அன்பெழில் Profile picture
Apr 29 8 tweets 2 min read Twitter logo Read on Twitter
#மகாபெரியவா
நன்றி: ஸ்ரீ கணேச சர்மா அவர்கள் சங்கரா தொலைகாட்சியில் செய்த உரையை தழுவியது. எழுதியவர்-கார்த்தி நாகரத்தினம்.
#சுந்தரகாண்டம் நூறாவது உபன்யாசம் நிகழ்த்தப் போகும் ஓர் உபன்யாசகர், அறிஞர், பத்திரிக்கையை எடுத்துக் கொண்டு போய், நமஸ்காரம் செய்தார்.

“என்ன செய்யப் போறே?” Image
என்றார் ஐயன்.
பத்திரிக்கையிலேயே போட்டிருக்கே, சுந்தரகாண்டம் நூறாவது உபன்யாசம் என்று. அப்புறம் ஏன் பெரியவா கேட்கிறார்?
வேறு ஒன்றும் இல்லை. சுந்தரகாண்டம் என்று பெரிதாக போடவில்லை. நூறாவது உபன்யாசம், இன்னார் செய்கிறார் என்பது பெரிதாக, சுந்தரகாண்டம் என்பது சிறிய எழுத்துக்களில்
இருந்ததால், சூசகமாக தெரிவித்தார் பெரியவா. புரிந்து கொண்டார் உபன்யாசகர்.
“நூறு தடவை சுந்தரகாண்டம் சொன்ன உன் கிட்ட தான் கேட்கணும். ஆஞ்சநேயர் அசோக வனத்திலே எந்த மரத்தின் மேலே உக்காந்துண்டு சீதையை தேடினார்?”

“தெரியலேயே பெரியவா”

“சிம்சுபா மரம்”

அசோக வனத்திலே என்ன மாதிரி விருக்ஷம்
எல்லாம் இருந்ததுன்னு வால்மீகி விஸ்தாரமா சொல்றார்.
காஞ்சநீம் ஸிம்ஸுபாமேகாம் ததர்ஸ ஹனுமான் கபி:
சரி, அவர் ஏன் இந்த சிம்சுபா மரத்தின் மேலே இருந்து பார்த்தார், வேறே நிறைய மரம் எல்லாம் இருந்ததே?”

“சொன்னால் தெரிஞ்சுக்கறேன் பெரியவா” என்றார் அடியார்.

“அந்த சிம்சுபாவோட இலை, கிளை, பட்டை
எல்லாம் ஸ்வர்ணமயமா இருந்ததாம். வால்மீகி சொல்றார். ஆஞ்சநேயர் எப்படிப் பட்டவர்?
காஞ்சனாத்ரி கமனீய விக்ரகம் - தன்னோட உடம்பு தங்கம் மாதிரி தகதகன்னு ஜொலிக்கிறவர். அப்படியாப் பட்டவர் ஒரு பச்சை, இல்லே வேறு நிறத்திலே இருக்கிற மரத்திலே உட்கார்ந்துண்டா எல்லார் கண்ணுலயும் பட்டுடுவார். அதனால
தங்க நிறத்திலே இருக்கிற இந்த சிம்சுபா மரத்திலே இருந்து சீதையை தேடினார். பச்சோந்தி என்கிற ஜந்து எந்த மரத்திலே இருக்கோ, அந்த நிறத்துல மாறிக்கும். மிலிடரில செடி, கொடி, மலை இதுல எல்லாம் எதிரிகளை ஏமாற்ற வேறே வேறே கலர்ல டிரஸ், தொப்பி, கவசம், மூஞ்சில வர்ணம்னு எல்லாம் போடுக்கறாளே, அது
Camouflage தானே? அது சுந்தர காண்டத்திலேயே இருக்கு. அது உனக்கு தெரியணும். இதை நீ நிறைய பேருக்கு சொல்லணும். நம்ப புராண இதிகாசம் எல்லாம் வெறும் புளுகு மூட்டை இல்லே, அதை புரிஞ்சுக்கிற அறிவு நமக்கு இல்லே தானே தவிர, அதை பண்ணின பெரியவா எல்லாம் ரொம்ப அறிவானவா. இன்னும் ஆயிரம் ப்ரவசனம்
பண்ணி பரம க்ஷேமமா இருப்பே.”

என்று நிறைவு செய்தது அந்த ராமச்சந்திர மூர்த்தியின் ப்ரத்யக்ஷ பிரதி உருவம்.

