இளம் வயதிலே அனைத்து தீட்சைகளையும் பெற்றதால் சடைமுடி தரித்து அதனால் துறவியானார் அதனாலேயே தருமை 27 ஆவது குருமகா சந்நிதானம் ஆனார் குரு பக்தி மிக்கவர் கலைகளை போஷிப்பவர்.
சைவ சித்தாந்தத்தின் மறு உருவம்.
குழந்தை மனம் கொண்ட மாபெரும் யோகி தவ சீலர் இவ்விதம் சொல்லிக் கொண்டே போகலாம்.
முதுகலைப் பட்டம் (MA),.
ஆய்வியல் நிறைஞர் பட்டம் (M.Phil),. முனைவர் பட்டம் (Ph.D) போன்ற பல பட்டங்களை பெற்று ஆன்மிகம், சமூகப்பணி, கல்விப்பணி, எழுத்துப்பணி,
தமிழ் வளர்ச்சி உட்பட தொடர்ந்து மக்கள் பணியை செய்துவரும் திருக்கயிலாயப் பரம்பரைத் தருமை ஆதீனமடம் தனியார் நிர்வாகம் செய்யும் ஒரு ஆன்மிக நிறுவனம் சமூக சிந்தனை உடையவர்களே தருமை ஆதீன குருமணிகளாக இருந்து வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டமாக அறிவிக்கப்பட்ட உடனேயே ஆட்சியர் அலுவலகம் அமைக்க 60 ஏக்கர் நிலத்தை வழங்கியதும் இதே ஆதீனம் தான்.
புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கும் மணக்குடி அருகே நிலம் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது புதிய பேருந்து நிலையம் செயல்படும் இடமும் தருமை ஆதீனத்திற்கு சொந்தமானதாகும்.
மேலும், பள்ளிகள், கல்லூரி மற்றும் மயிலாடுதுறை சுற்றுவட்டார மக்களுக்கு தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை வழங்குவதும்,
கொரோனா தொற்று காலத்தில் கோடி கணக்கான ரூபாய் மதிப்பில் நிவாரண பொருட்களை வழங்கியது அல்லாமல்,
தருமபுரம் ஆதீன கலைக் கல்லூரியை கொரோனா தொற்று ஏற்படும் நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறுவதற்கான தற்காலிக மருத்துவமனை போல் மாற்றியதும் தருமை ஆதீனம் தான்,
ஊரடங்கு காலங்களில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஒவ்வொரு திருக்கோவில் தேவஸ்தானங்களிலும்
தினமும் அப்பகுதிக்கு உட்பட்ட மக்களுக்கு தொடர்ந்து உணவு பெட்டலங்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
சைவ சமயப் பிரச்சாரங்களை தொடர்ந்து செவ்வனே செய்து வரும் நிலையிலும் தருமை குருமகா சந்நிதானம் அனைத்து மதத்தினரிடமும் மிகுந்த அன்பைப் பெற்றும் தலை சிறந்த ஆதீனமாக போற்றப்படுவதும்
தருமை ஆதீன குருமகா சந்நிதானத்தின் தனிச் சிறப்பு.
பாகுபாடின்றி ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உட்பட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுடனும்,
அரசு அதிகாரிகள், மற்றும் ஊடக நிறுவன முதலாளிகள் உட்பட தொழிலதிபர்கள், பலருடன் சமமாக பாவித்து அன்பை செலுத்தும்
தருமை குருமகா சந்நிதானம் அவர்களை தொடர்ந்து பல அரசியல் கட்சி பிரமுகர்கள் சந்தித்து ஆசி பெறும் நிலையில் இருந்து பெரும் பேறு பெற்றவர் ஆ்வர்.
பெரிய பெரிய பாத்திரங்களில் சர்க்கரைப் பொங்கலை ஏலக்காயும் சாதிக்காயும் பச்சைக் கற்பூரமும் குங்கும பூவும் மணக்க நெய் ததும்பக் கொண்டு போய் வைத்தார்.
இதை எல்லோரும் வேண்டிய மட்டிலும் உண்ணலாம்.
ஒரே ஒரு நிபந்தனை, கையை மடக்காமல் உண்ண வேண்டும்.
மாலையில் வருவேன்.
அதற்குள் உண்டு முடியுங்கள் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
அதே போல சொர்க்கத்திலும் கொண்டு போய் வைத்தார்.
நரக வாசிகள் எவ்வாறு உண்பது என்று உண்ணாமலே இருந்து விட்டனர்.
சர்க்கரைப் பொங்கல் அப்படியே இருந்தது,
ஒரு சிறிதும் செலவாகமலே, ஆனால், சொர்க்கவாசிகளோ முழுவதையும் சாப்பிட்டு முடித்துப் பாத்திரங்களைக் கழுவிக் கவிழ்த்து வைத்திருந்தனர்.
நரகவாசிகளை அழைத்துக் கொண்டு சிவபெருமான் சொர்க்கத்திற்குப் போனார்.
சொர்ணபுரீஸ்வரர் ஆலயத்தில் மகன் (அ) மகள் ஜாதகத்தை
பவுர்ணமி அன்று பூஜை
செய்தால் திருமணத் தடை
விலகி விரைவில் திருமணம்
நடந்தேறும் என்பது
பக்தர்களின் நம்பிக்கை.
இறைவனையே தன்
கணவனாக நினைத்து
வளர்ந்தாள் ஒரு மங்கை.
தான் நினைத்தபடியே
அவரையே மணந்து
கொண்டாள்.
ஆம். இந்த அதிசயம் நடந்த
தலம் தான் ஆற்றூர்.
இங்கு உள்ளது
சொர்ணபுரீஸ்வரர் ஆலயம்.
இங்கு அருள்பாலிக்கும்
இறைவன் பெயர் -
சொர்ணபுரீஸ்வரர்.
மந்தாரவனேஸ்வரர் என்பது
இன்னொரு பெயர்.
ஆற்றூரில் வசித்து வந்த ஒரு சிவ பக்தரின் மகளாகப்
பிறந்தவள் கயற்கண்ணி.
அவள் தன் பெற்றோரால்
மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்டாள்.
அவள் திருமண வயதை
எட்டியதும், அவளுக்குத்
திருமணம் செய்வதற்கான
ஏற்பாடுகளைச் செய்தனர்
பெற்றோர்.