#இருகூர்_ஒண்டிப்புதூர்_நீலகண்டேஸ்வரர் ஆலயம் கோயம்பத்தூர்
மூலவர்: நீலகண்டேஸ்வரர், சவுந்தர்யேஸ்வரர்
அம்மன்: சுயம்வர பார்வதி தேவி மீனாட்சியம்மன்
இக்கோவில் 3000 வருட பழமையானது. நீலகண்டேஸ்வர லிங்கம் சுயம்புவாக தோன்றியது. உத்தம சோழன் செப்பேடு, மார்க்கண்டேய பண்டிதர் மடம் செப்பேடு,
திருமுருகன் பூண்டி செப்பேடுகளில் இருந்து இருகூரின் பழமையை அறிய முடிகிறது. இத்தலம் சேர, சோழ, பாண்டிய மன்னர்களால் திருப்பணி செய்யப் பெற்றது. (சீழர்களால் கட்டப்பட்டது) சங்க காலத்தில் இந்த பகுதி பொன்னூர், மண்ணூர் என இரு பிரிவாக இருந்ததாகவும், அதுவே இருகூர் என்று ஆனதாகவும், இருளர்
தலைவன் இருவன் பெயரில் இருவூர் என இருந்து இருகூர் ஆனதாகவும் பெயர் காரணம் கூறப்படுகிறது.
லிங்கத்தின் மையத்தில் ஒரு சிறு குழியும், வலப்பக்க நெற்றியில் சிறிய தேய்வும், பின்புறம் சிறிய குடுமியும் உள்ளது. சுவாமியின் இடப்பக்கத்தில் சுயம்வர பார்வதி தேவி உள்ளார். வலப்பக்கத்தில்
தண்டத்துடன், ஞான தண்டபாணி காட்சியளிக்கிறார். இக்கோயிலில் நீலகண்டேஸ்வரர், சுயம்வர பார்வதி தேவி, ஞான தண்டபாணி ஆகியோர் மேற்கு நோக்கியும், சௌந்தரேஸ்வரர், மீனாட்சியம்மன், வள்ளி தெய்வானை சுப்ரமணியர் ஆகியோர் கிழக்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர். பிரம்மதேவன் அமர்ந்த கோலத்தில் உள்ளார்.
தேன் வண்ண பாணலிங்கமாக கிழக்கு நோக்கி சௌந்திரேஸ்வரர் அருள் பாலிக்கிறார். இடப்பக்கத்தில் மீனாட்சியம்மன் நான்கு திருக்கரத்துடன் நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார். கொங்கு மண்டலத்தில் எங்கும் இல்லாத வகையில் மார்க்கண்டேய முனிவர் வழிபட்ட மார்க்கண்டேஸ்வர லிங்கம் உள்ளது. பீடத்தில் அமிர்த
கலசம் அமைந்துள்ளது. இங்குள்ள 4 நந்திகளும் வெவ்வேறான வடிவமைப்பில் உள்ளது. துர்க்கையை வழிபட்டால், ராகு தோஷம் நிவர்த்தியாகி திருமண தடைகள் நீங்கும். மாங்கல்ய தோஷம், திருமண தடை நீங்க இங்குள்ள சுயம்வர பார்வதியை வழிபட்டு வரம் பெறுகின்றனர். நீண்ட ஆயுளுக்காக 60 வயதானவர்களுக்கு சாந்தி
ஹோமம் செய்யப்படுகிறது. கரிகால் சோழன் தனது பிரம்மஹத்தி தோஷம் நீங்க கொங்கு நாட்டில் 36 பெரிய சிவன் கோயில்களிலும், 360 சிறிய சிவன் கோயில்களிலும் திருப்பணி செய்ததாக வரலாறு கூறுகிறது. 28வது கோவிலாக சௌந்தரேஸ்வரர் கோயிலில் திருப்பணி செய்துள்ளார். சித்திரை, புரட்டாசி, ஐப்பசி ஆகிய
மாதங்களில் நீலகண்டேஸ்வரர் மீது மாலைப் பொழுதில் அஸ்தமன சூரிய கதிர்கள் பட்டு, சுவாமியின் திருமேனி ஒளிர்கிறது. ஐப்பசி மாதத்தில் நடக்கும் சூரசம்ஹார விழா மிகவும் பிரசித்தி பெற்றது. தைப்பூசம், மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம், நவராத்திரி, கார்த்திகை ஜோதி வழிபாடு, மார்கழி மாத வழிபாடு
ஆருத்ரா தரிசனம் ஆகிய விழாகள் நடக்கின்றன.
