சில பெரியோர்களை, எளிய ஆனால் அரிய மனித தெய்வங்களை அவர்கள் மறைவுக்குப் பின் தான் தெரிந்து கொள்கிறோம். இவரை வாழுங்காலத்தே அறிந்து போற்றி வணங்குவோம். #பாலம்_கல்யாணசுந்தரம் (பிறப்பு: ஆகஸ்ட்1940) அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் இந்தியா வந்தபோது அரசு சாரா இருவரை சந்திக்க விரும்பினார்.
ஒருவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் இன்னொருவர் பாலம் கல்யாண சுந்தரம். 35 ஆண்டுகள் பேராசிரியர் பதவியில் பணிபுரிந்து, பெற்ற சம்பளம் அனைத்தையும் ஏழை மக்களின் நலனுக்காக செலவிட்டு, தமது சொந்தச் செலவிற்கு ஒரு உணவகத்தில் சர்வராக வேலை பார்த்தவர். இவ்வாறு 35 ஆண்டுகளாகத் தான் பெற்ற ஊதியம்
ரூபாய் முப்பது லட்சத்தையும் முழுமையாகக் கொடுத்து வரலாறு படைத்தார் பாலம் கல்யாண சுந்தரம் ஐயா. உலகில் எந்த நாட்டைச் சேர்ந்த மத்திய, மாநில அரசு ஊழியர்களோ, தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்களோ இவ்வாறு செய்ததில்லை என்பதால் அமெரிக்காவில் “ஆயிரம் ஆண்டுகளில் சிறந்த மனிதர்”
(Man of Millinium) என்ற விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, 6.5 மில்லியன் டாலர் (30 கோடி) பரிசாகப் பெற்றார். அதையும் குழந்தைகள் நலனுக்காக அளித்து உலகில் கோடிக்கணக்கான மக்களை வியப்பில் ஆழ்த்தினார். தன் பங்கிற்குக் குடும்பத்தில் கிடைத்த ரூ.50 லட்சம் மதிப்புடைய சொத்தில் தனக்கென்று
எதுவும் வைத்துக் கொள்ளாமல் மக்களுக்கு அளித்து தனக்குப்போக தானம் என்பதை மாற்றிக் காட்டினர் பாலம் ஐயா. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த பாலம் ஐயாவை தனது தந்தையாக தத்தெடுத்துக் கொண்டார். ஓரிரு மாதத்தில் தனது பழைய வசிப்பிடத்துக்கே சூப்பர் ஸ்டாருக்கு நன்றி கூறிவிட்டு திரும்பினார். ஐயா
அவர்கள் தன் பேருக்குப் பின்னால் M.A(Litt)., M.S.(His)., M.A.(GT)., B.Lip.Sc., DCT, DRT, DMTI, FNCW, DS என 36 எழுத்துக்குச் சொந்தக்காரரான இவர் அனைத்திலும் பல்கலைகழகத்தில் முதலிடம் பெற்றார். ஏழைகளின் துயரினை நேரிடையாக அறிந்துகொள்ள 7
ஆண்டுகள் நடைபாதை வாடியாகவே
வாழ்ந்தார். 30 ஆண்டுகளுக்கு முன்பாகவே தன் உடல் உறுப்புகளை மருத்துவக் கல்லூரிகளுக்குத் தானமாக எழுதி வைத்துவிட்டார். வாழ்நாள் முழுவதும் ஒரு சென்ட் நிலம், ஒரு ஓலை குடிசை, ஒரு சல்லிக் காசு இல்லாமல் அனைத்தையும் நாட்டு மக்களுக்காக அர்ப்பணித்து திருமண வாழ்வையும் தியாகம் செய்தவர்.
