வியட்நாம் போன்ற
ஒற்றைக் கட்சி ஆட்சி
நாடுகளில் கூட
நாட்டின் தலைவர் மீது குற்றச்சாட்டுகள் உறுதியானால் தார்மீகப் பொறுப்பேற்று ராஜினாமா செய்து விசாரணைக்கு ஒத்துழைக்கிறார்கள்
உலகின் மாபெரும் ஜனநாயக நாட்டின் குடிமக்களுக்கு அவ்வளவு பேராசை எல்லாம் கிடையாது
மீடியா முன் கூட வேண்டாம்
" எனக்கு தொடர்பு இல்லை"
என டுவீட் கூட போட முடியாதா?
மன்னர் தன் பிரஜைகளுடன் கொள்ளும் அதிகபட்ச தொடர்பு மாதம் ஒரு மன் கி பாத்
கொடியாட்டிய பின், கூட்டி வரப்பட்ட குழந்தைகளுடன்
stereotype உரையாடல்
அப்பப்ப போட்டோஷூட் நடத்தி இவர் தான் பிரதமர் நினைவூட்டும் ஷோ
முன்னெல்லாம் அடிக்கடி வெளிநாடு போய் வாயசைப்பார்.
அதற்கு ஆடம்பர விமானம் வாங்கி கொண்டார்
டென்மார்க்ல ஒருத்தன் மைக்கை நீட்ட "ஓ மை காட்"
என ஓடி வந்தவர்
அதற்கு பிறகு தன் ஆத்ம நண்பன் அமெரிக்கா
செல்லும் தேவை நேர்ந்தாலும்
அம்மாமியை அனுப்பி
இவர் ஹாயா புலி வேட்டைக்கு கிளம்பி விடுகிறார்
PM care ஃபண்ட்
🤫
ரஃபேல் ஃப்ளைட்
🤫
கோவிட் மரணம்
🤫
GDP வீழ்ச்சி
🤫
சீனா வீடு கட்டுது
🤫
5g இழப்பு
🤫
அதானி
🙄😯🙆🏃🏾
அவதார மகிமை பரப்பும் TV தவிர வேற எதுவும் பார்க்காதவரிடம்
மக்கள் மன்றத்தில் கேட்டால்
"நீ ஏன் நேரு பேரை போடாமல் காந்தி பேரை வச்சிருக்க?"
என அசரடிக்கும் பதில்
டிகிரி எங்கே?
அமித் ஷா ஓடி வர்ரார்
2 கோடி பேருக்கு வேலை எங்கே? மாமி முட்டு கொடுக்குது
எலக்சன் கூட்டத்தில் பொய் வாக்குறுதி அள்ளி வீச மட்டும் தான் அந்த வாயா?
மக்கள் பேசக் கூடிய மனிதர் என நம்பி தானே ஓட்டு போட்டார்கள்
இவர் ஏன் இப்படி தன்னை ஒரு பொம்மையாக காட்டிக் கொள்கிறார்
பெருமைக்காக வாங்கிய₹8000 கோடி விமானத்தில் உங்க மனைவியை ஏற்றிக்கொண்டு போயிருந்தால் ஒரு பயல் கேட்க மாட்டான்.
திடீர்னு உலக பணக்காரர் ஆகி
ஏறிய வேகத்தில் இறங்கி
LIC யை நாசமாக்கி நீங்க உச்சரிக்க பயப்படுகிற நாட்டில்
₹20000 கோடி பெற்ற அதானியை கூட்டிப் போனால் கேட்போமா? மாட்டோமா?
இந்த நாட்டின் இறையாண்மை மீது நம்பிக்கை வைத்து, ஒரு பொறுப்பான பிரதமரா நீங்க பதில் தராம,
அமித், உப்புமா மாமியை விட்டுப் பதில் சொல்லி இருந்தா கூட, அரசியல் அமைப்புச் சட்டத்தை குறைந்த பட்சம் மதிக்கிறீங்களே என சந்தோஷப்படலாம்
ஆனா ₹2 சில்றைகளை வைத்து
கேட்பவனை பப்பு என பரப்புறிங்க
அவ்வளவுதானா உங்கள் அசகாய சூரத்தனம்?
மழை மேகத்தில் ரேடார் கவனிக்காத போது சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தலாம் என கண்டுபிடிச்ச உங்களுக்கு
"உண்டு" "இல்லை" என ஒரு பிரதமராக இல்ல
பொறுப்பான குடிமகனாக பதில் சொல்வதில் என்ன பிரச்சினை?
