M.SivaRajan Profile picture
Apr 22 23 tweets 4 min read Twitter logo Read on Twitter
#ஆணவம்.

அர்ஜூனனுக்கு ஒரு முறை ஒரு சந்தேகம் வந்தது.

“இராமர் உண்மையிலேயே சிறந்த வில்லாளி எனில், ஏன் அவர் தன் வில்லைக் கொண்டே சேதுவுக்கு பாலம் கட்டவில்லை.

வானரங்களை வைத்து ஏன் பாலம் கட்டினார்?”

எப்படியாவது இந்த கேள்விக்கு விடை கண்டு பிடிக்க வேண்டும் என்று விரும்பினான். Image
பாசுபதாஸ்திரம் வேண்டி அவன் சென்று கொண்டிருந்த போது, ஒரு நதிதீரத்தில் அனுமன் தனது சுய உருவை மறைத்து ஒரு சாதாரண வானரம் போல உருக்கொண்டு அமர்ந்து இராம நாமம் ஜபம் செய்து கொண்டிருப்பதை பார்க்கிறான்.
அவரிடம் சென்று, “ஏய்… வானரமே…

உன் இராமனுக்கு உண்மையில் திறன் இருந்திருந்தால் வில்லினாலேயே பாலம் கட்டியிருக்கலாமே…

ஏன் வானரங்களை கொண்டு பாலம் கட்டினார்?” என்றான் எகத்தாளமாக.

தியானம் களைந்த அனுமன், எதிர் நிற்பது அர்ஜூனன் என்பதை உணர்ந்து கொள்கிறார்.
அவன் கர்வத்தை ஒடுக்க திருவுள்ளம் கொள்கிறார்.

“சரப்பாலம், என் ஒருவன் பாரத்தையே தாங்காது எனும் போது எப்படி ஒட்டு மொத்த வானரங்களின் பாரத்தையும் தாங்கும்?”

“ஏன் முடியாது… நீ நின்றால் தாங்கும் படி இந்த நதியின் குறுக்கே நான் ஒரு பாலம் கட்டுகிறேன்.
நீயல்ல… எத்தனை வானரங்கள் அதில் ஏறினாலும் அந்த பாலம் உறுதியாக நிற்கும்” என்கிறான் அர்ஜூனன்.

தனது காண்டீபதின் சக்தி மேல் அபார நம்பிக்கை கொண்டிருந்த அர்ஜூனன், “பந்தயத்தில் நான் தோற்றால், வேள்வித் தீ வளர்த்து அதில் குதித்து உயிர் துறப்பேன்” என்கிறான்.
“நான் தோற்றால், என் ஆயுளுக்கும் உனக்கு அடிமையாக உன் தேர்க்கொடியில் இடம் பெறுவேன்” என்கிறான் அனுமன்.

அர்ஜூனன் சரப் பாலத்தை கட்டத் துவங்கினான்.

அனுமன் ஒரு ஓரத்தில் அமர்ந்து இராமநாமம் ஜெபம் செய்யத் தொடங்கினான்.
அர்ஜூனன் பாலத்தை கட்டி முடித்ததும்,

அனுமன் அதன் மீது ஏற தனது காலை எடுத்து வைத்தது தான் தாமதம்,

பாலம் தகர்ந்து சுக்குநூறானது.

அனுமன், ஆனந்தக் கூத்தாட அர்ஜூனன் வெட்கித் தலை குனிந்தான்.

“பார்த்தாயா என் இராமனின் சக்தியை?” என்கிறான் அனுமன் கடகடவென சிரித்தபடி.
தனது வில் திறமை இப்படி போனதே என்ற வருத்தம் அவனுக்கு.

“போரில் வெற்றி பெற பாசுபாதாஸ்திரத்தை தேடி வந்த நான்,

தேவையின்றி ஆணவத்தால் ஒரு வானரத்திடம் தோற்றுவிட்டேனே…

நான் உயிர் துறந்தால் என் சகோதரர்களை யார் காப்பாற்றுவார்கள்…

கிருஷ்ணா என்னை மன்னிக்க வேண்டும்”
என்று கூறியவாறு சொன்னது போலவே வேள்வித் தீ வளர்த்து அதில் குதித்து உயிர் துறக்க எத்தனித்தான்.

அனுமன் தடுத்த போதும், தனது பந்தயத்திலிருந்து பின் வாங்க அவன் தயாராக இல்லை.

அர்ஜூனன் குதிக்க எத்தனித்த போது,

“என்ன நடக்கிறது இங்கே…

என்ன பிரச்சனை?” என்று ஒரு குரல் கேட்டது.
குரல் கேட்ட திசையில், ஒரு அந்தணர் தென்பட்டார்.

