சொர்ணபுரீஸ்வரர் ஆலயத்தில் மகன் (அ) மகள் ஜாதகத்தை
பவுர்ணமி அன்று பூஜை
செய்தால் திருமணத் தடை
விலகி விரைவில் திருமணம்
நடந்தேறும் என்பது
பக்தர்களின் நம்பிக்கை.
இறைவனையே தன்
கணவனாக நினைத்து
வளர்ந்தாள் ஒரு மங்கை.
தான் நினைத்தபடியே
அவரையே மணந்து
கொண்டாள்.
ஆம். இந்த அதிசயம் நடந்த
தலம் தான் ஆற்றூர்.
இங்கு உள்ளது
சொர்ணபுரீஸ்வரர் ஆலயம்.
இங்கு அருள்பாலிக்கும்
இறைவன் பெயர் -
சொர்ணபுரீஸ்வரர்.
மந்தாரவனேஸ்வரர் என்பது
இன்னொரு பெயர்.
ஆற்றூரில் வசித்து வந்த ஒரு சிவ பக்தரின் மகளாகப்
பிறந்தவள் கயற்கண்ணி.
அவள் தன் பெற்றோரால்
மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்டாள்.
அவள் திருமண வயதை
எட்டியதும், அவளுக்குத்
திருமணம் செய்வதற்கான
ஏற்பாடுகளைச் செய்தனர்
பெற்றோர்.
ஆனால், அவளோ ‘மந்தாரவனத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை நான் மனதார
நேசிக்கிறேன்.
அவரைத் தான் மணந்து கொள்வேன்’ என உறுதியாகக் கூறிவிட்டாள்.
பெற்றவர்களுக்கு அவளின்
நிலைமை கண்டு அழுவதா?அல்லது சிரிப்பதா? என்று புரியவில்லை.
‘மானிட பெண் ஒருத்தி, எப்படி இறைவனை மணந்து கொள்ள முடியும்? அது சாத்தியமா?’
என்று மகளை கேட்டதும்,
அவளின் முடிவை மாற்றிக்
கொள்ளும் படி வற்புறுத்தினர்.
ஆனால், கயற்கண்ணியோ
தன் முடிவிலிருந்து பின்
வாங்குவதாக இல்லை.
சிவபெருமானையே சதா சர்வகாலமும் எண்ணி பூஜித்து
வந்தாள்.
அவரின் நினைவிலேயே
நாட்களைக் கடத்தினாள்.
கயற்கண்ணியின் மன
உறுதியைக் கண்ட
சிவபெருமான் மனம் கசிந்தார்.
அவரின் பார்வை அவளை
நோக்கித் திரும்பியது.
அவளை மணந்து கொள்ள
முடிவு செய்தார்.
ஆற்றூரில் மந்தாரவனத்தில்
எழுந்தருளியுள்ள
மந்தாரவனேசுவரர் என
அழைக்கப்படும் சிவபெருமான்ஒரு பிரமசாரியின் வேடம்
பூண்டு, தேவர்கள் புடைசூழ, தை மாதத்தில் ஒரு
வெள்ளியன்று ஆற்றூரில்
எழுந்தருளி கயற்கண்ணியை மணந்தார்.
கயற்கண்ணியின் பெற்றோர் தங்கள் மகள் ஒரு தெய்வமகள்என்று உணர்ந்து, மணமக்களை ஆசீர்வாதம் செய்தனர்.
சிவபெருமான் கயற்கண்ணியுடன் திருக்கோவிலுக்கு எழுந்தருளினார்.
வடக்குப் பிரகாரத்தில் எழுந்தருளியுள்ள அன்னை
அபயாம்பிகை என்ற
அஞ்சனாட்சி அம்மனை
வணங்கி அருள் பெற்றாள்
கயற்கண்ணி.
அன்று முதல் அன்னை அஞ்சனாட்சி அம்மைக்குரிய சிறப்புகள் அனைத்தும் கயற்கண்ணி அம்மைக்கும் நடைபெறத் தொடங்கின.
திருச்சுற்றில் தெற்கில் அன்னை அபயாம்பிகை தனிக்கோவில் கொண்டு அருள்பாலிக்கிறாள். தவிர, மேற்கில் சொர்ண விநாயகர், நால்வர், வள்ளி,
தெய்வானை, முருகன்,
கஜலட்சுமியும், கிழக்கில்
பைரவர், சூரியன்,நாகர்,
சனீஸ்வரன் ஆகியோரும்
வீற்றிருக்கின்றனர்.
இங்குள்ள துர்க்கை தனது
எட்டு கரங்களில் சங்கு, சக்கரம்,வில், கபாலம், டமருதம்,
கெண்டி இவைகளை தாங்கி
அபய, வரத முத்திரைகளுடன் அருளாட்சி செய்கிறாள்.
செவ்வாய் மற்றும்
வெள்ளிக்கிழமை ராகு கால நேரத்தில் துர்க்கைக்கு
அர்ச்சனை செய்து,
எலும்பிச்சை விளக்கு ஏற்றி
வழிபட்டால் கன்னியருக்கு
விரைந்து திருமணம்
நடந்தேறும் என்கின்றனர்
பக்தர்கள்.
முக்தி பெற்ற தவளை :
இங்குள்ள திருக்குளத்தில் ஒரு தவளை இருந்தது.
