#ராமாயணம்#விபீஷண_சரணாகதியின் சிறப்பு.
ராமாயணமே சரணாகதி தத்துவத்தின் சிறப்பை சொல்லும் ஓர் இதிகாசம். அதில் விபீஷண சரணாகதி மிகவும் சிறப்பு வாய்ந்தது. சரணாகத விதிகள் அனைத்தையும் பூர்த்தி செய்வது விபீஷண சரணாகதி மட்டுமே. #சரணாகதி என்றால் இனி என் வாழ்க்கை முழுவதையும் உன்னிடம் விட்டு
விடுகிறேன். நீயே என்னை வழி நடத்து என்பது. இந்த பொறுப்பை யாரிடம் தருகிறோம் என்பது மிகவும் முக்கியம். அதற்குத் தகுதி வாயந்தவனிடம் மட்டுமே கொடுக்க முடியும். ராமனின் சிறப்பான குணங்களாக வர்ணிக்கப் படும் ஒரு குணம் அவன் #சரணாகத_வத்சலன் என்பது. அதாவது தன்னைச் சரணடைந்தவர்களிடம் மிகுந்த
வாத்சல்யம் காட்டுபவன் என்று. அவனைச் சரணடைந்தவர் கைவிடப்
படார். ராமாயணம் ஒரு சரணாகதி இதிகாசம் என்பதற்கு சம்பவங்களை பார்ப்போம். ராமாயணம் தொடங்குவதே தேவர்கள் மகாவிஷ்ணுடம் அரக்கர்கள் இம்சையில் இருந்து தங்களை காப்பாற்றுமாறு வைகுண்டத்தில் அவரிடம் சரணாகதி செய்கின்றனர். அவரும் தான்
பூமியில் அவதரித்து துஷ்ட நிக்ரகம் செய்து அவர்களை ரக்ஷிப்பதாக
வாக்களிக்கிறார். ராமாயணத்தில் வேறு யார் யார் ராமனை சரணடைந்தவர்கள், அவர்களின், நோக்கமும் பின்புலமும் என்ன என்று பார்த்தால், விபீஷண சரணாகதியின் சிறப்பு புரியும்.
கூடத்தில் வாழ்ந்த போது, இவன் காக வடிவம் எடுத்து வந்து சீதையின் மார்பில் கொத்தினான். சீதை வலியால் துடிக்க, கோபம் கொண்ட ராமன் ஒரு குசப்புல்லை எடுத்து பிரம்மாஸ்திர மந்திரம் சொல்லி ஏவ, அது காகத்தை நோக்கி வந்தது. காகாசுரன் மூன்று லோகங்களையும் சுற்றிப் பறந்தாலும் பெற்ற தந்தையான
தந்தையான இந்திரன் முதற்கொண்டு யாரும் அபயம் அளிக்கவில்லை. அஸ்திரம் அவனை விடாது துரத்திற்று. வேறு வழியின்றி அவன் திரும்பி வந்து ராமனையே சரணடைய, ராமன் அவனை மன்னித்து, அவனைக் கொல்லாமல், அவன் ஒரு கண்ணை மட்டும் பிரம்மாஸ்திரம் தாக்கும் விதத்தில் அருள் செய்து அனுப்பினான். (பிரம்மாஸ்திரம்
இலக்கைத் தாக்காது திரும்பாது என்பதால்). இங்கே
சரணாகதிக்கு காரணம் பார்த்தால்,
முதலில் அசுரனின் குசும்பு/திமிர், பின் அச்சம், பின் உயிர் பிழைக்க வேறு வழியின்றி சரணாகதி.