இருவரும் அவரை வணங்கி, நடந்ததை கூறினார்.

“பந்தயம் என்றால் சாட்சி என்ற ஒன்று வேண்டும்.

சாட்சியின்றி நீங்கள் பந்தயத்தில் ஈடுபட்டதால் அது செல்லாது.

மற்றொருமுறை நீ பாலம் கட்டு…

மற்றொருமுறை இந்த வானரம் அதை உடைத்து நொறுக்கட்டும்…
பிறகு முடிவு செய்து கொள்ளலாம் யார் பலசாலி என்று” அந்தணர் கூற இருவரும் ஒப்புக் கொள்கிறார்கள்.

இரண்டாவது முறை கட்டுவதால் மட்டும் என்ன மாற்றம் நிகழ்ந்து விடப் போகிறது என்று கருதிய அர்ஜூனன் கிருஷ்ணனரை நினைத்துக் கொண்டு “கிருஷ்ண, கிருஷ்ண” என்று சொல்லியபடி பாலம் கட்டினான்.
தன் பலம் தனக்கே தெரியாது அனுமனுக்கு.

இருப்பினும் முதல் முறை பாலத்தை உடைத்திருந்த படியால், கர்வம் தலைக்கு ஏறியிருந்தது.

இம்முறை இராம நாம ஜெபம் செய்யவில்லை.

அர்ஜூனன் பாலம் கட்டியவுடன் அதில் ஏறுகிறார்… நிற்கிறார்… ஓடுகிறார்… ஆடுகிறார்… பாலம் ஒன்றும் ஆகவில்லை.
“பார்த்தாயா எங்கள் கண்ணனின் சக்தியை ? நீயே சொல் யார் இப்போது பெரியவர்? எங்கள் கண்ணன் தானே?”

அர்ஜூனனின் கேள்வியால் அனுமனுக்கு குழப்பம் ஏற்படுகிறது.

அங்கே சாட்சியாக நின்று கொண்டிருந்த அந்தணரை நோக்கி வந்து “யார் நீங்கள்?” என்று கேட்கிறார்.
அந்தணரின் உருவம் மறைந்து அங்கு சங்கு சக்ரதாரியாக பரந்தாமன் காட்சியளிக்கிறார்.

இருவரும் அவர் கால்களில் வீழ்ந்து ஆசி பெற்றனர்.

“நீங்கள் இருவருமே தோற்கவில்லை.

ஜெயித்தது கடவுள் பக்தியும் நாம ஸ்மரணையும் தான்.

அர்ஜூனன் முதல் தடவை பாலம் கட்டும் போது,
தன்னால் தான் எல்லாம் நடக்கிறது என்கிற அகந்தையில் என்னை மறந்து பாலம் கட்டினான்.

அனுமன் தனக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்று இராம நாமத்தை ஜபித்தான்.

இராம நாமம் தோற்காது.

எனவே முதல் முறை அனுமன் வென்றான்.
இரண்டாம் முறை, அகந்தை ஒழிந்த அர்ஜூனன் என்னை நினைத்தபடி பாலம் கட்டினான்.

அனுமன், தன் பலத்தாலே தான் வென்றோம் என்று கருதி இராம நாமத்தை மறந்தான்.

எனவே இரண்டாம் முறை அர்ஜூனன் வென்றான்.

எனவே இருமுறையும் வென்றது நாம ஸ்மரணையே தவிர நீங்கள் அல்ல!!” என்றார்.
எனவே தான் சும்மா இருந்த அனுமனை சீண்டி பந்தயத்தில் இறங்கினான் அர்ஜூனன்.

“உங்கள் இருவருடைய பக்தியும் அளவுகடந்தது, சந்தேகமேயில்லை.

ஆனால், இறைவன் ஒருவனே என்பதை உணர மறந்து விட்டீர்கள்.

அதை உணர்த்தவே இந்த சிறிய நாடகம்.

மேலும் அர்ஜூனா, இந்த வானரன் வேறு யாருமல்ல, சிரஞ்சீவி அனுமனே!”
உடனே அனுமன் தனது சுய உருவைக் காட்டுகிறார்.

அர்ஜூனன், அவரின் கால்களில் வீழ்ந்து மன்னிப்பு கேட்கிறான்.

அனுமனை நோக்கி திரும்பிய கிருஷ்ணர், “ஆஞ்சநேயா, பாரதப்போரில் அர்ஜூனனுக்கு உன் உதவி தேவை.

நீ போர் முடியும் வரை அவன் தேர் கொடியில் இருந்து காக்க வேண்டும்.
அதன் பொருட்டே இந்த திருவிளையாடலை நிகழ்த்தினேன்.

நீ இருக்கும் வரை அந்த இடத்தில எந்த மந்திர தந்திரங்களும் வேலை செய்யாது!”

