தீப ஸ்தம்பம் மற்றும் வேல் கொடியுடன் ராஜ கோபுரம் தொழுது,தல விநாயகரின் முன் தோப்புக்கரணமிட்டு விட்டுச் செல்ல வேண்டும்.
2
மலைக் கோவில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது.ராஜ கோபுரமும்,இரு புறமும் நாயக்கர் மண்டபங்களும்,42 கல் தூண்கள் கொண்ட பாரவேல் மண்டபமும் உள்ளன.கருவறை மீது தங்க விமானம் காட்சியளிக்கிறது.
3
பழநி திருக்கோவிலில் இரண்டு பிராகாரங்கள் உள்ளன.மலைப் பாதை வழியாக வருவோர்,2-வது பிராகாரத்தை அடைவர்.
இங்கிருந்து கோவிலுக்குச் செல்லும் வழியில் சிற்ப வேலைப் பாடுகளுடன் கூடிய மணிக்கட்டு மண்டபம் உள்ளது.
4
இங்கு வல்லப விநாயகர் சந்நிதி,கொடிமரம்,அக்னி குண்டம்,தங்க ரத மண்டபம் ஆகியவை உள்ளன.
மலைக் கோவில் கருவறையில் வலக் கையில் தண்டாயுதம் ஏந்தி,இடக் கையை இடையில் அமர்த்தி,ஞான தண்டாயுதபாணியாக கோவணக் கோலத்தில் காட்சி தருகிறார் தண்டாயுதபாணி சுவாமி.
5
ஸ்கந்த வடிவமான இது,போகர் எனும் சித்தரால் நவ பாஷாணத் தால் உருவாக்கப்பட்டது.
பாதரசம்,மதார்சிஸ்,தானகம்,
லிங்கம்,கந்தகம்,வீரம்,பூரம்,
வெள்ளை,மனோசிலை ஆகியவை நவ பாஷாணங்கள்.
6
திருமுருக பாஷாணம்,
கார்முகில் பாஷாணம்,
இந்திர கோப பாஷாணம்,
குங்கும பாஷாணம்,
இலவண பாஷாணம்,
பவளப் புற்று பாஷாணம்,
கௌரி பாஷாணம்,
ரத்த பாஷாணம்,
அஞ்சன பாஷாணம் ஆகியவையே நவபாஷாணங்கள் என்றும் கூறுவதுண்டு.
7
சாதி லிங்கம்,
மனோசிலை,
காந்தம்,
தாரம்,
கெந்தி,
ரச கற்பூரம்,
வெள்ளை பாஷாணம்,
கௌரி பாஷாணம்,
தொட்டி பாஷாணம் ஆகியவையும் நவபாஷாணங்கள் எனப்படுகின்றன.
8
நவபாஷாணக் கலவையைக் கல்லாக்குவது,சித்து வேலை.இதை அறிந்தவர் அகத்தியர்.அவரிடம் இருந்து கற்றவர் போகர்.இந்த விக்கிரகம் காற்று,நீர்,எண்ணெய்,தேன்,
நெய் ஆகிய வற்றால் கரையாது.நெருப்பால் பாதிப் படையாது.தீராத நோய்களையும் தீர்த்து ஆயுளை அதிகரிக்கச் செய்யும் வல்லமை நவ பாஷாணத்துக்கு உண்டு.
9
போகரின் உபாசனா தெய்வமான புவனேஸ்வரி யின் அறிவுரைப்படி போகர்,பழநி மலையில் தவம் இருந்தார்.
அவரது தவத்துக்கு இரங்கிய பழநி ஆண்டவர்,தன்னை பிரதிஷ்டை செய்யும் முறை மற்றும் வழிபாடுகள் குறித்துச் சொல்லி மறைந்தார்.
10
அதன்படி தண்டபாணி வடிவை உருவாக்கி ஆகம விதிப்படி கர்ப்பக்கிரகத்துக்குள் பிரதிஷ்டை செய்தார் போகர்.
11
நவ பாஷாணத்தினாலான மூலவர் விக்கிரகத்தை அபிஷேகிக்கும் போது மேலிருந்து கீழாகவே தேய்ப்பர்.
ஏனெனில்,இந்த விக்கிரகத்தின் மேற்பரப்பு கீழ்நோக்கிய நிலையில் செதில் செதிலாக உள்ளதே காரணம்.மேல் நோக்கித் தேய்த்தால் கைகள் ரணமாகும்.
