1950 - களில் ஒருநாள் ஒரு வானொலி நிருபர் ஸ்ரீ மஹாபெரியவாளை பேட்டிகண்டு அதனை டேப்ரிகார்டரில் பதிவு செய்து கொண்டிருந்தார்.
திடீரென்று பெரியவா அவரிடமும், அங்கு இருந்தவர்களிடமும்,”மிகவும் பழைய காலத்து வாய்ஸ் ரிகார்டர் எதுவென்று யாருக்காவது தெரியுமா” என்று கேட்டார்.
யாரும் பதில் சொல்லவில்லை.
பெரியவா மற்றொரு கேள்வியைக் கேட்டார்,
”விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது?”
யாரோ ஒருவர்,”விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பீஷ்மர் நமக்குத் தந்தார்” என்றார்.
அனைவரும் “ஆம்” என்று ஒப்புக்கொண்டனர்.
பெரியவா சிரித்துக்கொண்டே தலையசைத்து விட்டு, மற்றொரு கேள்வியை வீசினார்,
”குருக்ஷேத்திரத்தில் அனைவரும் பீஷ்மர் சொன்ன விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பக்தியோடு கேட்டுக் கொண்டிருந்த போது,
அதனை குறிப்பெடுத்ததோ, எழுதிக்கொண்டதோ யார்?” மீண்டும் அமைதி.
ஸ்ரீ சரணர் புன்னகையுடன் சொல்ல ஆரம்பித்தார்.
“பீஷ்மர், ஸ்ரீகிருஷணரின் புகழையும், பெருமைகளையும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தால் விளக்கிக் கொண்டிருந்த போது,
ஸ்ரீகிருஷணரும், வியாசரும் உட்பட அனைவரும் வேறு எந்த நினைப்புமின்றி அவரையே உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தனர்.
பிதாமகர் பீஷ்மர் ஆயிரம் நாமங்களையும் சொல்லி முடித்த பின்பு அனைவரும் விழிப்படைந்தனர்.
முதலில் யுதிஷ்ட்டிரர் பேசினார்,
”பிதாமகர், ஸ்ரீவாசுதேவரின் ஒப்பற்ற பெருமை வாய்ந்த ஆயிரம் புனித நாமாக்களை சொன்னார்.
அவற்றைக் கேட்பதில் கவனமாக இருந்த நாம் அனைவரும் அவற்றை குறிப்பெடுக்கவோ, எழுதிக்கொள்ளவோ தவறிவிட்டோம்.
நாம் அற்புதமான விஷயத்தை இழந்து நிற்கின்றோம்” என்றார்.
அப்போது தான் அனைவரும் எப்படிப்பட்ட தவறு நேர்ந்துவிட்டதென்று உணர்ந்து திகைத்தனர்.
பிறகு யுதிஷ்டிரர் ஸ்ரீ கிருஷணரிடம் திரும்பி,”ஆயிரம் புனித நாமாக்களை மீட்டுத்தர தாங்களாவது உதவக்கூடாதா” என்று கேட்டார்.
ஸ்ரீகிருஷ்ணர் வழக்கம் போல், “என்னால் மட்டும் என்ன செய்ய முடியும்? உங்கள் எல்லோரையும் போல நானும் ஆச்சார்யர் பீஷ்மரைத்தான் பார்த்துக் கொண்டிருந்தேன் என்றார்.
அனைவரும் சேர்ந்து ஸ்ரீகிருஷ்ணரிடம், “ஹே.. வாசுதேவா, நீ ஆனைத்தும் அறிந்தவர்.
உம்மால் இயலாததென்பது எதுவுமே இல்லை.
தாங்கள் தயைகூர்ந்து எங்களுக்கு உதவ வேண்டும்.
அந்த ஒப்புயர்வற்ற பெருமைவாய்ந்த பரந்தாமனின் ஆயிரம் புனித நாமாக்களை மீட்டுத்தர வேணடும்.
அது தங்களால் மட்டுமே முடியும்” என்று வேண்டினர்.
அதற்கு ஸ்ரீகிருஷ்ணர்,
”இதனை செய்ய முடிந்த ஒருவர் உங்களுக்குள்ளேயே இருக்கின்றார்” என்றார்.
எவருக்கும் ஒன்றும் புரியவில்லை.
ஸ்ரீ வாசுதேவர் தொடர்ந்தார்,”சகாதேவன் அதனை மீட்டு சொல்ல, வியாசர் எழுதுவார்” என்றார்.
அனைவரும் சகாதேவனால் எப்படி சஹஸ்ர நாமத்தை மீட்க முடியும் என்பதை அறிய ஆவலாக இருந்தனர்.
ஸ்ரீ வாசுதேவர் கூறினார்,”உங்கள் அனைவருள்ளும் சகாதேவன் மட்டுமே ‘சுத்த ஸ்படிக’ மாலை அணிந்திருந்தான்.
சகாதேவன் சிவபெருமானை பிரார்த்தனை செய்து தியானித்து ‘சுத்த ஸ்படிகம்’ உள்வாங்கியுள்ள சஹஸ்ரநாமத்தை சப்த அலைகளாக மாற்ற, அதனை வியாசர் எழுதிக்கொள்ளுவார்” என்றார்.
