#யதார்த்த_பதிவு

நேத்துலேர்ந்து.. ஜாலியா கலாய்ச்சும்.. கோபமாகவும்.. கேலியாகவும் பதிவு போட்டாலும்..

என் மனதின் உண்மை நிலை என்னவோ.. ஒரு ஆதங்க பெருமூச்சு.. ஒரு பெரிய வருத்தம்..

காரணம் என்னன்னா..

1. என்னதான் மாச சம்பளம் வாங்கினாலும்.. அதற்கேற்றா மாதிரி செலவுகளும், Image
சேமிப்புகளும், ப்ளான் செய்தாலும்..

சில எதிர்பாராத செலவுகள்.. எதிர்பாராத பயணங்கள்.. மருத்துவச் செலவுகள்..

என்று வரும்போது டக்குனு என்ன பண்றதுனு தான் யோசிக்க தோனும்..

பயங்கர பதட்டம் வரும்.. தலையை அடகு வச்சாவது அதை எப்படியோ சமாளிப்போம்ங்கறது வேற விஷயம்.. Image
2. என்னதான் சேமிப்பு.. காப்பீடு என்று இருந்தாலும்.. ஃபிப்ரவரி.. மார்ச்ல் அந்த வருமான வரிக்காக கமிட்மெண்ட்களை சரிகட்ட செய்ய வேண்டிய செலவுகள்.. திடீர் மருத்துவ செலவுகள்.. ஏப்ரல் மே இல் பிள்ளைகளின் ஸ்கூல் முதல் டெர்ம் ஃபீஸ்.‌.. Image
மறுபடியும் நவம்பரில் இரண்டாம் டெர்ம் ஃபீஸ்..

இதைத்தாண்டி சில அத்தியாவசிய செலவுகள்.. பண்டிகை கால துணிமணிகள் போல..

இப்படி ஒவ்வொரு செலவுக்கும் இதயம் ஒரு நொடி நின்றுதான் துடிக்கும்..

3. மாதச்சம்பளம் வரும்போதே வரி பிடித்தம் என்று Image
ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பணம் பிடிக்கப்பட்டே கைக்கு வரும் சம்பளம்..

ஒவ்வொரு விஷயத்திலும் வரி இல்லாமல் வாழ்க்கை இல்லை என்று ஆகிப்போன நிலை..

டோல் முதற்கொண்டு கட்டிவிட்டு பயணிக்கும் பயணங்கள்..

சம்பளம் வந்த ஐந்தே நாட்களில் வந்த அமௌண்ட்.. Image
வீட்டு லோன்.. கார் லோன்.. கிரெடிட் கார்ட் பேமெண்ட் அது இது னு சடசடவென அக்கௌண்ட்இல் குறையும் நிலை ..

இதைத்தாண்டி நேர்மையான வாழ்க்கை வாழறோம்னு ஒரு அசட்டு பெருமை..

4. மாதச்சம்பளம் என்றாலும் அப்படி ஒன்றும் சௌகரியமாக.. இந்த கார்ப்பரேட்களில் வேலை செய்பவர்க்கு.. Image
அது வந்துவிடுவதும் இல்லை..

ரத்தத்தின் கடைசி சொட்டு வரை உறிஞ்சி எடுக்கப்பட்டே அது பணமாக மாறி வருகிறது..

ஒவ்வொரு நாள் அலுவலகம் செல்லும்போதும்.. இன்னும் எத்தனை நாள்தான் இப்படி என்றும்..

வீட்டிற்கு வந்து குடும்பத்தை பார்க்கையில்.. Image
இவர்களுக்காக மறுநாள் வேலைக்கு போயே ஆகணும் ங்கற எண்ணம்.. இப்படிதான் வாழ்க்கை போகிறது..

5. இதை எல்லாத்தையும் தாண்டி..

கஷ்டப்பட்டு நாம் ஈட்டிய அதே பண விஷயத்தில் நம்மை ஏமாற்றுபவர்கள்..