கேம்பிரிட்ஜ் பல்கலைகழகம் ‘A Most Notable intellectual’ in the World என்ற பட்டத்தை வழங்கியதுடன் நூலகத்துறைக்கு நோபல் பரிசு இருந்தால், அதனைப் பெறத் தகுதி இவருக்கு உண்டு என்ற குறிப்பையும் வழங்கியது. பிரபல ரியல் எஸ்டேட் அதிபர் அரிமா லியோ முத்து அவர்கள் சென்னை மையப்பகுதியில் பல கோடி
மதிப்புள்ள வீட்டு மனையை ஐயாவிற்கு பரிசாக அளித்தார். ஆனால், அது தனது கொள்கைக்கு முரணானது என அப்பரிசை ஏற்றுக்கொள்ள பணிவுடன் மறுத்துவிட்டார்கள். 20-ம் நூற்றாண்டின் இணையற்ற சாதனையாளராக ஐ.நா சபை உலகெங்கிலும் தேர்ந்தெடுத்த 20 பேர்களில் ஐயாவும் ஒருவர். பாலம் ஐயாவைப் பற்றிய ஆவணப்படம்
நார்வேயில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு பரிசு பெற்றது. பாலம் ஐயா மருத்துவமனையில் இருந்தபோது மருத்துவச் செலவிற்காக மக்களிடம் ஒரு ரூபாய் வேண்டினார். இவரது வேண்டுகோளை மதித்து மேயர், சபாநாயகர், கவர்னர் மட்டுமல்லாமல் அன்றைய குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம்
அவர்களும் ஒரு ரூபாய் அனுப்பினர்.
கோடிக்கணக்கில் அள்ளிக் கொடுத்த இவர் ஏழைகளுக்குக் கிட்டாத உணவையோ, உடையையோ, இருப்பிடத்தையோ பயன்படுத்தாமல் எளிய வாழ்க்கை வாழ்ந்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாலம் ஐயாவின் தந்தையார் பல்வண்ணநாதன், ஒரு கோவிலின் அறங்காவலாராக இருந்தபோது கோவில்
பணியாளர் கோவில் வளாகத்திலுள்ள பலா மரத்திலிருந்து ஒரு பலாப் பழத்தை எடுத்து வந்து வீட்டில் கொடுத்தார். அதில் சில சுளைகளை மனைவியும், குழந்தைகளும் சாப்பிட அதனை மாபெரும் குற்றமாகக் கருதி அதற்கு பிரயாச்சித்தமாக ஒரு வயலை கோவிலுக்கு எழுதி வைத்தார். அதன் இன்றைய மதிப்பு பல லட்சம்.
பாலம் ஐயாவின் அன்னையார் தாயம்மாள்.
1. எதற்காகவும் பேராசைப்படாதே. 2. ஏது கிடைத்தாலும் பத்தில் ஒன்றை தானம் செய். 3. தினமும் ஓர் உயிருக்கு நல்லது செய்தால் வாழ்க்கையில் எப்பொழுதும் மகிழ்ச்சி நிலவும் என்று தாயார் வழங்கிய அறிவுரையே அவரது அனைத்து சேவைகளின் மையமாகத் திகழ்கிறது.
தினத்தந்தி (26.05.1995)
நல்ல காரியங்களுக்கு பொருளை வாரிவழங்குவது தான் நம் செல்வத்தை பாதுகாப்பதற்கு ஒரே வழி என்ற சான்றோர் வாக்கை கல்யாணசுந்தரம் போல் எல்லாரும் கடைபிடித்து வாழ வேண்டும்- #வாரியார்_சுவாமிகள் பத்மஸ்ரீ டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார்-
தனது ஊதியம் முழுவதையும்
அளித்தது, கொடுப்பதற்காகவே திருமண வாழ்க்கை தியாகம் செய்தது. பரிபூரண எளிய வாழ்க்கை இவைகளை ஒப்பிடும்போது கடையேழு வள்ளல்களும், கர்ணனும் இவருக்கு ஈடாக முடியாது.
Nelson Mandala (10.05.1994 – Former Prime Minister of South Africa
The Progress of a country depends upon the children and
the students of that country. Indeed it is very great Mr. Kalyanasundaram has been doing yeoman services to this section of society for past 50 years and without any publicity.