#சுக்ரீவன்
அண்ணன் வாலியிடம் ஏற்பட்ட பகையால் தப்பித்து ஓடி வந்து தனியே அஞ்சி வாழும் வானரன். ராஜ போகங்களை முன்பு
அனுபவித்துப் பராகிரமசாலியாய் வாழ்ந்தவன். தன் காதல் மனைவி ருமையை அண்ணன் வாலி பெண்டாள வைத்துக் கொண்டதில் நொந்து போனவன். அவன் ராமனைச் சரணடைந்தது முற்றிலும் காரியார்த்தமானது. அண்ணன் தனக்கு இழைத்த அநீதிக்குப் பழி வாங்கும் உணர்வு, அண்ணனைக் கொன்று தன் மனைவியை மீட்டு கிஷ்க்கிந்தையை
ஆளும் ஆசை, அதற்காகப் பராக்கிரமசாலியான ராமனின் உறவு.
ராமனுக்கும் சுக்ரீவனிடம் காரியார்த்தமான தேவை இருந்தது! அது, சீதையைத் தேடிக் கண்டுபிடிக்க உதவி. ஆக, சுக்ரீவனின் சரணாகதி, இந்த பரஸ்பரக் காரியார்த்தத்தின் காரணமாக நட்பு ஆனது. சுக்ரீவனின் வானர இயல்பு ராமனுக்குப் புரிந்ததால், பின்னர்
அவன் மனம் மாறக்கூடாது
என்பதற்காக அனுமன் தீ வளர்த்து, அதன் முன்னே இருவரும் தமது நட்புக்கான உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.
#விபீஷணன்
அவனும் தன் சகோதரனனான ராவணனைப் போல அரக்கனே. ஆனால் சத்துவ குணம் மேலோங்கியவன். தர்மம் அறிந்தவன்.
பொல்லாதவனான தன் அண்ணனின் திமிர், பராக்கிரமம், அதிகார
பலம், முன் கோபம், யாரேனும் உபதேசம் தந்தால் கடும் கோபம் கொள்ளும் தீய குணம் எல்லாம் முற்றிலும் அறிந்தவன். ஆயினும் துணிந்து, சீதையை ராவணன் கவர்ந்து வந்தது தவறு, அவளைத் திருப்பி அனுப்பிவிடவேண்டும் என்று மீண்டும் மீண்டும் ராவணனிடம் மன்றாடியவன். ராமனின் தெய்வீக குணத்தை அறிந்து கொள்ளும்
அருள் பெற்ற நற்குணவான். தர்மத்தின் பக்கம் நிற்பதா, அல்லது உயிருக்கு அஞ்சி, ரத்த பாசத்துக்கு வணங்கி (கும்பகர்ணன் போல) அண்ணனின் அதர்மத்துக்குத் துணை போவதா எனும் தர்மசங்கடம் வந்த போது, தன் உறவு, செல்வம், பதவி, உறவுகள், சுற்றம் அனைத்தையும் விட்டுத் தன் அண்ணனின் பரம எதிரியான ராமனை
சரணடையத் துணிந்தவன். அந்த சரணாகதியின் நோக்கத்தில் தன் உயிருக்குப் பாதுகாப்பு எனும் ஒரு சுயநலம் இருந்தாலும், அதையும் தாண்டி தருமத்தின் பக்கம் நிற்பது என்பதுதான் பிரதானமாக இருந்தது. அதுதான் சத்துவ குணத்தோரின் மகிமை. அவனுக்கு சுக்ரீவனைப் போலத் தன்னை நாடு கடத்திய அண்ணனைப் பழி வாங்க
வேண்டும் என்கிற முதல் எண்ணமோ, அல்லது அண்ணனை அழித்து விட்டுத் தான் இலங்கை அரசனாக முடிசூட்டிக் கொள்ள வேண்டும் என்கிற 'கணக்குப் போடும் புத்தியோ' இல்லை! பகைவனின் பாசறையிருந்து வரும் தன்னைச் சேர்த்துக்கொள்ள மாட்டான், அல்லது தாக்கி விரட்டுவான் அல்லது சேர்த்துக்கொண்டாலும் ராமன் சதா
தன்னை சந்தேகப்படுவான் என்கிற அச்சமோ, ஐயமோ அவனுக்கு இல்லை! அதுவும் ஒரு தூய சத்வ குணமே. மேற்கண்டவை, விபீஷணனின் உயரிய தகுதிகள். மேலும் அவன் கூப்பிய கரங்களுடன் அதன் மத்தியில் கதையை வைத்தும் கொண்டு அஞ்சலி முத்திரையுடன் வானத்தில் இருந்து இன்னும் தரை இறங்காமல் விபீஷணன் வந்திருக்கேன்
