பெரிய பெரிய பாத்திரங்களில் சர்க்கரைப் பொங்கலை ஏலக்காயும் சாதிக்காயும் பச்சைக் கற்பூரமும் குங்கும பூவும் மணக்க நெய் ததும்பக் கொண்டு போய் வைத்தார்.
இதை எல்லோரும் வேண்டிய மட்டிலும் உண்ணலாம்.
ஒரே ஒரு நிபந்தனை, கையை மடக்காமல் உண்ண வேண்டும்.
மாலையில் வருவேன்.
அதற்குள் உண்டு முடியுங்கள் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
அதே போல சொர்க்கத்திலும் கொண்டு போய் வைத்தார்.
நரக வாசிகள் எவ்வாறு உண்பது என்று உண்ணாமலே இருந்து விட்டனர்.
சர்க்கரைப் பொங்கல் அப்படியே இருந்தது,
ஒரு சிறிதும் செலவாகமலே, ஆனால், சொர்க்கவாசிகளோ முழுவதையும் சாப்பிட்டு முடித்துப் பாத்திரங்களைக் கழுவிக் கவிழ்த்து வைத்திருந்தனர்.
நரகவாசிகளை அழைத்துக் கொண்டு சிவபெருமான் சொர்க்கத்திற்குப் போனார்.
சொர்க்கவாசிகளிடம் எவ்வாறு கையை மடக்காமல் சாப்பிட்டீர்கள்? என்று கேட்டார். அவர்கள் சொன்னார்கள்.
நான் எடுத்து அவருக்கு ஊட்டினேன்.
அவர் எடுத்து எனக்கு ஊட்டினார்.
இவ்வாறு எல்லோரும் மற்றவர்களுக்கு ஊட்டினோம்.
அனைவரும் உண்டோம்.
அண்டாவும் காலி, எங்கள் பசியும் போச்சு என்றனர்.
நரகவாசிகள் தங்களுக்கு இந்த தந்திரம் தெரியாமல் போயிற்றே என்று நினைத்து வெட்கப்பட்டனர்.
இந்தக் கதை என்ன சொல்கிறது?
எல்லோரும் மற்றவர்களுக்கு உதவும் நிலை வந்தால் ஒருவரும் துன்பபடமாட்டார்.
சொர்க்கம் என்பதே எல்லாரும் எல்லார்க்கும் உதவிசெய்து வாழும் இடந்தான்.
இப்படி வாழ்ந்தால் வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க.
தன்னைப் பற்றியே கவலைப்படுகிறவர்கள் நிறைந்த இடமே நரகம்.
இளம் வயதிலே அனைத்து தீட்சைகளையும் பெற்றதால் சடைமுடி தரித்து அதனால் துறவியானார் அதனாலேயே தருமை 27 ஆவது குருமகா சந்நிதானம் ஆனார் குரு பக்தி மிக்கவர் கலைகளை போஷிப்பவர்.
சைவ சித்தாந்தத்தின் மறு உருவம்.
குழந்தை மனம் கொண்ட மாபெரும் யோகி தவ சீலர் இவ்விதம் சொல்லிக் கொண்டே போகலாம்.
முதுகலைப் பட்டம் (MA),.
ஆய்வியல் நிறைஞர் பட்டம் (M.Phil),. முனைவர் பட்டம் (Ph.D) போன்ற பல பட்டங்களை பெற்று ஆன்மிகம், சமூகப்பணி, கல்விப்பணி, எழுத்துப்பணி,
தமிழ் வளர்ச்சி உட்பட தொடர்ந்து மக்கள் பணியை செய்துவரும் திருக்கயிலாயப் பரம்பரைத் தருமை ஆதீனமடம் தனியார் நிர்வாகம் செய்யும் ஒரு ஆன்மிக நிறுவனம் சமூக சிந்தனை உடையவர்களே தருமை ஆதீன குருமணிகளாக இருந்து வருகின்றனர்.
சொர்ணபுரீஸ்வரர் ஆலயத்தில் மகன் (அ) மகள் ஜாதகத்தை
பவுர்ணமி அன்று பூஜை
செய்தால் திருமணத் தடை
விலகி விரைவில் திருமணம்
நடந்தேறும் என்பது
பக்தர்களின் நம்பிக்கை.
இறைவனையே தன்
கணவனாக நினைத்து
வளர்ந்தாள் ஒரு மங்கை.
தான் நினைத்தபடியே
அவரையே மணந்து
கொண்டாள்.
ஆம். இந்த அதிசயம் நடந்த
தலம் தான் ஆற்றூர்.
இங்கு உள்ளது
சொர்ணபுரீஸ்வரர் ஆலயம்.
இங்கு அருள்பாலிக்கும்
இறைவன் பெயர் -
சொர்ணபுரீஸ்வரர்.
மந்தாரவனேஸ்வரர் என்பது
இன்னொரு பெயர்.
ஆற்றூரில் வசித்து வந்த ஒரு சிவ பக்தரின் மகளாகப்
பிறந்தவள் கயற்கண்ணி.
அவள் தன் பெற்றோரால்
மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்டாள்.
அவள் திருமண வயதை
எட்டியதும், அவளுக்குத்
திருமணம் செய்வதற்கான
ஏற்பாடுகளைச் செய்தனர்
பெற்றோர்.