‘சுத்த ஸ்படிகம்’ அமைதியான சூழ்நிலையில் எழும் சப்தங்களை கிரகித்துக்கொள்ளும்.
இது ஸ்படிகத்தின் குணம், தன்மை.
‘ஸ்வதம்பரராகவும்’ ‘ஸ்படிகமாகவும்’ இருக்கும் சிவபெருமானை தியானித்து அந்த சப்தங்களை மீட்க முடியும்.
உடனே சகாதேவனும் வியாசரும், பீஷ்மர் சஹஸ்ரநாமம் சொல்லிய அதே இடத்தில் அமர்ந்தனர்.
சகாதேவன் மஹாதேவரை பிரார்த்தித்து, தியானம் செய்து சஹஸ்ரநாமத்தை மீட்கத் துவங்கினர்.
அந்த ‘சுத்த ஸ்படிக’ மாலையே உலகின் முதல் ‘வாய்ஸ் ரிகார்டராக’, அற்புதமான விஷ்ணு சஹஸ்ரநாமத்தை நமக்குத் தந்தது………..”
இளம் வயதிலே அனைத்து தீட்சைகளையும் பெற்றதால் சடைமுடி தரித்து அதனால் துறவியானார் அதனாலேயே தருமை 27 ஆவது குருமகா சந்நிதானம் ஆனார் குரு பக்தி மிக்கவர் கலைகளை போஷிப்பவர்.
சைவ சித்தாந்தத்தின் மறு உருவம்.
குழந்தை மனம் கொண்ட மாபெரும் யோகி தவ சீலர் இவ்விதம் சொல்லிக் கொண்டே போகலாம்.
முதுகலைப் பட்டம் (MA),.
ஆய்வியல் நிறைஞர் பட்டம் (M.Phil),. முனைவர் பட்டம் (Ph.D) போன்ற பல பட்டங்களை பெற்று ஆன்மிகம், சமூகப்பணி, கல்விப்பணி, எழுத்துப்பணி,
தமிழ் வளர்ச்சி உட்பட தொடர்ந்து மக்கள் பணியை செய்துவரும் திருக்கயிலாயப் பரம்பரைத் தருமை ஆதீனமடம் தனியார் நிர்வாகம் செய்யும் ஒரு ஆன்மிக நிறுவனம் சமூக சிந்தனை உடையவர்களே தருமை ஆதீன குருமணிகளாக இருந்து வருகின்றனர்.
பெரிய பெரிய பாத்திரங்களில் சர்க்கரைப் பொங்கலை ஏலக்காயும் சாதிக்காயும் பச்சைக் கற்பூரமும் குங்கும பூவும் மணக்க நெய் ததும்பக் கொண்டு போய் வைத்தார்.
இதை எல்லோரும் வேண்டிய மட்டிலும் உண்ணலாம்.
ஒரே ஒரு நிபந்தனை, கையை மடக்காமல் உண்ண வேண்டும்.
மாலையில் வருவேன்.
அதற்குள் உண்டு முடியுங்கள் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
அதே போல சொர்க்கத்திலும் கொண்டு போய் வைத்தார்.
நரக வாசிகள் எவ்வாறு உண்பது என்று உண்ணாமலே இருந்து விட்டனர்.
சர்க்கரைப் பொங்கல் அப்படியே இருந்தது,
ஒரு சிறிதும் செலவாகமலே, ஆனால், சொர்க்கவாசிகளோ முழுவதையும் சாப்பிட்டு முடித்துப் பாத்திரங்களைக் கழுவிக் கவிழ்த்து வைத்திருந்தனர்.
நரகவாசிகளை அழைத்துக் கொண்டு சிவபெருமான் சொர்க்கத்திற்குப் போனார்.
சொர்ணபுரீஸ்வரர் ஆலயத்தில் மகன் (அ) மகள் ஜாதகத்தை
பவுர்ணமி அன்று பூஜை
செய்தால் திருமணத் தடை
விலகி விரைவில் திருமணம்
நடந்தேறும் என்பது
பக்தர்களின் நம்பிக்கை.
இறைவனையே தன்
கணவனாக நினைத்து
வளர்ந்தாள் ஒரு மங்கை.
தான் நினைத்தபடியே
அவரையே மணந்து
கொண்டாள்.
ஆம். இந்த அதிசயம் நடந்த
தலம் தான் ஆற்றூர்.
இங்கு உள்ளது
சொர்ணபுரீஸ்வரர் ஆலயம்.
இங்கு அருள்பாலிக்கும்
இறைவன் பெயர் -
சொர்ணபுரீஸ்வரர்.
மந்தாரவனேஸ்வரர் என்பது
இன்னொரு பெயர்.
ஆற்றூரில் வசித்து வந்த ஒரு சிவ பக்தரின் மகளாகப்
பிறந்தவள் கயற்கண்ணி.
அவள் தன் பெற்றோரால்
மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்டாள்.
அவள் திருமண வயதை
எட்டியதும், அவளுக்குத்
திருமணம் செய்வதற்கான
ஏற்பாடுகளைச் செய்தனர்
பெற்றோர்.