போய் சொல்லுங்கள் என்று வாரப் படையைப் பார்த்து சொல்கிறான். அதாவது பாகவத சம்பந்தத்தையும் ஏற்படுத்துகிறான். நேரே போய் ராமனிடம் என்னை ஏற்றுக் கொள் என்று சொல்லி நிற்கவில்லை. இங்கு பாகவதோத்தமர்கள் சம்பந்தம் முக்கியம். மேலும் ஏற்றுக் கொள்ளாவிட்டால் இவனுக்கு வேறு பிக்குகள் இல்லை. ராமன்
தன்னை ஏற்றுக் கொள்வான் என்று திட நம்பிக்கையில் வந்திருந்தான். சரணாகதி செய்பவனுக்கு வேண்டிய அனைத்து குணங்களும் இவனிடம் இருந்தன. இந்த சரணாகதி நிகழ்வில் ராமனின் தெய்வீகத் தன்மை அவ்வளவு அழகாக வெளிப்படுகிறது. சரணாகதி தேடி வந்திருக்கும் பகைவனின் சகோதரனை சேர்த்துக் கொள்வதா கூடாதா என்பதை
ராமன் தானே தனியாய் உடனே தீர்மானிக்கவில்லை! இலக்குவன், சுக்ரீவன், அங்கதன், ஜாம்பவான், அனுமன் உட்பட எல்லாரோடும் மந்திர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டி, அவர்களது கருத்துகளைக் கேட்கிறான். அனுமனைத் தவிர மற்றெல்லாருமே "பகைவனை நம்பக்கூடாது, ஏற்கக் கூடாது" என்றே அறிவுரை சொல்கின்றனர். அரச
தர்மத்தின் படி அந்த அறிவுரையும் சரியே. ஆனால் ராமனோ, அதை ஏற்கவில்லை. தான் விபீஷ்ணனை ஏற்க விரும்புவதாக ராமன் கீழ்க்கண்ட காரணங்களைக் கூறி விளக்குகிறான்:
“என்னிடம் நட்புக்கரம் நீட்டி இன்முகத்தோடு வரும் ஒருவனை நான் மறுக்க மாட்டேன், கைவிட மாட்டேன். #அவனிடம்_குறை_இருந்தாலும்_சரி. இதை
முக்கியமாக நாம் புரிந்து கொள்ள வேண்டும். அனுமன் சொல்கிறார் அவன் நல்லவன், நான் பார்த்திருக்கிறேன் அவனை ஏற்றுக் கொள் என்று. அதற்கு பதிலாக தான் ராமன் இவ்வாறு கூறுகிறார். அவன் கெட்டவானாக இருந்தாலும் என்னை அடைக்கலம் நாடி வந்தவனை நான் கைவிட மாட்டேன் என்கிறார். இது தான் நம்
எல்லோருக்கும் நம்பிக்கை தருவது. நாம் சரணாகதி அரிதாகும் நம் குற்றங்களோடு நம்மை ஏற்றுக் கொள்ள அவர் தயாராக உள்ளார் என்பது. அவன் அண்ணனோடு பகைத்துக் கொண்டு வருவதில் குற்றம் காண முடியாது. அரச குடும்பங்களில் சகோதரர்கள் ஒருவருக்கொருவர் எதிரிகளாவதும் உண்டு அவன், தானே அரசனாவதிலும்
விருப்பமுள்ளவனாக இருக்கக் கூடும். எல்லாரும் என்னையும் பரதனையும் போல இருக்க முடியுமா என்ன? அவன் என்னிடம் நல்ல எண்ணத்துடன் வந்தால் என்ன, தீய எண்ணத்துடன் வந்தால் என்ன? அவனால் என்னை என்ன செய்து விட முடியும்? ஒரு விரலசைவில் என்னால் பகைவர்களை அழித்து விட முடியும். எதிரியே கையேந்தி
பிச்சை கேட்டு வந்தாலும் அவனைத் தாக்காது அவன் கேட்டதை அளிக்க வேண்டும் என்பது தர்மம். #நான்_உன்னவன் என்று எவன் என்னை ஒரு முறை சரணடைந்தாலும், அவனுக்கு எல்லவற்றிலிருந்தும் அபயம் அளிக்கிறேன். இதுவே என் விரதம்.
