''#நான்'' என்பது அகந்தை மிகையாகக் கொண்டது. அங்கே அன்பு இருக்காது. உண்மை நிலவாது. "நான், எனது” என்னும் உணர்வுகள் நம்மை ஆட்டிப் படைக்கும் தன்மை கொண்டது...
அது உங்களை மற்றவர்களிடமிருந்து பிரித்துத் தனிமைப்படுத்தும் எண்ணத்தை தோற்றுவிக்கக் கூடியது...
நான்!, என்று உச்சரிக்கும் போது நீங்கள் அனைவரையும் விட்டு விலகிச் செல்கின்றீர்கள். அது ஆணவத்தின் ஆரம்பம்...
ஆற்றங்கரை ஓரத்தில் ஓங்கி வளர்ந்து இருந்தது ஒரு அரச மரம், அந்த மரம் மிகவும் உயரமாகவும், மிகுந்த வலிமையுடனும் இருந்தது. ஆனால்!, அதற்கு 'தான்' என்ற அகந்தை அதிகம்...
புயலே அடித்தாலும் கூட என்னை ஒன்றும் செய்யாது என்றும், நான் யாருக்கும் தலை வணங்க மாட்டேன் என்றும் அகந்தையுடன் இருந்தது...
அந்த அரசமரம் அருகில் நாணல் புற்களும் வளர்ந்திருந்தது. அந்த நாணல் புற்களை அடிக்கடி கேலி செய்தும் வந்தது அந்த மரம். ஆனால்!, நாணல் புற்களோ எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தது...
ஒருமுறை புயல் காற்று மிக வேகமாகச் சுழன்று சுழன்று அடித்தது. அதன் வேகம் தாங்காமல் அரசமரம் வேரோடு கீழே சாய்ந்து விழுந்தது...
கீழே கிடந்த அரசமரத்திற்கு ஒரே வியப்பு. இவ்வளவு பெரிய ஆளான நானே கீழே விழுந்து கிடக்க, இந்த சின்னஞ் சிறிய நாணல் எப்படி எந்தவித பாதிப்பும் இன்றி அப்படியே நின்று கொண்டு இருக்கிறது என்று வியப்பாகக் கண்டது..
தன் அய்யப்பாடுகளை நாணலிடமே கேட்டது,
அதற்கு அந்த நாணல், ''அரசமரமே! நீ ஆணவத்துடன் புயலோடு எதிர்த்து நின்றாய், நானோ பணிவுடன் புயலுக்கு தலை வணங்கி வளைந்துக் கொடுத்தேன் என்றது...
ஆம் நண்பர்களே...!
நான் இல்லை என்றால் எதுவும் நடக்காது என்ற எண்ணம் ஓர் செருக்கு/ஆணவம், அது மயக்கத்தில் ஆழ்த்தும் எண்ணமாகும். இதைத் தவிர்த்தால் உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும்...! 🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
அழகர் ஆற்றில் இறங்குவது ஏன்? 10 நாள் விழாவின் சுவாரஸ்யங்கள்!!!
எல்லோருக்கும் ஐப்பசியில் தீபாவளி வரும். ஆனால், மதுரைவாசிகளுக்கு, சித்திரையிலும் ஒரு தீபாவளி. அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை அந்த அளவுக்கு மிக விமரிசையாகக் கொண்டாடி வருகிறார்கள்.
திருவிழா நடக்கும் பத்து நாட்களும் ஊரே திமிலோகப்படும். மதுரை மற்றும் சுற்றிலுமுள்ள ஊர்களில் இருந்து குடும்பத்துடன் புறப்பட்டு வந்து சேருவார்கள். சுமார் பத்து லட்சம் பேருக்கு மேல் ஒரே இடத்தில் கூடும் திருவிழா இது.
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தைச் சொல்வதற்கு முன், அவர் குடிக்கொண்டிருக்கும் அழகர்மலையின் சிறப்பையும் சொல்லியாக வேண்டும்.
கீழ்வேளூர் திருத்தலத்தில் சுயம்புலிங்க வடிவில் எழுந்தருளி அருள் பாலிக்கும்
கேடிலியப்பரை வழிபாடு செய்தால் சகல தோஷங்களும் நிவர்த்தியாகும்.
1
தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து திருப்பாற் கடலைக் கடைந்தபோது உண்டான அமிர்தத் துளி ஒன்று இரண்டாகச் சிதறி விழுந்தது.
2
அவற்றில் ஒன்று இந்தியாவின் வடக்கே விழுந்து ‘வட பத்ரி காரண்யம்’ ஆயிற்று. மற்றொரு துளி தென் இந்தியாவில் தமிழகத்தில் விழுந்து இலந்தை வனமாகி ‘தென் பத்ரி காரண்யம்’ ஆயிற்று.
பொதுவாக மது என அறியப்பட்ட எத்தனால் அடங்கிய குடிவகை மதுபானம் என அழைக்கப்படுகிறது. வேதியியல் வரைவிலக்கணத்தின் படி மது என்பதில் வேறு சேர்வைகளும் அடங்குகின்றன. மதுபானங்கள் பொதுவாக பியர் வகைகள்,
வைன் வகைகள், வடி பானங்கள் என மூன்று வகைகளாக பிரிக்கப்படுகின்றன.
எத்தனால் உளத்தூண்டல் மருந்தாகும் (psychoactive drug) இது மூளைத்திறன் மயக்க மருந்தாக செயற்படுகிறது. கூடுதலான நாடுகள் மதுபான உற்பத்தி, விற்பனை, உட்கொள்ளல் தொடர்பான விதிமுறைகளை கையாண்டு வருகின்றன.
மதுபானம் உலகின் கூடுதலான நாடுகளில் உற்பத்தி செய்யப்பட்டும் உட்கொள்ளப்பட்டும் வருகின்றது. மதுபானங்களை உட்கொள்ளல் சில கலாச்சாரங்களில் சமூக நிகழ்வுகளில் முக்கிய அம்சமாக காணப்படுகிறது.
சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட, மனிதர்களின் பாவ புண்ணிய கணக்குகளை எழுதுபவரான, தமிழ்நாட்டில் புகழ்பெற்ற காஞ்சிபுரம் மாவட்டத்தில்
தனிக் கோயிலாக அமைந்த
யம தர்மனின் கணக்கரான
சித்ரகுப்தசுவாமி
கர்ணகிஅம்பிகை
1
திருக்கோயில் வரலாறு:
பூலோகத்தில் மனிதர்கள் செய்யும் பாவ, தர்மங்கள் குறித்த முழு விபரங்களையும் பதிவு செய்துவைப்பது சித்திரகுப்தன் என புராணங்கள் வாயிலாகவும், பல திரைப் படங்களிலும் நாம் கண்டிருப்போம். சித்திரகுப்தன் எமதர்ம ராஜனின் கணக்குப்பிள்ளையாவார்.
2
உலகப் புகழ்பெற்ற காஞ்சிபுரத்தில், காஞ்சிபுரம் நெல்லுக்காரர் தெருவில் அமைந்துள்ள சித்ரகுப்தர் கோயில், கோயில்களில் வித்யாசமான கோவிலாகும். இக்கோயில் சித்திரகுப்தரின் அரிய கோயிலாக விளங்குகிறது.