ளது. ஒவ்வொரு நாளும் நடை 23 மணி நேரம் 58 நிமிடங்கள் திறந்திருக்கும். 365 நாட்களும் கோவில் திறந்திருக்கும். கோயில் மூடுவதற்கு நேரம் இல்லை.
கோயில் 2 நிமிடங்களுக்குமட்டுமே மூடப்படுகிறது. 11.58 மணி முதல் 12 மணி வரை. இங்கே இருக்கும் கிருஷ்ணருக்கு எப்பொழுதும் பசித்துக் கொண்டே இருக்குமாம். இந்த கோவிலின் இன்னொரு தனிச்சிறப்பு என்னவென்றால், கோவில் நடை சாத்தி அடுத்த இரண்டாவது நிமிடம் மீண்டும் கோவில் நடை திறக்க தந்திரியின்
கைகளில் ஒரு கோடாரியும் கொடுக்கப் படுகிறது. கிருஷ்ணா பசியை சகித்துக் கொள்ள முடியாது என்று நம்புவதால், ஏதாவது ஒரு காரணத்தால் கதவு திறக்கப்படுவதற்கு தாமதம் ஏற்பட்டால் கோடாரி உதவியுடன் கதவைத் திறக்க அனுமதிக்கப்படுகிறது. கம்சனைக் கொன்ற பிறகு கிருஷ்ணர் மிக உஷ்ணமாக இருந்தார். அந்த
#சத்தியமூர்த்திபெருமாள்_திருக்கோயில்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் என்னும் ஊரில் அருள்மிகு சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. புதுக்கோட்டையிலிருந்து 19 கி.மீ தொலைவில் திருமயம் உள்ளது. திருமயத்திலிருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
இத்திருக்கோயிலில் சத்தியமூர்த்தி, திருமெய்யர் என இரண்டு மூலவர்கள் உள்ளனர். சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக ஒரே சுற்றுச்சுவருடன் இக்கோயிலும், இதற்கு பக்கத்தில் பெருமாள் கோயிலும் அமைந்துள்ளன. இவ்விரு கோயில்களும் திருமயம் மலை சரிவில் ஒரே கல்லில் குடைவரைக் கோயில்களாக உள்ளது.
இத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமாள் சத்திய மூர்த்தி எனும் திருநாமத்துடன் நின்ற திருக்கோலத்தில் சோமச்சந்திர விமானத்தின் கீழ் ஒரு கரத்தில் பிரயோகச் சக்கரத்துடனும், மற்றொரு கரத்தில் சங்குடனும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இத்தலத்திற்கு திருமெய்யம் எனும் பெயர் வரக் காரணமாகிய
#ராமாயணம்#ஜடாயு_சிலை கழுகு பார்வையில் பிரமாண்டமான ஜடாயு சிலை, இறக்கை வெட்டுப்பட்டு ஜடாயு விழுந்த இடத்தில், கேரளா மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் இருக்கிறது. மகா விஷ்ணுவுக்கு வாகனமாக விளங்கும் கருடனின் சகோதரனான அருணனின் மகன் தான் ஜடாயு. வனத்தில் ராமனோடு இருந்த சீதையை, ராவணன் இங்கே
நயவஞ்சகமாக தூக்கிக்கொண்டு புஷ்பக விமானத்தில் பறந்தான். அப்போது ஜடாயு, ராவணனோடு போரிட்டார். அப்போது ஏற்பட்ட சண்டையில், ராவணன் தன் வாளால், ஜடாயுவின் இறக்கைகளில் ஒன்றை வெட்டினான். படுகாயம் அடைந்த ஜடாயு, ராமனிடம் சீதையை தூக்கிப் போன திசையை காட்டி விட்டு உயிரிழந்தது. இறக்கை வெட்டுப்
பட்டு ஜடாயு விழுந்த இடம், கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள சடையமங்கலம் (ஜடாயுமங்கலம்) என்று சொல்லப்படுகிறது. இந்த இடத்தில் தான் பிரமாண்டமான ஜடாயு சிலை ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு மலையேற்ற பயிற்சி எனப்படும் ‘டிரெக்கிங்’ மிகவும் பிரசித்தி பெற்றதாக இருக்கிறது. இந்த
#ஆனந்தநிலையம்#திருமலை திருமலையில் திருவேங்கடவன் கொலுவிருக்கும் கருவறையின் மேற்கூரையே ஆனந்த நிலையம் என அழைக்கப்படுகிறது. இது முழுதும் கல்லால் வேயப்பட்டு பொன்னால் போர்த்தப் பட்டதாகும். வாயு தேவனுக்கும் ஆதிசேஷனுக்கும் இடையே ஒரு பந்தயம் நடந்தது. அதில் வாயுதேவன், ஆதிசேஷனை கீழே விழும்
படிச் செய்தான். அவ்வாறு விழுந்த ஆதிசேஷன், சேஷாசலம் என ஏழுமலையில் ஒன்றாக ஆனார். சேஷாசலம் மீது ஆனந்தன் இருப்பதால் அந்த பிரதேசத்திற்கு ஆனந்த நிலையம் என்ற பெயர் வந்தது. அதன் காரணமாக ஸ்ரீனிவாசனான ஸ்ரீவேங்கடேஸ்வரன் உள்ள கர்ப்பாலயம் மீது நிர்மாணிக்கப்பட்ட விமானத்திற்கும் #ஆனந்தநிலையம்
என்று பெயர் வந்தது. மூன்று அடுக்கு விமானம், இரண்டு அடுக்கு வரையிலும் சதுரமாகவும் அதன் மீது உள்ள கழுத்து வட்டமாகவும் நிர்மாணிக்கப் பட்டுள்ளது. கற்கள், சுண்ணாம்பினால் கட்டப்பட்ட இந்த விமானம் மீது செப்புத் தகடுகளைக் கொண்டு வேய்ந்து அதன் மீது தங்க முலாம் பூசப்பட்டதால் ஆனந்த நிலையம்
காசியாத்திரை முடித்து கங்கா ஜலத்தை எடுத்து வந்த ஒரு பக்தர், தன் தாயாரின் ஆசைப்படி அதை பரமாசார்யரிடம் சேர்ப்பித்தார். அப்பொழுது அவர் முகாம் இட்டிருந்த இடத்தினருகே
உள்ள துங்கபத்ராவில் மூழ்கி ஸ்நானம் செய்த போது மகாபெரியவா கங்கா ஜலத்தையும் சிரசில் ஊற்றி குளித்தார். ஸ்நானம் அனுஷ்டானம் முடிந்ததும் அப்படியே ஆற்று மணலில் நடந்து முகாம் இருந்த இடத்துக்குப் புறப்பட்டார். இந்த சமயத்தில் கங்கா ஜலத்தை தந்திருந்த அந்த பக்தர், மகாபெரியவாளின் திருப்பாதம்
பதிந்த தடத்தைப் பார்த்தார். அந்த பக்தருக்கு எதோ பொறிதட்டினாற் போல் இருந்தது. பரமாசார்யா இது தனக்காகவே தந்திருக்கிற பிரத்யேக பிரசாதம் என்று தோன்றியது. உடனே ஆசார்யா பாதம் பதிஞ்சிருந்த மண்ணை அப்படியே சேகரிச்சு எடுத்து, தன்னிடம் இருந்த பட்டுத்துணியில் முடிச்சா கட்டி எடுத்துக் கொண்டார