“அப்படியே ஆகட்டும் பிரபோ!” என்று அவரிடம் மறுபடியும் ஆசிபெற்றான் அனுமன்.
இன்றும் பாரதப் போர் சம்பந்தப்பட்ட படங்களில் அர்ஜூனனின் தேரில் அனுமனின் உருவம் இருப்பதை பார்க்கலாம்.

அர்ஜூனன் தேரின் கொடியில் அனுமன் இடம் பெற்ற கதை இது தான்.

ஆணவத்தைப் பற்றி கவிஞர் கண்ணதாசன் எழுதியது.
‘நம்மிடம் ஏதுமில்லை’ என்று நினைப்பது ஞானம்.

‘நம்மைத் தவிர ஏதுமில்லை’ என நினைப்பது ஆணவம்.

ஞானம், பணிந்து பணிந்து வெற்றி மேல் வெற்றியாகப் பெறுகிறது.

ஆணவம், நிமிர்ந்து நின்று அடி வாங்குகிறது.

கர்வம் தோன்றும் போது கடமையும் பொறுப்புக்களும் மறந்து விடுகின்றன.
ஆணவம் - என்றால் செருக்கு, இறுமாப்பு, அகந்தை, அகங்காரம், அகம்பாவம், கர்வம், சுயகவுரவம், தலைக்கனம், தற்பெருமை.

‘நான்தான்’ என்னும் எண்ணம் மேம்படுதலே ஆணவத்தின் தொடக்கம்.

ஆணவம் கொண்டவர்களைத் ‘தலைக்கனம் பிடித்தவர்கள்’ என்றும் கூறுவார்கள்.
தன்மானம் அனைவர்க்கும் பொது, உயர் குணம்; ஆணவம் உரிய கீழ்மைக் குணம்.

#ஆணவம்

#நீதிக்_கதைகள்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Apr 24
#பதஞ்சலீஸ்வரர்

முக்தி அளிக்கும் முள்ளூர் பதஞ்சலீஸ்வரர் கோவில் :

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் அருகே உள்ள கானாட்டாம்புலியூர் என்னும் குக்கிராமத்தில் அமைந்துள்ளது பழமையான பதஞ்சலீஸ்வரர் ஆலயம். Image
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும்,

தேவார திருத்தலங்களான திருநாரையூரில் இருந்து தெற்கில் 5 கிலோமீட்டர் தூரத்திலும்,

ஓமாம்புலியூரில் இருந்து கிழக்கில் 3 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது கானாட்டாம்புலியூர் என்னும் குக்கிராமம்.
இந்த ஊரின் புராண காலத்து பெயர் கானாட்டுமுள்ளூர் என்பதாகும்.

இங்கு பழமையான பதஞ்சலீஸ்வரர் ஆலயம் உள்ளது.

தேவாரத் திருத்தலங்களில் ஒன்றான இது, காவிரி வடகரை தலங்களில் 32–வது திருத்தலமாகும்.

சுந்தரமூர்த்தி சுவாமிகளால் பாடப்பெற்ற ஒரு பதிகம் இந்த ஆலயத்திற்கு பெருமை சேர்க்கின்றது.
Read 19 tweets
Apr 23
அகிலாண்டேஸ்வரி தாயாரின்ஸ்ரீ சக்கர தாடகங்களின் 
சிறப்பு :

திருச்சிராப்பள்ளி நகரில் அமைந்துள்ள தேவாரத் தலமான திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் பஞ்சபூதத் தலங்களில் அப்புத் (நீர்) தலமாகும்.

இறைவன் திருநாமம் ஜம்புகேஸ்வரர் .

இறைவியின் திருநாமம் அகிலாண்டேஸ்வரி. Image
ஆதி சங்கரர் திருவானைக்கா தலத்துக்கு வந்தபோது அங்கு அன்னை உக்கிர ரூபத்தோடு காட்சியளித்தாள்,

அன்னையின் உக்கிரம் தணிக்க, ஆதி சங்கரர் ஸ்ரீ சக்கரத்தை தாடகங்கமாகச் செய்து அணிவித்தார்.

இதனால் அன்னை மனம் குளிர்த்து சாந்த சொரூபியாக, வரப்பிரசாதியாக அருள்பாலித்தார்.
அன்னையின் தாடகங்கள் ஸ்ரீ சக்கர ரூபமாக அமைந்ததால் அதை தரிசனம் செய்வது மிக விசேஷமானதாக கருதப்படுகிறது.

குறிப்பாக திருமணம் ஆகாத பெண்கள், குழந்தை வரம் வேண்டும் பெண்கள், அம்பிகையின் தாடகங்களையே உற்று நோக்கி வணங்கினால் நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம்.
Read 5 tweets
Apr 23
#குருப்_பெயர்ச்சி_பரிகாரம்

குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைந்து உள்ளார்.