பாரத ரத்னா காமராஜர் 01.05.1963 – முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர்
நமது பாரத பிரதமரின் வேண்டுகோளுக்கு
இணங்க இந்தியாவிலேயே தேசிய பாதுகாப்பு நிதிக்கு நன்கொடை அளிக்க முதல் மாணவன் என்ற வகையிலும் நமது நாட்டின் பாதுகாப்பு நிதிக்கு தங்கம் வழங்கிய முதல் பிரஜை என்ற வகையிலும் மாணவர் கல்யாண சுந்தரம் தமிழ்நாட்டிற்கே பெருமை சேர்த்துள்ளார். அவர் எதிர்காலத்தில் மிகச் சிறந்த மனிதராக வருவார்
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம் என்கின்ற கோட்பாட்டிற்கு உண்மையான உதாரணம் திரு பாலம் ஐயா அவர்கள். இவரை விட உயர்ந்தவர் வேறொருவர் இருப்பரோ எனும் பிரமிப்பு ஏற்படுகிறது. வாழும் மகாத்மா. இவரை போற்றுவோம். அவர் வாழ்க்கையில் இருந்து சிலதையாவது பின்பற்றுவோம்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#MahaPeriyava
Author: Sri Ramani Anna (in Tamil)
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb
There was a large crowd and a long queue at Sri Kanchi Matham many years ago in the Chittirai month on the New Year’s Day during the morning hours. A sixteen year
old boy was among those waiting in the queue, which moved slowly. He reached near the stage where Mahaswamiji was seated. Acharyal keenly looked at him for some time. He prostrated at once before the sage, his eight limbs touching the ground. He did not get up. Swamiji waited
for sometime and then said, "Get up, get up my child!"
He got up, raised his hands over his head and joined the palms. The stirrings of bhakti hadn't left him yet. Tears were flowing down his eyes. Swamiji called the youth near him. He obeyed, his palms still joined. Swamiji
#Who_Is_Greater?
When Dr. Abdul Kalam was The President, he visited Coonoor. On Reaching, he came to know that Field Marshall Sir Sam Manekshaw was in the Military Hospital there. Dr. Kalam Wanted to visit Sam, which was unscheduled. Arrangements were made. At the bedside, Kalam
spent about 15 minutes talking to Sam and enquiring about his health. Just before leaving Kalam asked Sam, "Are you comfortable? Is there anything I could do? Do you have any grievance or any requirement that would make you more comfortable?"
Sam said, "Yes Your Excellency. I
have one grievance."
Shocked with concern and anguish Kalam asked him what It was. Sam replied, "Sir my grievance is that I am not able to get up and Salute my most respected President of my beloved country."
Kalam held Sam's hand as both were in tears. But
the remaining part of
ஒரு நாள் தரிசனம் கொடுப்பதற்காக வெளியே வந்து அமர்ந்தார்கள், பெரியவாள். சில பக்தர்கள் பழம் - மலர்த் தட்டுகளை வைத்து வந்தனம் செய்து கொண்டார்கள். பெரியவாள் கையைச் சொடுக்கி ஒரு
சிஷ்யரைக் கூப்பிட்டு, "எனக்குத் தங்க புஷ்பம் கொண்டு வந்து கொடுப்பாரே, அந்த முதலியார் எங்கே?" என்று கேட்டார்கள்.
தொண்டர்களுக்கு விளங்கவில்லை. தங்க புஷ்பம் கொண்டு வந்து கொடுக்கும் அன்பர் யாரையும் அவர்கள் பார்த்ததில்லை. தற்செயலாக, அந்த சமயம் ஒரு முதலியார் தரிசனத்துக்கு வந்தார்.
உள்ளூர்க்காரர். அநேகமாக நாள்தோறும் வருபவர். வந்தவர் நேரே பெரியவாளிடம் சென்று, தங்க அரளி மாலையைச் சமர்ப்பித்தார். பெரியவாள் அதை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டு தலையில் வைத்துக் கொண்டார்கள்.
தெலுங்கு மொழியில், இந்த புஷ்பத்துக்கு 'ஸ்வர்ண கண்டா' என்று பெயர். சம்ஸ்கிருதத்தில் ஸ்வர்ண புஷ்பம்
#சரணாகதி_வைபவம்#ஶ்ரீவைஷ்ணவம்
(ஸ்ரீ உ.வே. D.S.தாதாசார்ய ஸ்வாமி வைகுண்டவாசி)
சரணாகதியால் நமக்கு ஏற்படும் பலம் என்ன?