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

May 1
#அறிவோம்_நம்_இந்து_வரலாறு
#சோமநாதர்_ஆலயம் ஒரு கோவிலுக்காக 50,000 பேர் உயிர் விட்டுள்ளனர். எங்கள் பிணத்தை கடந்து தான் கோவில் உள்ளே நுழைய முடியும் என நின்று உயிர் நீத்தனர். இத்தனை ஆயிரம் பேர்களை கொன்றும், 20,000 ஹிந்துக்களை அடிமைகளாக பிடித்தும் சென்றது இஸ்லாமிய படைகள். 6 முறை Image
தரைமட்டமாக்கப் பட்டு மீண்டும் உயிர்தெழுந்து பிரம்மாண்டமாய் நிற்கிறது இக்கோவில். யானைகள் நடக்க முடியாமல் திணற திணற சுமை ஏற்றபட்டு கோடானு கோடி பொக்கிஷங்கள் கொள்ளையடிக்கப் பட்ட கோவில். சோமநாதர் கோவில் மூல லிங்கம் அந்தரத்தில் நிற்க்கும் படி பிரதிஷ்டை செய்யப்பட்ட கோவில்.
முதல் முறை ImageImage
இதை கண்ட போது ஆச்சர்யபட்ட கஜினி அம்புகளால் சோதித்து பார்த்து என்ன பிடிமானத்தில் நிற்கின்றது என விடை தெரியாத அதிர்ச்சியில் சிவலிங்கத்தை காலால் எட்டி உதைத்து கீழே தள்ளி உடைத்து எறிந்தான். கோவிலில் இருந்த வெள்ளி கதவுகள், சந்தன மரத்தால் ஆன கதவுகளையும் முற்றிலும் பெயர்த்து எடுத்து Image
Read 12 tweets
May 1
#ஸ்ரீகிருஷ்ணன்_கதைகள்
ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவே தங்களுடன் பிறந்து வளர்ந்து வாழ்வதால் யாதவர்களுக்கு தர்ப்பம் ஏற்பட்டது. தர்ப்பம் என்றால் ஆசைகள், கர்வம், மமதை என்று அர்த்தம். இவை அனைத்தையும் கொடுப்பவனும், அழிப்பவனும் அவனே தான்! யாதவர்களுக்கு அந்த ஆசையையும் எண்ணங்களையும் மமதையையும் Image
கர்வத்தையும் தூண்டியவன் பகவான் ஸ்ரீகிருஷ்ணன். அதனால்தான் யதுகுலமே உருவானது. அந்தக் குலத்திலேயே தானும் பிறப்பெடுத்து, அவர்களுடன் ஒன்றிக் கிடந்தான். இதனால் யதுகுலத்தைச் சேர்ந்தவர்களுக்கு அகம்பாவமும் தலைதூக்கியது. அந்தக் கிருஷ்ணனே நம்முடன் இருக்கிறான் என கர்வம் தலைக்கேறியது.
மமதையுடன் திரிந்தனர். இறுமார்புடன் வாழ்ந்தனர். இந்த கர்வமும் மமதையும் இறுமார்பும் மனித குலத்துக்குச் சத்ரு என்பதை உலகத்தாருக்குப் புரிய வைக்க வேண்டும் எனச் சித்தம் கொண்டான் கண்ணபிரான். விளைவு, அந்த யதுகுலத்தையே அழிக்கவும் செய்தான். யதுகுலம் அழிந்தால், அந்தக் குலத்தைச் சேர்ந்த
Read 6 tweets
Apr 30
#சிங்கப்பூர்_சாங்கி_ஶ்ரீராமர்_ஆலயம்
ராமருக்கு பாரதத்தில் மட்டுமன்றி உலகம் முழுவதும் புகழ் உண்டு. தாய்லாந்து நாட்டின் மன்னர்கள் தங்களை ராமா என்று அழைத்துக் கொள்கின்றார்கள். தாய்லாந்தில் ஒரு சில ஊர்களுக்கு அயோத்தி, லவபுரி, காஞ்சனபுரி் என்றெல்லாம் பெயர் சூட்டியுள்ளார்கள். Image
சிங்கப்பூரில் கடற்கரையை ஒட்டிய இடமாய் விளங்குவது சாங்கி. இந்த இடத்தில் தான் அமைந்துள்ளது பெருமைகள் நிறைந்த ஸ்ரீ ராமர் ஆலயம். இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய காலக்கட்டத்தில் சிறிய கிராமமாக இருந்த சாங்கியில் தற்போது ஆலயம் அமைந்திருக்கும் இடத்தில் மரத்தடியின் கீழ் ஒரு சிறு கோவிலாகத் Image
தான் ஸ்ரீ ராமர் ஆலயம் முதன் முதலில் இருந்தது. அச்சமயத்தில் அங்கு வாழ்ந்த தமிழர்களுக்கு அது ஒரு மிகச் சிறந்த வழிபாட்டு தலமாக விளங்கியது. இந்திய ராணுவத்தில் அவசர காலங்களில் பாலங்கள் அமைத்திடும் பொறியியல் பிரிவில் பணியாற்றிய திரு. ராம்நாயுடு என்பவர் இரண்டாம் உலகப் போருக்கு பிறகு
Read 14 tweets
Apr 30
#MahaPeriyava
Author: Sivasri Jagadeesa Shivacharya, Pandanainallur
Source: Maha Periyaval Darisana Anubhavangal Vol. 2

