அன்பெழில் Profile picture
Apr 30 14 tweets 3 min read Twitter logo Read on Twitter
#சிங்கப்பூர்_சாங்கி_ஶ்ரீராமர்_ஆலயம்
ராமருக்கு பாரதத்தில் மட்டுமன்றி உலகம் முழுவதும் புகழ் உண்டு. தாய்லாந்து நாட்டின் மன்னர்கள் தங்களை ராமா என்று அழைத்துக் கொள்கின்றார்கள். தாய்லாந்தில் ஒரு சில ஊர்களுக்கு அயோத்தி, லவபுரி, காஞ்சனபுரி் என்றெல்லாம் பெயர் சூட்டியுள்ளார்கள். Image
சிங்கப்பூரில் கடற்கரையை ஒட்டிய இடமாய் விளங்குவது சாங்கி. இந்த இடத்தில் தான் அமைந்துள்ளது பெருமைகள் நிறைந்த ஸ்ரீ ராமர் ஆலயம். இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய காலக்கட்டத்தில் சிறிய கிராமமாக இருந்த சாங்கியில் தற்போது ஆலயம் அமைந்திருக்கும் இடத்தில் மரத்தடியின் கீழ் ஒரு சிறு கோவிலாகத் Image
தான் ஸ்ரீ ராமர் ஆலயம் முதன் முதலில் இருந்தது. அச்சமயத்தில் அங்கு வாழ்ந்த தமிழர்களுக்கு அது ஒரு மிகச் சிறந்த வழிபாட்டு தலமாக விளங்கியது. இந்திய ராணுவத்தில் அவசர காலங்களில் பாலங்கள் அமைத்திடும் பொறியியல் பிரிவில் பணியாற்றிய திரு. ராம்நாயுடு என்பவர் இரண்டாம் உலகப் போருக்கு பிறகு
1945-ம் ஆண்டு பிரத்யேகமாக ஒரு இடத்தை பிரிட்டிஷாரிடமிருந்து பெற்று அங்கு ராமர் ஆலயத்தை நிறுவினார். ஆலயம் அமைப்பதற்கு வேண்டிய ஆள் பலத்தையும் கட்டுமான தளவாடத்தையும் பிரிட்டிஷ் ஆயுத படையிடமிருந்து பெற்றுக் கொண்டார். மேலும் சாங்கி கிராமத்தில் வாழ்ந்த இந்திய மக்களின் ஆதரவையும் பெற்று
இந்த ஆலயம் எழுப்பப்பட்டது. ராம் நாயுடுவுக்கு பின்னர் இந்த பகுதியில் வாழ்ந்த மக்களே ஆலயத்தின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள். நாகரீகத்தை முன்னிட்டு எத்தனையோ விஷயங்கள் காலத்திற்கு ஏற்ப மாறிக் கொண்டே இருந்தாலும், காலம் காலமாய் எவ்வித மாற்றத்திற்கும் உட்படாமல் நிலைத்திருப்பது
முன்னோர்களின் கருத்துக்களும், நன்னெறிகளைப் போற்றும் இதிகாசங்களும், மனிதருக்கு ஆத்ம சாந்தி அளித்திடும் தெய்வ வழிபாடுகளும் தான். சாங்கியின் ராமர் ஆலயத்தை மேம்படுத்த விரும்பிய நிர்வாகத்தினர் தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து ஆலய சாஸ்த்திரத்தையும் கட்டிடக்கலை நிபுணத்துவத்தையும் பெற்று
இருந்த மூவரை சாங்கி வரவழைத்து ஆலய பணிகளை தொடங்கினார்கள். ஆலயம் கடற்கரை நோக்கி கிழக்கு முகமாக இருப்பது இந்திய ஆலய அமைப்பிற்கு முக்கிய சிறப்பாக கருதப் படுகிறது. இது வைணவ கோயிலாக இருந்தாலும், சைவ சமயத்தினரும் வந்து வழிபட வேண்டும் என்ற நோக்கில் அமைந்துள்ளது. கடற்கரைக்கு மிக அருகில்
இருப்பதால், ஈமச் சடங்குக்கு பிறகு சிவாலய சிறப்பு வழிபாடுகள் செய்வதற்கு சிவலிங்கமும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இடைப்பட்ட காலத்தில், இந்த ஆலயத்தை புதிய சாலை ஒன்றிற்கு பெயர்ச்சி செய்து விடலாம் என்ற எண்ணம் எழுந்தது. ஆனால் அப்போதிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சியோசொங்தி அவர்களின்