சரணாகதியால் நாம் #க்ருதக்ருத்யர் ஆகிறோம். அதாவது, மோக்ஷத்திற்காக நாம் செய்யவேண்டிய கார்யம் செய்தாய்விட்டது. நமக்கு மோக்ஷம் நிச்சயம். நம்முடைய கர்மம் எப்படி என்றால்,
ப்ரஹ்ம கல்பத்தில் 10,000 கல்பம் ஜன்மம் எடுத்து நம்முடைய கர்ம பலத்தை அனுபவித்தாலும் முடிவு பெறாத கர்மத்தை ஒருவன் அரை க்ஷணத்தில் செய்து விடுகிறான். அப்படியானால் ஒரு மணி நேரத்தில் எவ்வளவு கர்மா? ஒரு நாளில் எவ்வளவு? ஒரு வருஷத்தில் எவ்வளவு? ஒரு ஆயுசில் எவ்வளவு? இப்படி எத்தனை ஜன்மம்
நாம் எடுத்திருக்கிறோம்? இக் கர்மத்துக்கு #ஸஞ்சித_கர்மம் என்று பெயர். இவைகளுக்குப் பெருமாள் பேரேடு போட்டு வைத்திருக்கிறார். இதில் ஒவ்வொரு கர்மமாக எடுத்து நமக்குப் பெருமாள் பலம் கொடுக்கிறார். அப்படிப் பலம் கொடுப்பதற்காக எடுத்திருக்கிற கர்மத்துக்கு ஐந்து ஜன்மம் அனுபவிக்க வேண்டி
#அறிவோம்_நம்_இந்து_வரலாறு #சோமநாதர்_ஆலயம் ஒரு கோவிலுக்காக 50,000 பேர் உயிர் விட்டுள்ளனர். எங்கள் பிணத்தை கடந்து தான் கோவில் உள்ளே நுழைய முடியும் என நின்று உயிர் நீத்தனர். இத்தனை ஆயிரம் பேர்களை கொன்றும், 20,000 ஹிந்துக்களை அடிமைகளாக பிடித்தும் சென்றது இஸ்லாமிய படைகள். 6 முறை
தரைமட்டமாக்கப் பட்டு மீண்டும் உயிர்தெழுந்து பிரம்மாண்டமாய் நிற்கிறது இக்கோவில். யானைகள் நடக்க முடியாமல் திணற திணற சுமை ஏற்றபட்டு கோடானு கோடி பொக்கிஷங்கள் கொள்ளையடிக்கப் பட்ட கோவில். சோமநாதர் கோவில் மூல லிங்கம் அந்தரத்தில் நிற்க்கும் படி பிரதிஷ்டை செய்யப்பட்ட கோவில்.
முதல் முறை
இதை கண்ட போது ஆச்சர்யபட்ட கஜினி அம்புகளால் சோதித்து பார்த்து என்ன பிடிமானத்தில் நிற்கின்றது என விடை தெரியாத அதிர்ச்சியில் சிவலிங்கத்தை காலால் எட்டி உதைத்து கீழே தள்ளி உடைத்து எறிந்தான். கோவிலில் இருந்த வெள்ளி கதவுகள், சந்தன மரத்தால் ஆன கதவுகளையும் முற்றிலும் பெயர்த்து எடுத்து
#ஸ்ரீகிருஷ்ணன்_கதைகள்
ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவே தங்களுடன் பிறந்து வளர்ந்து வாழ்வதால் யாதவர்களுக்கு தர்ப்பம் ஏற்பட்டது. தர்ப்பம் என்றால் ஆசைகள், கர்வம், மமதை என்று அர்த்தம். இவை அனைத்தையும் கொடுப்பவனும், அழிப்பவனும் அவனே தான்! யாதவர்களுக்கு அந்த ஆசையையும் எண்ணங்களையும் மமதையையும்
கர்வத்தையும் தூண்டியவன் பகவான் ஸ்ரீகிருஷ்ணன். அதனால்தான் யதுகுலமே உருவானது. அந்தக் குலத்திலேயே தானும் பிறப்பெடுத்து, அவர்களுடன் ஒன்றிக் கிடந்தான். இதனால் யதுகுலத்தைச் சேர்ந்தவர்களுக்கு அகம்பாவமும் தலைதூக்கியது. அந்தக் கிருஷ்ணனே நம்முடன் இருக்கிறான் என கர்வம் தலைக்கேறியது.
மமதையுடன் திரிந்தனர். இறுமார்புடன் வாழ்ந்தனர். இந்த கர்வமும் மமதையும் இறுமார்பும் மனித குலத்துக்குச் சத்ரு என்பதை உலகத்தாருக்குப் புரிய வைக்க வேண்டும் எனச் சித்தம் கொண்டான் கண்ணபிரான். விளைவு, அந்த யதுகுலத்தையே அழிக்கவும் செய்தான். யதுகுலம் அழிந்தால், அந்தக் குலத்தைச் சேர்ந்த