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை மணி 5 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி
அருள்மிகு நீலகண்டேஸ்வரர், சவுந்தர்யேஸ்வரர் திருக்கோயில், இருகூர் - 641 103ஒண்டிப்புதூர், கோயம்புத்தூர் மாவட்டம்.
போன்
+91-422-2632452,94881 55164.
ஓம் நமசிவாய
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
வேண்டியவைகளையும் தெரிந்து கொண்டு நம்மால் முடிந்த அளவு செய்ய வேண்டும். முக்கியமாக ராமேஸ்வரம், காசி, கயா மற்றும் புனித தலங்களுக்கு சென்று மறைந்த முன்னோர்களுக்காக சில சடங்குகள் செய்ய வேண்டும். அவற்றை செய்ய எல்லோருக்கும் வசதி இருக்காது. செங்கல்பட்டு அருகில் #நென்மேலி என்ற திருத்தலம்
உள்ளது. இது எளியவர்களின் #கயா என்று கூறப்படுகிறது. இங்கு எழுந்தருளியுள்ள ஸ்ரீ லக்ஷ்மி நாராயணப் பெருமாள் சன்னதி நெடுங்காலமாக பெரியோர்களால் வணங்கப்படுகிறது. இந்த சன்னதியில் உள்ள உற்சவ மூர்த்தி #ஸ்ராத்த_ஸம்ரக்ஷண_நாராயணர் என்னும் திருநாமமும் இந்த கிராமத்திற்கு புண்டரீக நல்லூர்,
வடைந்தியர்கள் கொண்டாடும் #ஹோலி பண்டிகை எப்படி வந்தது?
பிரகலாதன் திருமாலின் தீவிர பக்தன்.
ஆனால் அவனது தந்தை இரணியன் தீவிர கடவுள் மறுப்பாளான இருந்தான்.
இவனது தங்கை பெயர் #ஹோலிகா இவளிடம் விசேஷ துப்பட்டா ஒன்று இருந்தது. இதனை அவளைத் தவிர வேறு யாரேனும் போர்த்தினால் அது அவர்களை பொசுக்கி
விடும் தன்மை கொண்டது. தனக்கு பிடிக்காதவர்களை தன் துப்பாட்டாவால் போர்த்தி அவர்களை அழித்து வந்தாள். இதனால் ஹோலிகாவைக் கண்டால் மக்கள் ஓடி ஒளியது துவங்கினர். தன்னை வணங்க மறுத்த தன் மகன் பிரகலாதனை விசேஷ துப்பட்டாவால் கொல்ல முடிவு செய்தான் இரணியன். தன் தங்கையை அந்த விசேஷ துப்பட்டா
அணிந்து வரச் செய்து, அவளின் மடியில் தன் மகன் பிரகலாதனை அமரச் செய்தான். தந்தை சொல் கேட்டு அந்த துப்பட்டா மீது அமர்ந்தான். நெருப்பு பற்றத் துவங்கியது. இந்த சமயத்தில் திருமால் கருணையால் ஒரு பெருங்காற்று அடித்து பிரகலாதனை தீயினிலிருந்து காத்தது. ஆனால் துப்பட்டா அணிந்து இருந்த ஹோலிகா
#அர்ச்சகர்_சம்பள_உயர்வு
பகவத் இராமானுஜரின் ஐந்து ஆச்சார்யர்களில் ஒருவரான #ஸ்ரீபெரியநம்பிகளின் வம்ஸத்தில் வந்தவர் ஸ்ரீநரஸிம்மகோபாலன். தன் தந்தையின் மறைவுக்குப் பின்னர், இவர் தனியொருவராக, #மன்னார்கோயில் என்று அழைக்கப்படும் ஸ்ரீராஜகோபால ஸ்வாமி கோயிலில் அர்ச்சகராகக் கைங்கர்யம் செய்து
வருகிறார். அற்ப மாத சம்பளமான ரூ250ஐப் பெற்றுக் கொண்டு, இவர் சந்தித்த இன்னல்கள் ஏராளம். தம்மைப் போல பகவத் கைங்கர்யம் செய்து வருகின்ற அனைவரையும் கருத்தில் கொண்டு, இவர் மதுரை நீதிமன்றத்தில் நியாயம் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். எத்தனையோ வாத ப்ரதிவாதங்களையும், தள்ளி வைப்புகளையும
கொண்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு, இவருக்கு தற்சமயம் நீதி கிடைத்து இருக்கிறது. குறைந்த பட்ச ஒரு நாளைய சம்பளத்தின் அடிப்படையில், இவருக்கு மாதச் சம்பளமாகச் சுமார் ரூபாய் பதினாறாயிரம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பாகியுள்ளது. அது மட்டுமன்றி 2019ம் வருடத்திலிருந்து இந்த வரையறுக்கப்பட்ட
உன்மையா கதையா என்று தெரியாது. அது பகவான் கிருஷ்ணனுக்கும் இந்த @tskrishnan குமே வெளிச்சம் :) படித்ததை பகிர்கிறேன்!