ராமனின் இந்த வாக்கைத் தாங்கி வரும் ஸ்லோகம் இது:
சக்ரித் ஏவ ப்ரபன்னாய தவ
விபீஷணனுடன் உறவு பூண்டால் எனக்கு என்ன ஆதாயம் என்று ராமன் எண்ணவில்லை. (ஆனால் அந்தத் தேவை சுக்ரீவனிடம் பூண்ட நட்பில் இருந்தது!) ராமனின் இந்த விளக்கங்களை எல்லாரும் வியந்து ஏற்கின்றனர். விபீஷணன் அழைத்து வரப்படுகிறான்.
ராமனிடம் சரண் புகுகிறான். ராமன் அவனிடம் ராவணனின் பலம், திறன், படைகள் பற்றிக் கேட்கிறான். விபீஷணன் விளக்குகிறான். ராவணாதியரைக் கொல்ல தன்னாலான எல்லா உதவிகளையும் தர வாக்குறுதி தருகிறான். ராமன் உடனே இலக்குவனை கடல் நீரைக் கொண்டுவரச் சொல்லி, விபீஷணை இலங்கைக்கு அரசனாகப் பட்டாபிஷேகம்
அங்கே, அப்போதே செய்து வைக்கிறான்! இங்கே நடந்தது சுக்ரீவனிடம் நடந்தது போன்ற ஓர் நட்பு ஒப்பந்தம் அல்ல. இது மெய்யான சரணாகதி! ராமன்தான் தலைவன். விபீஷணன் தாசன். சரணாகதி செய்தவனின் உயர் குணங்கள், அதனை அங்கீகத்தவனின் தெய்வீகம் இரண்டுமே பொன் போல் ஒளிரும் ஓர் நிகழ்வு இந்த #விபீஷண_சரணாகதி!
சரணாகதி அல்லது #பிரபத்தி எனும் மார்க்கத்தைப் பிரதானமாக முன் வைக்கும் வைணவத்தில் இந்த விபீஷண சரணாகதி நிகழ்வு, வைணவர்களுக்குப் மாபெரும் நம்பிக்கையைத் தரும் ஓர் முன்னுதாரணமாக விளங்குகிறது.
சரணாகதி என்றால் ''நான்'' என்ற எண்ணம் நீங்கி. நம் விருப்பங்களை துறந்து, யாரை பின்பற்றுகிறோமோ
அவரை முழுமையாக ஏற்றுக் கொண்டு, அவர் சொல் கேட்டு, அவர் வழி நடந்து, அவருடைய நிலையை அடைய முற்படுவதாகும். அது இறைவனானலும் சரி ஆசார்யன் ஆனாலும் சரி.
திரௌபதியும் சரணாகதி செய்தாள், ஆதிமூலமே என்று கஜேந்திரனும் சரணாகதி செய்தது. மேலே குறிப்பிட்ட காக்காசுரன், சுக்ரீவன் முதலானோர் சரணாகதி செய்துள்ளனர். இப்படி இருந்தும் விபீஷண சரணாகதிக்குத் தனி ஏற்றம் என்ன? Sri @harihar12 சில குறிப்புகள் கொடுத்தார்.
விபீஷண சரணாகதி பூரண சரணாகதி ஆகும்.