அதானிக்கு வாய திறக்காதவரிடம் புல்வாமா பற்றி கேட்டு என்ன பயன்
புல்வாமா தாக்குதலில் உங்கள் தொடர்பு பற்றி சத்தியபால் மாலிக் கேட்டபோது, ஆளுநராக இருந்தபோது என்ன பண்ணினே என உங்கள் அல்ல கைகள் அடிச்சு அமிக்கிட்டாங்க
இப்ப, முன்னாள் ராணுவ தளபதியே கேட்கிறார்
தேசபக்தி வெரியூட்டி ஆட்சியை பிடித்த நீங்க, இந்த தளபதியின் கேள்விக்காவது பதில் சொல்வீர்களா?
இல்லை அவரையும் துரோகியாக்கி பதுங்குவீர்களா?
புல்வாமா தாக்குதலில் உங்கள் மௌனம் மேலும் பல இராணுவ மரணங்களை/ தாக்குதல்களை
சந்தேகப் பட வைக்கும்
அக்கினிபத் அறிவித்த போதே
ராணுவத்தை அரசியல் மயம் ஆக்குவதாக அந்த துறை வல்லுனர்களே எதிர்த்தனர்
தயவு செய்து இப்போதாவது
வாயை திறக்கவும்
உள்ளூரில் உலகத் தலைவராக கட்டமைக்கப்பட்டும் உலக அளவில் கேலிப் பொருளாக மாற்றிய
#பில்கிஸ்பானு_பேசுகிறேன்
அப்போது எனக்கு வயது 19. திருமணம் ஆகி 3 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது. மேலும் இன்னொரு குழந்தையை நான் என் வயிற்றில் சுமந்து கொண்டி ருந்தேன். என் தந்தையின் வீட்டுக்கு நான் வந்திருந்தேன். துயர்மிகுந்த 2002 பிப்ரவரி 27 அன்று என் வீட்டிற்கு முகத்தில்
கலவரமும், பீதியும் சுமந்து என் உறவினர்கள் சிலர் வந்தார்கள். நான் அப்போது சமயலறையில் இருந்தேன். அவர்களது வீடுகள் எல்லாம் தீ வைத்து கொளுத்தப்பட்ட தாகவும், காண்பவர்களை எல்லாம் வெட்டிக் கொல்வ தாகவும் பதற்றத்தோடு சொன்னார்கள். செருப்பை மாட்டிக் கொள்ளவோ, மாற்றுத் துணிகளை
எடுத்துக்கொள்ளவோ நேரமின்றி கைக் குழந்தையை தூக்கிக் கொண்டு உற வினர்களோடு வீட்டை விட்டு வெளியேறி அங்கிருந்த பள்ளிக் கூடத்தில் தஞ்சமடைந்தோம்.
அது பாது காப்பில்லை என்றார்கள். என்னோடு சேர்த்து 17 பேரும், என் வயிற்றில் இருந்த குழந்தையோடு 18 பேர் ஒரு மசூதிக்குள் தஞ்சமடைந்தோம்.
#AtiqueAhmed மற்றும் அவர் தம்பி இருவரும் உத்திரபிரதேச போலீஸ் உடன் பிரயாக்ராஜ் மருத்துவமனை செல்லும் வழியில் #Encounter செய்யப்பட்டிருக்கிறார்கள்
உத்திரபிரதேசத்தில் இது எல்லாம் சகஜம் தான்
கவலைப்பட வேண்டியது இந்த என்கவுண்டர் #GodiMedia முன்னிலையில் நிகழ்ந்தது இருக்கு
இது நாளை யாருக்கு வேண்டுமானாலும் நிகழும் என்பதை உணராது ஒரு கூட்டம் ஃபயர் விட்டு கொண்டு இருக்கு.
இதற்கு முன் என்கவுண்டர் செய்யும் முன் அரசுக்கு இருக்கும் குறைந்தபட்ச குற்ற உணர்வும் இனி இருக்காது
ஒளிவு மறைவாக நிகழ்ந்தது ஓப்பனாக நிகழ்கிறது
காட்டாச்சிக்கு ஓர் அத்தாச்சி
எதுக்கு போலீஸ் கோர்ட் என தண்டத்துக்கு...
அக்கினிபத்து வீரர்கள் சும்மா தானே இருக்கிறார்கள்
கொண்டு வந்து இறக்கி சட்டம் ஒழுங்கை நிலை நாட்டலாம்
வெப் சீரியல் தயாரித்து முதுகுத்தண்டை சில்லிட வைக்க வேண்டாம்
அரசு யார் யார் bad என ஒரு லிஸ்ட் கொடுக்க அக்கினி பத்து வீரர்கள்