எல்லோரும் பெற்றோர்கள் இருக்கும் வரை அவர்களை சரியான முறையில் கவனித்துக் கொள்ள வேண்டும், என்று மட்டும் நினைக்கிறார்கள்.
இருக்கும் வரை எவ்வாறு சரியாக கவனித்து கொண்டோமோ, அவர்களின் காலம் கடந்த பின் செய்ய வேண்டியவைகளையும் தெரிந்து கொண்டு நம்மால் முடிந்த அளவு செய்ய வேண்டும்.
முக்கியமாக ராமேஸ்வரம், காசி, கயா மற்றும் புனித தலங்களுக்கு செல்லும்போது மறைந்த முன்னோர்களுக்காக சில சடங்குகள் செய்ய வேண்டும்.
செங்கல்பட்டு அருகில் நென்மேலி என்ற திருத்தலம் அமைந்துள்ளது.
இது எளியவர்களின் கயா என்று கூறப்படுகிறது.
இதைப் பற்றி சிறு குறிப்பு.
நென்மேலி என்னும் கிராமத்தில் எழுந்தருளியுள்ள
ஸ்ரீ லக்ஷ்மி நாராயணப் பெருமாள் சன்னதி பல நெடுங்காலமாக பெரியோர்களால் வணங்கப் படுகிறது.
இந்த சன்னதியில் உள்ள உற்சவ மூர்த்தி " ஸ்ராத்த ஸம்ரக்ஷண நாராயணர் " என்னும் திருநாமமும்
இந்த கிராமத்திற்கு புண்டரீக நல்லூர், பிண்டம் வைத்த நல்லூர் என்றும்
இந்த சன்னதியின் திருக்குளம் அர்கிய புஷ்கரணி,
ஜீயர் குளம் என்றும்,
காசிக்கு நிகரான க்ஷேத்ரம் என்றும் சௌலப்ய கயா என்றும் வழங்கப்படுகிறது.
இந்த சன்னதியில் ஆற்காடு நவாப் காலத்தில் திவானாகப் பணி புரிந்த ஸ்ரீ யாக்ஞவல்கியரைக் குருவாகக் கொண்ட யக்ஞ நாராயண ஷர்மா சரஸ வாணி தம்பதிகள் இந்தப் பெருமானின் மீது ஆறாத பக்தி கொண்டிருந்தனர்.
மேலும் இவர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிப் பணத்தையும் தெய்வ காரியங்களுக்கு செலவு செய்து விட்டதால், அரச தண்டனையை ஏற்க விரும்பாமல் திருவிடந்தை என்னும் திவ்ய தேசத்து திருக்குளத்தில் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர்.
அவர்களுக்கு தங்கள் ஈமக் கடன்களை செய்ய வாரிசு இல்லையே என மனம் வருத்தத்துடன் மரணமடைந்தார்கள்.
அவர்களுடைய எண்ணத்தை எம்பெருமானே செய்ததாக பெருமாள் சாட்சியம் சொன்னார்.
அந்த திவானின் வேண்டுகோளுக்கு இணங்க சந்ததிகள் இல்லாருக்கும் ஸ்ராத்தம் செய்ய இயலாதவர்களுக்கும் தானே முன்னின்று ஸ்ராத்தம் செய்து வைப்பதாக எத்தனித்து குதப காலம் என்னும் பித்ரு வேளையில் ( 12 மணி முதல் 1 மணி வரை ) ஒரு காலம் மட்டும் ஆராதனம் ஏற்று விரதமிருக்கிறார்.
எனவே இங்கு ஸ்ராத்தம் செய்ய விரும்புபவர்கள் பித்ரு வேளையில் நடக்கும் பூஜையில் தங்கள் பித்ருக்களுக்காக சங்கல்பம் செய்து கொண்டு சுவாமியிடம் சமர்ப்பிப்பதே ஸ்ராத்த சம்ரக்ஷணம் ஆகும்.
இந்த ஸ்வாமிக்கு நிவேதிக்கப்படும் வெண்பொங்கல், தயிர் சாதம் அதனுடன் பிரண்டையும் எள்ளும் சேர்த்த துவையலும் நிவேதனமாகும்.
ஸ்வாமி இதனை மட்டும் ஏற்று பித்ருக்களை திருப்தி செய்கிறார்.
தினமும் நடை பெறும் இந்த பூஜையில் அவரவர் பித்ருக்கள் திதியிலோ , அமாவாசை, ஏகாதசி போன்ற திதிகளிலோ அல்லது என்று முடியுமோ அன்று கலந்து கொள்வது கயை ஸ்ராத்தம் செய்த பலனைக்கொடுக்கும் .
இந்த தலம் செங்கல்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில் செங்கல்பட்டிலிருந்து ஐந்தாவது கிலோ மீட்டரில் உள்ளது.
பித்ரு பூஜை பகல் 12 மணிக்கு மேல் மட்டுமே நடை பெறும், இதில் கலந்து கொள்பவர்கள் 10 மணிக்கு சன்னதியில் இருக்க வேண்டும்.
அர்ச்சகரிடம் முன்னதாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.