ஏன்? 1. ஆநுகூல்ய சங்கல்பம்: பெருமாளுக்கு என்ன பிடிக்குமோ அதை இந்த ஆத்மா செய்ய வேண்டும். அவனுக்கு (ஆத்மா) அனுகூலமானதை மட்டுமே செய்ய வேண்டும். 2. பிராதிகூல்ய வர்ஜனம்: மற்ற உலக விஷயங்களில் விராகம். அதாவது பற்று இல்லாமை. 3. ரக்ஷிதித்தி வர்ஜகஹ : பெருமாள் இடத்தில் மகாவிஷ்வாசத்தோடு
இருத்தல். 4. கோத்ரத்துவம்: பெருமாளுடைய திருவடியே உபாயம் என்று வரித்தல் 5. கார்ப்பண்யம்: புகல் ஒன்றும் இல்லாமல், தன்னிடத்தில் எந்த ஒரு தகுதியும் இல்லாமல் ( கர்ம பக்தி ஞான யோகம் இல்லாமை) சரண் என்று இருத்தல். 6. ஆத்ம நிக்ஷேபணம் : ஆத்மாவை அவர் திருவடியில் சமர்ப்பணம் செய்தல்.
நாமும் நம்மை அப்படி தயார் செய்து கொண்டு அவன் திருவடிகளில் பிரபத்தி பண்ணுவோம்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#இடர்_தீர்த்த_பெருமாள்_கோவில்
நாகர்கோவில் நகரில் வடிவான தெருக்கள் அமைந்த வடிவீஸ்வரம் பகுதியில் இடர் தீர்த்த பெருமாள் கோவில் உள்ளது. இங்கு கருவறையில் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் அருள் பாலிக்கிறார். தென்னகத்தை ஆண்டு வந்த குலோத்துங்க சோழ மன்னன் நாக தோஷத்தால்
அவதிப்பட்டு வந்தான். பரிகாரங்கள் பல செய்தும் பலன் அளிக்கவில்லை. ஆஸ்தான ஜோதிடர் கூறியதற்காக காஞ்சிபுரம் சென்று பெருமாளை தரிசித்து வந்தான். அன்றிரவு அவனது கனவில் திருமலையில் நின்றருளும் வேங்கடவன் வந்தார். உனது இடர் தீர்ந்து போகும் இனி அச்சம் வேண்டாம் என்று கூறினார். அதன்படி அவன்
இடர் தீர்ந்து போனது. தான் கனவில் கண்ட அதே ரூபத்தில் வேங்கடவனுக்கு சிலை வடிவம் கொடுத்து நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் கோயில் எழுப்பினான். இடரை தீர்த்தவர் என்பதாலே குலோத்துங்க சோழ மன்னன், இத்தல பெருமாளுக்கு இடர் தீர்த்த பெருமாள் என நாமம் இட்டு வணங்கினான். கிழக்கு நோக்கி அமைந்த
காஞ்சி சங்கரமடத்துடனும் மகா பெரியவருடனும் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த பட்டாபி சார், பெரியவர் பற்றிய மெய்சிலிர்க்கும் விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார்.
“பெரியவா
மடத்துக்கு வந்து பீடாரோகணம் பண்ணின காலத்துல, கஷ்டமான நிலைல இருந்தது மடம். பாங்க்ல கடன் வாங்கித்தான் நித்தியப்படி செலவுகளையே செய்ய வேண்டி இருந்தது. எங்க தாத்தா மகாலிங்கய்யர் கிட்ட பெரியவா இதை எல்லாம் சொல்லியிருக்கார். அபர காரியத்துக்குதான் காய்கறி இல்லாம சமைப்பா. ஆனா இங்கே,
நித்தியப்படி சமையலுக்கே காய் வாங்க வழியில்லாததால, ஆரஞ்சுப் பழத் தோலை எங்கே இருந்தாவது தேடிக் கொண்டு வந்து, சாம்பார்ல போட்டுச் சமைக்கற நிலை இருந்துதாம். அப்பல்லாம் விவசாயிகள் வாழைக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூன்னு தங்களால் முடிஞ்சதைக் கொண்டு வந்து கொடுப்பா. மத்தபடி காசா பணமா
ரோகிணி நட்சத்திர நாளில் வரும் அட்சய திருதியை மிக, மிக சிறப்பு வாய்ந்ததாகும். அன்று தொடங்கப்படும் செயல்கள் சிறப்பானதாக அமையும். இறைவனை முழு மனதோடு வழிபட ஏராளமான நன்மை நமக்கு ஏற்படும்.