தலையீட்டால் அது தவிர்க்கப்பட்டது. 1933-ஆம் ஆண்டு இந்த ஆலயம் அரசாங்கத்தில் முறைப்படி பதிவு செய்யப்பட்டது. நகர சீரமைப்பை முன்னிட்டு சிங்கப்பூரின் மற்ற பகுதிகள் அமைந்திருந்த பொருளாதாரத்தில் பின் தங்கிய மூன்று சிறு கோயில்கள் ஒன்றிணைக்கப்பட்டு வழிபாட்டு தலமாக அமைக்கப் பெற அரசாங்கம்
யோசனை ஒன்றினை முன் வைத்தது. அதன்படி கண்டோன்மெண்ட் சாலையில் அமைந்திருந்த மன்மத காரூணீஸ்வரர், புக்கிட்தீமா குதிரைப் பந்தய வளாகத்தில் அமைந்திருந்த முத்துமாரியம்மன் ஆலயம் மற்றும் கிராஞ்சி கடற்கரையில் அமைந்திருந்த பழனி ஆண்டவர் ஆலயம் ஆகியவற்றை சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயத்துடன் இணைத்து ஒரே
ஆலயமாக ஆக்கப்பட்டது. 2004-ம் ஆண்டு பிப்ரவர் மாதத்தில் ஆலய நிர்வாகம் 21 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயரை தமிழ்நாடு ஸ்தபதி திரு. கிருஷ்ணமூர்த்தி மேற்பார்வையில் வடித்து 2005-ம் ஆண்டு ஸ்தாபித்தது. பின் வந்த காலங்களில் பக்தர்கள் வருகை அதிகரித்தது. பாசி ரிஸ், சிமேஸ், ஈஸ்ட்கோஸ்ட் பகுதிகளில்
குடியிருப்பு காலனிகள் தோன்ற தொடங்கியதால் அங்குள்ள மக்களும் வழிபாட்டிற்காக ராமர் ஆலயத்தை நோக்கி வந்தனர். அதற்கேற்ப சமய நிகழ்ச்சிகளும் விழாக்களும் நடத்தப்பட்டு மக்களின் ஆன்மீக தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டன. பல இனத்து மக்கள் சிங்கப்பூரில் வாழ்ந்து வந்ததன் காரணமாக இந்து ஆலயங்களில்
புத்தர் பெருமானின் சிலையும் இடம் பெற்றது. புத்தரின் போதனைகள் இந்திய மக்களையும் பெரிதும் கவர்ந்ததால் பலர் புத்தரையும் வணங்குவதுண்டு.
temple timings
6 am - 12 noon
5:30 pm - 9 pm
Address of temple
Sri Ramar Temple,
51 Changi Village Road,
SINGAPORE
Postcode: 509908
Telephone: +65 6543 1463
Telephone: Fax: +65 6542 6593
E-Mail: sramartemple@gmail.com

Official Temple Website:  sreeramartemple.org.sg Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

May 2
#MahaPeriyava
Author: Sri Ramani Anna (in Tamil)
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb

There was a large crowd and a long queue at Sri Kanchi Matham many years ago in the Chittirai month on the New Year’s Day during the morning hours. A sixteen year Image
old boy was among those waiting in the queue, which moved slowly. He reached near the stage where Mahaswamiji was seated. Acharyal keenly looked at him for some time. He prostrated at once before the sage, his eight limbs touching the ground. He did not get up. Swamiji waited
for sometime and then said, "Get up, get up my child!"