12
தினமும் இரவில் முருகப்பெருமான் மேனி முழுவதும் சந்தனம் பூசுகின்றனர்.மறுநாள் காலையில் இது பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்தச் சந்தனத்தைத் தொடர்ந்து 48 நாட்கள் அருந்தி வந்தால்,பிணிகள் நீங்கும் என்பது ஐதீகம்.
13
இவ்வாறு இரவில் திருக்காப்பிட்ட பின்,மறு நாள் காலையில் பார்க்கும் போது இறைவனின் மேனி வியர்த்திருக்கும்.அதை துணியால் ஒற்றி எடுத்து தீர்த்தமாக வழங்குகின்றனர்.
தண்டாயுதபாணி,மொட்டை அடித்த ஆண்டி அல்ல.
அபிஷேகத்தின்போது கவனித்தால்,அவர் சடைமுடியுடன் காட்சி தருவதைக் காணலாம்.
14
காலை பூஜையின் போது தண்டாயுதபாணி ஈஸ்வரனை வழிபடுவதாக ஐதீகம்.
அப்போது காவி உடையில் வைதீக கோலத்தில் தண்டாயுதபாணியை அலங்கரிப்பார்கள்.
காலச் சந்தியில் குழந்தை வடிவ திருக்கோலம்.
15
உச்சி காலத்தில் கிரீடத்தோடு கூடிய வைதீக அலங்காரம்.
சாயரட்சையில் ராஜ அலங்காரம்.
ராக்காலத்தில் முதிய வடிவம்.மூல விக்கிரகத்துக்குச் செய்யப்படும் தேன் மற்றும் எலுமிச்சைச் சாறு அபிஷேகம் சிறப்பான ஒன்று.
16
அதே போல்,பழநியின் தனிச்சிறப்பு பஞ்சாமிர்தம்.மலை வாழைப்பழம்,நெய்,தேன்,நாட்டுச் சர்க்கரை,கற்கண்டு ஆகியவற்றின் கலவை இது.
இதை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் செய்யும் போது பாஷாண சக்தியால் மருத்துவ குணம் பெறுகிறது என்பது நம்பிக்கை.
17
மூலவருக்கு அருகில் சிறிய பேழை ஒன்று உள்ளது.அதில் சாளக்கிராம ஸ்படிக லிங்க ரூபத்தில் சிவபெருமானும்,
உமாதேவியும் இருக்கின்றனர்.
இவர்களை தண்டாயுத பாணி பூஜிப்பதாக ஐதீகம்.
18
இங்கு பள்ளியறை உற்சவம் விசேஷம்.அப்போது வெள்ளிப் பல்லக்கு ஒன்று சந்நிதிக்கு வருகிறது.
ஓதுவார்களும்,கட்டியக்காரர்களும் இறைவனின் புகழ் பாட மூலஸ்தானத்திலிருந்து சுவாமி பாதுகைகள் பல்லக்கில் வைக்கப்பட்டு ஊர்வலமாக வருகிறது.
19
(வெள்ளி,திங்கள் மற்றும் கிருத்திகை ஆகிய நாட்களில் தங்கப் பல்லக்கு வரும்)அப்போது,கொப்பரைத் தேங்காய்-ஏலக்காய்-சர்க்கரை கலந்த பிரசாதம் வழங்கப்படுகிறது.
பிறகு பல்லக்கு பள்ளியறைக்கு வந்து சேரும்.அங்கு பாதுகைகள்,பல்லக்கில் இருந்து தொட்டில் போன்ற மஞ்சத்துக்கு மாற்றப்படுகின்றன.
20
கடைசியாக அன்றைய வரவு-செலவு கணக்குகளை படித்துக் காட்டுவர்.நிறைவில் நடை சாத்தப்படுகிறது. 🙏
*ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு #மத்திய_அரசின்#ஆயுஷ்மான் பவா பதக்கம் இப்போது ABHA ஹெல்த் கார்டாக மாற்றப்பட்டுள்ளது*
*இணையதளம் திறக்கப்பட்டுள்ளது. யார் வேண்டுமானாலும் பதிவு செய்யலாம்*
*5 லட்சம் சுகாதார காப்பீடு ரூ. கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து, உங்கள் ஆதார் எண்ணை டைப் செய்தவுடன், ஆதார் கார்டு இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணுக்கு OTP வரும், OTP-யை மீண்டும் தட்டச்சு செய்த பிறகு, உங்கள் தொலைபேசி எண்ணை தட்டச்சு செய்யுமாறு கேட்கப்படும்.