அட்சய திருதியையின் முக்கியத்துவத்தை, பெருமைகளை #பவிஷ்யோத்தர_புராணம்
விரிவாக சொல்கிறது.
அட்சய திருதியை அன்று தான் கிருதயுகம் பிறந்தது.
கங்கை, பூமியை முதல் முதல் அட்சய திருதியை தினத்தன்று தான் தொட்டது.
வனவாச காலத்தில் பாண்டவர்கள் அட்சய பாத்திரம் பெற்றது அட்சய திருதியை அன்று தான்.
இந்நன்நாளில் தான் மணிமேகலை அட்சய பாத்திரம் பெற்றாள்.
மகாலட்சுமி
அவதரித்த நன்னாளும் இத்தினத்தில் தான்.
இத்தினத்தன்றுதான் குபேரன் நிதி கலசங்களை பெற்றார்.
சிவபெருமான் அன்னபூரணியிடம் பிட்சாடனராக வந்து யாசகம் பெற்றதும் இத்தினத்தில் தான்.
பராசக்தியின் ஒரு அம்சமான சாகம்பரிதேவி இந்த உலகில் காய்கறிகளை, மூலிகைச் செடிகளைஉருவாக்கியவர் என்று புராணம்
#MahaPeriyava
Author: P.K.Ramanathan, Chennai
Source: Maha Periyaval Darisana Anubhavangal Vol.2
Since I was residing in Kanchipuram, I could get Sri Maha Periyava’s darshan daily. Once when SriMatham organised an Aradhana, for some reason the required number of vaideekas were
not available. So, Sri Maha Periyava nominated and made me partake in the Aradhana along with the other vaideekas. After the bhojanam finished, He called and instructed me to do Gayatri Japam for a thousand times in order to compensate for my participation in the Aradhana the
previous day. I complied with His orders. I was transferred to the Courts in Chengalpat District. Following the transfer, Sri Periyaval’s darshan became fewer and far between for me. So on Anusham, every month, I would go to Kanchipuram, have the trishathi archana performed at
#மகாபெரியவா
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்
தட்டச்சு வரகூரான் நாராயணன்.
ஒரு விவசாய கூலி வேலை செய்யும் பெண், கருவுற்றிருந்த தன் மகளை அழைத்துக் கொண்டு பெரியவா தரிசனத்துக்கு வந்தாள். "ரொம்ப நாள் கழிச்சு, முழுகாம இருக்கு. அதான் கவலையா இருக்கு. நல்லபடியா குளி
குளிக்கனும். சாமி ஆசீர்வாதம் பன்ணனும்.”
பெரியவா கையை தூக்கி ஆசி வழங்கினார்கள்.
தாயார் தொடந்து பேசினாள், “ரொம்ப ஏழைங்க நாங்க, வாய்க்கு ருசியா பதார்தங்களை வாங்கி கொடுக்க முடியலை. சாம்பலைத் துண்ணுது”
அந்த சமயம் ஸ்டேட் பேங்க் ரங்கநாதன், ஒரு டப்பா நிறைய கட்டி தயிர் கொண்டு வந்து
சமர்ப்பித்தார்.
"நீயே அந்த டப்பாவை, அந்த அம்மாகிட்டே கொடுத்துடேன்”
தயிர் டப்பா இடம் மாறியது.
கோபாலய்யர் (என்ஜினீயர்) பிற்ந்த நாள். வழக்கபடி ஒரு டின் நிறைய இனிப்பு, உறைப்பு தின்பண்டங்கள் கொண்டு வந்தார், வேத பாடசாலை மாணவர்களுக்காக.