(ச்சே ச்சே.. அவங்க நல்லவங்க.. நாமதான் ஏமாந்தவர்கள்).. Image
ஏதோ ஒரு‌ சந்தர்ப்ப சூழ்நிலையில் நாம் கொடுத்த பணத்தை

இப்போ தர்றேன் அப்போ தர்றேன்னு இழுத்தடிக்கும் "மலந்தின்னிகள்"..

அந்த பணம் இனி வராது... அது அவருக்கு போட்ட "வாய்க்கரிசி" என்று நினைக்கும் நிலைக்கு நாம் தள்ளப்படுவது.. Image
அதே பணத்தால் ஸ்டேட்டஸ் என்று கூறி திமிருடன் திரியும் சில அல்ப உறவுகள்..

அதே பணத்தை வைத்து... பணத்திற்காக ஏமாற்றும் சில உறவுகள்..

நட்புகள் என்று பணம் படுத்தும் பாடு..

இப்படியாக ஒரு நடுத்தர வர்க்கம் (அது அப்பரோ.. லோயரோ..) பணத்திற்காக படும் பாடு சாதாரணமல்ல.. Image
என்னதான் பணம் வாழ்க்கைல சந்தோஷம் தராது..

அது இது.. னு தத்துவம் பேசினாலும்.. அதற்கான தேவை நமக்கு சிதைக்கு போகும்வரை இருந்துகொண்டேதான் இருக்கிறது..

நடுத்தரத்துக்கே இவ்வளவுன்னா.. ஏழைகளுக்கு..? கேட்கவே வேண்டாம்.. அவங்களுக்கு ஒரு நல்ல விஷயம்.. Image
இல்லைங்கற ஒரே பிரச்சனையோட போய்டுது..

நம்மள மாதிரி திரிசங்கு நிலை இல்லை..

இதெல்லாம் இப்படி இருக்க..

இவனுங்க ஒவ்வொருத்தனுக்கும் கோடிகளில்..‌

அதுவும் ஆயிரமாயிரம் கோடிகளில் சொத்துகள்.. (நூறுகளில் இருக்கும் கனி நல்லவரானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!).. Image
என்பதை காணும்போதும் வருத்தமே மேலிடுகிறது.

ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு எழுதி வைத்து.. பார்த்து பார்த்து செலவழிக்கும்..

நாமெல்லாம் நிஜமாகவே பைத்தியங்கள்தான்.. ஏமாந்தவர்கள் தான்.. Image
எத்தனை மோடி வந்தாலும்.. எத்தனை அண்ணாமலை வந்தாலும்.. இதெல்லாம் மாறாது..

நாம ஒவ்வொருத்தரும் யதார்த்தத்தை.. தர்மத்தை புரிஞ்சுக்காத வரை..!!

புரிந்து கொண்டு அவர்களுக்கு கரம் கொடுப்போம் என உறுதி ஏற்போம்

ஜெய்ஹிந்த்

🙏🙏🙏🙏

நன்றி பாலாஜி சேஷாத்திரி முகநூல் Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with #பாரதம்_தமிழகம் ( Kaalabala )🇮🇳

#பாரதம்_தமிழகம் ( Kaalabala )🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Kaalabala1

Apr 16
"அதிகபட்சம் உங்களால் என்ன செய்ய முடியும்?"

"கேலி செய்து நகைக்கமுடியும்!"

அவன் @annamalai_k நெஞ்சம் நிமிர்த்தி ‌நிற்கிறான்!

நீங்கள் முதுகில் ஒளிந்து
குத்திக் கொண்டிருக்கிறீர்கள்-

எடுபடாது உங்கள் போலித்தனம்..
ஏனெனில் அவன் @annamalai_k திருடர்களை அஞ்சி நடுங்க செய்தவன்! Image
உனது ஈனபுத்திக்கு மகிழ்ச்சியென்றால்
இன்னும் ஓராயிரம்முறை
சொல்லிக்கொள்
ஆடு ஆடு என்று...-

போரிட்டு கூட வேண்டாம்
அவனை @annamalai_k வாதிட்டு வெல்ல, ஒத்த ஆண்?
நினது கூட்டத்தில் உண்டோ?