பாண்டிய மாமன்னன் ராஜெந்திரன் சிவ பெருமான் மீது மிகுந்த மன வருத்தத்துடன் இருந்தான். பட்டத்தரசி சுவர்ண மீனாட்சி எத்தனையோ முறை ஆலய தரிசனத்திற்கு அழைத்துப் பார்த்தாள்.
அவன் பிடிவாதமாக மறுத்து விட்டான். “தேவி, நீ சென்று சொக்கநாதனை வணங்கி வா நான் தடுக்கவில்லை. ஆலயத்திற்கு அளிக்க வேண்டிய எந்த உதவிகளையும் நான் நிறுத்தவில்லை. ஆனால், சொக்கேசனை வணங்கும்படி மட்டும் என்னை வற்புறுத்தாதே” என்று உறுதிபடக் கூறிவிட்டான்.
“அப்படி என்னதான் சிவன் மீது கோபம்?”
என்று வினவினாள் பாண்டிமாதேவி.
ராஜேந்திர பாண்டியனின் தந்தை குலபூஷண பாண்டியன் காலத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. சோழர்கள் அப்போது காஞ்சியிலிருந்து ஆண்டு கொண்டிருந்தனர். சோழன் சிவநேசனுக்கு மதுரை சென்று ஆலவாய் அண்ணலைத் தரிசிக்க வேண்டுமென்று ஆவல். ஆனால் பாண்டியனோடு பகை. எப்படி அங்கு
பெரியவாள், தன் பரிவாரத்துடன் சென்று கொண்டிருந்தார். வழியிலே திருக்களம்பூரில் குடிசையில் வாழும் பரம ஏழைகள் குடியிருப்பு வந்தது. அக்காலங்களில் அவர்களுக்கே இருந்த, அதிவினய பயபக்தியுடன் கைகூப்பி நின்றார்கள். காணிக்கையும் கூட சமர்ப்பித்தார்கள். தீனதயாளனின் இயற்கைக் கருணை மேலும் பெருக,
அவர்களது நலன்களை, நலனின்மையையும் கேட்டுக் கொண்டார். ஓடாமல், பறக்காமல், நின்று நிதானமாக! இல்லாத நலன்களை இருக்குமாறு நிறைவேற்றித் தர, மடத்தால் என்ன ஆகுமோ, மடம் பரிந்துரைத்தால் பிரமுகர்களாலும் துரைத்தனத்தாராலும் என்ன ஆகுமோ, எல்லாவற்றையும் மானேஜரிடம் விவாதித்து முடிவு செய்தார்.
#சூட்சுமபுரீஸ்வரர்_கோவில் திருச்சிறுகுடி செவ்வாய் தோஷ பரிகாரத் தலம். நவகிரகத் தலங்களில் செவ்வாய்க்குரிய தலங்களில் பாடல் பெற்ற தலம் இது ஒன்றுதான். இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது.
இறைவன் பெயர்: சூட்சுமபுரீஸ்வரர், மங்களநாதர்
இறைவி பெயர்: மங்களநாயகி
ஒரு முறை,
கயிலாயத்தில் பரமசிவனும் பார்வதியும் சொக்கட்டான் ஆடினார்கள். அதில பார்வதி வெற்றிபெற்றாள். அதனால் வெட்கம் அடைந்த சிவபெருமான் எங்கோ மறைந்து விட்டார். கலக்கமடைந்த பார்வதி, சிறுகுடி தலத்துக்கு வந்து மங்கள தீர்த்தத்தை உண்டாக்கி, தன் கையால் பிடி மணலை எடுத்து அதை சிவலிங்கமாகப் பிடித்து
வைத்து வழிபட்டாள். அம்பாளுக்கு சிவபெருமான் காட்சி கொடுத்து அவளை மீண்டும் ஏற்றுக் கொண்டதாக தலபுராணம் கூறுகிறது. சிறுபிடி என்பது மருவி சிறுகுடி என்றாயிற்று. திருக்கயிலையில் இருக்கும் இறைவன் சூட்சுமமாக மறைந்து இங்கு மீண்டும் தோன்றியதால் இத் தலத்துக்கு சூட்சுமபுரி என்றும், இறைவனுக்கு