Devotees saw with their own eyes that water was coming from the corner of Sri Vishnu Durga's eyes in the Pandaadu Nayaki Sameta Pasupatinatha Swami temple at
PandanaiNallur. This happened on 19th Feb.1986. They rushed and reported the matter to me. I went and had a look. Tears were coming out of Ambal's both eyes! There were no words to describe the agony of our heart. I arranged to bestow worship on a young girl, treating her as
Durga, submitting saubhagya dravyas, and performing the Navakshari mantra japam in front of the Kannika Durga.

"Why is this flaw, mother?" I asked her.

The girl who was sitting as Durga told us that she had a vision of a divine girl who wore a green skirt telling her, "Reduce
Read 13 tweets
Apr 30
சில பெரியோர்களை, எளிய ஆனால் அரிய மனித தெய்வங்களை அவர்கள் மறைவுக்குப் பின் தான் தெரிந்து கொள்கிறோம். இவரை வாழுங்காலத்தே அறிந்து போற்றி வணங்குவோம்.
#பாலம்_கல்யாணசுந்தரம் (பிறப்பு: ஆகஸ்ட்1940) அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் இந்தியா வந்தபோது அரசு சாரா இருவரை சந்திக்க விரும்பினார். Image
ஒருவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் இன்னொருவர் பாலம் கல்யாண சுந்தரம். 35 ஆண்டுகள் பேராசிரியர் பதவியில் பணிபுரிந்து, பெற்ற சம்பளம் அனைத்தையும் ஏழை மக்களின் நலனுக்காக செலவிட்டு, தமது சொந்தச் செலவிற்கு ஒரு உணவகத்தில் சர்வராக வேலை பார்த்தவர். இவ்வாறு 35 ஆண்டுகளாகத் தான் பெற்ற ஊதியம் Image
ரூபாய் முப்பது லட்சத்தையும் முழுமையாகக் கொடுத்து வரலாறு படைத்தார் பாலம் கல்யாண சுந்தரம் ஐயா. உலகில் எந்த நாட்டைச் சேர்ந்த மத்திய, மாநில அரசு ஊழியர்களோ, தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்களோ இவ்வாறு செய்ததில்லை என்பதால் அமெரிக்காவில் “ஆயிரம் ஆண்டுகளில் சிறந்த மனிதர்”
Read 18 tweets
Apr 30
#ஶ்ரீகிருஷ்ணன்_கதைகள்
குசேலர் என்னும் சுதாமா கிழிசல் துணியில் அவலை முடிந்து வந்தார். அதை ஒரு பிடி வாயில் போட்டுக் கொண்ட அடுத்த நிமிடம் அந்த ஏழையின் குடிசை, மாட மாளிகையாக மாறியது. அவருக்குச் செல்வத்தைக் கொடுத்தார்.

திரௌபதியின் வஸ்திரத்தை துச்சாதனன் உருவிய போது சேலைகளைக் கொடுத்து Image
அவள் மானத்தைக் காத்தார்.

துரியோதணனும் அர்ஜுனனும் போருக்கு உதவி கேட்டு வந்தனர்.
துரியோதனன் எல்லா படைகளையும்
கேட்டான். எடுத்துக் கொள் என்று சொல்லி எல்லா ஆயுதங்களையும் படைகளையும் துரியோதணனுக்குக் கொடுத்தார். கண்ணன் மீது பரிபூரண பக்தி கொண்ட அர்ஜுனனுக்கு
தன்னையே கொடுத்தார். Image
அவனுக்கு சாரதியாக அமர்ந்தார். ஆக உடல் உழைப்பைக் கொடுத்தார்.

கோபியர்கள் மட்டற்ற, மாசு மருவற்ற, தூய, மனம் திறந்த அன்பைப் பொழிந்தனர். அதைப் பன்மடங்கு அவர்களுக்கு திருப்பித் தந்து புல்லாங்குழல் இன்னிசையால் அவர்களை மகிழ்வித்தார்.

பெரும் மழை வந்தபோது பயந்து நடுங்கிய இடைச் Image
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(