பட்டத்து அரியணை பிறப்பல்ல
ஆடு மேய்த்தவன்தான் @annamalai_k
தொட்டுத்தான் பாரேன்! Image
இப்படியோர் வீரம் திராவிடர்களுக்கு புதிது!
அவன் தமிழனல்லவா
காணீர், வீரம் என்றால் இப்படிதானிருக்கும்!!

அவமானங்கள் பின்னால் நிற்பது
உமக்கு அழகென்றால்,
ஆண்மகன் பின்னால் நிற்பதே
அறிவுக்கு அழகு!!

அந்த முண்டாசுக்காரனின் ரெளத்திரம்
நூறாண்டுகள் கழித்தல்லவா
அவனிடத்தே பார்க்க நேர்ந்தது- Image
Read 4 tweets
Apr 4
*ஈசன் உபதேசித்த ஸ்தலங்கள்*

*ஓமாம்புலியூர்*

தட்சிணாமூர்த்தி உமாதேவிக்கு பிரணவப்பொருள் உபதேசித்தது.

*உத்திரகோசமங்கை*

பார்வதிக்கு இறைவன் வேதா கமலங்களின் இரகசியங்களை உபதேசித்தல்.

*இன்னம்பர்*

அகத்தியர் வழிபாட்டு இலக்கண உபதேசம் பெற்றது.
*திருவுசாத்தானம்*

இராமர் சேது அணை கட்டுவதற்கு இத்தலத்து இறைவனிடம் மந்திர உபதேசம் ராமர் பெற்றார்.

*ஆலங்குடி*

சுந்தரர் தட்சிணாமூர்த்தியை வழிபட்டு பஞ்சாட்சர உபதேசம் பெற்றார். மற்றும் ஆதிசங்கரர் குருபகவானை தரிசித்து மகா வாக்கிய உபதேசம் பெற்றார்.
*திருவான்மியூர்*

அகத்தியருக்கு மூலிகை {வைத்தியம்} பற்றி உபதேசம் அருளியது.

*திருவாவடுதுறை*

அரிக்கும் அந்தணர்களுக்கும் சிவஞான உபதேசம் செய்தல், மற்றும் போகர் முதலிய நவகோடி சித்தர்களுக்கு அஷ்டமா சித்தி அருளியது.

*சிதம்பரம்*
Read 10 tweets
Apr 3
எனது 5 இலக்க வருமானம், எனது 2 BHK வீடு, எனது கார், எனது தொழில், எனது 25 ஏக்கர் நிலம், என் பண்ணை வீடு போன்றவை, என் நாடு பாதுகாப்பாக இருக்கும் வரை இவை அனைத்தும் பாதுகாப்பானது. இல்லாவிட்டால் எல்லாமே தீயில் எரிந்து விடும்.
இன்று இரண்டு மில்லியன் உக்ரேனியர்கள் ரஷ்ய-உக்ரைன் போரில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு மற்ற நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த அண்டை நாடுகளைப் பெற்றிருப்பது அவர்களுக்கு அதிர்ஷ்டம்.
நமக்கு என்ன நடக்கும்???. நாங்கள் எங்கு செல்லலாம் என்று நினைக்கிறீர்கள்???

ஒரு பக்கம் பாகிஸ்தான், ஒரு பக்கம் வங்கதேசம், கீழே இந்தியப் பெருங்கடல், மேலே சீனா, நாட்டிற்குள் எண்ணற்ற துரோகிகள்!!!

உங்களுக்கு அடைக்கலம் கொடுக்க வேறு நாடு இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
Read 4 tweets
Apr 3
#மனைவி
#இல்லாள்
#பொண்டாட்டி

02/02 தொடர்கிறது

தன் பிறகு அவளுடைய தாய் பல வீட்டு வேலைகளை செய்து அவளை வளர்த்தார்,இவளும் வளர்ந்து பெரியவளாகி விட்டாள்.

