சுவாமிகள் அடுத்து என்ன சொல்ல போகிறார் என அனைவரும் காத்திருந்தனர்.
''ஆழ்வார்களில் நிறைய பாடல்கள் பாடியவர் திருமங்கையாழ்வார்.
அவர் பாடாத விஷ்ணு கோயில் என்றாலே, அது சமீபத்தில் கட்டப்பட்டதாக இருக்கும். அவருடைய பாசுரம் ஒன்றில் *'நாராயணா'* என்ற திருநாமத்தின் பெருமையை சொல்கிறது.
*"குலந்தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயர் ஆயின எல்லாம்*
*நிலந்தரம் செய்யும் நீள்விசும்பு அருளும் அருளொடு பெருநிலம் அளிக்கும் வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும்*
*நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்.''*
*'நாராயணா'* என்ற ஒரு சொல்லை கண்டு கொண்டால் போதும்.
அதன் மூலம் எல்லா நலன்களும் வாழ்வில் உண்டாகும்' என்கிறார் ஆழ்வார்.
நேரமில்லாத போது இந்த ஒரு பாசுரம் போதும்.
நேரமிருந்தால் மற்ற பாசுரங்களையும் பாராயணம் செய்.
ஆனால், ஒருபோதும் 'நாராயண' மந்திரத்தை மறக்காதே என கூறி ஆசியளித்தார்.
“இராமர் உண்மையிலேயே சிறந்த வில்லாளி எனில், ஏன் அவர் தன் வில்லைக் கொண்டே சேதுவுக்கு பாலம் கட்டவில்லை.
வானரங்களை வைத்து ஏன் பாலம் கட்டினார்?”
எப்படியாவது இந்த கேள்விக்கு விடை கண்டு பிடிக்க வேண்டும் என்று விரும்பினான்.
பாசுபதாஸ்திரம் வேண்டி அவன் சென்று கொண்டிருந்த போது, ஒரு நதிதீரத்தில் அனுமன் தனது சுய உருவை மறைத்து ஒரு சாதாரண வானரம் போல உருக்கொண்டு அமர்ந்து இராம நாமம் ஜபம் செய்து கொண்டிருப்பதை பார்க்கிறான்.
அவரிடம் சென்று, “ஏய்… வானரமே…
உன் இராமனுக்கு உண்மையில் திறன் இருந்திருந்தால் வில்லினாலேயே பாலம் கட்டியிருக்கலாமே…
ஏன் வானரங்களை கொண்டு பாலம் கட்டினார்?” என்றான் எகத்தாளமாக.
தியானம் களைந்த அனுமன், எதிர் நிற்பது அர்ஜூனன் என்பதை உணர்ந்து கொள்கிறார்.