மேலும் பதிவுசெய்யப்பட்ட AYUSHMAN HEALTH புகைப்படத்துடன் கூடிய அட்டையை நீங்கள் உடனடியாக பதிவிறக்கம் செய்யலாம்.*
மங்கலம் அருளும் 'சோப கிருது' வருடம்- முத்திரை பதிக்க வரும் சித்திரை!*
"கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி"யான நம் மக்களின் மொழி, தமிழ் மொழி! அப்படிப்பட்ட நம் பாரம்பரியமிக்க தமிழ் புத்தாண்டு மிகவும் சிறப்பு வாய்ந்தது!
எத்தனையோ பண்டிகைகள் வந்தாலும் நம்முடைய பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரத்தை பிரதிபலிக்கக்கூடியது தமிழ் புத்தாண்டுதான்.
கால நிலை, பருவ நிலை அடிப்படையில் நாம் தமிழ் புத்தாண்டை கொண்டாடுகிறோம்.
இந்த தமிழ் புத்தாண்டு பலநூறு வருடங்கள் சீரோடும், சிறப்போடும் கொண்டாடப்படுகிறது.
ஜோதிடத்தில் பன்னிரெண்டு ராசிகளில் முதல் ராசியான மேஷத்தில் சூரியன் புகும் நாளே தமிழ் புத்தாண்டாகும்.
தமிழ் நாள்காட்டி என்பது ராசி கட்டத்தை காலக்கணிப்பில் பயன்படுத்தும் சூரிய நாள்காட்டி என்பதால் தான் மேஷத்தில் சூரியன் நுழையும் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகிறோம்.
"அரசமரத்தை கைவிட்டு கால ஓட்டத்தில் பிள்ளையாரை மட்டும் பிடித்துக்கொண்டோம் காரணம்போய் காரியம்மட்டும் மிஞ்சிநிற்கிறது இப்போது...."
"ஒரு ஊரில் ஏழு அரசமரங்கள் இருந்தால் அங்கே மழைபெய்தேதீரும்" எனப் பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்....
நமது மண்ணின் மரங்களைப்பற்றி வரிசையாக எழுதினால் முதலில் அரசமரத்திலிருந்தே துவங்கவேண்டும் அதுதான் நல்ல ஆரம்பமாக இருக்கும் எனவே அரசமரத்திலிருந்தே துவங்குவோம்...
மரங்களுக்கெல்லாம் அரசன் அரசமரம். நன்கு வளர்ந்த அரசமரம், அதிகபட்சமாக சுமார் நூறு அடி உயரமும் பத்தடி குறுக்களவும் கொண்டவையாக வளரும் பெரியமரம் இது.
நாளைய தினம் அதாவது 14/4/2023 வெள்ளிக்கிழமை நவமி திதியில் திருவோண நட்சத்திரத்தில் மதியம் 1.58 நிமிடத்தில் சுக்ரஹோரையில் அமிர்தமான வேளையில் சோபக்ருது வருடம் பிறக்கிறது
சோபக்ருது வருஷம் உண்மையில் மிக சிறந்த வருஷம்
இந்த வருஷத்திற்கு ராஜா புதன் ( கல்வி) மந்திரி சுக்கிரன் ( நல்லதை செய்பவன்)
இந்த வருஷத்துக்கான பாடல்
ஸஹோஜஸம் சோபக்ருதம் ந்ருணாமிஷ்டதமாஸ்ரயே
ஷிபிகா வாஹனாரூடம் சாமரத்வய பாணிகம்
அதாவது சோபக்ருது வருஷ அபிமானி ஸஹௌஜன் என்னும் தேவதையைப் போற்றும் விதமாக இப் பாடல் உள்ளது
கன்னட தெலுங்கு வருட பிறப்பான யுகாதிக்கும் தமிழ் வருடப் பிறப்புக்கும் என்ன வித்தியாசம் என்றால்
சென்னையில் சிறந்துவிளங்கும் சிவத்தலங்களில் முக்கியமானவை, வடக்கில் திருவொற்றியூர், மத்தியில் திருமயிலை, தெற்கில் திருவான்மியூர் ஆகும் . இதில் திருமயிலையிலும், திருவான்மியூரிலும் மூலவர் மேற்கு நோக்கி உள்ளனர்.
2
“அப்பைய” தீட்சிதர் என்ற பக்தர் ஒருவருக்கு காட்சி தருவதற்காக திருவான்மியூரில் மூலவர் திரும்பியதால், இந்த ஆலய சிவபெருமான் மேற்கு திசையை பார்த்தவாறு இருக்கிறார் என கூறப்படுகிறது..