நம் இல்லங்களில் முன்னோர்களுக்காக ஸ்ராத்தம் செய்தாலும் அந்த திதியில் இந்த சன்னதியில் பணம் அனுப்பி பூஜை செய்ய வேண்டிக் கொள்ளலாம்.
குறைந்த கட்டணம் தான், எனவே எல்லோரும் பயன் பெற வேண்டும்.
அவசியம் தர்பனம் செய்து வைக்கும் ப்ரோகிதருக்கு மனப்பூர்வமாக நல்லதொரு கானிக்கை கொடுத்து ஆசீர்வாதம் பெற்று கொள்ளூங்கள்.
சுபம் உண்டாகும்.
அர்ச்சகரின் முகவரி;
ஸ்ரீ சம்பத் பட்டாச்சாரியார் ,
பிராமணர் வீதி,
நென்மேலி போஸ்ட்,
நத்தம் வழி ,
செங்கல்பட்டு -603002,
காஞ்சிபுரம் மாவட்டம்.
போன் : 044 - 27420053.
இளம் வயதிலே அனைத்து தீட்சைகளையும் பெற்றதால் சடைமுடி தரித்து அதனால் துறவியானார் அதனாலேயே தருமை 27 ஆவது குருமகா சந்நிதானம் ஆனார் குரு பக்தி மிக்கவர் கலைகளை போஷிப்பவர்.
சைவ சித்தாந்தத்தின் மறு உருவம்.
குழந்தை மனம் கொண்ட மாபெரும் யோகி தவ சீலர் இவ்விதம் சொல்லிக் கொண்டே போகலாம்.
முதுகலைப் பட்டம் (MA),.
ஆய்வியல் நிறைஞர் பட்டம் (M.Phil),. முனைவர் பட்டம் (Ph.D) போன்ற பல பட்டங்களை பெற்று ஆன்மிகம், சமூகப்பணி, கல்விப்பணி, எழுத்துப்பணி,
தமிழ் வளர்ச்சி உட்பட தொடர்ந்து மக்கள் பணியை செய்துவரும் திருக்கயிலாயப் பரம்பரைத் தருமை ஆதீனமடம் தனியார் நிர்வாகம் செய்யும் ஒரு ஆன்மிக நிறுவனம் சமூக சிந்தனை உடையவர்களே தருமை ஆதீன குருமணிகளாக இருந்து வருகின்றனர்.
பெரிய பெரிய பாத்திரங்களில் சர்க்கரைப் பொங்கலை ஏலக்காயும் சாதிக்காயும் பச்சைக் கற்பூரமும் குங்கும பூவும் மணக்க நெய் ததும்பக் கொண்டு போய் வைத்தார்.
இதை எல்லோரும் வேண்டிய மட்டிலும் உண்ணலாம்.
ஒரே ஒரு நிபந்தனை, கையை மடக்காமல் உண்ண வேண்டும்.
மாலையில் வருவேன்.
அதற்குள் உண்டு முடியுங்கள் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
அதே போல சொர்க்கத்திலும் கொண்டு போய் வைத்தார்.
நரக வாசிகள் எவ்வாறு உண்பது என்று உண்ணாமலே இருந்து விட்டனர்.
சர்க்கரைப் பொங்கல் அப்படியே இருந்தது,
ஒரு சிறிதும் செலவாகமலே, ஆனால், சொர்க்கவாசிகளோ முழுவதையும் சாப்பிட்டு முடித்துப் பாத்திரங்களைக் கழுவிக் கவிழ்த்து வைத்திருந்தனர்.
நரகவாசிகளை அழைத்துக் கொண்டு சிவபெருமான் சொர்க்கத்திற்குப் போனார்.
சொர்ணபுரீஸ்வரர் ஆலயத்தில் மகன் (அ) மகள் ஜாதகத்தை
பவுர்ணமி அன்று பூஜை
செய்தால் திருமணத் தடை
விலகி விரைவில் திருமணம்
நடந்தேறும் என்பது
பக்தர்களின் நம்பிக்கை.
இறைவனையே தன்
கணவனாக நினைத்து
வளர்ந்தாள் ஒரு மங்கை.
தான் நினைத்தபடியே
அவரையே மணந்து
கொண்டாள்.
ஆம். இந்த அதிசயம் நடந்த
தலம் தான் ஆற்றூர்.
இங்கு உள்ளது
சொர்ணபுரீஸ்வரர் ஆலயம்.
இங்கு அருள்பாலிக்கும்
இறைவன் பெயர் -
சொர்ணபுரீஸ்வரர்.
மந்தாரவனேஸ்வரர் என்பது
இன்னொரு பெயர்.
ஆற்றூரில் வசித்து வந்த ஒரு சிவ பக்தரின் மகளாகப்
பிறந்தவள் கயற்கண்ணி.
அவள் தன் பெற்றோரால்
மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்டாள்.
அவள் திருமண வயதை
எட்டியதும், அவளுக்குத்
திருமணம் செய்வதற்கான
ஏற்பாடுகளைச் செய்தனர்
பெற்றோர்.