ஒரு மகா சிவராத்திரியன்று
கன மழை பெய்தது.
மழையில் துள்ளித்திரிந்த
தவளை அங்கிருந்த நாவல்
மரத்தின் அடியில் ஒதுங்கியது.
அங்கே இருந்த பாம்பு ஒன்று, அந்தத் தவளையை கவ்விப்
பிடித்தது.
பாம்பின் வாயில் அகப்பட்டுக் கொண்ட தவளை, ‘நீண்ட நாட்களாக ஈசனின்
திருக்குளத்தில் தங்கி
இறைவனையே சிந்தனை
செய்த எனக்கா இந்த
நிலைமை’ என்று வருந்தியது.
மேலும் அபயம்பிகை அன்னையை பிரார்த்தனை செய்தது.
தவளையின் பிரார்த்தனைக்கு மனம் இளகிய அன்னை
பஞ்சாட்சர மந்திரத்தை
உபதேசிக்க,
தவளை பாம்பின்
பிடியிலிருந்து விடுபட்டது.
மேலும் அந்த பாம்பையே
ஆபரணமாகவும் அணிந்து கொண்டது.
பின்னர் வெகு காலம்
திருக்குளத்திலேயே வாழ்ந்த அந்தத் தவளை இறுதியில்
சிவலோகம் சென்றடைந்தது.
இந்த தீர்த்தத்தில் நீராடி
இறைவன், இறைவியை
வணங்கினால் மண்டூக
தோஷம், கால சர்ப்ப தோஷம், ராகு தோஷம் அனைத்தும்
விலகும் என்கின்றனர்
பக்தர்கள்.
மகாவிஷ்ணு :
அசுரர்களை அழிக்க
இத்தலத்து இறைவனை
வேண்டி, அதீத பலம் பெற்றார் மகாவிஷ்ணு.
இதற்கு சான்று பகிரும்
வகையில் இந்த ஆலயத்தின் அருகிலேயே சுகவாசி
நாராயண பெருமாள் என்ற
பெயரில் தன்
பரிவாரங்களுடன் அவர்
கோவில் கொண்டுள்ளார்.
தவிர தேவ கோட்டத்தில் மேல் திசையில் மகாவிஷ்ணு அருள் பாலிக்கிறார்.
எனவே, இந்த ஆலயத்தில் சிவ - விஷ்ணு பேதம் இல்லை.
நாகை மாவட்டம் பந்தநல்லூர் - மணல்மேடு பேருந்து தடத்தில் உள்ள கடலங்குடி என்ற
ஊரிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஆற்றூர் திருத்தலம்.
இளம் வயதிலே அனைத்து தீட்சைகளையும் பெற்றதால் சடைமுடி தரித்து அதனால் துறவியானார் அதனாலேயே தருமை 27 ஆவது குருமகா சந்நிதானம் ஆனார் குரு பக்தி மிக்கவர் கலைகளை போஷிப்பவர்.
சைவ சித்தாந்தத்தின் மறு உருவம்.
குழந்தை மனம் கொண்ட மாபெரும் யோகி தவ சீலர் இவ்விதம் சொல்லிக் கொண்டே போகலாம்.
முதுகலைப் பட்டம் (MA),.
ஆய்வியல் நிறைஞர் பட்டம் (M.Phil),. முனைவர் பட்டம் (Ph.D) போன்ற பல பட்டங்களை பெற்று ஆன்மிகம், சமூகப்பணி, கல்விப்பணி, எழுத்துப்பணி,
தமிழ் வளர்ச்சி உட்பட தொடர்ந்து மக்கள் பணியை செய்துவரும் திருக்கயிலாயப் பரம்பரைத் தருமை ஆதீனமடம் தனியார் நிர்வாகம் செய்யும் ஒரு ஆன்மிக நிறுவனம் சமூக சிந்தனை உடையவர்களே தருமை ஆதீன குருமணிகளாக இருந்து வருகின்றனர்.
பெரிய பெரிய பாத்திரங்களில் சர்க்கரைப் பொங்கலை ஏலக்காயும் சாதிக்காயும் பச்சைக் கற்பூரமும் குங்கும பூவும் மணக்க நெய் ததும்பக் கொண்டு போய் வைத்தார்.
இதை எல்லோரும் வேண்டிய மட்டிலும் உண்ணலாம்.
ஒரே ஒரு நிபந்தனை, கையை மடக்காமல் உண்ண வேண்டும்.
மாலையில் வருவேன்.
அதற்குள் உண்டு முடியுங்கள் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
அதே போல சொர்க்கத்திலும் கொண்டு போய் வைத்தார்.
நரக வாசிகள் எவ்வாறு உண்பது என்று உண்ணாமலே இருந்து விட்டனர்.
சர்க்கரைப் பொங்கல் அப்படியே இருந்தது,
ஒரு சிறிதும் செலவாகமலே, ஆனால், சொர்க்கவாசிகளோ முழுவதையும் சாப்பிட்டு முடித்துப் பாத்திரங்களைக் கழுவிக் கவிழ்த்து வைத்திருந்தனர்.
நரகவாசிகளை அழைத்துக் கொண்டு சிவபெருமான் சொர்க்கத்திற்குப் போனார்.