He got up, raised his hands over his head and joined the palms. The stirrings of bhakti hadn't left him yet. Tears were flowing down his eyes. Swamiji called the youth near him. He obeyed, his palms still joined. Swamiji
Read 42 tweets
May 2
#Who_Is_Greater?
When Dr. Abdul Kalam was The President, he visited Coonoor. On Reaching, he came to know that Field Marshall Sir Sam Manekshaw was in the Military Hospital there. Dr. Kalam Wanted to visit Sam, which was unscheduled. Arrangements were made. At the bedside, Kalam Image
spent about 15 minutes talking to Sam and enquiring about his health. Just before leaving Kalam asked Sam, "Are you comfortable? Is there anything I could do? Do you have any grievance or any requirement that would make you more comfortable?"
Sam said, "Yes Your Excellency. I
have one grievance."
Shocked with concern and anguish Kalam asked him what It was. Sam replied, "Sir my grievance is that I am not able to get up and Salute my most respected President of my beloved country."
Kalam held Sam's hand as both were in tears. But
the remaining part of
Read 6 tweets
May 2
#மகாபெரியவா
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-170-A
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்

ஒரு நாள் தரிசனம் கொடுப்பதற்காக வெளியே வந்து அமர்ந்தார்கள், பெரியவாள். சில பக்தர்கள் பழம் - மலர்த் தட்டுகளை வைத்து வந்தனம் செய்து கொண்டார்கள். பெரியவாள் கையைச் சொடுக்கி ஒரு Image
சிஷ்யரைக் கூப்பிட்டு, "எனக்குத் தங்க புஷ்பம் கொண்டு வந்து கொடுப்பாரே, அந்த முதலியார் எங்கே?" என்று கேட்டார்கள்.

தொண்டர்களுக்கு விளங்கவில்லை. தங்க புஷ்பம் கொண்டு வந்து கொடுக்கும் அன்பர் யாரையும் அவர்கள் பார்த்ததில்லை. தற்செயலாக, அந்த சமயம் ஒரு முதலியார் தரிசனத்துக்கு வந்தார்.
உள்ளூர்க்காரர். அநேகமாக நாள்தோறும் வருபவர். வந்தவர் நேரே பெரியவாளிடம் சென்று, தங்க அரளி மாலையைச் சமர்ப்பித்தார். பெரியவாள் அதை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டு தலையில் வைத்துக் கொண்டார்கள்.
தெலுங்கு மொழியில், இந்த புஷ்பத்துக்கு 'ஸ்வர்ண கண்டா' என்று பெயர். சம்ஸ்கிருதத்தில் ஸ்வர்ண புஷ்பம்
Read 7 tweets
May 1
#சரணாகதி_வைபவம் #ஶ்ரீவைஷ்ணவம்
(ஸ்ரீ உ.வே. D.S.தாதாசார்ய ஸ்வாமி வைகுண்டவாசி)
சரணாகதியால் நமக்கு ஏற்படும் பலம் என்ன?