பரிகாரம் :

இந்த குருப்பெயர்ச்சி ஐ முன்னிட்டு 6 ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். Image
பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள் :

1. மேஷம்,

2. ரிஷபம்,

3. கடகம்,

4. கன்னி,

5. மகரம்,

6. மீனம்.

ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும்.
பரிகாரம் :

பிரகஸ்பதி பரிகார ஸ்தலங்கள்

1. திருச்செந்தூர்,

2. தென்குடி திட்டை,

3. திருவலிதாயம்.

ஆகிய ஸ்தலங்களுக்கு சென்று குரு பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்யலாம்.
Read 5 tweets
Apr 21
#நாராயண_நாமம்

*"4,000 பாசுரங்களை பிழிந்தெடுத்த மாதிரி, ஏதாவது ஒரு பாடல் இருக்கிறதா..."*

காஞ்சி பரமாச்சாரியாரை தரிசிக்க வந்த ஒரு வைணவர், கோரிக்கை ஒன்றை வைத்தார்.

‘‘சுவாமி... தினமும் ஆழ்வார்களின் ‘திவ்ய பிரபந்த’ பாடல்களை பாராயணம் செய்ய விரும்புகிறேன். Image
ஆனால், நேரமின்மையால் தவிக்கிறேன்.

4,000 பாசுரங்களை பிழிந்தெடுத்த மாதிரி, ஏதாவது ஒரு பாடல் இருக்கிறதா...

அதை சொன்னால் நன்றாக இருக்குமே...’’ என்றார்.
கலகலவென சிரித்த சுவாமிகள்,

''பார்வதிதேவி ஒரு முறை சிவனிடம், எந்த ஒரு நாமத்தை சொன்னால் விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களையும் சொன்ன பலன் கிடைக்கும் எனக் கேட்டாள்.

'ராம' நாமத்தை சொன்னாலே போதும் என சிவனும் பதிலளித்தார்.
Read 8 tweets
Apr 20
#ஸ்ரீ_தட்சிணாமூர்த்தி

*தலையில் கிரீடம் அணிந்து 
காட்சி தரும் அபூர்வ 
தட்சிணாமூர்த்தி*

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள தலம் இலுப்பைக்குடி.

இறைவன் திருநாமம் தான்தோன்றீஸ்வரர்.

இறைவியின் திருநாமம் சவுந்தர்ய நாயகி. Image
சித்தர்களில் ஒருவரான கொங்கணர், மூலிகைகளை பயன்படுத்தி இரும்பைத் தங்கமாக மாற்றினார்.

தங்கத்தை ஐநூறு மாற்றுக்களாக தயாரித்த அவர் மேலும் அதிக மாற்று தங்கம் தயாரிக்க வேண்டும் என விரும்பி அதற்கு அருள்தருமாறு சிவபெருமானை வழிபட்டார்.
அவருக்கு காட்சி தந்த சிவன் இலுப்பை மரங்கள் நிறைந்த இப்பகுதியில் பைரவரை வணங்கி, தங்கத்தை ஆயிரம் மாற்றாக உயர்த்தி தயாரிக்க அருள் செய்தார்.

அதன் படி கொங்கணர் பைரவரை வழிபட்டு, ஆயிரம் மாற்று தங்கம் தயாரித்தார்.

அந்த தங்கம் ஜோதி ரூபமாக மின்னியது.
Read 6 tweets
Apr 20
#விஷ்ணு_சஹஸ்ரநாமம்

விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது…

1950 - களில் ஒருநாள் ஒரு வானொலி நிருபர் ஸ்ரீ மஹாபெரியவாளை பேட்டிகண்டு அதனை டேப்ரிகார்டரில் பதிவு செய்து கொண்டிருந்தார். Image
திடீரென்று பெரியவா அவரிடமும், அங்கு இருந்தவர்களிடமும்,”மிகவும் பழைய காலத்து வாய்ஸ் ரிகார்டர் எதுவென்று யாருக்காவது தெரியுமா” என்று கேட்டார்.

யாரும் பதில் சொல்லவில்லை.

பெரியவா மற்றொரு கேள்வியைக் கேட்டார்,

”விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது?”
யாரோ ஒருவர்,”விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பீஷ்மர் நமக்குத் தந்தார்” என்றார்.

அனைவரும் “ஆம்” என்று ஒப்புக்கொண்டனர்.

பெரியவா சிரித்துக்கொண்டே தலையசைத்து விட்டு, மற்றொரு கேள்வியை வீசினார்,
Read 14 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(