அவளுடைய குறையை பார்த்த யாருக்கும்,அவளின் அன்பு தெரியவில்லை,
அவளுக்கு எல்லோரும் தன்னிடம் பேச வேண்டும் என்கிற ஆசை இருக்கும் ஆனால் யாரும் பேச தான் மாட்டார்கள்..!

அவளின் தந்தை மரணத்திற்கு பிறகு உறவுகள் எல்லாம் அவரவர் வேலையை பார்க்க சென்று விட்டனர்.

திருமண வயது வந்தது, ஆனால் பேச
முடியாத காரணத்தால் அவளை திருமணம் செய்ய யாரும் முன் வரவில்லை...
பிறகு எங்கள் பெற்றோர்கள் பேசி இருவருக்கும் திருமணம் நடந்தது.

பிறகு காலங்கள் கடந்தது எங்களை பெற்றவர்கள் எல்லாம் இறந்து விட்டார்கள்..! எங்களுக்கும் வயது ஆகி விட்டது.

ஆனால் என் மனைவி ஒரு குழந்தை மாதிரி......தம்பி" என்று சொன்னவர் குரலில் ஒரு தடுமாற்றம்.
Read 19 tweets
Apr 3
#மனைவி
#இல்லாள்
#பொண்டாட்டி

01/02

காலையில் எழுந்து எப்பொழுதும் போல அலுவலகம் செல்ல தயாராகி கொண்டு இருந்தான் "சேகர்".

அவனுடைய மனைவி இன்றும் கணவருக்கு பிடித்த உணவை தயார் செய்ய வேண்டும் என்பதற்க்காக மிக வேகமாக சமைத்து கொண்டு இருந்தாள்..
ஆனால் தினமும் செல்லும் நேரத்தை விட சற்று முன்னதாக புறப்பட்டான்.

இதை பார்த்த மனைவி "ஏன் இவ்வளவு சீக்கிரம் போகிறீர்கள்" என்று வினவினாள்.

அலுவலகத்தில் கொஞ்சம் வேலை இருப்பதாக சொல்லி கொண்டே கிளம்பினான்..., "
நேற்றே சொல்லி இருந்தால் இன்னும் விரைவாக சமைத்து இருப்பேனே,கொஞ்சம் பொறுங்கள் சமையல் முடிய போகிறது" என்றால் மனைவி.

"எல்லாம் உன்னிடம் சொல்லி கொண்டே இருக்க வேண்டுமா..? எனக்கு ஆயிரம் பிரச்சனை இருக்கிறது,
Read 25 tweets
Apr 2
#ஸர்வம்_ஸ்ரீராமமயம் 🙏
#ஓம்நமோ_நாராயணாய 🙏

*#சரணாகதி*
🙏🙏🙏🙏🙏🙏

*1. நின்றால் வேங்கடம்*
ஒரு நொடி பொழுதேனும் திருமலையில் நின்று விடு

*2.கிடந்தால் ரெங்கமாம்*
அரங்கநாதனை ஒரு நொடியேனும் கிடந்து வலம் வந்து விடு
*3.அமர்ந்தால் கச்சியாம்*
கச்சி மாநகரில் ஒரு நொடியேனும் அமர்ந்து இருந்து வரதனை அனுபவி

*4.விழுந்தால் கோட்டையாம்*
மேல் கோட்டை நாராயணை ஒரு நொடியேனும் விழுந்து நமஸ்கரி

*5.தொழுதால் அமுதமாம்*
குடந்தை சாரங்கபாணியை ஒரு நொடி பொழுதேனும் வணங்கி விடு
*6.அழுதால் கடிகையாம்*
திருகடிகை அக்கார கனியை நினைந்து ஆனந்த கண்ணீரில் நனை ஒரு நொடியேனும்

*7.நினைந்தால் பூரியாம்*
பூரி ஜெகன் நாதனை ஒரு நொடியேனும் நினைந்து விடு

*8.நடந்தால் துவாரகையாம்*
துவாரகபுரியில் ஒரு நொடியேனும் நடந்து செல்
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(