சரணாகதியால் நாம் #க்ருதக்ருத்யர் ஆகிறோம். அதாவது, மோக்ஷத்திற்காக நாம் செய்யவேண்டிய கார்யம் செய்தாய்விட்டது. நமக்கு மோக்ஷம் நிச்சயம். நம்முடைய கர்மம் எப்படி என்றால், Image
ப்ரஹ்ம கல்பத்தில் 10,000 கல்பம் ஜன்மம் எடுத்து நம்முடைய கர்ம பலத்தை அனுபவித்தாலும் முடிவு பெறாத கர்மத்தை ஒருவன் அரை க்ஷணத்தில் செய்து விடுகிறான். அப்படியானால் ஒரு மணி நேரத்தில் எவ்வளவு கர்மா? ஒரு நாளில் எவ்வளவு? ஒரு வருஷத்தில் எவ்வளவு? ஒரு ஆயுசில் எவ்வளவு? இப்படி எத்தனை ஜன்மம்
நாம் எடுத்திருக்கிறோம்? இக் கர்மத்துக்கு #ஸஞ்சித_கர்மம் என்று பெயர். இவைகளுக்குப் பெருமாள் பேரேடு போட்டு வைத்திருக்கிறார். இதில் ஒவ்வொரு கர்மமாக எடுத்து நமக்குப் பெருமாள் பலம் கொடுக்கிறார். அப்படிப் பலம் கொடுப்பதற்காக எடுத்திருக்கிற கர்மத்துக்கு ஐந்து ஜன்மம் அனுபவிக்க வேண்டி
Read 8 tweets
May 1
#அறிவோம்_நம்_இந்து_வரலாறு
#சோமநாதர்_ஆலயம் ஒரு கோவிலுக்காக 50,000 பேர் உயிர் விட்டுள்ளனர். எங்கள் பிணத்தை கடந்து தான் கோவில் உள்ளே நுழைய முடியும் என நின்று உயிர் நீத்தனர். இத்தனை ஆயிரம் பேர்களை கொன்றும், 20,000 ஹிந்துக்களை அடிமைகளாக பிடித்தும் சென்றது இஸ்லாமிய படைகள். 6 முறை Image
தரைமட்டமாக்கப் பட்டு மீண்டும் உயிர்தெழுந்து பிரம்மாண்டமாய் நிற்கிறது இக்கோவில். யானைகள் நடக்க முடியாமல் திணற திணற சுமை ஏற்றபட்டு கோடானு கோடி பொக்கிஷங்கள் கொள்ளையடிக்கப் பட்ட கோவில். சோமநாதர் கோவில் மூல லிங்கம் அந்தரத்தில் நிற்க்கும் படி பிரதிஷ்டை செய்யப்பட்ட கோவில்.
முதல் முறை ImageImage
இதை கண்ட போது ஆச்சர்யபட்ட கஜினி அம்புகளால் சோதித்து பார்த்து என்ன பிடிமானத்தில் நிற்கின்றது என விடை தெரியாத அதிர்ச்சியில் சிவலிங்கத்தை காலால் எட்டி உதைத்து கீழே தள்ளி உடைத்து எறிந்தான். கோவிலில் இருந்த வெள்ளி கதவுகள், சந்தன மரத்தால் ஆன கதவுகளையும் முற்றிலும் பெயர்த்து எடுத்து Image
Read 12 tweets
May 1
#ஸ்ரீகிருஷ்ணன்_கதைகள்
ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவே தங்களுடன் பிறந்து வளர்ந்து வாழ்வதால் யாதவர்களுக்கு தர்ப்பம் ஏற்பட்டது. தர்ப்பம் என்றால் ஆசைகள், கர்வம், மமதை என்று அர்த்தம். இவை அனைத்தையும் கொடுப்பவனும், அழிப்பவனும் அவனே தான்! யாதவர்களுக்கு அந்த ஆசையையும் எண்ணங்களையும் மமதையையும் Image
கர்வத்தையும் தூண்டியவன் பகவான் ஸ்ரீகிருஷ்ணன். அதனால்தான் யதுகுலமே உருவானது. அந்தக் குலத்திலேயே தானும் பிறப்பெடுத்து, அவர்களுடன் ஒன்றிக் கிடந்தான். இதனால் யதுகுலத்தைச் சேர்ந்தவர்களுக்கு அகம்பாவமும் தலைதூக்கியது. அந்தக் கிருஷ்ணனே நம்முடன் இருக்கிறான் என கர்வம் தலைக்கேறியது.
மமதையுடன் திரிந்தனர். இறுமார்புடன் வாழ்ந்தனர். இந்த கர்வமும் மமதையும் இறுமார்பும் மனித குலத்துக்குச் சத்ரு என்பதை உலகத்தாருக்குப் புரிய வைக்க வேண்டும் எனச் சித்தம் கொண்டான் கண்ணபிரான். விளைவு, அந்த யதுகுலத்தையே அழிக்கவும் செய்தான். யதுகுலம் அழிந்தால், அந்தக் குலத்தைச் சேர்ந்த
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(